Nov 16, 2011

கார்க்கியும் அவனது ஏழு காதல்களும்


 

   விசில் என்று ஒரு படம் வந்தது. பென்ட்டாமீடியாவின் தயாரிப்பு என்பதால் சுஜாதாவின் பங்கும் இருந்தது. விதியே என்று அவரும் கற்றதும் பெற்ற‌துமில் பாராட்டி நாலு வரிகள் எழுதினார். படம் ஊத்திக் கொண்டாலும் பாடல்கள் ஹிட். அந்தப் படத்தில் ஒரு பாடலின் சரணம்தான் இது

 

எல்லோர் வாழ்விலும் நண்பா
ஏழு காதல்கள் உண்டு..
பள்ளிப் பருவத்தில் ஒன்று
காலேஜ் காம்பவுண்டில் ஒன்று
அட அடுத்த வீட்டுப் பொண்ணு
தெளிச்சு கோலம் போட்டு
வெறிச்சுப் பார்க்கையில ஒன்று
ரயில் சினேகம் போலவே வரும் ஒன்று
தங்கை திருமணக் கூட்டத்தில் வரும் ஒன்று
மணம் முடிக்கும் பெண்ணிடத்தில் வரும் ஒன்று..
இன்னொன்று.."

இது அப்ப‌டியே என‌க்கு ஒத்துப் போகுதுங்க‌. இனி ஓவ்வொரு வ‌ரியா கொசு வ‌த்தி சுத்த‌லாமா?

alotofgirls

(1,2,3,4,5,6,7… ரைட்டு. சரியா ஏழு பேர் இருக்காங்க)

1) ப‌த்தாம் வ‌குப்பு பொதுத் தேர்வு நேர‌ம்.  எங்க‌ டியூஷ‌ன் மாஸ்ட‌ர் அவ‌ர் வீட்டின் முத‌ல் த‌ள‌த்தை எங்க‌ளுக்காக‌ கொடுத்துவிட்டார். அதுதான் அவ‌ர் டியூஷ‌ன் எடுக்கும் இட‌மென்றாலும் எங்க‌ள் நான்கு பேருக்கு 24 மணி நேர‌‌மும் சிற‌ப்பு அனும‌தி . அவ‌ள் பெய‌ர் ம‌துமிதா. முன்ன‌ரே தெரியும் என்றாலும் தாம‌த‌மாக‌த்தான் என் ம‌ன‌தை திருடினாள். இன்ன‌மும் நினைவிருக்கிற‌து அவ‌ளின் முக‌ம். பின் புத்தக‌த்தில் ”மதுமிதாய நமஹ“ எழுதி வைத்து அண்ண‌னிட‌ம் மாட்டிக் கொண்டு "ச்சும்மா ஃப்ரெண்ட்ஸ் விளையாட‌றாங்க‌டா" என்று ச‌மாதான‌ப்ப‌டுத்தி எஸ்கேப்பினேன். உண்மையில் அழ‌கி அவ‌ள். ம‌துமிதாஆஆஆஆஆஆ

2) பத்தாவது முடித்தவுடனே டிப்ளோமா சேர்ந்து விட்டேன்.(ஓ அப்பதான் எல்லோரும் சேருவாங்கில்ல) முதல் நாள் அவள் வரவில்லை. இரண்டாம் நாள் அவள் உள்ளே நுழைகையில் சரியாக என் தலையில் மோதினாள். (தலயோட மோதினாளானு அஜித் ஃபேன்ஸ் மறுபடியும் நெகடிவ் ஓட்டு குத்தாதீங்கப்பா) சினிமாவில் வருவது போல தேவதைகள் கும்மியடிக்க, அலை அப்படியே அந்தரத்தில் நிற்க, பறவைகள் ஸ்தம்பித்தன, அவள் சாரி என்று சொல்லும்வரை. அவள் சொன்னபின் அவையாவும் இன்னும் வேகமெடுத்தன. மூன்றாண்டுகள் வேறு எந்த அழகியையும் பார்த்து மயங்காமல் பார்த்துக் கொண்டாள். பேர சொல்லலையா? அனிதாஆஆஆஆ

3) கோலம் போட்டு வெறிச்சு பார்த்தவ முகம் மறந்துப் போய் விட்டது. பெருசா ஒன்னும் அழகு இல்ல. ஆனாலும் புடிச்சிருந்தது. பேரு மட்டும் நியாபகமிருக்கு. ஜெயாஆஆஆஆ

4) ரயில் சினேகம் போலவே. கல்லூரி முடிந்து நண்பர்களுடன் குற்றாலம் வரை சென்றோம். அப்போதுதான் அவளைப் பார்த்தேன். நல்லா பேசினா. பார்த்தவுடனே கவரும் விதத்திலா நாமிருக்கிறோம்? பேசித்தான் கரெக்ட் செய்யனும். இறங்கும்போது சொன்னாள். "உன் கண்ணும் பேச்சும் பொண்ணுங்களுக்கு ரொம்ப புடிக்கும்னு.” (நோட் பண்ணிட்டீங்களா?) அப்ப எல்லாம் மொபைல் கிடையாது.(என்கிட்டப்பா) டாடா காட்டி சென்றாள் திவ்யாஆஆஆஆ

5) தங்கை திருமண கூட்டத்தில் அல்ல. ஆனால் ஒரு திருமண நிகழ்ச்சியில்தான் பார்த்தேன். மணபெண்ணின் தங்கை. ஆனால் மொத்த கூட்டமும் அவளைத்தான் பார்த்தது. ஒருவேளை அவள் என் மனதை கொள்ளையடித்தது ஊருக்கு தெரிந்து விட்டதோனு கவிதை வேறு. தூரத்து சொந்தம்தான். மறுநாள் அலுவலக நண்பர்களை கவிதை சொல்லி கடுப்படிக்க, அப்படி யாருடான்னு எல்லோரும் கிளம்ப, அவள் வீட்டு பெல்லை அடித்து ”டாக்டர் மணிமாறன் வீடு இதுதானானு நண்பன் கேட்க, அவளும் அடுத்த தெருன்னு வழிகாட்ட,(உங்க ஊருலயும் மணிமாறன்னு ஒரு டாக்டர் இருப்பாரே!!) அவன் வழியை விட்டு அவள் விழியிலே சொக்கி போக, வந்து நல்லா வாங்கினான் என்னிடம். அந்த நாள்முதல் இரண்டு மாதம் கம்யா கோயான்னு அரைகுறை இங்கிலீஷ் பேசவில்லை. வாய தொறந்தா வித்யாஆஆஆஆஆ

6) மணம் முடிக்கும் பெண் இன்னும் யாரென்று தெரியாததால் அதை பற்றி அப்புறமா பேசுவோமா?

7) இன்னொன்று. வேணாங்க. சொன்னா கேளுங்க. அட நான் தண்ணியடிக்க கூடாதுனு முடிவெடுத்திருக்கேன். விட மாட்டிங்களா? புரிஞ்சுக்கோங்க. அடம் பிடிக்காதீங்க.  வேணும்ன்னா பேரு மட்டும் சொல்றேன் கம்லாஆஆஆஆஆ.

___________________________

அப்புறம் எல்லா பொண்ணுங்க பேரும் ’ஆ’ ல முடியுது பார்த்திங்களா? அவங்க ஆச்சரியமானவங்கனு காதல் இளவரசர்கள் நினைச்சுக்கலாம். இல்லைன்னா கடைசில அவங்கள பார்த்து பயந்துதான் ஆகனும்னு நினைச்சுக்கலாம்.

மறுபடியும் அந்தப் பாடலைக் கேட்டேன். எழுதியவன் மேல் கோபம் கோபமாக வந்தது. ஏன் தெரியுமா?

எல்லோர் வாழ்விலும் நண்பா
பத்து காதல்கள் உண்டுனு

எழுதினாலும் tune செட்டாகுதில்ல. ஏன் ஏழோட நிறுத்திட்டான்?

பிகு: "ஒண்ணு தெரிது கார்க்கி. ஆக‌ உன் லைஃபுல‌ எல்லா ல‌வ்வும் முடிஞ்சுடுச்சுன்னு" யாராச்சும் க‌மென்ட் போட்டா, சாரு நிவேதிதாக்கிட்ட‌ சொல்லி ஏவ‌ல் விட்டுடுவேன்.

16 கருத்துக்குத்து:

Anonymous said...

வாழ்க உங்கள் காதல் தொண்டு!

S.Deluckshana on November 16, 2011 at 9:54 AM said...

ஏழு காதல் ஏழேழு காதலாக வாழ்த்துக்கள்!!!
உங்க கான்செப்டவிட எழுத்துநடையே ரொம்ப சிரிக்கவைக்குது..
உங்க ஸ்பெஷலே இதுதான்னு நினைக்கிறன்..
சூப்பர்...

amas on November 16, 2011 at 10:10 AM said...

Very nice post! Love your sense of humour :-)
amas32

tamilshiva on November 16, 2011 at 11:10 AM said...

aaaaaaaaaaaaaaaaaaaaavvvvvvvvvvvv...
Kottavi bosss sorry..

Sen22 on November 16, 2011 at 11:47 AM said...

வெறும் ஏழு-தானா பாஸ்...

(அப்புறம் உங்க குஜ்ஜு-வ பத்தி ஒண்ணுமே சொல்லல)..

மாங்கனி நகர செல்லக் குழந்தை on November 16, 2011 at 11:48 AM said...

இதுக்கு பேரு எல்லாம் காதலா.....ஐய்யோ என்ன கொடுமை இது???

KSGOA on November 16, 2011 at 2:20 PM said...

நல்லா இருக்கு.நீங்களும் யுடான்ஸ் நட்சத்திர வாரம் முடிந்ததும் எழுதுவதை
குறைத்துவிடாதீர்கள்.சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள்.நிறைய எழுதுங்கள்.

தர்ஷன் on November 16, 2011 at 4:13 PM said...

மீள்பதிவுன்னு நெனக்கிறேன் பார்த்த ஞாபகம்

வள்ளி on November 16, 2011 at 5:15 PM said...

இதில இன்னும் குஜ்ஜு, தோழி எல்லாம் அப்டேட் பண்ணலையா?

அகமது சுபைர் on November 16, 2011 at 8:23 PM said...

இது பிப்ரவரில நீங்க ஏழுவோட காதல் பத்தி எழுதினது....

//ஒரு வ‌ழியாக‌ ப‌த்தாவ‌து வ‌ந்து சேர்ந்துவிட்டேன். 15 வ‌ய‌சு. ப‌ருவ‌ம் ப‌வ‌ர்ஃபுல்லாக‌ ப‌வ‌ர்ப்ளே ஆடும் வ‌யசு. தோசை செய்ய‌ ஸ்ட‌வ்வு.. மீசை வ‌ந்தா ல‌வ்வுன்னு ம‌ன‌ம் ம‌ந்த‌காச‌ நிலையில் மித‌க்க‌, ம‌துமிதாவே ந‌ம‌ஹா என‌ எல்லா புக்ல‌யும் எழுதிவைத்தேன். க‌ண‌க்கு டியூஷ‌ன் சென்று க‌ண‌க்கு செய்த‌து இது ம‌ட்டுமே. //

இங்கயும் அதே... அப்படின்னா நீங்க தான் ஏழு... :))))

குழந்தபையன் on November 16, 2011 at 9:17 PM said...

ஆழ்ந்த அனுதாபங்கள் :(:(

இப்படிக்கு

" ஒரு பிகரை கூட உஷார் பண்ண முடியாதோர் சங்கம் "

கார்க்கி on November 17, 2011 at 7:42 AM said...

நன்றி மக்காஸ்

பரிசல்காரன் on November 17, 2011 at 7:47 AM said...

அகமது சுபைரின் பின்னூட்டத்தைப் பார்த்தேன்..

ப்பா! எப்படியெல்லாம் ஃபாலோ பண்றாங்க. ஜாக்கிரதையா எழுதணும்டா சாமி!!

Kafil on November 17, 2011 at 8:49 PM said...

kutthunga yesamaan kutthunga intha pombalaingale ippidithaan

நடராஜன் on November 19, 2011 at 3:11 AM said...

எட்டாவதடி நீ! எட்டுவாயா எனக்கு நீ!

டென்சன் ஆகாதிங்க! ஒரு வேளை எட்டாவது ஒரு தோழி வந்தா இந்த வரிகள் சரியாய் இருக்கும்! கான்பிடன்ஸ் பாஸ் கான்பிடன்ஸ்! :)

அகமது சுபைர் on November 21, 2011 at 12:05 AM said...

பரிசல், :)))

 

all rights reserved to www.karkibava.com