Sep 7, 2011

பூ..புஷ்பம்..புய்ப்பம்.. (Karki)


 

தோழியின் வீட்டிற்கு லேண்ட்மார்க் கேட்கிறார்கள். வால்வுகள் 4 இருக்கும். மென்மையான வீடு. என் இதயத்திற்கு வேறென்ன அடையாளங்கள் இருக்கு?

________________________________________________________

பூ....புய்ப்பம்..புஷ்பம்… தோழி

________________________________________________________

கிரிக்கெட்டில் யாராச்சும் க்ளீன் போல்ட் ஆனா தோழியும், அவள் பார்வையும் ஏனோ நினைவுக்கு வருகிறது

________________________________________________________

முழு போதைல பார்த்தா தெளிவாகுறதும், தெளிவா பார்த்தா போதையேத்துறதும் .. அப்பப்ப்ப்ப்ப்ப்பா.. தோழிய‌ அடிச்சிக்க‌ அழ‌கியே இல்ல‌ப்பா

________________________________________________________

எனது டிபியை தோழி வால்பேப்பராக வைத்திருக்கிறாளாம். கூடவே “என்னைப் பார் காதல் வரும்” என்ற பன்ச் லைனும் இருக்காம்

________________________________________________________

அக‌ர‌ முத‌ல‌ எழுத்தெல்லாம் என்
தோழி முத‌ற்றே அழ‌கு

________________________________________________________

தேவதை வம்சம் நீயோ.. தேநிலா அம்சம் நீயோ.. பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ  #பா.விஜ‌ய் தோழியை எப்போதோ பார்த்திருப்பார் போல‌

________________________________________________________

நான் ரவுடி என்றால்,அவள் சொர்ணாக்கா என்றாள் தோழி. "நீ சொர்ணம் மட்டும் தான் செல்லம்.அக்கா எல்லாம் இல்லை" என்ன் நான்

________________________________________________________

மழையில் நனையும்போதெல்லாம் ஒன்று தோன்றும்.இதே மழை எங்கேயாவது அவளையும் நனைத்துக் கொண்டிருக்கலாம்

6 கருத்துக்குத்து:

KSGOA on September 7, 2011 at 12:47 PM said...

ரொம்ப நாட்களுக்குபின் தோழி அப்டேட்ஸ்.நல்லாயிருக்கு.Gujju ஊருக்கு போய்டாங்களா?

ராகுல் on September 7, 2011 at 3:17 PM said...

your post is very nice

kuthu on September 8, 2011 at 2:43 AM said...

மத்ததெல்லாம் மொக்கைன்னாலும், கடைசில இருந்த "மழை" சூப்பர். உண்மையிலே கவிதையா இருந்தது. மொக்கைய விட்டுட்டு கவிஞரா வர முயற்சி பண்ணுங்க

kobiraj on September 10, 2011 at 8:12 AM said...

தளபதி படை தடைகளை உடை http://kobirajkobi.blogspot.com/2011/09/blog-post.html
594 facebook shares மகத்தான சாதனை

இரசிகை on September 12, 2011 at 7:42 PM said...

nallaayirukku...

masanam on November 14, 2011 at 10:49 AM said...

Super a Irukku Boss. Theeeeeeeeeeee

 

all rights reserved to www.karkibava.com