Oct 7, 2011

சரக்கடிச்சா சளியும் இருக்குமா..நெப்போலியா…


<p><a href="http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Mayakkam+Enna.html?e">Listen to Mayakkam Enna Audio Songs at MusicMazaa.com</a></p>

 

மயக்கம் என்ன படத்தில் ”என்னென்ன செய்தோம்” பாட்ட கேட்டிங்களா? செல்வராகவன் எழுதியிருக்கார். ராஜாவும், ரஜினியும் 50 வயதுக்கு பிறகு போன ஆன்மீக பாதையில் இப்போதே அவர் போவதாக தோன்றுகிறது. அதெல்லாம் இருக்கட்டும். நம்ம மேட்டர் என்னன்னா, இந்தப் பாட்ட சிம்பு எழுதியிருந்தா எப்படி இருந்திருக்கும்? மேலே இருக்கிற ரேடியோ பொட்டில ஒரு தபா பாட்ட கேட்டுட்டு இத படிச்சு பாருங்க. நீங்க பெரிய சூப்பர் சிங்கர்ன்னா மெட்டோட பாடியும் பாருங்க.. 

பல்லவி:

என்னென செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே
எங்கெங்கு போனோம் வந்தோம் போதை என்னும் பேரிலே ..
காணாத எரிச்சல் கண்ணிலே ..
ஓயாத இருமல் வாயிலே .
மச்சான். சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சரக்கடிச்சா சளியும் இருக்குமா?..
நெப்போலியா

அளந்து நீயும் கட்டிங் எடுப்பாய்
அதனோடு சோடாவை சேர்ப்பாய்
சரக்கென்பது மருந்தல்லவா கற்று கொடுக்கிறாய்
குவார்ட்டராக இருப்பவன் நீயா
கண்ணீரை துடைப்பவன் பொய்யா
சைட் டிஷ்க்கு  ஊறுகாய் கேட்டால்
சிக்கன் வாங்கினாய்

சரணம்:

போதையின் பொருள்தான் என்ன
அடிச்சுதான் பாத்தால் என்ன
ஆர்டர் சொல்கிறாய் ஹாஃபு வாங்கினாய்
ஃபாரின் சரக்குகளும் அடிப்போமா ..
நாட்டு சரக்கையும் குடிப்போமா

ஃபாரின் சரக்குகளும் அடிப்போமா ..
நாட்டு சரக்கையும் குடிப்போமா

நமது அரசாங்கம் பெறும் காடு
டாஸ்மாக் அதிலே ஒரு சிறு கூடு
உன்னை நினைத்துக் கொண்டு ஊறுகாய் தொட்டுக் கொண்டா
ராவா அடிச்சாலும் இதமாய் இறங்கிடும்
மச்சான்!!!  சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சரக்கடிச்சா சளியும்  இருக்குமா..
நெப்போலியா…

7 கருத்துக்குத்து:

kullabuji on October 7, 2011 at 5:53 PM said...

//போதையின் பொருள்தான் என்ன
அடிச்சுதான் பாத்தால் என்ன ///


//நமது அரசாங்கம் பெறும் காடு
டாஸ்மாக் அதிலே ஒரு சிறு கூடு //


சூப்ப௫

வைரை சதிஷ் on October 7, 2011 at 6:06 PM said...

அருமை நண்பா

vigneshjeyabalan on October 7, 2011 at 7:45 PM said...

super

கோகுல் on October 7, 2011 at 10:50 PM said...

அளந்து நீயும் கட்டிங் எடுப்பாய்
அதனோடு சோடாவை சேர்ப்பாய்
//

நம்மளைப்பத்தி சிம்புவுக்கே தெரிஞ்சுருக்கு!ம்

கொங்கு நாடோடி on October 8, 2011 at 12:07 AM said...

சகா என்னக்கு இன்னைக்கு சளி, வீட்டுக்கு போரவழிலே Mccallan 18 years, வாங்கிட்டு போகவேண்டியதுதான். ரிசல்ட் நாளைக்கு சொல்லறேன்....

suryajeeva on October 8, 2011 at 9:37 AM said...

ரொம்ப முக்கியம்

மதுரைநண்பன் on October 24, 2011 at 12:47 PM said...

அருமையான கருத்து. குடிச்சதுக்கு அப்புறம் ஒவ்வொரு குடிமகனும் விடை காண திருப்பி திருப்பி குடிப்பதும் இதுக்குதான். பாடலோட ஒவ்வொரு வரியும் பாட்டிலுள்ள உள்ள எறங்கி குடிக்கனம் போல ..................

 

all rights reserved to www.karkibava.com