Oct 2, 2011

வெடி ________


 

டேய்.. மறுபடியுமா?

இல்லைடா. என் பிளாக் இருக்கில்ல..

ம்ம்

அதுல பதிவு போட்டா 10 பேராச்சும் படிக்க மாட்டாங்க?

ம்ம்

அதுல 4 பேருக்காச்சும் நான் எழுதறது பிடிக்காதா?

அதுக்கு நீ வெடி பார்க்கணுமா?

படம் பார்த்துட்டு பதிவு எழுதுவேன் இல்லை

என்ன சொல்ல வர்ற?

நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை மச்சி.

__________________

சத்யம் அரங்க டிக்கெட் கவுண்ட்டர் சனிக்கிழமை மதியம் 2.45க்கு அல்லோலகல்லோல பட்டுக் கொண்டிருந்தது. எல்லா படங்களும் ஃபுல் என்றார்கள். அப்போது வெடி படத்திற்கு முன்பதிவு செய்த சிலர் டிக்கெட்டுகளை விற்பது போன்றிருந்தது. அந்த சமயத்தில் எனக்கும் என் மனசாட்சிக்கும் நடந்த உரையாடல் தான் மேலே இருப்பது. களையான ஒரு பெண் கையில் இரண்ட் டிக்கெட்டுடன் முழித்துக் கொண்டிருந்தார். எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்கா என்றேன். ரெண்டு இருக்கு என்ற போதுதான் அவர் என்னுடன் பார்க்க வரவில்லை என்பதையே உணர்ந்தேன்.என்னைப் போலவே பகல் காட்சி கலெக்டர் ஒருவர் சுற்றிக்கொண்டிருந்தார். அவரிடம் இன்னொரு டிக்கெட்டை வாங்க சொன்னவுடன் பளீரென சோடியம் வேப்பர் விளக்கு போல சிரித்தார் அந்தப் பெண். முன்ன பின்ன தெரியலனாலும் பசங்க ஒரு பிரச்சினையில் மாட்டினா பொண்ணுங்களுக்கு வரும் ஆனந்தமே தனிதான். இங்கே பிரச்சினை வெடி என்ற படம் என்பதை குறிப்பிடும் அளவிற்கு பதிவுலக வாசகர்கள் மொக்கையல்ல என நம்புகிறேன்.

“வெடி – சீட்டுக்கு அடியில் “ என்ற தலைப்பை ஃபிக்ஸ் செய்த பின் தான் படமே பார்க்கலாம் என சென்றேன். ட்விட்டரில் அதை சொன்ன போது ஏற்கனவே யாரோ அப்படி எழுதிவிட்டதாக சொன்னார் நண்பர் ஒருவர். நாம என்ன குலேபகாவாலியா பார்க்கிறோம் வேறு தலைப்புக்கு சிரமப்பட?

வெடி –சுத்த கடி

வெடி ; பாடை நமக்கு ரெடி

வெடி : நம் மேல் விழுந்த தடி

வெடி : மசாலா நெடி

தமிழர்கள் நாளுக்கு நாள் அறிவாளிகள் ஆகிக் கொண்டு வருவது மீண்டும் நிரூபணமானது. முன்பெல்லாம் பாடல் மொக்கையாக இருந்தால் கூட நெளிந்தபடி சீட்டிலே இருந்தார்களாம். பின் ஆண்கள் மட்டும் சிகரெட், ஜர்தா, மாணிக்சந்த அடிக்கிற சாக்கில் வெளியே வந்தார்கள். பின் பெண்களும் பட்டர் பாப்கார்ன், கோல்ட் காஃபியென வந்தார்கள். இதன் உச்சமாக வெடி திரைப்படத்திற்கு 100% டிக்கெட் விற்றும் 70% இருக்கைகள் மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருந்தது. காசு கொடுத்து வாங்கியும் மொக்கையென அறிந்து வெளிநடப்பு செய்த புண்ணியவான்களாலதான் நேற்று சென்னையில் லேசாக தூறியது. 

இன்னுமாடா நீ படத்தை பத்தி ஆரம்பிக்கல என்பவர்களுக்கு.. வெடியும் அப்படித்தான். இடைவேளை வரை படம் ஆரம்பிக்காது. அப்புறம் என்ன ஆகுமென்றால், படம் முடிந்துவிடும். கதை சொல்ல முயற்சிக்கிறேன்.

பிரபாகாரன் (விஷால்) கொல்கத்தா செல்கிறார். தூத்துக்குடி வில்லன்கள் வழியில் லோக்கல் தாதாவை விட்டு பிடிக்க சொல்கிறார்கள். நடு ரோட்டில் சேர் போட்டு பியர் குடிக்கும் தாதாவின் வாயில் பியர் பாட்டிலை சொருகிவிட்டு செல்கிறார் பிரபாகரன். ஒரு கல்லூரியில் வேலைக்கும், சமீராவின் வீட்டில் வாடகைக்கும் குடி வருகிறார். விவேக் அந்த கல்லூரியில் ஏதோ ஒரு வேலை செய்கிறார் என்று சொல்லவும் வேண்டுமா? விவேக்கிற்கு சமீரா மேல் காதல் வர, சமீராவுக்கு விஷால் மேல் லவ் வர, விஷாலுக்கு சமீரா தோழி மேல் அன்பு வர , அவ்வபோது பாட்டு வர, பாட்டு முடிந்ததும் வில்லன்கள் வர, நமக்கு கொட்டாவி வர, பக்கத்து சீட்டுக்காரனுக்கு  கோக்கும், சாண்ட்விச்சும் வர அப்போதுதான் இடைவேளை வந்தது. சமீரா தோழி மீது அன்பு என்றேன் அல்லவா? அவர் விஷாலின் தங்கச்சியாம்.  விஷாலின் அப்பா ஒரு திமுக மாசெவின் இடம். அதாங்க பொறம்போக்கு. அவன் செத்து போனத ஊரே கொண்டாடுது. விஷாலும் அவர் தங்கையும் சின்ன வயசிலே அனாதை ஆகிறார்கள். தங்கச்சிக்கு டீயும்,பன்னும் வாங்கி தர முடியாததால் ஒரு கிறிஸ்துவ மிஷனிரிடம் கொடுத்து விடுகிறார். அண்ணன் இபப்டி செஞ்சிட்டானே என்று தங்கச்சிக்கு கோவம் இன்னமும் இருக்கு. சரி. வில்லன்கள் யாருன்னு கேட்கறீங்களா? அங்கனதான் டிவிஸ்ட் வச்சாரு புது மாப்ள பிரபுதேவா.

நம்ம விஷால் தான் பிரபாகரன் IPS. தூத்துக்குடில வழக்கம் போல ஒரு தாதா.. வழக்கம் போல அவனுக்கு ஒரு பையன். வழக்கம் போல அவங்கள போலிஸால புடிக்க முடியல. வழக்கம் போல ஹீரோ  வந்து சுளுக்கெடுக்கிறார். ஏன்னா அவருக்கு சின்ன வயசிலே நல்லது கெட்டது தெரிஞ்சிடுச்சாம். ஆனா பயம்ன்னா என்னன்னு தெரியலையாம். இவன என்னடா பண்ணலாம்னு வில்லன்கள் யோசிச்சப்ப விஷால் தங்கச்சி ஸ்டோரி தெரிது. கொல்லுடா அவளன்னு சொல்றார். அப்புறம் என்ன ஆகும்? ம்க்கும். அதான் ஆச்சு.

விஷால் முதிர்ந்திருக்கிறார். முன்பிருந்த சின்னப்புள்ளதனங்கள் குறைந்திருக்கிறது. முறுக்கேறிய உடம்புடன் ரெண்டு லோட்டா கஞ்சிய குடிச்ச மாதிரி வலம் வருகிறார். விஷால் உருப்பட்டுவிடுவார் என்றே தோன்றுகிறது. சமீரா… கிர்ர்.. பேசாமல் அவன் இவன் விஷால் கெட்டப் போட்டு சமீராவிற்கு பதில் ஆட விட்டிருக்கலாம். புதுமையாக இருந்திருக்கும். அந்த ஆண்மணிக்கு எப்படித்தான் படம் கிடைக்கிறதோ? விவேக்.. உவ்வேக். இரண்டு பாடல்கள் நன்றாக இருந்தும் எடுத்த விதம் சொதப்பல். மத்த இத்யாதிகள் எல்லாம் சொல்லிக்கொள்ளும்படியில்லை. எனக்கு படத்தில் பிடித்த ஒரே விஷயம் ஊர்வசி வரும் போர்ஷன். திருட்டு சிடியிலோ, ஆன்லைனிலோ படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டினால் இரண்டாம் பாதியின் இரண்டாம் பாதியில் வரும் அந்த சீன்களை பாருங்க. காமெடி வெடி உற்சவம் நடத்தியிருக்கிறார் ஊர்வசி.

மிஸ்டர்.பிரபுதேவா, வில்லு, எங்கேயும் காதல், வெடி போல இன்னும் ஒரு படம் எடுங்க. நயந்தாரா உங்களை டைவர்ஸ் செய்வது உறுதி.

அரங்கில் இருந்து ட்விட்டய முத்துகள்:

பிளாக் எழுத வேண்டும் என்ற ஒரே ஒரு உயரிய நோக்கத்திற்காக வெடி பார்க்க போகிறேன். ஜெய் விஷால்.

அனுஷ்கா செல்லத்தின் சென்னை சில்க்ஸ் விளம்பரத்திற்காகவே எத்தனை மொக்கைகளையும் சத்யமில் பார்க்க நான் தயார்

ஆம்புலன்ஸ் எளிதில் என்னிடம் வந்து சேரலாம். கூட்டம் கம்மிதான் இங்கே

படத்த கூட பார்த்திடுவேண்டா.. இந்த சமீரா.. ங்கொய்யால.

பாதில போயிடலாமா என்கிறார் பக்கத்து சீட்டு.. I am not a QUITTER. I am TWITTER

இடைவேளையில் வாசன் ஐ கேர் விளம்பரம். “நாங்க இருக்கோம்”னு சொல்றத பார்த்துதான் பல பேரு நிம்மதி பெரு மூச்சு விடுறாங்க

பிகு:

ஏதாச்சும் படம் பார்த்தாலோ, ஆக்சிடெண்ட் ஆனாலோதான் ட்விட்டர் இல்லாத பதிவு வருது கார்க்கி என்றார் ஒருவர். இன்னொரு ஆக்சிடெண்ட் தேவையில்லை என்பதால் தான் வெடிக்கு போனேன்.. என் பைக்தான் எனக்கு முக்கியம். எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை.

 Smile

15 கருத்துக்குத்து:

குழந்தபையன் on October 2, 2011 at 11:05 PM said...

வெடி சீட்டுக்கு அடியில் அப்புடின்னு சொன்னது உங்க சியஷயன் நானே..எப்படி குரு நாம ஒரே மாதிரியே சிந்திக்கிறோம்...

விளம்பரம்:
திரை அரங்கில் "வெடி" விபத்து :பலி எண்ணிக்கை உயர வாய்ப்புhttp://kuzhanthapayan.blogspot.com/2011/10/blog-post.html

நடராஜன் on October 2, 2011 at 11:57 PM said...

திருப்பாச்சி பார்க்க பயந்துட்டு வெடிக்கு பின் பதுங்கிய பின்பு i am not a quitter am a twitter என்ற கித்தாப்பு? //liked the usage விவேக் உவ்வேக்//

கார்க்கி on October 3, 2011 at 12:09 AM said...

குழந்த, ஹிஹிஹிஹி

நடராஜன், திருப்பாச்சி நேத்து. பார்த்தேன்.. இன்னைக்கு அசல் :)

Tamilnambi on October 3, 2011 at 12:46 AM said...

இதுவும் ஒரு தெலுங்கு பட ரீமேக்குன்னு உங்களோட கட்டம் கட்டுன கதைய படிச்ச பின்னாடிதான் ஞாபகத்துக்கு வருது.. ஹீரோ யாருன்னு தெரியாது.. ஆனா ஹீரோயின் மட்டும் அனுஷ்கான்னு தெரியும் :)

சுசி on October 3, 2011 at 1:57 AM said...

கலக்கல் விமர்சனம் :)

siva on October 3, 2011 at 6:35 AM said...

:)

இரசிகை on October 3, 2011 at 9:58 AM said...

innum sirichu mudikkala......

mukkiyama yenna nadanthuchunnaa?
en amma-vaiyum vaasikka vaithu,sirikka vaithen.

Sen22 on October 3, 2011 at 11:00 AM said...

//நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை மச்சி.//

:)))

Abdul Munaf on October 3, 2011 at 11:07 AM said...

இது வெடிக்கும் வெடி அல்ல, மாறாக வெங்காய வெடியே என்பதை புரிந்து கொண்டேன், உமது விமர்சனம் மூலம்..
120 ரூபாயை லாபம், உம்மால் எனக்கு!
உமக்கு இணை கார்க்கி மட்டுமே..

joseph on October 3, 2011 at 4:10 PM said...

Nalla velai na antha padathuku pogalam nu irunthen.. unga vimarsanam padithen athuku en MC Class ye parava illa nu thonichu.. Thanks to u save my money

MANO on October 3, 2011 at 6:55 PM said...

superb review...

KSGOA on October 3, 2011 at 9:29 PM said...

விமர்சனம் நல்லா இருக்கு.நிறைய
பேரை காப்பாத்தீட்டீங்க போல!!!!

Kannan on October 4, 2011 at 12:06 PM said...

. “நாங்க இருக்கோம்”னு சொல்றத பார்த்துதான் பல பேரு நிம்மதி பெரு மூச்சு விடுறாங்க //

- toppu

IlayaDhasan on October 5, 2011 at 6:13 AM said...

அடுத்ததடவை மனசாட்சி படி நடங்க , பைக் வாங்கலாம் சேமிச்சு .

படமும், வரிகளும் எங்களை வியட்நாமிற்கு செலவில்லாமலே டூர் சென்று வந்ததைப்போல உணரச் செய்கிறது.

இந்த கம்மன்ட் படிக்கும் அன்பு வலை வாசகர்களே, சவால் போட்டியில் பங்கு பெரும் ,என் கதையை படித்து பாருங்களேன்:

B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011

A Simple Man on October 5, 2011 at 11:58 AM said...

thats y i watched the Telugu original ... Anushka superb...

 

all rights reserved to www.karkibava.com