Oct 30, 2011

டுபாக்கூர் வீடியோ

22 கருத்துக்குத்து

 

  ரொம்ப போரடிச்சுத்தா? அதான் தளபதி மாதிரி ஒரு வீடியோ ரெடி பண்ணேன். Just for fun. யாரும் சீரியஸா எடுத்துக்காதீங்க. தல ஃபேன்ஸ், முழுசா பார்த்துட்டு அப்பாலிக்கா கமெண்ட் போடுங்க. ஏன்னா இது தலயையோ, உங்களையோ கலாய்க்கும் வீடியோ இல்லை. அம்புட்டுதேன் சொல்வேன்.

 

Oct 26, 2011

வேலாயுதம்: The entertainer is back.

35 கருத்துக்குத்து

 

எதுக்குடா அடிக்கிற வெயில்ல வெந்நீர் கேட்கிற?

வெறியேத்தத்தான்.

தியேட்டரை விட்டு வெளியே வரும் ஒவ்வொரு விஜய் ரசிகனும் சந்தோஷமும், வெறியும் ஒன்றாய் சங்கமிக்கும் புள்ளியில் மொத்த ஆறறிவையும் அடகுவைத்து விட்டே வருகிறான். காவலன் ரிலீஸ் ஒரு நாள் தள்ளிப்போனது, வேலாயுதத்திற்கு சரியான தியேட்டர் கிடைக்காதது என நொந்து போயிருந்த ரசிகர்கள் ராஜாவையே மலை போல நம்பியிருந்தார்கள். விஜய் ரசிகர்களே இயக்குனரை நம்பும் அளவிற்கு தமிழ் சினிமா மாறியிருப்பது சந்தோஷம் தான். இருந்தாலும் அம்பு பிரம்மாஸ்திரமாய் இருந்தால் வில்லெய்பவனுக்கும் வேலை சுலபம். அந்த வகையில் ராஜாவுக்கு விஜயும், விஜய்க்கு ராஜாவும் அமைந்து போனது ரசிகர்களின் அதிர்ஷ்டம்.

கதையெல்லாம் ஆசாதின் விக்கி பக்கத்திலோ, இல்லை படமாகவோ பார்த்திருப்பீர்கள். அல்லது, ட்ரெயிலர் பார்த்தே யூகித்திருப்பீர்கள். அதேதான். ஆனால் வழக்கமான ராஜாவின் ஜெராக்ஸ் வேலை நிச்சயமாய். இல்லை. ஒன்லைனரை மட்டுமே எடுத்து சொந்தமாக தோரணம் கட்டியிருக்கிறார். கில்லியைப் போல சரவெடியாக திரைக்கதை இல்லாவிட்டாலும், புஸ்வாணம், சங்கு சக்கரம், பாம், லட்சுமி வெடி, சில புஸ் வெடி என சகல ஐட்டத்தையும் கோர்த்து சிவகாசி பட்டாசுக்கடை செய்திருக்கிறார். சரி, கதையும் சொல்லி விடுகிறேன்,

வெளிநாட்டு தீவிரவாதிகள் உள்துறை அமைச்சரை கையில் போட்டுக் கொண்டு இந்தியாவை, தமிழகத்தை நாசம் செய்ய நினைக்கிறார்கள். மந்திரியின் பார்ட்னர் கள்ள நோட்டு, சிட் ஃபண்ட் என பணம் சேர்க்கிறார். ஜெனிலியா ஒரு சின்சியர் ஜெர்ணலிஸ்ட்டாக இதை கவர் செய்ய நினைக்கிறார். எதிர்பாராதவிதமாக அவர் செய்யும் ஒரு கற்பனை கதாபாத்திரம் மக்களை காக்கிறது. அதை தனக்கே தெரியாமல் செய்வது விஜய் தானென்பதை சொல்லவும் வேண்டுமா? கிராமத்தில் தங்கச்சிக்காக வாழும் சிவகிரி..சாரி.அது திருப்பாச்சி இல்லை? வாழும் வேலு சேர்த்து வைத்த காசை சிட் ஃபண்ட்டில் இருந்து எடுக்க சென்னை வரும்போதுதான் மேலே சொன்னதெல்லாம் நடக்கிறது. ஜெனிலியா உண்மையை சொல்லும்போது, எனக்கு ஒரே கட்சி என் தங்கச்சி என பேக் அடிக்கிறார் விஜய். கடைசியில் அவர் பணமே சிட் ஃபண்ட்டில் பணால் ஆகும் போது வேலு வேலாயுதமாய் மாறுகிறார். பின் இரண்டாம் பாதியில் என்னவெல்லாம் செய்வார் என்றால், சண்டை போடுவார்.

IMG_0682[1] குரோம்பேட்டை வெற்றி அரங்கில் பார்த்தேன்.

முதல் பாதி காமெடி சரியாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. நச் நச் என நகரும் காட்சிகள் சிரிப்பு வெடி. போதாதென்று சென்னையில் சந்தானமும் சேர்ந்துக் கொள்கிறார். ஓப்பனிங் பாடலை கேட்டு கடுப்பான சிலருக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். “அவர் யார் தெரியுமா” என்று கிழவர் சொல்வாரே… அதுக்கு படம் பாருங்க. அதே போல் சில்லாக்ஸ் க்ளைமேக்ஸ் பாடலாயிற்றே. என்ன ரெஸ்பான்ஸ் என்பவர்களுக்கு “க்ளைமேக்ஸ் பாடலுக்கு செம ரெஸ்பான்ஸ் தான். ஆனால் சில்லாக்ஸ் முதல் பாதியிலே வந்துவிடும்”. இடைவேளையில் கோன் ஐஸ்க்ரீம், பாப்கார்ன் எல்லாம் யாரும் வாங்கவேயில்லை. எல்லோர் காதிலும் செல்ஃபோன். எல்லோர் முகத்திலும் சந்தோஷம். மவுத் டாக் போய்க் கொண்டேயிருந்தது “மாப்ள. படம் செம செம”

இரண்டாம் பாதி வேலாயுத தரிசனம். இங்குதான் லேசாக சறுக்கியிருக்கிறார் ராஜா. சூப்பர் ஹீரோ என்பதால் எல்லோரையும் சண்டைப் போட்டே சாவடிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார். மூளைக்கு வேலை விஜய்க்கும் இல்லை. நமக்கும் இல்லை. இதை மட்டும் கவனித்திருந்தால் மிகச்சிறந்த சூப்பர் ஹீரோ படமாக இது மாறியிருக்கும். க்ளைமேக்ஸ் ஓக்கேதான் என்றாலும் நியூட்ரல் ஆடியன்ஸ் விஜயின் ஹீரோயிசத்தை ஏற்றுக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சரியான இடத்தில் அமைந்த இரண்டு பாடல்கள் இரண்டாம் பாதிக்கு பலம்.

விஜய்.. என்னத்த சொல்ல? ஒரு மாற்றமும் இல்லை. அதே விஜய் தான். இந்த முறை ஸ்கிரிப்ட் உதவியிருக்கிறது. என்னால் எப்போதும் விஜயை மட்டும் படத்திருலிருந்து தனியே பிரித்து பார்க்க முடியும். அதனால்தான் சுறா போல எவ்வளவு சூர மொக்கை வந்தாலும் கொஞ்சமாவது என்னால் திருப்தியடைய முடிகிறது. அப்படி பார்த்தால் விஜய் இதில் எதுவும் ஸ்பெஷலாக செய்யவில்லை. அதே விஜய். படம் நன்றாக இருப்பதால் இன்னும் பட்டையை கிளப்புறார். தளபதி என்னை திருப்திப்படுத்த தவறுவதேயில்லை.

வசனம் அவ்வபோது சுபா என்று நினைக்க வைக்கிறது. விஜயை கட்டிவைத்து பின்னாலிருந்து அமைச்சர் அடிக்கிறார். அப்போது விஜய் சொல்வது “பின்னாடி இருந்து அடிக்கும் பொறம்போக்கு யாருடா”. தியேட்டர் என்னவாகியிருக்கும் என யூகித்துக் கொள்ளுங்கள். வழக்கம் போல தீவிரவாதி முஸ்லீம். அவரிடம் போலீஸ் சொல்கிறார் “உண்மையிலே முஸ்லீம் இந்தியாவுலதான் பாதுகாப்பா இருக்காங்க. உங்க பின்லேடன உங்க நாட்டுல காப்பாத்த முடியல. ஆனா எங்களுக்கு பிடிக்காத கசாப் கூட இங்க சேஃபாதான் இருக்காரு”. இன்னும் பல நச் வசனம். எங்கே கேட்க முடிந்தது? ரசிகர்கள்..

ஹன்சிகாவும், சரண்யா மோகனும் ஸ்கோர் செய்கிறார்கள். பாவம். ஜெனிலியா லூசாக நடிக்கத்தான் லாயக்கு போல. சந்தானம் கிடைக்கும் எல்லா இடங்களிலும் லட்சுமி வெடி வெடிக்கிறார். இன்னும் கொஞ்சம் வரலாமே என ஏங்க வைக்கும் வேலை சந்தானத்திற்கு. இருக்கும் நட்சத்திரங்களின் பெயர்களை எழுதினால் கிமீ.ரேஞ்சுக்கு போய்விடும் பதிவு. எல்லோரையும் கட்டி மேய்த்ததில் ராஜா மிளிர்கிறார். ஸ்க்ரிபிட்டிற்கு அவர் உழைத்தது திரையில் தெரிகிறது. விஜய் ஆண்ட்டனியின்  பாடல்கள் ஆல்ரெடி ஹிட். திரையில் ஹிட்டோ ஹிட். என் சாய்ஸ் சொன்னால் புரியாதும், சில்லாக்ஸூம், மாயம் செய்தாயோவும், ரத்ததின் ரத்தமும், முளைச்சு மூணு இலையும்.

மொத்ததில் முதல் பாதி எல்லோரையும், இரண்டாம் பாதி ஆக்‌ஷன் ரசிகர்களையும், விஜய் ரசிகர்களையும் குளிர்வைக்கிறான் வேலாயுதம். நிச்சயம் தீபாவளிக்கு 1000 வாலா வேலாயுதம் தான்.

___________

வேலாயுத படங்கள் வெளிவந்த போது ஏதோ வீடியோ கேமிலிருந்து காப்பியடித்துவிட்டார்கள் என பொங்கினார்கள் திருட்டு சிடியில் படம் பார்க்கும் சிலர். படத்தில் விஜய் ஒரு கண்காட்சிக்கு போவார். அங்கே பொம்மைக்கு பல வித உடைகள் போட்டிருப்பார்கள். அதி ஒன்றை அணிந்துக் கொண்டு எஸ்கேப் ஆவார். அதுவே வேலாயுத உடையாக மாறும். ஏதோ கேஸெல்லாம் போட்டார்கள் நியாயவான்கள்.என்ன ஆச்சுன்னா சொல்லுங்கப்பா.அதே போல அண்ணன் தங்கை பாடலில் தாஜ்மகாலுக்கு என்ன வேலை என்றெல்லாம் கேட்டார்கள். படம் பாருங்கப்பா..

_________________

விஜயின் டொகொமோ விளம்பரம்

Oct 13, 2011

சாருவும்,லிப்போகிராம‌ட்டிக்கும்

22 கருத்துக்குத்து

 

முத‌லிலே சொல்லிவிடுகிறேன். கேர‌ள‌ நாட்டிலும், பெரு நாட்டிலும் பிர‌ப‌ல‌மாக‌ இருக்கும் ஒரே த‌மிழ் எழுத்தாள‌ரான‌ திரு. சாரு நிவேதிதா ப‌ற்றிய‌ ப‌திவு இது. அன்னாரை அறியாத‌வ‌ர்க‌ள் தொட‌ர்வ‌து அவ‌ர‌வ‌ர் சொந்த‌ விருப்ப‌த்தின் பேரில் ம‌ட்டுமே.

  சாரு அவ‌ர்க‌ள் அடிக்க‌டி ச‌ற்று தொய்வான‌ முத்துக‌ளை உதிர்த்தாலும் த‌ற்போது அரிய‌ முத்தொன்றை உதிர்த்து இருக்கிறார். அவ‌ர‌து ஸீரோ டிகிரி lipogrammatic நாவ‌லாம். உல‌கிலே மொத்த‌ம் 3 நாவ‌ல்க‌ள் தான் இந்த‌ பாணியில் எழுத‌ப்ப‌ட்டுள்ள‌தாம். ச‌ரி. lipogrammatic என்றால் என்ன‌வென்று விக்கியை கேட்போம்.

“A lipogram (from Greek lipagrammatos, "missing letter") is a kind of constrained writing or word game consisting of writing paragraphs or longer works in which a particular letter or group of letters is avoided — usually a common vowel, and frequently "E", the most common letter in the English language.[1]

Writing a lipogram is a trivial task for uncommon letters like "Z", "J", or "X", but it is much more difficult for common letters like "E", "T" or "A". Writing this way, the author must omit many ordinary words. Grammatically meaningful and smooth-flowing lipograms can be difficult to compose.

A pangrammatic lipogram or lipogrammatic pangram is a text that uses every letter of the alphabet except one, e.g. "The quick brown fox jumped over the lazy dog", which omits "S."”

அதாவ‌து ஒரே ஒரு எழுத்தை த‌விர்த்துவிட்டு எழுதுவ‌த‌ற்கு பெய‌ர் லிப்போ கிராமடிக். ஆங்கில‌த்தில் உயிரெழுத்து என்ற‌ழைக்கப்ப‌டும் A, E,I,O,U  எழுத்துகளின் ஒலி இல்லாம‌ல் எந்த‌ வார்த்தையுமே இருக்காது. அது போல‌ மிக‌வும் சிர‌ம‌மான‌ எழுத்துக‌ளை த‌விர்த்து எழுதும் ஒரு க‌லை இது. மேலும் X,Y,Z போன்ற‌ எழுத்துக‌ள் இல்லாம‌ல் எழுதுவ‌து பெரிய‌ காரிய‌மில்லை. ஆனால் A, E O போன்ற‌ எழுத்துக‌ள் இல்லாம‌ல் எழுதுவ‌து நிச்ச‌ய‌ம் பெரிய‌ வேலைதான். இங்கே சாரு என்ன‌ சொல்கிறார் என்றால் அவ‌ர‌து நாவ‌லில் "ஒரு" என்ற‌ வார்த்தை ஒரு இட‌த்திலும் வ‌ர‌வில்லையாம். என‌வே அது லிப்போகிராம‌டிக்காம். கேட்கிற‌வ‌ன் கேணைய‌னா இருந்தா கே.பி.சுந்த‌ராம்ப‌ளுக்கு... என்ற‌ ரீதியில் அடித்து விடுகிறார் சாரு..

விக்கி குறிப்பை க‌வ‌னித்து வாசித்த‌வ‌ர்க‌ளுக்கு ஒரு கேள்வி எழ‌லாம். “which a particular letter or group of letters is avoided “ அவ‌ர்களே இப்ப‌டி சொல்கிறார்க‌ளே.. இது வார்த்தையை குறிக்காதா? நிச்ச‌ய‌ம் இல்லை. ஒரு எழுத்தோ அல்ல‌து ஒன்றிற்கு மேற்ப‌ட்டோ எழுத்துக‌ளோ இல்லாம‌ல் எழுதுவ‌து என்றே அத‌ற்கு பொருளாகும். வார்த்தை இல்லாம‌ல் எழுதுவ‌தும் சாத‌னைதானே என்கிறீர்க‌ளா? த‌மிழில் மொத்த‌ம் 3 ல‌ட்ச‌த்திற்கும் அதிக‌மான‌ வார்த்தைக‌ள் உண்டு. எல்லா நாவ‌ல்க‌ளிலும் எல்லா வார்த்தைக‌ளுமா இருக்கின்ற‌ன‌? ச‌ரி.. எல்லா வார்த்தையும் வேண்டாம். X Y Z & A B C எடுத்துக்காட்டு போல‌ த‌விர்க்க‌ முடியாத‌ வார்த்தைக‌ள் இல்லாம‌ல் எழுதுவ‌து க‌டின‌ம்‌ தானே என்றும் நினைக்க‌லாம். "ஒரு" என்ற‌ வார்த்தைக்கு ப‌ல‌ மாற்று வார்த்தைக‌ள் த‌மிழில் உண்டு. இதெல்லாம் சாத‌னை என்றால் த‌மிழில் க‌தையே இல்லாம‌ல் 3 ம‌ணி நேர‌ ப‌ட‌மெடுப்ப‌வ‌ர்க‌ளுக்கு செவ்வ‌ய் கிர‌க‌த்தின் உயரிய‌ விருதையே த‌ர‌லாம்.

சென்ற‌ ப‌த்தியில் இருக்கும் ச‌ந்தேக‌ங்க‌ளும், விள‌க்க‌ங்க‌‌ளும் மொன்னையாக‌ தெரிய‌லாம். ஆனால் இது போன்ற‌ த்ராபையான‌ கேள்விக‌ளை கேட்டு த‌ன் த‌லைவ‌னின் ம‌ன‌தை குளிர்விக்க‌ சில‌ர் வ‌ட்ட‌ம் என்ற‌ பெய‌ரில் ஜ‌ல்லிய‌டித்துக் கொண்டிருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கான‌ முன்னெச்சிரிக்கை ந‌ட‌வ‌டிக்கையாக‌ அதை கொள்ள‌வும். மேலும், முன்பு சாரு இஸ் எ லெஜ‌ன்ட் என்ற‌ ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ள், ச‌மீப‌த்தில் ந‌ட‌ந்த‌ சேட் கூத்துக்குப் பின் பின்வாங்கியிருப்ப‌து ம‌கிழ்ழ்ச்சியை அளிக்கிற‌து. அது என்ன‌ கூத்து என்று ஒரே ஒருவ‌ராவ‌து கேட்க‌ கூடும். அதையும் எழுதி தொலைப்போம்.

எந்த‌ புத்த‌க‌ அறிமுக‌ நிக‌ழ்ச்சிக்கு சென்றாலும் த‌ன‌து ம‌ன‌துக்கு ச‌ரியென்று தோன்றும் க‌ருத்துக‌ளை ம‌ட்டுமே முன்வைக்கும் அறிஞ‌ர் சாரு அவ‌ர்க‌ள், ஒரு பாடாவதி க‌விதையொன்றை இல‌க்கிய‌த்தின் உச்ச‌மாக‌ குறிப்பிட்டார். என்ன‌டா இது என்று அவ‌ர‌து அடிபொடிக‌ளே அதிச‌யித்த‌ போதுதான் அந்த‌ த‌க‌வ‌ல் வெளியான‌து. அதை எழுதிய‌வ‌ருட‌ன் அஜால் குஜால் சேட் செய்து ஏதாவது தேறுமா என‌ முய‌ற்சித்திருக்கிறார் ந‌ம்ம‌ எயித்தாள‌ர். அத‌ற்காக‌ அவ‌ர் வீசிய‌ தூண்டி‌லில் இருந்த‌ ம‌ண்புழுதான் க‌விதை குறித்த‌ பாராட்டு. இல‌க்கிய‌மே என் சுவாச‌ம். ம‌ற்றைவ‌யெல்லாம் என‌க்கு துவேச‌ம் என்ற‌ ந‌ப‌ரின் முக‌த்திரை கிழித்த‌த‌ற்கு இன்றுவ‌ரை ச‌ரியான‌ ப‌திலிலில்லை. இதில் மிக‌ப்பெரிய‌ காமெடி என்ன்வென்றால் சேட் வெளியாகும் சில‌ நாட்க‌ளுக்கு முன்புதான் இந்திய‌ர்க‌ளுக்கு ச‌ரியான‌ பாலிய‌ல் வாழ்க்கை இல்லை. என‌வேதான் இணைய‌த்தை இத‌ற்காக‌ எல்லாம் ப‌ய‌ன்ப‌டுத்துக்கிறார்க‌ள் என‌ சொல்லியிருந்தார் ஸ்ரீலஸ்ரீ சாருவான‌ந்தா சுவாமிக‌ள். என‌க்கு மிக‌ப்பெரிய‌ க‌வ‌லை என்ன‌வென்றால் த‌ற்போது அதே வாயால் (அ) கையால் மீண்டும் ம‌னுஷ்ய‌புத்திர‌ன் க‌விதைக‌ளையும் பாராட்டி வருகிறார்.இதை விட‌ வேறு பெரிய‌ அவ‌மான‌த்தை த‌ன‌து உற்ற‌ ந‌ண்ப‌ருக்கு சாருவால் வ‌ழ‌ங்க‌ முடியாது.

சாருவிற்கு இணைய‌த்தை ச‌ரியாக‌ ப‌ய‌ன்படுத்த‌ தெரியாது. அவ‌ருக்கு சேட் செய்ய‌ ம‌ட்டுமே தெரியும் என்ப‌து ப‌ல‌முறை நிரூபிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. உதார‌ண‌மாக‌ அவ‌ர‌து INCEPTION ப‌ட‌த்தின் விம‌ர்ச‌ன‌மும், அத‌ற்கு ப‌திவ‌ர் ஒருவ‌ர் எழுதிய‌ ம‌றுப்பும் சில‌ருக்கு நினைவில் இருக்க‌லாம். அதே போல் ப்ளீச்சிங் ப‌வுட‌ர் என்ற‌ பெய‌ரில் இருந்த‌ ப‌திவ‌ர் சாரு கிம் கி டுக் ப‌ட‌மொன்றை IMDB.com ல் பார்த்துவிட்டே விம‌ர்ச‌ன‌ம் எழுதிய‌தை எடுத்து சொன்ன‌தை குறிப்பிட‌லாம். அதெல்லாம் எங்க‌ளுக்கு தெரியாது என்ப‌வ‌ர்க‌ள் இதை பாருங்க‌ள். இந்த‌ நாவ‌லும் லிப்போகிராம‌டிக் வ‌கைதானாம். ஆனால் சாரு “ ஜார்ஜ் பெரக் எழுதிய La Disparition (ப்ரெஞ்ச்)  மற்றும் வால்டர் அபிஷ் எழுதிய Minds Meet (ஆங்கிலம்).  மூன்றாவது, ஸீரோ டிகிரி (தமிழ்).  “ ம‌ட்டுமே லிப்போகிராம‌டிக் என்கிறார். இதை கூட‌வா தேட‌ தெரியாது ந‌ம்ம‌ சிந்த‌னைவாதிக்கு?

எழுதினால் எழுதிக் கொண்டே போகும‌ள‌விற்கு ரீல் விட்டிருக்கிறார் சாரு. ஒரு ப‌க்க‌ம் பார‌தி க‌விஞ‌னே இல்லை என்ப‌வ‌ர். இன்னொருப்ப‌க்க‌ம் நான் தான் பார‌தி என்ப‌வ‌ர். இருவ‌ருக்கும் அவ‌ர‌து ம‌ற்ற‌ ப‌‌டைப்புக‌ளை முன்னிட்டு ம‌ரியாதை த‌ர‌ வேண்டும் என்ற‌ என் எண்ண‌ம் மாறி மாமாங்க‌ம் ஆகிற‌து. இது போன்ற‌ முட்டாள்த்த‌னமான‌ விஷ‌ய‌ங்க‌ளை எழுதிக் கொண்டிருக்கும் சாருவை க‌ண்டிக்க‌, ம‌றுத்து பேச‌ எந்த‌ த‌குதியும் தேவையில்லை என்ப‌து என் நிலைப்பாடு. வாச‌க‌ர்க‌ளை முட்டாள்க‌ள் என‌ நினைக்கும் செய‌ல்பாட்டை சாரு நிறுத்திக் கொள்வ‌து ந‌ல்ல‌து.

கார்க்கி.
13-10-2011

தொட‌ர்புடைய‌ சாருவின் ப‌திவு : http://charuonline.com/blog/?p=2507

Oct 9, 2011

குஜ‌ராத் கும‌ரி – 7

6 கருத்துக்குத்து

 

குஜராத் குமரி – முந்தைய பதிவுகள்

 

நீ இங்கே வந்த பின் தான் எங்கள் மின்சாரத் தட்டுப்பாடு நீங்கியது. #thanksforyoureyes

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

கார்க்கி எங்கிருந்தாலும் வரவும் என கலீக் ஒருவர் நக்கலடித்தபோது குஜ்ஜு நெஞ்சில் கைவைத்துக் கொண்டாராம்.மனதிலிருந்து எகிறி வந்துவிடுவேன் என

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

உண்மையை சொல். குஜராத்தில் மது விலக்கு அமுல்படுத்தியதால்தானே தமிழகம் வந்தாய் நீ?

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

நாலு இன்ச் இடைவெளியில் வ‌ள‌ர்பிறையும், தேய்பிறை‌யும் ஒரே ச‌ம‌ய‌த்தில் ந‌டைபெறுவ‌து குஜ்ஜுவிட‌ம் ம‌ட்டுமே சாத்திய‌ம்.

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

”ஊரு விட்டு ஊரு வந்து ..காதல் கீதல் பண்ணாதீங்க“ பாட்டை மொழிப்பெயர்க்க சொல்கிறாள் குஜ்ஜு.. என்னன்னு சொல்வேன்.. எப்படி சொல்வேன்?

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

காந்தி நாட்டில் பிறந்துவிட்டு வன்முறை ஏன்னு கேட்டேன் குஜ்ஜுவிடம். சத்தம் போட்டாள் சிரிக்கிறாள். அதைத்தான் வன்முறை என்றேன் என்பதை எப்படி சொல்ல?

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

என்ன‌தான் வித‌வித‌மாக‌ சாப்பிட்டாலும் குஜ்ஜு வ‌ந்து Had lunch என்னும்போதுதான் வ‌யிறும், ம‌ன‌தும் நிறைகிற‌து. #செல்ல‌ம்டி நீ

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

தீபாவளிக்கு என்ன பட்டாசு என்கிறான் நண்பன். மாடியில் போய் நின்னுக்கிட்டு குஜ்ஜு ஃபோட்டோவ பார்க்கணும். மனசு டப்பு டப்புன்னு வெடிக்கிறது போதாதா?

Oct 7, 2011

சரக்கடிச்சா சளியும் இருக்குமா..நெப்போலியா…

7 கருத்துக்குத்து
<p><a href="http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Mayakkam+Enna.html?e">Listen to Mayakkam Enna Audio Songs at MusicMazaa.com</a></p>

 

மயக்கம் என்ன படத்தில் ”என்னென்ன செய்தோம்” பாட்ட கேட்டிங்களா? செல்வராகவன் எழுதியிருக்கார். ராஜாவும், ரஜினியும் 50 வயதுக்கு பிறகு போன ஆன்மீக பாதையில் இப்போதே அவர் போவதாக தோன்றுகிறது. அதெல்லாம் இருக்கட்டும். நம்ம மேட்டர் என்னன்னா, இந்தப் பாட்ட சிம்பு எழுதியிருந்தா எப்படி இருந்திருக்கும்? மேலே இருக்கிற ரேடியோ பொட்டில ஒரு தபா பாட்ட கேட்டுட்டு இத படிச்சு பாருங்க. நீங்க பெரிய சூப்பர் சிங்கர்ன்னா மெட்டோட பாடியும் பாருங்க.. 

பல்லவி:

என்னென செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே
எங்கெங்கு போனோம் வந்தோம் போதை என்னும் பேரிலே ..
காணாத எரிச்சல் கண்ணிலே ..
ஓயாத இருமல் வாயிலே .
மச்சான். சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சரக்கடிச்சா சளியும் இருக்குமா?..
நெப்போலியா

அளந்து நீயும் கட்டிங் எடுப்பாய்
அதனோடு சோடாவை சேர்ப்பாய்
சரக்கென்பது மருந்தல்லவா கற்று கொடுக்கிறாய்
குவார்ட்டராக இருப்பவன் நீயா
கண்ணீரை துடைப்பவன் பொய்யா
சைட் டிஷ்க்கு  ஊறுகாய் கேட்டால்
சிக்கன் வாங்கினாய்

சரணம்:

போதையின் பொருள்தான் என்ன
அடிச்சுதான் பாத்தால் என்ன
ஆர்டர் சொல்கிறாய் ஹாஃபு வாங்கினாய்
ஃபாரின் சரக்குகளும் அடிப்போமா ..
நாட்டு சரக்கையும் குடிப்போமா

ஃபாரின் சரக்குகளும் அடிப்போமா ..
நாட்டு சரக்கையும் குடிப்போமா

நமது அரசாங்கம் பெறும் காடு
டாஸ்மாக் அதிலே ஒரு சிறு கூடு
உன்னை நினைத்துக் கொண்டு ஊறுகாய் தொட்டுக் கொண்டா
ராவா அடிச்சாலும் இதமாய் இறங்கிடும்
மச்சான்!!!  சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சரக்கடிச்சா சளியும்  இருக்குமா..
நெப்போலியா…

Oct 2, 2011

வெடி ________

15 கருத்துக்குத்து

 

டேய்.. மறுபடியுமா?

இல்லைடா. என் பிளாக் இருக்கில்ல..

ம்ம்

அதுல பதிவு போட்டா 10 பேராச்சும் படிக்க மாட்டாங்க?

ம்ம்

அதுல 4 பேருக்காச்சும் நான் எழுதறது பிடிக்காதா?

அதுக்கு நீ வெடி பார்க்கணுமா?

படம் பார்த்துட்டு பதிவு எழுதுவேன் இல்லை

என்ன சொல்ல வர்ற?

நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை மச்சி.

__________________

சத்யம் அரங்க டிக்கெட் கவுண்ட்டர் சனிக்கிழமை மதியம் 2.45க்கு அல்லோலகல்லோல பட்டுக் கொண்டிருந்தது. எல்லா படங்களும் ஃபுல் என்றார்கள். அப்போது வெடி படத்திற்கு முன்பதிவு செய்த சிலர் டிக்கெட்டுகளை விற்பது போன்றிருந்தது. அந்த சமயத்தில் எனக்கும் என் மனசாட்சிக்கும் நடந்த உரையாடல் தான் மேலே இருப்பது. களையான ஒரு பெண் கையில் இரண்ட் டிக்கெட்டுடன் முழித்துக் கொண்டிருந்தார். எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்கா என்றேன். ரெண்டு இருக்கு என்ற போதுதான் அவர் என்னுடன் பார்க்க வரவில்லை என்பதையே உணர்ந்தேன்.என்னைப் போலவே பகல் காட்சி கலெக்டர் ஒருவர் சுற்றிக்கொண்டிருந்தார். அவரிடம் இன்னொரு டிக்கெட்டை வாங்க சொன்னவுடன் பளீரென சோடியம் வேப்பர் விளக்கு போல சிரித்தார் அந்தப் பெண். முன்ன பின்ன தெரியலனாலும் பசங்க ஒரு பிரச்சினையில் மாட்டினா பொண்ணுங்களுக்கு வரும் ஆனந்தமே தனிதான். இங்கே பிரச்சினை வெடி என்ற படம் என்பதை குறிப்பிடும் அளவிற்கு பதிவுலக வாசகர்கள் மொக்கையல்ல என நம்புகிறேன்.

“வெடி – சீட்டுக்கு அடியில் “ என்ற தலைப்பை ஃபிக்ஸ் செய்த பின் தான் படமே பார்க்கலாம் என சென்றேன். ட்விட்டரில் அதை சொன்ன போது ஏற்கனவே யாரோ அப்படி எழுதிவிட்டதாக சொன்னார் நண்பர் ஒருவர். நாம என்ன குலேபகாவாலியா பார்க்கிறோம் வேறு தலைப்புக்கு சிரமப்பட?

வெடி –சுத்த கடி

வெடி ; பாடை நமக்கு ரெடி

வெடி : நம் மேல் விழுந்த தடி

வெடி : மசாலா நெடி

தமிழர்கள் நாளுக்கு நாள் அறிவாளிகள் ஆகிக் கொண்டு வருவது மீண்டும் நிரூபணமானது. முன்பெல்லாம் பாடல் மொக்கையாக இருந்தால் கூட நெளிந்தபடி சீட்டிலே இருந்தார்களாம். பின் ஆண்கள் மட்டும் சிகரெட், ஜர்தா, மாணிக்சந்த அடிக்கிற சாக்கில் வெளியே வந்தார்கள். பின் பெண்களும் பட்டர் பாப்கார்ன், கோல்ட் காஃபியென வந்தார்கள். இதன் உச்சமாக வெடி திரைப்படத்திற்கு 100% டிக்கெட் விற்றும் 70% இருக்கைகள் மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருந்தது. காசு கொடுத்து வாங்கியும் மொக்கையென அறிந்து வெளிநடப்பு செய்த புண்ணியவான்களாலதான் நேற்று சென்னையில் லேசாக தூறியது. 

இன்னுமாடா நீ படத்தை பத்தி ஆரம்பிக்கல என்பவர்களுக்கு.. வெடியும் அப்படித்தான். இடைவேளை வரை படம் ஆரம்பிக்காது. அப்புறம் என்ன ஆகுமென்றால், படம் முடிந்துவிடும். கதை சொல்ல முயற்சிக்கிறேன்.

பிரபாகாரன் (விஷால்) கொல்கத்தா செல்கிறார். தூத்துக்குடி வில்லன்கள் வழியில் லோக்கல் தாதாவை விட்டு பிடிக்க சொல்கிறார்கள். நடு ரோட்டில் சேர் போட்டு பியர் குடிக்கும் தாதாவின் வாயில் பியர் பாட்டிலை சொருகிவிட்டு செல்கிறார் பிரபாகரன். ஒரு கல்லூரியில் வேலைக்கும், சமீராவின் வீட்டில் வாடகைக்கும் குடி வருகிறார். விவேக் அந்த கல்லூரியில் ஏதோ ஒரு வேலை செய்கிறார் என்று சொல்லவும் வேண்டுமா? விவேக்கிற்கு சமீரா மேல் காதல் வர, சமீராவுக்கு விஷால் மேல் லவ் வர, விஷாலுக்கு சமீரா தோழி மேல் அன்பு வர , அவ்வபோது பாட்டு வர, பாட்டு முடிந்ததும் வில்லன்கள் வர, நமக்கு கொட்டாவி வர, பக்கத்து சீட்டுக்காரனுக்கு  கோக்கும், சாண்ட்விச்சும் வர அப்போதுதான் இடைவேளை வந்தது. சமீரா தோழி மீது அன்பு என்றேன் அல்லவா? அவர் விஷாலின் தங்கச்சியாம்.  விஷாலின் அப்பா ஒரு திமுக மாசெவின் இடம். அதாங்க பொறம்போக்கு. அவன் செத்து போனத ஊரே கொண்டாடுது. விஷாலும் அவர் தங்கையும் சின்ன வயசிலே அனாதை ஆகிறார்கள். தங்கச்சிக்கு டீயும்,பன்னும் வாங்கி தர முடியாததால் ஒரு கிறிஸ்துவ மிஷனிரிடம் கொடுத்து விடுகிறார். அண்ணன் இபப்டி செஞ்சிட்டானே என்று தங்கச்சிக்கு கோவம் இன்னமும் இருக்கு. சரி. வில்லன்கள் யாருன்னு கேட்கறீங்களா? அங்கனதான் டிவிஸ்ட் வச்சாரு புது மாப்ள பிரபுதேவா.

நம்ம விஷால் தான் பிரபாகரன் IPS. தூத்துக்குடில வழக்கம் போல ஒரு தாதா.. வழக்கம் போல அவனுக்கு ஒரு பையன். வழக்கம் போல அவங்கள போலிஸால புடிக்க முடியல. வழக்கம் போல ஹீரோ  வந்து சுளுக்கெடுக்கிறார். ஏன்னா அவருக்கு சின்ன வயசிலே நல்லது கெட்டது தெரிஞ்சிடுச்சாம். ஆனா பயம்ன்னா என்னன்னு தெரியலையாம். இவன என்னடா பண்ணலாம்னு வில்லன்கள் யோசிச்சப்ப விஷால் தங்கச்சி ஸ்டோரி தெரிது. கொல்லுடா அவளன்னு சொல்றார். அப்புறம் என்ன ஆகும்? ம்க்கும். அதான் ஆச்சு.

விஷால் முதிர்ந்திருக்கிறார். முன்பிருந்த சின்னப்புள்ளதனங்கள் குறைந்திருக்கிறது. முறுக்கேறிய உடம்புடன் ரெண்டு லோட்டா கஞ்சிய குடிச்ச மாதிரி வலம் வருகிறார். விஷால் உருப்பட்டுவிடுவார் என்றே தோன்றுகிறது. சமீரா… கிர்ர்.. பேசாமல் அவன் இவன் விஷால் கெட்டப் போட்டு சமீராவிற்கு பதில் ஆட விட்டிருக்கலாம். புதுமையாக இருந்திருக்கும். அந்த ஆண்மணிக்கு எப்படித்தான் படம் கிடைக்கிறதோ? விவேக்.. உவ்வேக். இரண்டு பாடல்கள் நன்றாக இருந்தும் எடுத்த விதம் சொதப்பல். மத்த இத்யாதிகள் எல்லாம் சொல்லிக்கொள்ளும்படியில்லை. எனக்கு படத்தில் பிடித்த ஒரே விஷயம் ஊர்வசி வரும் போர்ஷன். திருட்டு சிடியிலோ, ஆன்லைனிலோ படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டினால் இரண்டாம் பாதியின் இரண்டாம் பாதியில் வரும் அந்த சீன்களை பாருங்க. காமெடி வெடி உற்சவம் நடத்தியிருக்கிறார் ஊர்வசி.

மிஸ்டர்.பிரபுதேவா, வில்லு, எங்கேயும் காதல், வெடி போல இன்னும் ஒரு படம் எடுங்க. நயந்தாரா உங்களை டைவர்ஸ் செய்வது உறுதி.

அரங்கில் இருந்து ட்விட்டய முத்துகள்:

பிளாக் எழுத வேண்டும் என்ற ஒரே ஒரு உயரிய நோக்கத்திற்காக வெடி பார்க்க போகிறேன். ஜெய் விஷால்.

அனுஷ்கா செல்லத்தின் சென்னை சில்க்ஸ் விளம்பரத்திற்காகவே எத்தனை மொக்கைகளையும் சத்யமில் பார்க்க நான் தயார்

ஆம்புலன்ஸ் எளிதில் என்னிடம் வந்து சேரலாம். கூட்டம் கம்மிதான் இங்கே

படத்த கூட பார்த்திடுவேண்டா.. இந்த சமீரா.. ங்கொய்யால.

பாதில போயிடலாமா என்கிறார் பக்கத்து சீட்டு.. I am not a QUITTER. I am TWITTER

இடைவேளையில் வாசன் ஐ கேர் விளம்பரம். “நாங்க இருக்கோம்”னு சொல்றத பார்த்துதான் பல பேரு நிம்மதி பெரு மூச்சு விடுறாங்க

பிகு:

ஏதாச்சும் படம் பார்த்தாலோ, ஆக்சிடெண்ட் ஆனாலோதான் ட்விட்டர் இல்லாத பதிவு வருது கார்க்கி என்றார் ஒருவர். இன்னொரு ஆக்சிடெண்ட் தேவையில்லை என்பதால் தான் வெடிக்கு போனேன்.. என் பைக்தான் எனக்கு முக்கியம். எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை.

 Smile

 

all rights reserved to www.karkibava.com