Nov 14, 2011

கார்க்கியின் காக்டெயில்


 

  யுடான்ஸ் ப‌ற்றி தெரியும்தானே?. ப‌திவ‌ர்க‌ள் கேபிள் ச‌ங்க‌ரும், ஜோச‌ப் பால்ராஜும் இணைந்து தொட‌ங்கியிருக்கும் திர‌ட்டி. வ‌ழ‌க்க‌ம் போல‌ இவ‌ர்க‌ளும் ந‌ட்ச‌த்திர‌ம் ப‌குதி வைத்திருக்கிறார்க‌ள். இந்த‌ வார‌ ந‌ட்ச‌த்திர‌மாக‌ ந‌ம்ம‌ பேரை அறிவித்திருக்கிறார்க‌ள். மீண்டும் தின‌மும் ப‌திவு எழுதும் ப‌ழ‌க்க‌ம் வ‌ர‌ இதை ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌லாம் என்றிருக்கிறேன். உட‌னே ஜோசிய‌ரிட‌ம் ஜாத‌க‌த்தை எடுத்துக் கொண்டு ஓட‌ வேண்டாம். இது சுக்ர‌திசையெல்லாம் இல்லையென்ப‌தை மிக‌வும் தாழ்மையுட‌ன் தெரிவித்துக் கொள்கிறேன். :)

__________________________________________________________________

ப‌ப்லுவின் (அக்காவின் ம‌க‌ன்) தாத்தா இற‌ந்துவிட்டார். ச‌ற்று வ‌ய‌தான‌வ‌ர்தான்.உட‌ல் ந‌ல‌ம் குன்றியும் இருந்த‌த்தால் பொதுவாக‌ ம‌ர‌ண‌ வீடுக‌ளில் காண‌ப்ப‌டும் அழுகுர‌ல்க‌ள் அதிக‌மாக‌ கேட்க‌வில்லை. நான் சென்ற‌போது ப‌ப்லு விளையாடிக் கொண்டுதான் இருந்தான். இறுதி ஊர்வ‌ல‌ம் தொட‌ங்கும் ச‌ம‌ய‌ம் வ‌ந்த‌வ‌ன் தேம்பி தேம்பி அழ‌த் தொட‌ங்கிவிட்டான். அவ‌ன் பேசிய‌தை எல்லாம் கேட்ட‌போது என‌க்கும் ச‌ற்று அழுகை வ‌ந்த‌து உண்மைதான். இடுகாட்டிற்கு நானும் வ‌ருவேன் என்று அட‌ம்பிடிக்க‌, நான் அழைத்துச் சென்றேன். முக‌த்தை போட‌ப் போறேன் க‌டைசியா பார்க்கிற‌வ‌ங்க‌ பார்த்துக்கோங்க‌ என்ற‌ சொன்ன‌போது ப‌ப்லு ம‌ட்டும்தான் பார்த்தான். அவ‌னை தேற்றுவ‌த‌ற்கு இர‌ன்டு ம‌ணி நேர‌மான‌து.இர‌ண்டு ம‌ணி நேர‌மும் அவ‌னுக்கு தாத்தாவை எவ்வ‌ள‌வு பிடிக்குமென்றே சொல்லிக் கொண்டிருந்தான். குழ‌ந்தைக‌ளின் அன்பை புரிந்துக் கொள்ள‌வே முடிவ‌தில்லை. எந்த‌வித‌ பாசாங்குமின்றி இருக்கிரார்க‌ள். அவ‌னுக்கு தாத்தாவை அவ்வ‌ள‌‌வு பிடிக்குமென்ப‌து தாத்தாவிற்கு தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன்  ப‌ப்லுக்க‌ளின் அன்பை பெற்ற எல்லா தாத்தாக்க‌ளுக்கும் சொர்க்க‌த்தில் இட‌ம் முன் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டிருக்கும். என்ப‌து ம‌ட்டும் திண்ண‌ம்.

____________________________________________________

அடுத்த‌ குறும்ப‌ட‌ம் தொட‌ங்கிவிட்டோம். இம்முறை நானும் ப‌ரிச‌லும் வ‌ச‌ன‌ம், க‌தையை எழுதி இருக்கிறோம். புட்டிக்க‌தைக‌ள் சீரிஸ் தான் என்றாலும் ப‌திவில் வ‌ராத‌ க‌தையொன்றைத்தான் எடுக்க‌விருக்கிறோம். புதிதாய் வாங்கியுள்ள‌ Samsung Galaxy S2தான் கேம‌ரா.  குவாலிட்டியில் அடி பின்னுகிற‌து. Optical zoom இல்லையென்ப‌தை த‌விர‌ வேறு எதையும் குறையாக‌ சொல்ல‌ முடியாது.உங்க‌ளுக்காக‌ இர‌ண்டு ஸ்பெஷ‌ல் வ‌ச‌ன‌ம்

"ஆஃப்பாயில்ல‌ பெப்ப‌ர‌ போட்டு சாப்பிட‌லாம். ஆனா குப்புற‌ப் போட்டு சாப்பிட‌ முடியாது"

"என்ன‌டா ஃபாரின் ச‌ர‌க்கு. இங்கிலாந்துகார‌னுக்கு ந‌ம்ம‌ Bols தான் ஃபாரின் ச‌ர‌க்கு"

உட‌ம்ப‌ ப‌த்திர‌மா பார்த்துக்கோங்க‌. விரைவில் வெளிவ‌ரும்.

pic.twitter.com/iXhSi0DY

_____________________________________________

  இன்று குழ‌ந்தைக‌ள் தின‌ம்.அனுஷ்காவை வாழ்த்த‌லாம் என்று அவ‌ரின் புகைப்ப‌ட‌த்தை தேடும்போதுதான் இன்று ச‌ர்க்க‌ரை நோய் தின‌மும் கூட‌ என்ற‌றிந்தேன். இது த‌ற்செய‌லான‌து என்றால் கூட‌ பொருத்த‌மான‌து என்ற‌ முடிவுக்கே வ‌ர‌ வேண்டியிருக்கிற‌து.  நீங்க‌ளும் என‌க்காக‌ அந்த‌ முடிவையே எடுத்து விடுங்க‌ள்.

Anushka Photos

______________________________________________

ஒரே ப‌திவில் ம‌ர‌ண‌ச்செய்தி, குறும்ப‌ட‌ம், அனுஷ்கா என‌ எல்லாவ‌ற்றையும் வாசிப்ப‌து  நெருட‌லாக‌ இருக்க‌லாம். இப்ப‌டித்தானே ந‌ம் வாழ்க்கையும் இருக்கிற‌து.அலுவ‌ல‌க‌ ந‌ண்ப‌ர் அடிக்க‌டி கூறுவார் "பூமியே அண்ட‌வெளியில் ஒரு சின்ன‌ பார்ட். அப்புற‌ம், இந்த‌ உல‌க‌ம் ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ வ‌ருஷ‌மா இருக்கு. நாம் வாழுற‌து என்ன‌வோ அதுல‌ 60,70தான்.அப்ப‌வும் ந‌ம்ம‌ கூட‌ 700 கோடி பேருக்கு மேல‌ வாழுறான். இதுல‌ ந‌ம‌க்கு தெரிஞ்ச‌து, ந‌ம்ம‌ள‌ தெரிஞ்ச‌து என்ன‌வோ 1000 பேருதான். இதுல‌ என்ன‌ பெருசா புக‌ழ், காசு , ப‌ண‌ம் எல்லாம். வ‌ர்ற‌த‌ அ‌ப்ப‌டியே ஏத்துக்கிட்டு போய்ட்டே இருக்க‌ணும்". ச‌ரிதான் இல்லை? ம‌க்க‌ள் அர‌க்க‌ ப‌ர‌க்க‌ ஏறி சீட் போடும் வைகை எக்ஸ்பிர‌ஸ் சென்ட்ர‌லை அடைந்த‌தும் இருக்கும் நிலைப் பார்த்தால் தோன்றுவ‌து இதுதான் “That is the life”

திங்கட்கிழ‌மை. ஆணிக‌ள் ட்ர‌ங்க் கால் போட்டு அழைக்கின்ற‌ன‌. பை.

15 கருத்துக்குத்து:

உமா கிருஷ் on November 14, 2011 at 10:19 AM said...

பிடிச்சிருந்தது காக்டெயில் ரசிச்சு........ வாசிச்சேன் :) உங்க வீட்ல பப்லு மாதிரி எங்க வீட்டிலும் உண்டு.வெளிநாடு செல்லப் பிரியும் நேரம் வரை விளையாடிவிட்டு சகஜமாய் இருக்கிறது என்று எண்ணிய தருணத்தில் கழுத்தைக் கட்டிக் கொண்டு செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தது.கழுத்திலிருந்து வலிக்க வலிக்க கைகளைப் பிரித்த கணத்தில் தெரிந்தது அந்த வாண்டின் பிரியம்.நிஜமாகவே பாசாங்கு அற்றவர்கள் குழந்தைகள் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

! சிவகுமார் ! on November 14, 2011 at 10:20 AM said...

இந்த குறும்படத்தில் நீங்க நடிக்கறீங்களா? இல்லை ஒன்லி வசனமா?

தங்கம்பழனி on November 14, 2011 at 10:37 AM said...

அடடா..! இது அல்லவோ காக்டெயில்..!! கலக்கிட்டீங்க..!!

ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட ஃபலோவர்களை வைத்துக்கொண்டு என்னவொரு தன்னடக்கமா பதிவு எழுதியிருக்கீங்க..! உங்கள் நண்பர் சொன்னது போல நாமெல்லாம் இந்த அண்டவெளியில் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பவர்கள்.. அதைப் புரிந்துகொள்ளாமல் வாழ்க்கையில் எத்தனை போராட்டங்கள், பொறாமைகள், வீண் கர்வம், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அடாடா இந்த மனிதர் இருக்கும் வரைதான் இத்தனையும்.ஆவி ஒன்று போய்விட்டால் அத்தனையும் இந்த அண்டவெளியில் அடக்கம் என்பதையும்ம நம் மனிதர்கள் மறந்துதான் போகிறார்கள் போங்கள்..!!

பகிர்வுக்கு நன்றி..!! நேரமிருக்கும்போது இங்கேயும் ஒரு விசிட் அடிச்சுடுங்களேன்..!

தங்கம்பழனி on November 14, 2011 at 10:37 AM said...

எனது வலையில் இன்று ஒரு சுய முன்னேற்றப் பதிவு:
காளான் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

மோகன் குமார் on November 14, 2011 at 10:48 AM said...

உங்களுக்கு முன்னாடி ஒரு பெரிய பேட்ச்மேன் இப்போதான் யுடான்சில் ஆடி முடிச்சிருக்கார். அவருக்கு அடுத்து ஆடுறோமேன்னு கொஞ்சம் பயம் உள்ளுக்குள் இருக்கா ? (இதெல்லாம் ஓவர்டா மாதவா)

Jaleela Kamal on November 14, 2011 at 11:05 AM said...

காகடெயில்பதிவு அருமை, நீங்க திணடிவனம்ா, நானும் தான் 12வ்ருடம் அங்கு இருந்தோம்.

KSGOA on November 14, 2011 at 2:29 PM said...

காக்டெயில் நல்லா இருக்கு.
தொடர்ந்து எழுதுங்க.

அமுதா கிருஷ்ணா on November 14, 2011 at 2:43 PM said...

வைகை எக்ஸ்பிரஸ் எக்மூர் தானே போகும்?

நடராஜன் on November 14, 2011 at 2:53 PM said...

வாவ் கார்க்கி ஈஸ் பேக்! :)

tamilpride on November 14, 2011 at 3:18 PM said...

காக்டெயில் கொஞ்சம் கசப்பா இருக்கு.... அனுஷ்கா வீடியோ இருந்தா நல்லா இருக்கும் ... anyway cheers ...

சுசி on November 14, 2011 at 4:11 PM said...

குழந்தைகளுக்கு எதையும் மறைத்து வைக்கத் தெரியாது. நாம் கவனிக்கத் தவருகிரோமே தவிர அவர்கள் வெளிக்காட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். எதுவோ ஒரு வடிவில். பப்லுவும் அப்படியே.

//மீண்டும் தின‌மும் ப‌திவு எழுதும் ப‌ழ‌க்க‌ம் வ‌ர‌ இதை ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌லாம் என்றிருக்கிறேன்.//

இந்த முடிவு எடுத்திருக்கிங்க.. ரொம்ப சந்தோஷம்.. உங்க ஜாதகத்தை ஜோசியருட்ட காட்டுங்க.. பிடிச்சிருந்த சனி விலகிடிச்சோ என்னமோ..

கார்க்கி on November 14, 2011 at 5:27 PM said...

ந‌ன்றி உமா.

சிவ‌க்குமார், இய‌க்க‌மும், ஒளிப்ப‌திவும் நானே. ந‌டிக்க‌வில்லை

ந‌ன்றி த‌ங்க‌ம்ப‌ழ‌னி

மோக‌ன், தெரியும் தெரியும் :))

ந‌ன்றி ஜ‌லீலா.. அப்ப‌டியா? எங்க‌ எங்க‌?

ந‌ன்றி KSGOA

அமுதா, கிர்ர்ர்ர்ர்ர்.. :))

ந‌ட‌ராஜ‌ன், :))

த‌மிழ்பிரைடு, அது ச‌ரி :))

சுசி, ச‌னியெல்லாம் ந‌ம்ம‌ள‌ புடிச்சாலும் 2 நாளில் ஓடிடும். :)

ILA(@)இளா on November 14, 2011 at 8:18 PM said...

மறுபடியும் 2008ல் பார்த்த கார்க்கி எழுத்துகள் மாதிரி இருக்கு. தொடருங்க.

பப்லு சம்பவம் போலவே போனமுறை ஊருக்கு வந்தபோதும் நடந்தது :( மிகவும் பாதிச்சிருச்சு.

உங்க மொக்கைப் படம் வளர, தொடர வாழ்த்துகள்!

கார்க்கி on November 14, 2011 at 11:26 PM said...

நன்றி இளா

பரிசல்காரன் on November 15, 2011 at 11:49 PM said...

வாழ்த்துகள் கார்க்கி.

அதென்ன அங்கங்கே எழுத்துப் பிழைகள்? அவசரமா எழுதினியோ...??

 

all rights reserved to www.karkibava.com