Oct 13, 2011

சாருவும்,லிப்போகிராம‌ட்டிக்கும்


 

முத‌லிலே சொல்லிவிடுகிறேன். கேர‌ள‌ நாட்டிலும், பெரு நாட்டிலும் பிர‌ப‌ல‌மாக‌ இருக்கும் ஒரே த‌மிழ் எழுத்தாள‌ரான‌ திரு. சாரு நிவேதிதா ப‌ற்றிய‌ ப‌திவு இது. அன்னாரை அறியாத‌வ‌ர்க‌ள் தொட‌ர்வ‌து அவ‌ர‌வ‌ர் சொந்த‌ விருப்ப‌த்தின் பேரில் ம‌ட்டுமே.

  சாரு அவ‌ர்க‌ள் அடிக்க‌டி ச‌ற்று தொய்வான‌ முத்துக‌ளை உதிர்த்தாலும் த‌ற்போது அரிய‌ முத்தொன்றை உதிர்த்து இருக்கிறார். அவ‌ர‌து ஸீரோ டிகிரி lipogrammatic நாவ‌லாம். உல‌கிலே மொத்த‌ம் 3 நாவ‌ல்க‌ள் தான் இந்த‌ பாணியில் எழுத‌ப்ப‌ட்டுள்ள‌தாம். ச‌ரி. lipogrammatic என்றால் என்ன‌வென்று விக்கியை கேட்போம்.

“A lipogram (from Greek lipagrammatos, "missing letter") is a kind of constrained writing or word game consisting of writing paragraphs or longer works in which a particular letter or group of letters is avoided — usually a common vowel, and frequently "E", the most common letter in the English language.[1]

Writing a lipogram is a trivial task for uncommon letters like "Z", "J", or "X", but it is much more difficult for common letters like "E", "T" or "A". Writing this way, the author must omit many ordinary words. Grammatically meaningful and smooth-flowing lipograms can be difficult to compose.

A pangrammatic lipogram or lipogrammatic pangram is a text that uses every letter of the alphabet except one, e.g. "The quick brown fox jumped over the lazy dog", which omits "S."”

அதாவ‌து ஒரே ஒரு எழுத்தை த‌விர்த்துவிட்டு எழுதுவ‌த‌ற்கு பெய‌ர் லிப்போ கிராமடிக். ஆங்கில‌த்தில் உயிரெழுத்து என்ற‌ழைக்கப்ப‌டும் A, E,I,O,U  எழுத்துகளின் ஒலி இல்லாம‌ல் எந்த‌ வார்த்தையுமே இருக்காது. அது போல‌ மிக‌வும் சிர‌ம‌மான‌ எழுத்துக‌ளை த‌விர்த்து எழுதும் ஒரு க‌லை இது. மேலும் X,Y,Z போன்ற‌ எழுத்துக‌ள் இல்லாம‌ல் எழுதுவ‌து பெரிய‌ காரிய‌மில்லை. ஆனால் A, E O போன்ற‌ எழுத்துக‌ள் இல்லாம‌ல் எழுதுவ‌து நிச்ச‌ய‌ம் பெரிய‌ வேலைதான். இங்கே சாரு என்ன‌ சொல்கிறார் என்றால் அவ‌ர‌து நாவ‌லில் "ஒரு" என்ற‌ வார்த்தை ஒரு இட‌த்திலும் வ‌ர‌வில்லையாம். என‌வே அது லிப்போகிராம‌டிக்காம். கேட்கிற‌வ‌ன் கேணைய‌னா இருந்தா கே.பி.சுந்த‌ராம்ப‌ளுக்கு... என்ற‌ ரீதியில் அடித்து விடுகிறார் சாரு..

விக்கி குறிப்பை க‌வ‌னித்து வாசித்த‌வ‌ர்க‌ளுக்கு ஒரு கேள்வி எழ‌லாம். “which a particular letter or group of letters is avoided “ அவ‌ர்களே இப்ப‌டி சொல்கிறார்க‌ளே.. இது வார்த்தையை குறிக்காதா? நிச்ச‌ய‌ம் இல்லை. ஒரு எழுத்தோ அல்ல‌து ஒன்றிற்கு மேற்ப‌ட்டோ எழுத்துக‌ளோ இல்லாம‌ல் எழுதுவ‌து என்றே அத‌ற்கு பொருளாகும். வார்த்தை இல்லாம‌ல் எழுதுவ‌தும் சாத‌னைதானே என்கிறீர்க‌ளா? த‌மிழில் மொத்த‌ம் 3 ல‌ட்ச‌த்திற்கும் அதிக‌மான‌ வார்த்தைக‌ள் உண்டு. எல்லா நாவ‌ல்க‌ளிலும் எல்லா வார்த்தைக‌ளுமா இருக்கின்ற‌ன‌? ச‌ரி.. எல்லா வார்த்தையும் வேண்டாம். X Y Z & A B C எடுத்துக்காட்டு போல‌ த‌விர்க்க‌ முடியாத‌ வார்த்தைக‌ள் இல்லாம‌ல் எழுதுவ‌து க‌டின‌ம்‌ தானே என்றும் நினைக்க‌லாம். "ஒரு" என்ற‌ வார்த்தைக்கு ப‌ல‌ மாற்று வார்த்தைக‌ள் த‌மிழில் உண்டு. இதெல்லாம் சாத‌னை என்றால் த‌மிழில் க‌தையே இல்லாம‌ல் 3 ம‌ணி நேர‌ ப‌ட‌மெடுப்ப‌வ‌ர்க‌ளுக்கு செவ்வ‌ய் கிர‌க‌த்தின் உயரிய‌ விருதையே த‌ர‌லாம்.

சென்ற‌ ப‌த்தியில் இருக்கும் ச‌ந்தேக‌ங்க‌ளும், விள‌க்க‌ங்க‌‌ளும் மொன்னையாக‌ தெரிய‌லாம். ஆனால் இது போன்ற‌ த்ராபையான‌ கேள்விக‌ளை கேட்டு த‌ன் த‌லைவ‌னின் ம‌ன‌தை குளிர்விக்க‌ சில‌ர் வ‌ட்ட‌ம் என்ற‌ பெய‌ரில் ஜ‌ல்லிய‌டித்துக் கொண்டிருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கான‌ முன்னெச்சிரிக்கை ந‌ட‌வ‌டிக்கையாக‌ அதை கொள்ள‌வும். மேலும், முன்பு சாரு இஸ் எ லெஜ‌ன்ட் என்ற‌ ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ள், ச‌மீப‌த்தில் ந‌ட‌ந்த‌ சேட் கூத்துக்குப் பின் பின்வாங்கியிருப்ப‌து ம‌கிழ்ழ்ச்சியை அளிக்கிற‌து. அது என்ன‌ கூத்து என்று ஒரே ஒருவ‌ராவ‌து கேட்க‌ கூடும். அதையும் எழுதி தொலைப்போம்.

எந்த‌ புத்த‌க‌ அறிமுக‌ நிக‌ழ்ச்சிக்கு சென்றாலும் த‌ன‌து ம‌ன‌துக்கு ச‌ரியென்று தோன்றும் க‌ருத்துக‌ளை ம‌ட்டுமே முன்வைக்கும் அறிஞ‌ர் சாரு அவ‌ர்க‌ள், ஒரு பாடாவதி க‌விதையொன்றை இல‌க்கிய‌த்தின் உச்ச‌மாக‌ குறிப்பிட்டார். என்ன‌டா இது என்று அவ‌ர‌து அடிபொடிக‌ளே அதிச‌யித்த‌ போதுதான் அந்த‌ த‌க‌வ‌ல் வெளியான‌து. அதை எழுதிய‌வ‌ருட‌ன் அஜால் குஜால் சேட் செய்து ஏதாவது தேறுமா என‌ முய‌ற்சித்திருக்கிறார் ந‌ம்ம‌ எயித்தாள‌ர். அத‌ற்காக‌ அவ‌ர் வீசிய‌ தூண்டி‌லில் இருந்த‌ ம‌ண்புழுதான் க‌விதை குறித்த‌ பாராட்டு. இல‌க்கிய‌மே என் சுவாச‌ம். ம‌ற்றைவ‌யெல்லாம் என‌க்கு துவேச‌ம் என்ற‌ ந‌ப‌ரின் முக‌த்திரை கிழித்த‌த‌ற்கு இன்றுவ‌ரை ச‌ரியான‌ ப‌திலிலில்லை. இதில் மிக‌ப்பெரிய‌ காமெடி என்ன்வென்றால் சேட் வெளியாகும் சில‌ நாட்க‌ளுக்கு முன்புதான் இந்திய‌ர்க‌ளுக்கு ச‌ரியான‌ பாலிய‌ல் வாழ்க்கை இல்லை. என‌வேதான் இணைய‌த்தை இத‌ற்காக‌ எல்லாம் ப‌ய‌ன்ப‌டுத்துக்கிறார்க‌ள் என‌ சொல்லியிருந்தார் ஸ்ரீலஸ்ரீ சாருவான‌ந்தா சுவாமிக‌ள். என‌க்கு மிக‌ப்பெரிய‌ க‌வ‌லை என்ன‌வென்றால் த‌ற்போது அதே வாயால் (அ) கையால் மீண்டும் ம‌னுஷ்ய‌புத்திர‌ன் க‌விதைக‌ளையும் பாராட்டி வருகிறார்.இதை விட‌ வேறு பெரிய‌ அவ‌மான‌த்தை த‌ன‌து உற்ற‌ ந‌ண்ப‌ருக்கு சாருவால் வ‌ழ‌ங்க‌ முடியாது.

சாருவிற்கு இணைய‌த்தை ச‌ரியாக‌ ப‌ய‌ன்படுத்த‌ தெரியாது. அவ‌ருக்கு சேட் செய்ய‌ ம‌ட்டுமே தெரியும் என்ப‌து ப‌ல‌முறை நிரூபிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. உதார‌ண‌மாக‌ அவ‌ர‌து INCEPTION ப‌ட‌த்தின் விம‌ர்ச‌ன‌மும், அத‌ற்கு ப‌திவ‌ர் ஒருவ‌ர் எழுதிய‌ ம‌றுப்பும் சில‌ருக்கு நினைவில் இருக்க‌லாம். அதே போல் ப்ளீச்சிங் ப‌வுட‌ர் என்ற‌ பெய‌ரில் இருந்த‌ ப‌திவ‌ர் சாரு கிம் கி டுக் ப‌ட‌மொன்றை IMDB.com ல் பார்த்துவிட்டே விம‌ர்ச‌ன‌ம் எழுதிய‌தை எடுத்து சொன்ன‌தை குறிப்பிட‌லாம். அதெல்லாம் எங்க‌ளுக்கு தெரியாது என்ப‌வ‌ர்க‌ள் இதை பாருங்க‌ள். இந்த‌ நாவ‌லும் லிப்போகிராம‌டிக் வ‌கைதானாம். ஆனால் சாரு “ ஜார்ஜ் பெரக் எழுதிய La Disparition (ப்ரெஞ்ச்)  மற்றும் வால்டர் அபிஷ் எழுதிய Minds Meet (ஆங்கிலம்).  மூன்றாவது, ஸீரோ டிகிரி (தமிழ்).  “ ம‌ட்டுமே லிப்போகிராம‌டிக் என்கிறார். இதை கூட‌வா தேட‌ தெரியாது ந‌ம்ம‌ சிந்த‌னைவாதிக்கு?

எழுதினால் எழுதிக் கொண்டே போகும‌ள‌விற்கு ரீல் விட்டிருக்கிறார் சாரு. ஒரு ப‌க்க‌ம் பார‌தி க‌விஞ‌னே இல்லை என்ப‌வ‌ர். இன்னொருப்ப‌க்க‌ம் நான் தான் பார‌தி என்ப‌வ‌ர். இருவ‌ருக்கும் அவ‌ர‌து ம‌ற்ற‌ ப‌‌டைப்புக‌ளை முன்னிட்டு ம‌ரியாதை த‌ர‌ வேண்டும் என்ற‌ என் எண்ண‌ம் மாறி மாமாங்க‌ம் ஆகிற‌து. இது போன்ற‌ முட்டாள்த்த‌னமான‌ விஷ‌ய‌ங்க‌ளை எழுதிக் கொண்டிருக்கும் சாருவை க‌ண்டிக்க‌, ம‌றுத்து பேச‌ எந்த‌ த‌குதியும் தேவையில்லை என்ப‌து என் நிலைப்பாடு. வாச‌க‌ர்க‌ளை முட்டாள்க‌ள் என‌ நினைக்கும் செய‌ல்பாட்டை சாரு நிறுத்திக் கொள்வ‌து ந‌ல்ல‌து.

கார்க்கி.
13-10-2011

தொட‌ர்புடைய‌ சாருவின் ப‌திவு : http://charuonline.com/blog/?p=2507

22 கருத்துக்குத்து:

viswa, all opinions under one roof on October 13, 2011 at 10:05 AM said...

குத்துங்க எசமான், குத்துங்க! இவுங்க எப்பவுமே இப்படித்தான்.

Pulavar Tharumi on October 13, 2011 at 10:10 AM said...

நல்ல பதிவு!

ரமி on October 13, 2011 at 10:42 AM said...

The same wikipedia page has following
//
In India, Charu Nivedita is famous for lipogrammatic novels. His novel, zero degree is an attempt for the same. Sources claim that his new novel, exile is also lipogrammatic.
//

http://en.wikipedia.org/wiki/Lipogram

Prakash Tsunami on October 13, 2011 at 11:00 AM said...

நேத்து தான் ஜீரோ டிகிரி படிச்சி முடிச்சேன்.. அவரு என்ன சொல்ல வராருன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்...
முடியல...

கார்க்கி on October 13, 2011 at 11:20 AM said...

Mr. Rami,

ஒரு என்ற வார்த்தை இல்லாமல் எழுதுவது சவால்தான். அவர் சொல்லியிருப்பது முழு நாவலிலும் வராமல் இருக்காது. ஒரு அத்தியாயத்தில் ஒரு வந்திருக்கும்.

-jyovram sundar, commented in my buzz

கார்க்கி on October 13, 2011 at 11:21 AM said...

//In India, Charu Nivedita is famous for lipogrammatic novels. His //

தீயா வேலை செய்றாங்க‌ப்பா சாரு ப‌க்த‌ர்க‌ள். வெறிகுட் :)

suryajeeva on October 13, 2011 at 11:23 AM said...

பாடும் பொழுது உதடுகள் ஒட்டாத பாடல்கள் எவ்வளவோ இருக்கிறது நம் நாட்டில்... அதாவது ப கரம் ம கரம் எழுத்துக்கள் இல்லாத வார்த்தைகள் கொண்டு எழுதப் பட்டவை

சுசி on October 13, 2011 at 2:08 PM said...

கலக்கல் கார்க்கி :))

அமுதா கிருஷ்ணா on October 13, 2011 at 4:02 PM said...

ஒவ்வொரு துறை சார்ந்தவர்களும் தாங்கள் தான் தன் இன மக்களால் கொண்டாடப்பட வேண்டும் என்று நினைப்பது ”ஒரு” வித மனவியாதியாக இருக்குமோ???

வைரை சதிஷ் on October 13, 2011 at 7:48 PM said...

super post

கொங்கு நாடோடி on October 13, 2011 at 9:46 PM said...

மொக்கை இல்லாமல் நல்ல பதிவு போட்டதற்கு பாராட்டுகள். இருந்தாலும் மொக்கை தான் என் பாஸ் டைம்.

Pardesi on October 14, 2011 at 7:26 AM said...

சாருவின் lipogram பதிவு "நானும் ரௌடி பார்த்துக்கோ பார்த்துக்கோ" என்ற வடிவேலுவின் வசனத்தை நினைவு படுத்துகிறது

Pardesi on October 14, 2011 at 7:26 AM said...
This comment has been removed by the author.
Shanmuganathan on October 14, 2011 at 8:43 AM said...

அடிபொளியா இருநு சகா
அவருக்கு கேரளத்தில்தான் ரசிகர்கள் அதிகமாம் அவரே சொல்லியிருக்கிறார், உங்கள் தலைவரை (விஜயை) அங்கு நிறைய பேருக்கு பிடிப்பது போல் எனக்கு தோன்றுகிறது.. இதில் எதாவது ஒற்றுமை இருக்க சகா.. கொஞ்சம் விளக்கினால் நல்லது..

Vinoth.S on October 14, 2011 at 9:54 AM said...

சரியான பெரும பீத்தக்காறாரா இருக்காரு சாரு

தராசு on October 14, 2011 at 2:28 PM said...

என்னா தல....,

இப்பிடியெல்லாம் பதிவு போட்டீங்கன்னா, அந்தாளு பெரிய மனுஷனாயிடுவானப்பா?????

என். உலகநாதன் on October 26, 2011 at 10:58 AM said...

நான் பார்த்த வரையில் 162ம் பக்கத்தில் "ஒரு" என்ற வார்த்தை வருகிறது

என். உலகநாதன் on October 26, 2011 at 10:58 AM said...

163ம் பக்கத்தில் ஒரு என்கிற வார்த்தை மூன்று முறை வருகிறது. இனி பார்ப்பதாய் இல்லை. 1000முறை கூட வந்திருக்கலாம்.

Ragu on October 26, 2011 at 11:10 AM said...

அத்தியாயம் - அவந்திகாவின் கதை ...P.161 ஒரு தாய் , ஒரு பாறையின் P162 ஒரு நாள், ஒருகணம், P163ஒரு அவுசாரி, ஒரு தேவடியா, ஒரு சிறுமி....இப்படி நிறையா " ஒரு" வரும் பாஸ்

Gujaal on October 27, 2011 at 9:36 AM said...

இருக்கின்ற ஒரு-க்களையும் அடுத்த பதிப்புல உறுஞ்சியெடுத்திட்டா உலகின் ஒரே liposuction நாவல்னு அடிச்சுவிடலாமே?

ஒரு-ங்கற சொல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எளவு பொருள் ஒண்ணும் மாறப் போறதில்ல.

Gujaal on October 27, 2011 at 2:30 PM said...

ஒரு என்ற சொல் இல்லாது இருப்பது lipogrammatic-க்கு எப்படி அளவுகோல் ஆனது?

உத்தமத்தமிழ் எழுத்தாளரின் அனைத்துப் படைப்புகளும் lipogrammatic வகை என்று சொல்லிவிடலாமா? ஏனென்றால் அவற்றில் சாரு என்ற சொல் இடம் பெறுவதில்லையே?

PS: நான் கண்ட ஒரு, பக்: 113, *ஒரு நாள் விளையாடிக் கொண்டிருந்தபோது இருட்டி விட்டது*.

ச்சே, இப்படியெல்லாம் செஞ்சு சாரு தன் நாவல படிக்க வைக்க வேணுமா?. அதுக்கு நீங்கறே ஒரு மறு வாசிப்பு செஞ்சா உங்க உடான்ஸ் உங்களுக்கே உடனடியாப் புரியுமே பாஸ்.

Gujaal on October 27, 2011 at 2:33 PM said...

சீரோ டிகிரியில் அதிகபட்சம் ஒரு என்ற சொல்லைக் கண்டு பிடிப்பவர்களுக்கு சாருவின் எதிர்வரும் எக்சைல் நாவலைப் பரிசளிப்பதாக போட்டி ஏதேனும் நடாத்தலாம்.

நல்ல பொழுதுபோக்காக அமையும்.

 

all rights reserved to www.karkibava.com