Nov 18, 2011

பாஸ் பாஸ்.. சின்ன‌ப்ப‌ பாஸ் பாஸ்


 

ம‌னைவி அமைவ‌தெல்லாம் இறைவ‌ன் கொடுத்த‌ வ‌ர‌ம்னு சொல்வாங்க‌. ந‌ம்ம‌ள‌ மாதிரி மாத‌ச் ச‌ம்ப‌ள‌த்துக்கார‌ங்க‌ளுக்கு எல்லாம் பாஸ் அமைவ‌து சாத்தான் த‌ந்த‌ சாப‌ம்னு தான் சொல்ல‌ணும். என்ன‌தான் ஒழுங்கா வேலை செய்தாலும் தின‌ம் ஒரு தட‌வையாச்சும் ந‌ம்ம‌ பாஸ் ந‌‌ம்மள‌ கடிக்காம‌ இருக்க மாட்டாரு. அதுக்குன்னு பாஸ‌ ந‌ம்ம‌ கைக்குள்ள‌ போட்டுக்கிட்டா அவ‌ர் வேலையையும் சேர்த்து ந‌ம்ம‌ள‌ செய்ய‌ வ‌ச்சிடுவாரு. ம‌த்த‌ள‌த்துக்கு ரெண்டு ப‌க்க‌மும் அடின்ற‌ மாதிரி ஏதாவது ஒரு வ‌கையில் நாம‌ எல்லோருமே "பாஸ்வ‌தைக்கு" ஆளாயிட்டுதான் இருக்கோம். வ‌ல்ல‌வ‌னுக்கு வ‌ல்ல‌வ‌ன் பூமியில் ம‌ட்டுமில்ல‌, ஆஃபிஸ்ல‌யும் இருப்பாரு. அத‌னால‌ ந‌ம்ம‌ பாஸின் பாஸும் இப்ப‌டித்தானா என்ற‌ ச‌ந்தேக‌ம் என‌க்கு அடிக்க‌டி வ‌ரும். ஆனா எப்ப‌டி இருந்தாலும் பாஸ் என்ப‌வ‌ர் பாஸ்தான் என்ற‌ த‌ர்க்க‌த்தில் என‌க்கு முழு ந‌ம்பிக்கை உண்டு.

ச‌ரி. எங்க‌ பாஸ் என்ன‌வெல்லாம் ப‌ண்ணியிருக்காருன்னு சொல்றேன். ஒரு க‌ம்பெனிக்கு அக்ரீமென்ட் அனுப்ப‌ணும். Terms எல்லாம் மாத்தி நானும் ப‌க்காவா அவ‌ருக்கு மெயில் அனுப்பி ஓக்கே வாங்கிட்டேன். அப்புற‌மா ரெண்டு காப்பி பிரின்ட் அவுட் எடுத்துட்டு கையெழுத்து வாங்க‌ போனா, ம‌னுஷ‌ன் ம‌றுப‌டியும் எல்லாத்தையும் செக் ப‌ண்ணாரு. அட‌ங்கொய்யால‌!! இவ்ளோ உஷாரா இவ‌ருன்னு எங்க‌ பாஸ நானும் பெருமையா நினைச்ச‌ த‌ருண‌ம‌து. வ‌ச்சாரு பாருங்க‌ ஆப்பு. அதுல‌ கையெழுத்துப் போட்டு ரெண்டாவ‌து காப்பியையும் அதே மாதிரி செக் ப‌ண்ணாரு. இவ‌ரெல்லாம் plain A4 sheet இல்லைன்னு சொன்னா ஒரு பேப்ப‌ர‌ கொடுத்து இத‌ 4 ஜெராக்ஸ் போடுங்க‌ன்னு சொல்ற‌ ஆளுன்னு நிரூபிச்சிட்டாரு.

இதுல‌ இன்னும் தினுசான‌ பாஸூங்க‌ இருப்பாங்க‌. லேப்டாப்ப‌ ப்ரீஃப்கேஸ்ல‌‌ வ‌ச்சு எடுத்துட்டு வ‌ருவாங்க‌. ஏதாச்சும் மெயில் அனுப்பினா, அத‌ பிரின்ட் அவுட் எடுத்துத்தான் ப‌டிப்பாங்க‌. அட‌ இதை விட‌ கொடுமை என்ன‌ன்னா, நாம‌ ஏதாச்சும் SMS அனுப்பினா அவ‌ங்க‌ளுக்கு ஃபோன் ப‌ண்ணி அனுப்பியிருக்கேன்னு சொல்ல‌ணுமாம். அட‌ நிஜ‌மா ந‌ட‌ந்துச்சுங்க‌. ஒரு நாள் என‌க்கு உட‌ம்பு ச‌ரியில்லைன்னு அரை நாள்..அரையே நாளு லீவுன்னு SMS அனுப்பினேன். 10.30 ம‌ணிக்கு ஃபோன் வ‌ந்துச்சு..SMS அனுப்பியிருந்தேனே த‌ல‌ன்னு சொன்னா "இனிமேல‌ SMS ப‌ண்ணா ஒரு ஃபோன் ப‌ன்ணி சொல்லிடுங்க‌. க‌ரெக்டா பார்த்துடுவேன்னு" சொன்னாரு. இதோ வ‌ந்துட்டேன்னு 10.45க்கே ஆஃபிஸ்க்கு போயிட்டேன் அன்னைக்கு.

எல்லாத்துக்கும் மேல‌ அப்ரைச‌ல் டைம்ல‌தான் இந்த‌ வியாதி பீக்ல‌ இருக்கும். வாடா ம‌ச்சின்ற‌ ரேஞ்சுக்கு ப‌ழ‌கின‌ ஆளு அப்ப‌தான் ந‌ம்ம‌ள‌ க‌சாப் ரேஞ்சுக்கு பார்ப்பாரு. நாம‌ ஒரு அப்பா ட‌க்க‌ரு. க‌ம்பெனி ந‌ம்ம‌க்கிட்ட‌ இன்னும் நிறைய‌ எதிர்பார்க்குதுன்னு சீனா போடுவாரு. என்னை விட‌ க‌ம்பெனி பெரிய‌ அப்ப‌ப்பா ட‌க்க‌ரு. கொஞ்ச‌ம் ச‌ம்ப‌ள‌த்த‌ ஏத்துக்குன்னு சொன்னா கொடுப்பாரு பாருங்க‌ லுக். மேட்டுக்குடில‌ க‌வுன்ட‌ம‌ணி விட்ட‌ ரொமான்ட்டிக் லுக் எல்லாம் தோத்து போயிடும்.  ஆனா ஒண்ணுங்க‌.. இந்த‌ மாதிரி பாஸூக்கு எல்லாம் வீட்டுல‌ ஒரு பாஸு இருப்பாங்க‌. அத‌ நினைச்சு நாம‌ ச‌ந்தோஷ‌ப்ப‌ட்டுக்க‌ வேண்டிய‌துதான். இப்ப‌ என் க‌டுப்பு எல்லாம் நான் எப்போ பாஸ் ஆவ‌ற‌து, என‌க்கு எப்போ  வீட்டுல‌ பாஸு வ‌ர்ற‌து!!!!!

12 கருத்துக்குத்து:

Suresh Kumar on November 18, 2011 at 10:46 AM said...

கார்கி நான் தான் உன்னோட பாஸ்.என்ன பத்தியே ப்ளாக் போடுறியா நீ.வந்து உன்னோட டெர்மினேஷன் லெட்டரை வாங்கிட்டு போறியாபா.

மோகன் குமார் on November 18, 2011 at 10:49 AM said...

SMS + Phone :)))

ரெண்டு அக்ரிமேன்ட்டும் முழுசா படிக்கிரார்ணா உங்க மேல அவ்ளோ நம்பிக்கை ! இன்னொன்றில் மாத்தியிருந்தா? :))

ஆரூரான் on November 18, 2011 at 10:59 AM said...

நீங்க பாஸ் ஆக பர்ஸ்ட் உங்களுக்கு ஒரு பாஸ உங்க பாஸ்டயே எனக்கு ஒரு பாஸ ரெடி பண்ணுங்க பாஸ்னு சொல்லுங்க பாஸு...((

முகில் on November 18, 2011 at 11:02 AM said...

// இப்ப‌ என் க‌டுப்பு எல்லாம் நான் எப்போ பாஸ் ஆவ‌ற‌து, என‌க்கு எப்போ வீட்டுல‌ பாஸு வ‌ர்ற‌து!!!!! //
இந்த மேட்டருக்காகத்தான் இந்த பதிவோன்னு நினைக்கிறேன்.

கார்க்கி on November 18, 2011 at 11:08 AM said...

சுரேஷ், ச‌ந்தோஷ‌மா வாங்கிப்பேன் :)

மோக‌ன், அது ச‌ரி. லீக‌ல் ஆளுங்க‌ அப்ப‌டித்தான் போல‌ :)

ஆரூரான், நீங்க‌ பாஸ் (pass) :))

முகில், க‌க‌க‌போ :)

Sen22 on November 18, 2011 at 11:51 AM said...

ஒரு ஐடியா..
உங்க பாஸ்-ஸோட பொண்ண உங்களோட வீட்டுக்கு பாஸ்- ஆக்கிட்டா....

பாஸ்-க்கே பாஸ் ஆகிடலாம்...
வீட்டுக்கும் ஒரு பாஸ்.....

ஒரே கல்லுலே ரெண்டு மாங்கா.... ;)

யோஹன்னா யாழினி on November 18, 2011 at 2:04 PM said...

அது என்னமோ தெரியல..என்ன மாயமோ தெரியல.இந்த பாஸுங்களுக்கு மட்டும் ஒண்ணுமே ஆவுறதில்ல..இடை இடையில நம்ம ----- போட்டு திட்டிக்கலாம்.

KSGOA on November 18, 2011 at 2:23 PM said...

கூடிய சீக்கிரமே நீங்க பாஸ் ஆகி,உங்களுக்கும் பாஸ் வர என் வாழ்த்துகள்.

நடராஜன் on November 19, 2011 at 3:00 AM said...

1. நீங்க பாஸாகி உங்களுக்கும் பாஸ் வர வாழ்த்துகள்! ஆனா முதல் பாஸ் ஆன பின் உங்க பாஸ் கிட்ட இப்போ மாதிரியே நல்ல பேர் வாங்கி, மீண்டும் முதல் பாஸ் (நீங்க தான்) கிட்ட ரிப்போர்ட் பண்றவங்கள எல்லாம் ஒழுங்கா பாத்துகுங்க! அப்புறம் முதல் பாஸ் ஆன திமிர்ல ரெண்டாவது பாஸ் கிட்ட வம்பு பண்ணிங்க பூரிக் கட்டை தான் சொல்லாமலே தெரிந்திருக்கும்!

நடராஜன் on November 19, 2011 at 3:01 AM said...

2. உங்களுக்கு “காலை வணக்கம்” என்று SMS அனுப்பனும் ஒரு மாறுதலுக்கு போன் பண்ணி சொல்லிட்டு அனுப்பவா? இல்ல அனுப்பிட்டு போன் பண்ணவா?

சுரேகா.. on November 20, 2011 at 11:54 AM said...

பாஸுக்கு தமிழ் தெரியாதோ?

:)

பின்னூட்டம் போட்டிருக்கேன்னு ,மெயில் பண்ணி, அதுக்கு ஒரு SMS பண்ணி, அதை போன் பண்ணிச் சொல்லட்டுமா?

அப்படிக்கேளுங்க! நீங்க அன்றே பாஸுதான் சகா!

இதை எழுதச்சொன்னதே உங்க வீட்டு பாஸாகப்போற ‘பாஸ்’ன்னுதான் நினைச்சேன்..!!

கார்க்கி on November 20, 2011 at 11:32 PM said...

thanks to all

 

all rights reserved to www.karkibava.com