Oct 26, 2011

வேலாயுதம்: The entertainer is back.


 

எதுக்குடா அடிக்கிற வெயில்ல வெந்நீர் கேட்கிற?

வெறியேத்தத்தான்.

தியேட்டரை விட்டு வெளியே வரும் ஒவ்வொரு விஜய் ரசிகனும் சந்தோஷமும், வெறியும் ஒன்றாய் சங்கமிக்கும் புள்ளியில் மொத்த ஆறறிவையும் அடகுவைத்து விட்டே வருகிறான். காவலன் ரிலீஸ் ஒரு நாள் தள்ளிப்போனது, வேலாயுதத்திற்கு சரியான தியேட்டர் கிடைக்காதது என நொந்து போயிருந்த ரசிகர்கள் ராஜாவையே மலை போல நம்பியிருந்தார்கள். விஜய் ரசிகர்களே இயக்குனரை நம்பும் அளவிற்கு தமிழ் சினிமா மாறியிருப்பது சந்தோஷம் தான். இருந்தாலும் அம்பு பிரம்மாஸ்திரமாய் இருந்தால் வில்லெய்பவனுக்கும் வேலை சுலபம். அந்த வகையில் ராஜாவுக்கு விஜயும், விஜய்க்கு ராஜாவும் அமைந்து போனது ரசிகர்களின் அதிர்ஷ்டம்.

கதையெல்லாம் ஆசாதின் விக்கி பக்கத்திலோ, இல்லை படமாகவோ பார்த்திருப்பீர்கள். அல்லது, ட்ரெயிலர் பார்த்தே யூகித்திருப்பீர்கள். அதேதான். ஆனால் வழக்கமான ராஜாவின் ஜெராக்ஸ் வேலை நிச்சயமாய். இல்லை. ஒன்லைனரை மட்டுமே எடுத்து சொந்தமாக தோரணம் கட்டியிருக்கிறார். கில்லியைப் போல சரவெடியாக திரைக்கதை இல்லாவிட்டாலும், புஸ்வாணம், சங்கு சக்கரம், பாம், லட்சுமி வெடி, சில புஸ் வெடி என சகல ஐட்டத்தையும் கோர்த்து சிவகாசி பட்டாசுக்கடை செய்திருக்கிறார். சரி, கதையும் சொல்லி விடுகிறேன்,

வெளிநாட்டு தீவிரவாதிகள் உள்துறை அமைச்சரை கையில் போட்டுக் கொண்டு இந்தியாவை, தமிழகத்தை நாசம் செய்ய நினைக்கிறார்கள். மந்திரியின் பார்ட்னர் கள்ள நோட்டு, சிட் ஃபண்ட் என பணம் சேர்க்கிறார். ஜெனிலியா ஒரு சின்சியர் ஜெர்ணலிஸ்ட்டாக இதை கவர் செய்ய நினைக்கிறார். எதிர்பாராதவிதமாக அவர் செய்யும் ஒரு கற்பனை கதாபாத்திரம் மக்களை காக்கிறது. அதை தனக்கே தெரியாமல் செய்வது விஜய் தானென்பதை சொல்லவும் வேண்டுமா? கிராமத்தில் தங்கச்சிக்காக வாழும் சிவகிரி..சாரி.அது திருப்பாச்சி இல்லை? வாழும் வேலு சேர்த்து வைத்த காசை சிட் ஃபண்ட்டில் இருந்து எடுக்க சென்னை வரும்போதுதான் மேலே சொன்னதெல்லாம் நடக்கிறது. ஜெனிலியா உண்மையை சொல்லும்போது, எனக்கு ஒரே கட்சி என் தங்கச்சி என பேக் அடிக்கிறார் விஜய். கடைசியில் அவர் பணமே சிட் ஃபண்ட்டில் பணால் ஆகும் போது வேலு வேலாயுதமாய் மாறுகிறார். பின் இரண்டாம் பாதியில் என்னவெல்லாம் செய்வார் என்றால், சண்டை போடுவார்.

IMG_0682[1] குரோம்பேட்டை வெற்றி அரங்கில் பார்த்தேன்.

முதல் பாதி காமெடி சரியாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. நச் நச் என நகரும் காட்சிகள் சிரிப்பு வெடி. போதாதென்று சென்னையில் சந்தானமும் சேர்ந்துக் கொள்கிறார். ஓப்பனிங் பாடலை கேட்டு கடுப்பான சிலருக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். “அவர் யார் தெரியுமா” என்று கிழவர் சொல்வாரே… அதுக்கு படம் பாருங்க. அதே போல் சில்லாக்ஸ் க்ளைமேக்ஸ் பாடலாயிற்றே. என்ன ரெஸ்பான்ஸ் என்பவர்களுக்கு “க்ளைமேக்ஸ் பாடலுக்கு செம ரெஸ்பான்ஸ் தான். ஆனால் சில்லாக்ஸ் முதல் பாதியிலே வந்துவிடும்”. இடைவேளையில் கோன் ஐஸ்க்ரீம், பாப்கார்ன் எல்லாம் யாரும் வாங்கவேயில்லை. எல்லோர் காதிலும் செல்ஃபோன். எல்லோர் முகத்திலும் சந்தோஷம். மவுத் டாக் போய்க் கொண்டேயிருந்தது “மாப்ள. படம் செம செம”

இரண்டாம் பாதி வேலாயுத தரிசனம். இங்குதான் லேசாக சறுக்கியிருக்கிறார் ராஜா. சூப்பர் ஹீரோ என்பதால் எல்லோரையும் சண்டைப் போட்டே சாவடிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார். மூளைக்கு வேலை விஜய்க்கும் இல்லை. நமக்கும் இல்லை. இதை மட்டும் கவனித்திருந்தால் மிகச்சிறந்த சூப்பர் ஹீரோ படமாக இது மாறியிருக்கும். க்ளைமேக்ஸ் ஓக்கேதான் என்றாலும் நியூட்ரல் ஆடியன்ஸ் விஜயின் ஹீரோயிசத்தை ஏற்றுக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சரியான இடத்தில் அமைந்த இரண்டு பாடல்கள் இரண்டாம் பாதிக்கு பலம்.

விஜய்.. என்னத்த சொல்ல? ஒரு மாற்றமும் இல்லை. அதே விஜய் தான். இந்த முறை ஸ்கிரிப்ட் உதவியிருக்கிறது. என்னால் எப்போதும் விஜயை மட்டும் படத்திருலிருந்து தனியே பிரித்து பார்க்க முடியும். அதனால்தான் சுறா போல எவ்வளவு சூர மொக்கை வந்தாலும் கொஞ்சமாவது என்னால் திருப்தியடைய முடிகிறது. அப்படி பார்த்தால் விஜய் இதில் எதுவும் ஸ்பெஷலாக செய்யவில்லை. அதே விஜய். படம் நன்றாக இருப்பதால் இன்னும் பட்டையை கிளப்புறார். தளபதி என்னை திருப்திப்படுத்த தவறுவதேயில்லை.

வசனம் அவ்வபோது சுபா என்று நினைக்க வைக்கிறது. விஜயை கட்டிவைத்து பின்னாலிருந்து அமைச்சர் அடிக்கிறார். அப்போது விஜய் சொல்வது “பின்னாடி இருந்து அடிக்கும் பொறம்போக்கு யாருடா”. தியேட்டர் என்னவாகியிருக்கும் என யூகித்துக் கொள்ளுங்கள். வழக்கம் போல தீவிரவாதி முஸ்லீம். அவரிடம் போலீஸ் சொல்கிறார் “உண்மையிலே முஸ்லீம் இந்தியாவுலதான் பாதுகாப்பா இருக்காங்க. உங்க பின்லேடன உங்க நாட்டுல காப்பாத்த முடியல. ஆனா எங்களுக்கு பிடிக்காத கசாப் கூட இங்க சேஃபாதான் இருக்காரு”. இன்னும் பல நச் வசனம். எங்கே கேட்க முடிந்தது? ரசிகர்கள்..

ஹன்சிகாவும், சரண்யா மோகனும் ஸ்கோர் செய்கிறார்கள். பாவம். ஜெனிலியா லூசாக நடிக்கத்தான் லாயக்கு போல. சந்தானம் கிடைக்கும் எல்லா இடங்களிலும் லட்சுமி வெடி வெடிக்கிறார். இன்னும் கொஞ்சம் வரலாமே என ஏங்க வைக்கும் வேலை சந்தானத்திற்கு. இருக்கும் நட்சத்திரங்களின் பெயர்களை எழுதினால் கிமீ.ரேஞ்சுக்கு போய்விடும் பதிவு. எல்லோரையும் கட்டி மேய்த்ததில் ராஜா மிளிர்கிறார். ஸ்க்ரிபிட்டிற்கு அவர் உழைத்தது திரையில் தெரிகிறது. விஜய் ஆண்ட்டனியின்  பாடல்கள் ஆல்ரெடி ஹிட். திரையில் ஹிட்டோ ஹிட். என் சாய்ஸ் சொன்னால் புரியாதும், சில்லாக்ஸூம், மாயம் செய்தாயோவும், ரத்ததின் ரத்தமும், முளைச்சு மூணு இலையும்.

மொத்ததில் முதல் பாதி எல்லோரையும், இரண்டாம் பாதி ஆக்‌ஷன் ரசிகர்களையும், விஜய் ரசிகர்களையும் குளிர்வைக்கிறான் வேலாயுதம். நிச்சயம் தீபாவளிக்கு 1000 வாலா வேலாயுதம் தான்.

___________

வேலாயுத படங்கள் வெளிவந்த போது ஏதோ வீடியோ கேமிலிருந்து காப்பியடித்துவிட்டார்கள் என பொங்கினார்கள் திருட்டு சிடியில் படம் பார்க்கும் சிலர். படத்தில் விஜய் ஒரு கண்காட்சிக்கு போவார். அங்கே பொம்மைக்கு பல வித உடைகள் போட்டிருப்பார்கள். அதி ஒன்றை அணிந்துக் கொண்டு எஸ்கேப் ஆவார். அதுவே வேலாயுத உடையாக மாறும். ஏதோ கேஸெல்லாம் போட்டார்கள் நியாயவான்கள்.என்ன ஆச்சுன்னா சொல்லுங்கப்பா.அதே போல அண்ணன் தங்கை பாடலில் தாஜ்மகாலுக்கு என்ன வேலை என்றெல்லாம் கேட்டார்கள். படம் பாருங்கப்பா..

_________________

விஜயின் டொகொமோ விளம்பரம்

35 கருத்துக்குத்து:

சேலம் தேவா on October 26, 2011 at 10:55 AM said...

//என் சாய்ஸ் சொன்னால் புரியாதும், சில்லாக்ஸூம், மாயம் செய்தாயோவும், ரத்ததின் ரத்தமும், முளைச்சு மூணு இலையும்.//

இருக்கற 6 பாட்டுல மத்த ரெண்டு பாட்ட மட்டும் ஏன் விட்டுட்டிங்க..?! :)

என். உலகநாதன் on October 26, 2011 at 10:59 AM said...

அப்போ படம் பார்க்கலாம கார்க்கி?

vanila on October 26, 2011 at 11:17 AM said...

//மூளைக்கு வேலை விஜய்க்கும் இல்லை. நமக்கும் இல்லை//

# வாக்குமூலம்.

சி.பி.செந்தில்குமார் on October 26, 2011 at 11:26 AM said...

என்னது? வேலாயுதம் ஹிட்டா? அவ்வ்வ்

amas on October 26, 2011 at 11:32 AM said...

என்னவோ டிக்கெட் வாங்கியாச்சு, ஏழாம் அறிவை விட இது பெட்டரா என்று பார்த்துதான் சொல்ல வேண்டும்.
amas32

வைரை சதிஷ் on October 26, 2011 at 12:41 PM said...

சூப்பர்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

காவேரிகணேஷ் on October 26, 2011 at 12:42 PM said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் கார்க்கியின் எழுத்துக்களில் மகிழ்ச்சி பொங்குகிறது.

மணிகண்டன் on October 26, 2011 at 2:48 PM said...

படம் மாஸ். எனக்கு பிடித்திருந்தது. ஆனால் நீங்களும் விஜய் படத்தை தியேட்டரில் படம் பிடித்து அதை வலையில் (அதுவும் உங்கள் வலைத்தளத்தில்) போடுவீர்கள் என்று எதிர்ப்பார்க்கவில்லை.

மைந்தன் சிவா on October 26, 2011 at 4:36 PM said...

சூப்பர் விமர்சனம் அண்ணே!!
படம் சூப்பர் ஹிட்!!
என் விமர்சனம்,
http://kaviyulagam.blogspot.com/2011/10/blog-post_26.html

ILA(@)இளா on October 26, 2011 at 6:48 PM said...

கார்க்கி நீங்க சொன்ன ஆசாத்துடையது. படம் ஓடவேண்டாம்னா சொல்றோம்? ஓடினா நல்லாத்தானே இருக்கும்னு இல்லே சொல்றோம்?

எப்படியோ நீங்க ஹேப்பின்னா, பொதுமக்கள் 30% சந்தோசமாகிடுவாங்க.

Game காப்பி எல்லாம் :)) அப்ப வியட்னாம் காலனியை காப்பி அடிச்சதுன்னு சொல்லி அவதார் மேல கேஸ் போட்டுரலாமா? செம பைசா வசூல் என்ன சொல்றீங்க? புடிங்க அவுங்க FB Linkஅ.

அகில் பூங்குன்றன் on October 26, 2011 at 6:57 PM said...

Wow. then this weekend padam polam. I was waiting for your review...:)

Docoma ad is good

கருந்தேள் கண்ணாயிரம் on October 26, 2011 at 10:38 PM said...

;-) இப்பதான் இதைப் பார்த்தேன். Assassin's Creed கேம்லருந்து காப்பியடிச்ச போஸ்டர்கள், டிஸைன்ஸ், அந்தக் காட்சி.. இதெல்லாமே க்ளியர்கட் copyright violationதான் பாஸ் ;-). ஒண்ணே ஒண்ணு கேட்கணும். இவனுங்க காப்பியடிச்சதைப் பத்தி நான் எழுதுன போஸ்ட்ல வந்து பொங்க வேண்டியதுதானே :-). அப்பல்லாம் எதுவும் சொல்லாம, இப்ப எதுக்கு இந்தப் பொழப்பு ;-). உங்க கருத்துக்கு பதிலை உங்ககிட்டயே சொல்லணும்னுதான் இங்க கமெண்ட் போட்ருக்கேன். உங்களுக்கு என்னோட கருத்துல எதாவது மாறுபாடு இருந்தா என் போஸ்ட்ல வந்து கேளுங்க. அதைவிட்டுட்டு, எனக்குத் தெரியப்படுத்தாம உங்க தளத்துல பொங்காதீங்க. அதுக்கு வேற பேரு ;-)

கருந்தேள் கண்ணாயிரம் on October 26, 2011 at 10:40 PM said...

இன்னொண்ணு. திருட்டு சிடில படம் பாக்குற வெட்டிகளுக்குத்தான் தன்னைப்போலவே அடுத்தவனையும் எண்ணத் தோணும். என்ன சொல்றீரு
;-)

கார்க்கி on October 26, 2011 at 11:18 PM said...

நன்றி கருந்தேள்.

கண்டிப்பா வயலேஷன் தான். இப்ப வேற கேஸ் போட்டிருக்காங்க. என்ன ஆகுதுன்னு பார்ப்பொம். ஏன்னா கோர்ட்டுல கேஸ் இருக்கிறப்பா நாம பேசக்கூடாது பாருங்க.

/// இவனுங்க காப்பியடிச்சதைப் பத்தி நான் எழுதுன போஸ்ட்ல வந்து பொங்க வேண்டியதுதானே ://

சாரி பாஸ்> உங்க பிலாக் நான் படிச்சதே இல்லை. இந்த விஷயம் கூட பஸ்ஸூல நண்பர் ஒருவர் ஷேர் பண்ணதாலதான் தெரியும்.

//உங்களுக்கு என்னோட கருத்துல எதாவது மாறுபாடு இருந்தா என் போஸ்ட்ல வந்து கேளுங்க. அதைவிட்டுட்டு, எனக்குத் தெரியப்படுத்தாம உங்க தளத்துல பொங்காதீங்க.//

இதென்ண்டா வம்பா போச்சு. நான் என் போஸ்ட்டுல எழுத கூடாதாம். இவர் பதிவுல வந்துதான் கேட்கணுமாம். இதுக்கு பேரு வேறயாம். உங்களுக்கு மட்டும் தெரியாம எழுதினத எச்சி தொட்டு அழிச்சா வச்சிருக்கேன்?

அப்புறம் இதுவரைக்கும் நான் எந்த திருட்டு விசிடில பார்த்த படத்தை பற்றியும் எழுதியதில்லை. நீங்களும் இல்லைன்னு கன்ஃபார்மா சொல்ல முடியுமா தல?

கார்மேகராஜா on October 26, 2011 at 11:53 PM said...

இப்படித்தான் ஒருத்தர் வேட்டைக்காரனுக்கு விமர்சனம் எழுதிருந்தார், பார்த்துட்டு நொந்து போயிட்டேன். நீங்க விஜய் ரசிகரா இருக்கிறதால இன்னும் ஒருவாரம் கழித்தே பேறேன்.

கருந்தேள் கண்ணாயிரம் on October 27, 2011 at 1:07 AM said...

//சாரி பாஸ்> உங்க பிலாக் நான் படிச்சதே இல்லை. இந்த விஷயம் கூட பஸ்ஸூல நண்பர் ஒருவர் ஷேர் பண்ணதாலதான் தெரியும். //

தெரிஞ்சப்புறம், அங்க வந்து உங்க எதிர் கருத்தை சொல்லவேண்டியதுதானேன்னுதான் கேட்கிறேன். இப்ப, நான் இங்க வந்து பேசாம, என் தளத்துலயே பேசலாம். ஆனா அது முறையில்ல; இங்க வந்து நீங்க சொன்னதுக்குப் பதில் போடுறதுதான் முறைன்றது என் பாயிண்ட். அதான் பஸ்ஸுல ஒருத்தர் ஷேர் பண்ணிக்கினாரே ;-).

//இதென்ண்டா வம்பா போச்சு. நான் என் போஸ்ட்டுல எழுத கூடாதாம். இவர் பதிவுல வந்துதான் கேட்கணுமாம். இதுக்கு பேரு வேறயாம். உங்களுக்கு மட்டும் தெரியாம எழுதினத எச்சி தொட்டு அழிச்சா வச்சிருக்கேன்?
//

உங்க போஸ்ட்ல நீங்க என்னவேணா எழுதலாம். ஆனா, நீங்க ‘பஸ்ஸுல’ பார்த்த கேஸ் மேட்டர் இருக்குற சைட்ல போயி, அதைப்பத்தி உங்க கமெண்டைப் போடலாமுல்லன்னு சொல்றேன் :-).. இங்கியே பொங்குறதுக்குப் பதிலு . அப்பதான் எதிர்சைடோட பாயிண்ட்டும் தெரியும் இல்லையா?

finally - //அப்புறம் இதுவரைக்கும் நான் எந்த திருட்டு விசிடில பார்த்த படத்தை பற்றியும் எழுதியதில்லை. நீங்களும் இல்லைன்னு கன்ஃபார்மா சொல்ல முடியுமா தல?//

Absolutely. இதுவரை செஞ்சதில்ல. அந்த வேலையை நான் இனிமேலும் செய்யமாட்டேன். :-). திருப்தியா? :-)

கருந்தேள் கண்ணாயிரம் on October 27, 2011 at 1:12 AM said...

கார்க்கின்றது வயிரமுத்து பையன்னு நினைச்சேன் ;-). அவரு தான் வேலாயுதத்தைப் பாராட்டி பொங்கிருக்காருன்னு இங்க வந்து பார்த்தா, இது வேற ஆளு போலயே ;-). . உங்க ப்ளாக்கை இண்ணிக்கிதான் பாக்குறேன் ;-).. ஒருவேளை நீருதான் அவரோ?

தர்ஷன் on October 27, 2011 at 1:13 AM said...

வாழ்த்துக்கள் சகா

அசோகபுத்திரன் on October 27, 2011 at 11:27 AM said...

அய்யோ கருந்தேள், உங்களுக்கு விஷயமே தெரியாதா... இவரு மங்காத்தாவுல ஆயிரம் ஓட்டைய லென்ஸ் வச்சு தேடி கண்டுபுடிச்சு பதிவு போட்டுட்டு அதுக்கு கமெண்ட் பாக்ஸயே ஓபன் பண்ணாத அசகாய சூரரு, வீரரு...
\\இங்கியே பொங்குறதுக்குப் பதிலு . அப்பதான் எதிர்சைடோட பாயிண்ட்டும் தெரியும் இல்லையா?\\
அந்த பாயிண்ட்டெல்லாம் கேட்டா அவரு அழுதுடுவாரு பாஸு....

அசோகபுத்திரன் on October 27, 2011 at 12:02 PM said...

\\அம்பு பிரம்மாஸ்திரமாய் இருந்தால் வில்லெய்பவனுக்கும் வேலை சுலபம்\\
என்னது இன்னொரு வில்லா???? நான் வரல இந்த விளையாட்டுக்கு...

கார்க்கி on October 27, 2011 at 12:11 PM said...

திரு.அசோக‌புத்திர‌ன், உம்மிட‌ம் இருக்கும் லென்ஸை வைத்து உம்மிட‌ம் இருக்கும் வ‌லைப்பூவில் எழுத‌ நான் என்ன‌ ஸ்டே ஆர்ட‌ரா வாங்கி வைத்திருக்கிறேன்?நீங்க‌ ம‌ங்காத்தாவுக்கு அடிச்ச‌ சொய்ங்சொப்பு மாதிரி நான் ஒன்ணும் வேலாயுத‌ம் அதிரிபுதிரி என்று அடித்துவிட‌வில்லை.

திரு.கருந்தேள்,
உம்மிட‌ம் விவாத‌ம் செய்வ‌த‌ல்ல‌ என் நோக்க‌ம். என் பிளாகிற்கு வ‌ந்த‌த‌ற்கு ந‌ன்றி. :)

அசோகபுத்திரன் on October 27, 2011 at 3:30 PM said...

\\நீங்க‌ ம‌ங்காத்தாவுக்கு அடிச்ச‌ சொய்ங்சொப்பு மாதிரி \\
நான் ம‌ங்காத்தா பத்தி எந்த பதிவும் போடல... எவனாவது உங்கள கலாய்ச்சாலும் பரவாயில்ல.. உங்க தலைவர கலாய்ச்சுருவானோன்னு பயந்து நீங்க கமெண்ட் பாக்ஸயே ஓபன் பண்ணல.. அப்புறம் நான் ம‌ங்காத்தாவுக்கு சொய்ங்சொப்பு அடிக்கிறத நீங்க எங்க பார்த்தீங்க பாஸு... உங்க லென்ஸு சரியில்ல பாஸு.. எல்லாமே உங்க கண்ணுக்கு கரெக்டா தப்பா தெரியுது...

ராகுல் on October 27, 2011 at 6:54 PM said...

வேலாயுதமும் தோலுரியும் பதிவர்களும்.

http://www.sirakuhal.com/2011/10/blog-post_27.html

Anonymous said...

அய்யா தேளு,நான் அனுப்பின மின்னஞ்சல் மூலமா வேலாயுதம் படத்துக்கு ஆப்பு வர போகுதுன்னு எரிஞ்சிட்டிருந்த உங்க பல்ப தான்,கேஸ் போட மாட்டோம்னு சொல்லி fuse புடுங்கிடாங்க இல்ல.அப்புறம் ஏன் இன்னமும் பொங்கிட்டு இருக்கீங்க

assasins creed அப்படின்னு ஒரு கேம் இருக்குங்கறதே எங்களுக்கு வேலாயுதம் போஸ்டர் வந்த அப்புறம் தான் தெரியும்.இதே கதை தான் நெறைய பேருக்கு-னு நினைகிறேன்.இப்படி தான் யோஹன் போஸ்டர் வந்த உடனே இது லார்கோவின்ச் காபி-னு நெறைய பேரு பொங்கினாங்க.சரி யாருடா இந்த லார்கோவின்ச்-னு எங்க மாமா விக்கி(பீடியா)-அ கேட்டா,அவரும் ஒரு ரெண்டு மூணு வரிக்கு மேல சொல்ல மாட்ராறு.அதுக்குள்ள இங்கே லார்கோ-வ ஒரு jamesbond ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துட்டாங்க.

ஒரு வகைல பார்த்தா,தமிழ் சினிமா ரசிகனை கழுவும் தரத்தில் இருந்து துடைக்கும் தரத்திற்கு கொண்டு போற வேலைய எங்க தளபதி உங்கள விட நல்லாவே பண்றாரு.வேலும்,யோஹனும் இல்லேனா assasinscreedum ,largowinchum தமிழ் நாட்டுக்கு தெரியாமலே போயிருப்பாங்க.அதனால நீங்க போய் ஆகற வேலைய பாருங்க.உங்க கிட்ட இருந்து நான் இன்னும் நெறைய எதிர்பார்கிறேன்

கார்க்கி,என்னடா இது வீட்ல இருந்து 40 மைல் தள்ளி theatre இருக்கே,வார கடைசில பாக்கலாம்-னு இருந்தேன்.ஆனா உங்க பதிவ பார்த்ததும் சுடுதண்ணி குடிக்காமலே ஒரு வெறி வந்து நேத்து படம் பாத்தாச்சு.இந்த தீபாவளி நமக்கு செம collection தான் :-)

vimal on October 27, 2011 at 10:57 PM said...

yempa padam last one hour wastenu solranga ???

கருந்தேள் கண்ணாயிரம் on October 28, 2011 at 11:18 AM said...

அய்யா ஜெய்யி,

//'வேலும்,யோஹனும் இல்லேனா assasinscreedum ,largowinchum தமிழ் நாட்டுக்கு தெரியாமலே போயிருப்பாங்க//

நீங்க மேல போட்ருக்குற செம்ம காமெடி வார்த்தைகள ஒரு கல்வெட்டுல பொரிச்சி, அப்புடியே பக்கத்துல குந்திக்கினு இருந்தீங்கன்னா, வர்ற போற வெட்டிகளுக்கு ரொம்ப உபயோகமா இருக்குமப்பு .. பின்னால வர்ற சந்ததிகள் கூட அதைப் பார்த்துப் படிச்சி பயனடைய பல வாய்ப்புகள் உண்டு. ;-). . copyright னா என்னன்னே தெரியாதவனெல்லாம் எப்புடி ஒளருவான்னு தெரிஞ்சிக்க இதுவே போதும் ;-). . ஹாஹ்ஹா . . காப்பியடிச்சே காலத்தை ஓட்டுற தமிழ் சினிமா மக்களுக்கு உங்கள மாதிரி ரெண்டு சொம்புங்க.. இல்ல.. நீரு ஒருத்தரே போதும். . . உருப்பட்ட மாதிரிதான் ;-) . . போயி வேலையைப் பாருமய்யா. .

சுசி on October 28, 2011 at 12:10 PM said...

கலக்கல் விமர்சனம்.. படம் செம்ம்மம்ம்ம்ம :))

Anonymous said...

ன்னா,copyright -நா என்னனு உங்கள விட,என்ன விட ubisoft வச்சிருக்குற வக்கீல் கூட்டத்துக்கு நல்லாவே தெரியுமுங்க ன்னா

product -oda சொந்தக்காரனே லூஸ்-ல விட்ட அப்புறம்,நீங்க எதுக்குனோவ் இன்னும் பொங்கிட்டு இருக்கீங்க.ஒரு ஆணியும் புடுங்க முடியாதுன்னு "தலை வீங்கி போன பதிவர்கள்" சொன்னது தானே இப்போ நடந்து இருக்கு

அதனால மூஞ்சி மேல இருக்குற அந்த மண்ண தட்டி விட்டுட்டு கெளம்புங்க
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

லோகேஷ்வரன் on October 28, 2011 at 11:14 PM said...

padam pattasu... maranaaa masss... after long time vijay given a nice entertainer. ... jayam raja rocked an proved himself...
totally velayudham full meals ;-)

கருந்தேள் கண்ணாயிரம் on October 29, 2011 at 12:28 AM said...

ஜெய்யி... நீரு சொல்றதைப் பார்த்தா, இவனுங்க அடிக்குற காப்பியை கண்மூடித்தனமா ஆதரிக்கிற கும்பல் போல இருக்கே நீரு ;-).

ப்ராடக்டுக்கு சொந்தக்காரன், ஃபேச்புக்ல மொதல்ல போட்ட கமெண்ட் என்ன தெரியுமா? வேலாயுதம் படத்துல அவனுங்க அடிச்ச காப்பி, யூபிஸாஃப்டை எரிச்சல் மூட்டுதுன்னுதான். போஸ்டர் கூட சொந்தமா யோசிக்கத்தெரியாத முட்டாளுங்கன்னு தான் அவனும் நினைச்சிருப்பான். இவனுங்க தராதரத்துக்கு யூபிஸாஃப்ட் எறங்காதுன்னுதான் பேசாம போயிருப்பானுங்க. இவ்வளவு வாயி கிளியுதே.. அதைப்பத்தி நானு போட்ட போஸ்ட்ல வந்து பொங்க வேண்டியதுதானே? :-)

பயமா? அங்க வந்தா டப்பி டான்ஸ் ஆடிரும்னு ;-). அதான் இங்க வந்து போட்ருக்குற உங்க கமெண்ட் பார்த்தாலே தெரியுதே :-).

இவனுங்க காப்பிகளை நிறுத்தப்போறதில்லை. ஏன்னா, அதை ஆதரிக்கும் மூளைகெட்ட கும்பல் ஒண்ணு இங்க இருக்கு. அதான். இருந்தாலும், காப்பிகளைத் தொடர்ந்து நாங்க அங்க கிளிப்போம்:-). நீங்க, அதைப் படிச்சி வயிறு எரிஞ்சி ரகசியமா பம்பிக்குங்க. வர்ட்டா? எனக்கு நிறைய வேலை இருக்கு பாஸ். உங்களை மாதிரி வெட்டிப்பயல் இல்ல நானு. So, me carryin on with ma work. Njoy n hv a blast here ;-)

vanila on October 30, 2011 at 8:03 AM said...

கார்க்கி, கருந்தேள், BP 80 /110 'க்கு மேல போகக்கூடாதுங்கன்னா.. நமக்கு வேலை ரொம்ப இருக்கு. இதெல்லாம் வேண்டாம்.

koodalnagar on October 31, 2011 at 11:54 PM said...

padam marana mokka...

Arun Kumar on November 1, 2011 at 1:58 PM said...

வணக்கம் கார்க்கி

Anonymous said...

மோர் காரி என் மோர் புளிக்குதுனா சொல்லுவா? இனிக்குது இனிக்குதுனு தான் கூவி கூவி விக்குவா

ஐயோ ஐயோ. போய் புள்ளைங்களை படிக்க வைங்கடா

கப்பித்தனமா பேசிட்டு...

கார்க்கி on November 5, 2011 at 2:52 AM said...

Unknown,

மோர்க்காரன் சுறா, வேட்டைக்காரன், வில்லு எல்லாம் புளிச்சது என்றுதான் சொன்னான்.பிலாகில் திரைப்படங்கள் சார்ந்தவை என்ற லேபிளில் படித்துக் கொள்ளவும்

 

all rights reserved to www.karkibava.com