Nov 7, 2011

அனுஷ்காஆஆஆஆஆ!


 

  ஆழ்வார்க‌ளும், நாய‌ன்மார்க‌ளும் இன்னும் பிற‌ரும் க‌ட‌வுளை புக‌ழ்ந்து பாடிய‌து இறைவ‌னுக்கு எந்த‌வித‌ பெருமையும் சேர்க்க‌வில்லை. இறைவ‌ன், அதையும் தாண்டிய‌வ‌ன். மாறாக‌, அவ்வாறு பாடி அவ‌ர்க‌ள்தான் பெருமைய‌டை‌ந்தார்க‌ள். அத்த‌கைய‌ நிலையில் இருந்துதான் இந்த‌ப் ப‌திவை நான் எழுத‌த் தொடங்குகின்றேன். இன்று அனுஷ்காவின் பிற‌ந்த‌ நாள். டீ.ஆர் மொழியில் அடுத்த‌ வ‌ரியை சொல்வ‌தென்றால் ந‌ம் வாழ்வின் சிற‌ந்த‌ நாள். திங்கிள்கிழ‌மை கூட‌ ந‌ம‌க்கு பிடித்து போவ‌து இன்று ம‌ட்டும்தான்.

pic.twitter.com/S8areZzr

(Manlinessபோல‌ பெண்க‌ளுக்கு ஏதேனும் வார்த்தை உண்டெனில் அது இதுதான்)

அனுஷ்காவை என‌க்கு "ரெண்டு" ப‌ட‌ம் தொட்டே பிடிக்கும். எல்லோருக்கும் முத‌ல் ப‌ட‌மாக‌ ஏதாவ‌து ஒரு ப‌ட‌ம்தான் அமையும்.ஆனால் அனுஷ்காவுக்கு ம‌ட்டுமே "ரெண்டு" ப‌ட‌மாக‌ அமைந்த‌து. அழ‌குக்கான‌ வ‌ரைவுக்குறிப்பை மாற்றிய‌மைக்க‌ போகும் பேபேபேபேர‌ழகி அவ‌ர் என்ப‌தை அப்போதே நான் அறியாம‌ல் இல்லை. எதிர்கால‌ம் இளைஞ‌ர்க‌ள் கைக‌ளில் என்ப‌து போய், எதிர்கால‌த்தில் எல்லா இளைஞ‌ர்க‌ளின் கைக‌ளிலும் மொபைல்தான் இருக்கும் என்ப‌தை மிக‌ச்ச‌ரியாக‌ க‌ணித்து, அனுஷ்காவின் முத‌ல் பாட‌லையே "மொபைலா மொபைலா" என்றெழுதிய‌ பா.விஜ‌யை இப்போது நினைத்தாலும் ஆச்ச‌ரிய‌ம‌டைகிறேன். பிற்கால‌த்தில் அந்த‌ அனுஷ்காதாச‌னும் "கார்க்கி" என்ற‌ பெய‌ரோடு ஒரு ப‌ட‌த்தில் ந‌டித்த‌து த‌ற்செய‌ல் நிக‌ழ்வென‌ கொண்டு முன் செல்லுவோம்.

த‌மிழ் சினிமா வ‌ர‌லாற்றில் என‌க்கு மிக‌வும் பிடித்த‌வ‌ர்க‌ளென‌ மூவ‌ரைத்தான் எப்போதும் குறிப்பிடுவேன். சாத்வீக‌ம், ப‌யான‌க‌ம், பிர‌ச்சோத‌க‌ம் என‌த் த‌லைவ‌ர் சொன்ன‌து போல் என‌க்கு "ந‌தியா, ஷாலினி,மாள‌விகா" என‌ மூன்று பேரை பிடிக்கும். இதில் யார் பிர‌ச்சோத‌க‌ம் என்ற‌ ஆராய்ச்சி தேவைய‌ற்ற‌து. இது வேறு அள‌வுகோல். இப்ப‌ட்டிய‌லில் நான்காம் இட‌த்திற்கு சுனைனா, சிநேகா போன்ற‌ வெகு சில‌ர் போராடி வாய்ப்பை த‌வ‌ற‌விட்ட‌ன‌ர். ஆனால் அனுஷ்கா Quantum Leap என்பார்க‌ளே அப்ப‌டி ஒரு ஜ‌ம்ப் அடித்து முத‌லிட‌த்திற்கே வ‌ந்துவிட்டார்.ஆம், இப்போது என‌க்கு அனுஷ்கா ம‌ட்டுமே பிடிக்கிற‌து.

( தமழ் ஹிரோக்களை உயரமாக பிறக்கவில்லையே என ஏங்க வைத்தவ‌ளே)

அவ‌ர் அனுஷ்கா அல்ல‌. அனுஷ் அக்கா என்று சில‌ர் ஏள‌ன‌ம் செய்ய‌க்கூடும்.60,70 வ‌ருட‌ங்க‌ள் வாழும் மானிட‌ ப‌த‌ர்க‌ளுக்கே 20 ஆண்டுக‌ள் இள‌மை. 1000 ஆண்டுக‌ள் வாழ‌ப்போகும் அனுஷ்காவிற்கு 100 ஆண்டுக‌ள் வ‌ரை இளமைதான்.அணுவிற்கும், அனுவிற்கும் சுழிக‌ளின் எண்ணிக்கையில் வித்தியாச‌ம் இருக்க‌லாம். ஆனால் உயிரை ப‌றிக்கும் விஷ‌ய‌த்தில் வித்தியாச‌மில்லை என்கிறார் என்னைப் போன்ற‌ இன்னொரு அனுஷ்கா விசிறி. நான் எல்லாம் அனுஷ்கா ஃபேன் இல்லை, ஏசி என‌ எகிறுவோரும் இப்பூவுல‌கில் இல்லாம‌ல் இல்லை.

இன்று மேட‌ம் க்யூரிக்கு பிற‌ந்த‌ நாள் என்கிறார் அனுஷ்காவுட‌ன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத‌ ஒரு ஃபிஸீக்ஸ் அன்ப‌ர். மானிட‌ர்க‌ளின் எல்லா பிர‌ச்சினைக்கும் ஒரு மாற்றாக‌, தீர்வாக‌, Cure ஆக‌ க‌ட‌வுள் அனுப்பிய‌ அனுஷ்காவையும் நாங்க‌ள் மேட‌ம் க்யூரி என்று சொல்வ‌தில் என்ன‌ த‌வ‌று இருக்க‌ முடியும்? இன்னொரு ந‌ண்ப‌ர் க‌ம‌ல‌ஹாச‌ன்,வெங்க‌ட் பிர‌பு, பாட‌க‌ர் கார்த்திக்கிற்கும் இன்று பிற‌ந்த‌ நாளாயிற்றே என்கிறார். அனுஷ்கா பிறந்த‌ அன்றே பிற‌ந்த‌வ‌ர்க‌ள் என்ற‌ ஒரே கார‌ண‌த்திற்காக‌ திரைத்துறையில் மின்னும் இவ‌ர்க‌ளையும் நாங்க‌ள் வாழ்த்துகிறோம். ஆனால் அனுஷ்காவை ம‌ட்டுமே நேசிக்கிறோம்.

(சென்ற‌ நூற்றாண்டின் ஆக‌ச் சிற‌ந்த‌ ப‌டைப்பான‌ அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்)

இன்னும் இப்ப‌டி ந‌டிக‌ர், ந‌டிகைக‌ள் பின்னாலே போனால் எப்படி? கொரியாவைப் போல‌, ஈரானைப் போல‌ உல‌க‌‌ப்பட‌ம் எடுக்க‌ வேண்டாமா என்ப‌து ந‌ண்ப‌ர் கானா.மூனாவின் ஏக்க‌ம். ப‌ட‌ம் எடுப்ப‌து இருக்க‌ட்டும். அனுஷ்காவை போன்ற‌ ஒரு உல‌க‌ ஃபிக‌ர் அவ‌ர்க‌ள் நாட்டில் உண்டா? இல்லை இனிதான் பிற‌க்கும் வாய்ப்பு இருக்கிற‌தா? போதி த‌ர்ம‌ரைத்தான் தாரை வார்த்துவிட்டோம். இம்முறை நாங்க‌ள் விடுவ‌தாக‌ இல்லை. அனுஷ்கா ப‌க்தி முற்றிப் போய் ந‌ண்ப‌ர் ராஜ‌ன் இவ்வாறு பாடுகிறார் ஃபேஸ்புக்கில்

அழகென்ற சொல்லுக்கு அனுஷ்கா
உன் அருளன்றி உலகிலே பொருளேது அனுஷ்கா!
அழகென்ற சொல்லுக்கு அனுஷ்கா

இன்னொரு ர‌சிக‌ர் ஒரு ப‌டி மேலே போய் இவ்வாறு தொட‌ர்கின்றார்

செருப்பானாலும் அனுஷ்கா காலில் செருப்பாவேன்....
ஜாக்கெட் ஊக்கானாலும் அனுஷ்கா முதுகில் ஊக்காவேன்...
ஹேர் பின்னானாலும் அனுஷ்கா தலையில் பின்னாவேன்...
தெரு மண்ணானாலுமவள் வாக்கிங் போகும் தெரு மண்ணாவேன்... நான்....

இப்ப‌டிப்ப‌ட்ட‌ ர‌சிக‌ர்க‌ள் இருக்கும்வ‌ரை அனுஷ்காவின் புக‌ழ் ம‌ங்காது. அனுஷ்கா நீடுழி வாழும்வ‌ரை இவ்வுல‌க‌மும் அழியாது.

  WISH YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY DARLINGGGGG

17 கருத்துக்குத்து:

கார்த்திகை on November 7, 2011 at 12:37 PM said...

கார்கி பின்னிட்டிங்க. மிகவும் ரசித்தேன். உங்கள் வரிகளையும், அனுஷ்காவின் படங்களையும்.

SUREஷ்(பழனியிலிருந்து) on November 7, 2011 at 12:40 PM said...

//ஜாக்கெட் ஊக்கானாலும் அனுஷ்கா முதுகில் ஊக்காவேன்... //

அங்க ஊக்கு இல்லைன்னா..,

இளையசிங்கம் நவீன் on November 7, 2011 at 12:42 PM said...

எல்லாமே சரி தான் சார் அவங்க உயரம கூட சரி பரவாயில்ல இலியானா பிரிய மணி எல்லாம் துணைக்கு இருக்கிறதல ஏத்துக்கலாம் ஆனா சில நடிகர்களுடன் இருக்கும் போது அவங்க அனுஷ் அக்காவா மறிடிரங்க அது மட்டும் தான் மைனஸ்

மாங்கனி நகர செல்லக் குழந்தை on November 7, 2011 at 12:56 PM said...

இதுல எல்லாம் ரொம்ப ஓவர்.......

சி.பி.செந்தில்குமார் on November 7, 2011 at 12:59 PM said...

>>"ந‌தியா, ஷாலினி,மாள‌விகா" என‌ மூன்று பேரை பிடிக்கும். இதில் யார் பிர‌ச்சோத‌க‌ம் என்ற‌ ஆராய்ச்சி தேவைய‌ற்ற‌

அடடா!!!!!!!!!!

Kaarthik on November 7, 2011 at 1:02 PM said...

//எல்லோருக்கும் முத‌ல் ப‌ட‌மாக‌ ஏதாவ‌து ஒரு ப‌ட‌ம்தான் அமையும்.ஆனால் அனுஷ்காவுக்கு ம‌ட்டுமே "ரெண்டு" ப‌ட‌மாக‌ அமைந்த‌து/// - செம

// பிற்கால‌த்தில் அந்த‌ அனுஷ்காதாச‌னும் "கார்க்கி" என்ற‌ பெய‌ரோடு ஒரு ப‌ட‌த்தில் ந‌டித்த‌து த‌ற்செய‌ல் நிக‌ழ்வென‌ கொண்டு முன் செல்லுவோம்.// - :-))

உங்கள் ஹீரோயின் விருப்பப் பட்டியலில் மாளவிகா தவிர அனைவரும் எனக்கும் Most favourites.

அனுஷ்கா பிறந்த தினத்தில் கமல் பிறந்தார் என்பது மட்டும் ரொம்பவே ஓவர். Anyways, I enjoyed reading :-)

Happy B'day to Anushka. She is not a Heroine, but Heroin ;-)

Rajan on November 7, 2011 at 1:03 PM said...

தொங்கிக்கிடந்த தமிழ்ச்சமூகத்தை செங்குத்தாகத் தூக்கி நிறுத்தும் பதிவு! நன்றி தோழர் கார்க்கி!

சுசி on November 7, 2011 at 1:05 PM said...

இருவருக்கும் வாழ்த்துகள் :)

பொதினியிலிருந்து... கிருபாகரன் on November 7, 2011 at 1:13 PM said...

//Anushka is god// இது கொஞ்சம் ஒவர் தல!! ஐயோ....சொக்கா.... எனக்கில்ல எனக்கில்ல!!!

மோகன் குமார் on November 7, 2011 at 1:17 PM said...

:))

This is my area. Why are you coming here??

Vijay Armstrong on November 7, 2011 at 1:48 PM said...

கிண்டல் தாண்டி..பொம்மாயி அனுஷ்காவின் கம்பீரமான அழகு..தன் விருப்பத்தின் பேரில் அடிமையாக இருக்க தூண்டும்.

நல்ல, தேவையான, சுவாரசியமான பதிவு கார்க்கி.

sivakasi maappillai on November 7, 2011 at 4:36 PM said...

இலியானவ பாக்காத கண்களுக்கு இப்படியெல்லாம் தெரிவதில் ஆச்சரியம் இல்லை....

இலியானவ பாத்த பிறகு வரும் இலியானா பிறந்த நாள் பதிவிற்கு காத்திருக்கிறேன்

தராசு on November 8, 2011 at 11:40 AM said...

இதெல்லாம் கொஞ்சம் ஓவர்...,

வர வர ஒரு மார்க்கமாத்தான் போயிகிட்டிருக்கீங்க,

தோழியோட நம்பர் ப்ளீஸ்.....

Sankar P on January 4, 2012 at 11:08 AM said...

என்னோட லிஸ்ட் அமலா, ஷாலினி, அனுஷ்கா.
மொபைலா மொபைலா பாட்டு எழுதியது பா விஜய் இல்லை, தபு சங்கர்.
ஊக்கு ஆகிறதுன்னு முடிவு பண்ணிட்டா அப்புறம் ஏன் முதுகு ஊக்கு ஆகணும் ;-) !?

பன்னிக்குட்டி ராம்சாமி on March 6, 2012 at 6:51 PM said...

அண்ணே எங்கேயோ போய்ட்டீங்கண்ணே..... அனுஷ்கா வாழும் காலத்தில் நாமும் யூத்தாக வாழ்கிறோம் என்பதே எங்களுக்கு பெருமை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அகில ஒலக பேரழகி அனுஷ்கா வெறியர் கூட்டமைப்பு,
சர்வதேச கிளை

Rajivparthiban on March 29, 2012 at 3:49 AM said...

Udal mannukku uyir anushkaavukku

சிவா on November 7, 2012 at 12:08 AM said...

2012 anushka அண்ணிக்கு 31வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் . அண்ணே உங்களுக்கு 32 தானே

 

all rights reserved to www.karkibava.com