Nov 20, 2011

வண்டை வீட்டுக்காரன்


 

முதல் முறையாக புட்டிக்கதைகள் படிப்பவர்கள் ஒரு அறிமுகத்திற்கு இங்கே செல்லலாம்

_________________________________

ஏழுவுக்கு ஒரு கெட்டப்பழக்கம் உண்டு. அதீத போதையேறினால் கெட்ட வார்த்தை கோவை சரளாவாக பேசுவான் அல்லது சரளமாக பேசுவான். காது கொடுத்து கேட்க முடியாது. அதற்காக கண், மூக்கு கொண்டு கேட்கவா இயலும்? அதனால் அவன் பேசுவதை கேட்கவே முடியாது என பொருள் கொள்வோம். இவன் இப்படி வண்டை வண்டையாக பேசுவதை கேட்டு இவன் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் இவனை அண்டை வீட்டுக்காரன் என்று சொல்லாமல் வண்டை வீட்டுக்காரன் என்று சொல்லுமளவிற்கு அவன் புகழ் குன்றின் மேலிட்ட CFL லைட்டாக இருந்தது.

முன்பெல்லாம் ஏழு நல்ல பையனாகத்தான் இருந்தான். முன்பு என்றால் எங்கள் கல்லூரியில் சேர்வதற்கு முன்னால். ராகிங்கின்போது சீனியர்ஸ் இன்னொருவனை பச்சை பச்சையாக திட்ட சொன்னபோது   “போடா கோவக்காய். மூஞ்சப்பாரு வெண்டைக்காய்” என்றுதான் திட்டினான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அப்போது நடந்ததை இப்போது உங்களால் பார்க்க முடியாதென்பதால் தெரிந்துக் கொள்ளுங்களேன். அப்படி இருந்தவனை மாற்றிய பெருமை மல்லுவுக்கே உண்டு. அது யாரந்த மல்லு என்கிறீர்களா? முழு பீரையடித்தால் மல்லையா என்று சொல்லியிருப்பேன். ஏழு எப்போதும் அரை பீரென்பதால் மல்லையா மல்லுவாகி போனார்.

கல்லூரியில் யாரையாவது அடிக்க வேண்டுமென்றால் அடியாட்களாக சிலருக்கு சரக்கும், சிக்கன் பிரியாணியும் வாங்கித் தந்து அழைத்து செல்வது வழக்கம். ஆனால் யாரையாவது திட்ட வேண்டுமென்றால் ஏழுவைத்தான் நாடுவார்கள். அவர்கள் இவனை நாட, இவன் இன்னொருவனை சாட, அதை கேட்டவன் ஓட, ஏழு ஓடியவனை தேட.. இப்படி ஒரே டடடடடட தான். வட்டிக்கு விட்டு பிழைப்பதுதான் தவறு. திட்டி திட்டி பிழைப்பதில் என்ன தவறென்பது ஏழுவின் வாதம். சில நேரங்களில் அவன் திட்டியது திட்டு வாங்கியவனுக்கு புரியாது என்பதால் அர்த்தம் சொல்லித் திட்டுவது ஏழுவின் ஸ்பெஷாலிட்டி. அவ்வாறு அர்த்தமும் சொல்லி திட்ட வேண்டுமென்றால் பீருக்கு மிக்ஸிங்கிற்கு தண்ணீருக்கு பதிலாக கோக் வாங்கி தரவேண்டுமென்பது அவனது விலைப்பட்டியலில் அடக்கம்.

ஏழுவிடம் இருக்கும் இன்னொரு கெட்டப்பழக்கம். யாராவது Lager beer வாங்கித் தந்து திட்ட சொல்லும்போது, எதிரணிக்காரன் Imported beer வாங்கித் தருவானென்றால் இவனது கிளையண்ட்டையே திட்டிவிடுவான். தொழில் பக்தி சிறுதேனும் வேண்டுமே என்ற எண்ணமே அவனுக்கு கிடையாது. இப்படித்தான் ஒரு நாள் ரமேஷ் என்பவன் ஏழுவை பாருக்கு அழைத்து சென்றான். உண்மையான உலகம் பாரில் தான் இருக்கு என்பது ஏழுவின் சித்தாந்தங்களுள் ஒன்று. எனவே பார் என்பது ஆங்கிலம் அல்ல. தமிழ்தான். பார் என்றால் உலகம் என்றுதானே அர்த்தமென கதாகலாட்சேபம் வேறு செய்வான். பின் அதே வாயால்தான் Go Green Projectஐயும் தொடங்குவான். நாம் நம்ம ரமேஷ் கதைக்கு வருவோம்.

அவனுக்கு கடன் கொடுத்த யாரோ ஃபோனில் அழைத்து தொல்லை தருவதால் அவரைத் திட்ட வெண்டுமென அசைன்மெண்ட் தந்தான். 4 நிமிடம் திட்டுவதற்கு ஒரு மினி கிங் ஃபிஷரும், அர்த்தமெல்லாம் வேண்டாமென்பதால் வாட்டர் பாக்கெட் கூலிங் இல்லாமலும், சின்னிஸ் ஊறுகாயும், ஓட்டடை ரெண்டும் பேரம் பேசப்பட்டது. பாரில் இருக்கும் போதே ரமேஷுக்கு ஃபோன் வந்தது. முதல் கால் வந்த போது அமைதியாக இருந்த ஏழு லைன் கட்டாகிவிட்டதென்றான்.ரமேஷ் அடுத்த முறை ஸ்பீக்கரில் போட்டு பேசு என்றதற்கு ஒரு ஆஃப்பாயில் எக்ஸ்ட்ராகவாக சார்ஜ் செய்துவிட்டு கால் வந்தபோது ஸ்பீக்கரில் போட்டான் ஏழு.

ஹலோ..ரமேஷ்.

ரமேஷா? அப்படி எந்த ******தியும் இங்க இல்லை.

அப்புறம் நடந்த சம்பாஷனைகளை பதிவேற்ற இது சாருஆன்லைன்.காம் இல்லையென்பதால்..

சுபம்.

12 கருத்துக்குத்து:

Kafil on November 20, 2011 at 11:19 PM said...

ottatai yethukku !

சுசி on November 21, 2011 at 12:29 AM said...

ஏழுவும் கார்க்கியும் வழக்கம்போல் கலக்கல் :)

தர்ஷன் on November 21, 2011 at 12:33 AM said...

எழுதாம விட்டா இப்படித்தான், சாரி சகா யுடான்ஸ் நட்சத்திரமா இருக்கிறமே ஏதும் எழுதனுமேன்னு எழுதுன மாதிரி இருக்கு.

என்னா மாதிரி எழுதுவீங்க சகா, நீங்க சும்மா மொக்கை போடுறேன்னு சொல்லிக்கிட்டாலும் அந்த ஈர்க்கும் எழுத்து எல்லாருக்கும் வராது ட்வீட்டருக்கு கொடுக்குற அதே இம்போர்ட்டன்ட்ஸ ப்லொக்குக்கும் கொடுங்க
நேரமின்மை இப்படி ஏதும் காரணங்கள் இருந்தால் சோ சொரி..........

ஜோசப் பால்ராஜ் on November 21, 2011 at 1:28 AM said...

//“போடா கோவக்காய். மூஞ்சப்பாரு வெண்டைக்காய்” //

சூப்பர்டே.

முகில் on November 21, 2011 at 10:09 AM said...

//சில நேரங்களில் அவன் திட்டியது திட்டு வாங்கியவனுக்கு புரியாது என்பதால் அர்த்தம் சொல்லித் திட்டுவது ஏழுவின் ஸ்பெஷாலிட்டி. //

என்ன ஸ்பெஷாலிட்டி..... ஏழு எங்கேயோ போய்யிட்டார்....

vanila on November 21, 2011 at 10:25 AM said...

சூப்பர்டே.

No No, Monday is always a boring day.

Athammohamed on November 21, 2011 at 12:04 PM said...

as usual கலக்கல்.

கார்க்கி on November 21, 2011 at 12:23 PM said...

க‌ஃபில், சைட் டிஷ்

ந‌ன்றி சுசி.

த‌ர்ஷ‌ன், மீண்டும் பிளாக் ப‌க்க‌ம் வ‌ர‌ விரும்பியே ஸ்டார் அழைப்பை ஏற்றேன். கூடிய‌ சீக்கிர‌ம் ஃபார்முக்கு வ‌ன்துட‌லாம். ந‌ன்றி :))

ஜோச‌ப், :)

முகில், ஏழு எப‌ப்வுமே இப்ப‌டித்தான். அவ‌ன் ஸ்பெஷ‌ல் கிளாஸ்க்கு ஒரு அர்த்த‌ம் சொன்னான். அத‌ அடுத்த‌ க‌தைல‌ சொல்றேன்


வாநிலா, வாழ்க‌. சேம் பிள‌ட் :))

ந‌ன்றி முக‌ம‌து

பாண்டி-பரணி on November 21, 2011 at 3:31 PM said...

ஹா ஹா......

Unknown on November 21, 2011 at 10:55 PM said...

chaansey villa thalaivarey, ungala vitta indha maadiri yeludha yaaralum mudiyadhu, 7yendru oru pudhuvidha action herova naan karpanai kooda seiyavillai.

கார்க்கி on November 22, 2011 at 10:21 AM said...

thanks barani

unknown, thanks a lot.. peru ennappaa???

surya on June 8, 2012 at 2:03 AM said...

hello mr car key

am new

am surya

and simply humerous writing

 

all rights reserved to www.karkibava.com