Sep 28, 2011

பைக்கேஸ்வ‌ர‌ன்


 

அது என்ன‌ப்பா பைக்கேஸ்வ‌ர‌ன்னு கேட்காதீங்க‌. என்னை ஏத்துக்கிட்டு உஸ்ஸ்ஸ்ன்னு ர‌ன் ப‌ண்ற‌ பைக்க‌த்தான் பைக்கேஸ்வ‌ர‌ன்னு சொல்றேன். என‌க்கும் பைக்குக்குமான‌ ஸ்நான‌ பிராப்தி அதிக‌மில்லை ஜென்டில்மேன், 7 வ‌ருஷ‌ம் தான். 2004ல‌‌ எங்க‌ அன்ண‌ன் ப‌ல்ச‌ர‌ கொடுடான்னு கேட்ட‌ போது பைக்க‌ ஸ்லோப்புல‌ இற‌க்கி சென்ட்ட‌ர் ஸ்டேன்ட் போடு. கொடுக்கிறேன்னு சொல்வான். அப்ப‌ ந‌ம்ம‌ளோட‌ பேஸ்மென்ட், பில்டிங் ரெண்டுமே த‌னுஷுக்கு ச‌வால் விடும் நிலைமையில் இருந்த‌து இங்கே குறிப்பிட‌த்த‌க்க‌து. வாஞ்சையோட‌ வ‌ண்டிக்கு வாட்ட‌ர் வாஷ் ப‌ண்ற‌தோடு ச‌ரி. பில்லிய‌ன‌ர் ஆன‌ ச‌ந்தோஷ‌த்த‌ பைக் பில்லிய‌ன்ல‌ ச‌வாரி செய்யும் போதே அனுப‌வித்த‌வ‌ன் நான்.

அப்ப‌டி இப்ப‌டி என‌ போராடி 2008ல் ப‌ஜாஜ் XCD ஒண்ணு வாங்கினேன். செல்ஃப் ஸ்டார்ட். 125 சிசி, அலாய் வீல், DTS-i எஞ்சின் என‌ கிளாம‌ர் காட்டிய‌ வ‌ண்டி வாங்கிய‌ பின் தான் ஒரு உண்மையை விள‌க்கிய‌து. க‌வ‌ர்ச்சி ந‌டிகை க‌வ‌ர்ச்சிக்கு ம‌ட்டும்தான்.. மெயின் ஹீரோயினை மிஞ்ச‌வே முடியாது. கிள‌ட்ச்சோடு ப‌ல்லையும் இறுக‌ க‌டித்த‌ப‌டியே 25000 கிமீ ஓட்டினேன். ம்ஹூம். ப‌ல்லு ந‌ம‌க்கு மிக‌ முக்கிய‌ம் என்ற‌ ஒரு டென்டிஸ்ட்டின் பேச்சைக் கேட்டு பைக் மாற்றுவ‌தென‌ முடிவான‌து. இந்த‌ முறை அ‌ல்ஃபோன்ஸா, சோனாவையெல்லாம் ந‌ம்புவ‌தாக‌ இல்லை. ச‌ம்ப‌ள‌ம் அதிக‌ம், கால்ஷீட் பிர‌ச்சினை என‌ ப‌ல‌ இன்ன‌ல்க‌ள் இருந்தாலும் அனுஷ்கா தான் ந‌ம்ம‌ சாய்ஸ் என‌ ஒரேம‌ன‌தாக‌ முடிவு செய்து ய‌ம‌ஹா ஷோரூம் சென்றேன்.

ஷோரூமில் கிடைத்த‌ ஒரு ஞான‌த்தை ப‌கிர்ந்துக் கொன்ட‌பின் தொட‌ர‌லாம். ம‌ஹால‌ட்சுமி என்ற‌ பெண்ணையோ, ம‌ஹால‌ட்சுமி போன்ற‌ பெண்ணையோ காத‌லித்த‌ தேவ‌தாசுக‌ள், அழுத்தி சொல்றேன் தேவ‌தாஸுக‌ள், ய‌ம‌ஹாவையே அதிக‌ம் வாங்குகிறார்க‌ள். ந‌ம்ம‌ வியாப‌ர‌‌த்திற்கு வ‌ருவோம். 1.2 ல‌ட்ச‌த்தில் இருந்து ப‌டிப்ப‌டியே இற‌ங்கி வ‌ர‌ வேண்டிய‌ நிலைமை. இறுதியில் என் ம‌ன‌தில் ப‌ச்ச‌க் ப‌ச்ச‌க் என‌ ஒட்டிக்கொண்ட‌து Yamaha FZ 16. ஆனால் என் ப‌ட்ஜெட்டோ 65000 ரூபாய்தான். என் மேல‌ அதீத‌மான‌ அன்பு கொண்ட‌ ஒரு ந‌ல்லாத்மா வாங்குடா க‌ண்ணு நான் பார்த்துக்கிறேன் என்ற‌து. க‌ருப்பு நிற‌ ய‌ம‌ஹா பிற‌ந்த‌ வீட்டை விட்டு என் வீட்டில் புகுந்த‌து. இங்கே குறிப்பிட‌த்த‌க்க‌ விஷ‌ய‌ம், வ‌ர‌த‌ட்ச‌ணை நான் தான் கொடுத்திருக்கிறேன். மேலும், பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்வ‌து உள‌விய‌ல் சிக்க‌லை ஏற்ப‌டுத்திய‌தால் கிக்க‌ரே இல்லாத‌ பைக்கை தேர்வு செய்தேன்.

அன்றிலிருந்து இன்று வ‌ரை என் பைக் தான் என‌து சிற‌ந்த‌ ந‌ண்ப‌ன். (எவ‌ன்டா அங்க‌ லாலாலா பாடுற‌து??) பைக் ச‌வாரி என‌க்கு காரை விட‌ பிடித்த‌மான‌ ஒன்றாக‌ இருக்கிற‌து. முற்றிலும் அடைக்க‌ப்ப‌ட்ட‌ காரில் செல்வ‌து அதிமுக‌வுட‌னான‌ கூட்ட‌ணி போல‌. சொகுசாக‌ போய் சேர்ந்துவிட‌லாம் என்றாலும் கை, வாயை எல்லாம் சுருட்டிக் கொண்டு போக‌ வேண்டும். ஏதோ ஒரு அடிமைத்த‌ன‌ம் ஒன்றிப் போயிருக்கும். பைக் ச‌வாரி என்ப‌து த‌னியே நிற்ப‌து போல‌. ம‌ழை போன்ற‌ கார‌ணிக‌ளால் ப‌ய‌ணமே தடைப‌ட‌லாம் என்றாலும் "எங்க‌ளைப் போல‌ த‌னியே நிற்க‌ காங்கிர‌சிற்கு தெம்புன்டா" என‌ பாஜ‌க‌ போல‌ ச‌வுன்ட் விட‌லாம். மேலும் ஒரு யூத் என்ப‌வ‌ன் க‌ரென்ட் டிரென்டை பின்ப‌ற்ற‌ வேண்டும் அல்ல‌வா? உள்ளாட்சி தேத‌லில் எல்லா க‌ட்சிக‌ளும் அகில‌ இந்திய‌ நாடாளும் ம‌ன்ற‌ க‌ட்சி த‌லைவ‌ர் கார்த்திக் அவ‌ர்க‌ள் சென்ற‌ பொதுத்தேர்த‌லில் பின்ப‌ற்றியே யுத்தியை பின்ப‌ற்றுகிறார்க‌ள். அத‌னால் நானும் காரை விட்டு இன்றிலிருந்து பைக்கில் ப‌ய‌ணிக்கிறேன்,

பைக்குக்கு என்ன‌ ஆச்சுன்னு கேட்க‌றீங்க‌ளா? 10 நாட்க‌ளுக்கு முன்பு ஒரு விப‌த்து. க‌த்திபாரா மேம்பால‌த்தின் கீழ் ஒரு ம‌ழை நின்ற‌ ந‌ன்னாளில் போய்க் கொண்டிருந்தேன். "என் ச‌மூக‌ம் உன‌க்கு முன்பாக‌ செல்லும்" என்ற‌ வாச‌க‌ம் கொண்ட‌ ஆட்டோ முன்னே போய்க் கொண்டிருந்த‌து. திடிரென‌ ம‌த‌ம் மாறிய‌ ஆட்டோ டிரைவ‌ர் பிரேக் அடித்து நிறுத்தினார். அது ஒன்வே. ம‌ழை பெய்த‌ சாலை என்ப‌தால் டிஸ்க் பிரேக் அடிக்க‌ வேண்டாமென‌ வ‌ல‌துபுற‌த்தில் ஆட்டோவை முந்தினேன். எதிரில் ஒன்வே இல்லைடா இது என்வே என்ற‌ கொக்க‌ரிப்போடு வேற்று ம‌தத்தை சேர்ந்த‌ ஒரு ஆட்டோ வ‌ந்துவிட்ட‌து. ஆச்சு.

ஆட்டோவும் பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட‌து. மீண்டும் ஒன்ஸ்மோர் கேட்டு ரிவ‌ர்ஸில் எல்லாம் போக‌ முடியாத‌ ஒற்றை வாழ்க்கை. காவ‌ல‌னாக‌ ஹெல்மேட் போட்டுக் கொண்டுதான் இருந்தேன். பைக்கில் ப‌ற‌க்கிறாய் என‌ ம‌ற்றவ‌ர்க‌ள் சொன்னாலும் அப்போது குருவி போல‌ வான‌த்தில் ப‌ற‌த்து த‌ப்பிக்க‌ முடிய‌வில்லை. கில்லியாக‌ சீறிப்பாய‌வும் இய‌ல‌வில்லை. அடிப்ப‌ட்டு கீழே கிட‌ந்தேன். வ‌லி மிகுதியால் அந்த‌ ஆட்டோ டிரைவ‌ரிட‌ம் போக்கிரித்த‌ன‌த்தை காட்ட‌வில்லை. இங்கிலாந்து டூரில் காய‌மான‌ ச‌ச்சினை போல‌ ப‌ய‌ண‌த்தை பாதியிலே நிறுத்த‌ வேண்டிய‌தாய் போன‌து. என‌க்கு ப‌ர‌வாயில்லை. பைக் தான் சின்னாபின்னாமான‌து.

IMG_0588

அன்றிலிருந்து அலுவ‌ல‌க‌த்திற்கு அதிமுக‌ கூட்ட‌ணி. நேற்றுதான் வ‌ண்டி த‌யாராகி கைக்கு வ‌ந்த‌து.முத‌ல் சில‌ ப‌த்திக‌ளில் சொன்ன‌ கார‌ண‌ங்க‌ளால் பைக் திரும்ப‌ கிடைத்த‌ போது ம‌ங்காத்தா டீம் போல‌ அள‌வில்லாத‌ ச‌ந்தோஷ‌ம். எப்போதும் கொஞ்ச‌ம் சேஃபாக‌த்தான் ஓட்டுவேன். இனி அது இன்னும் அதிக‌ரிக்கும். ஒன்வே ஆட்டோ, ம‌ண‌ல் லாரி என‌ எல்லோரின் ச‌வாலையும் எதிர்கொள்ள‌ த‌யாராய் இருக்கிறேன்.இன்னொரு முறை என் பைக்கிற்கு அடிப்ப‌ட‌ விடுவ‌தாயில்லை. ஏனெனில் குஜ்ஜு இன்னும் ஒரு முறை கூட‌ இந்த‌ பைக்கில்  என்னுட‌ன் பிர‌யாணிக்க‌வில்லை.

IMG_0613 

                           MY BIKE IS B(L)ACK

23 கருத்துக்குத்து:

Anonymous said...

வாரே வா. இது பதிவு. இன்னா நெக்குலு? கார் - அதிமுக கூட்டணி (விவிசி). "என் சமூகம்..." ஆட்டோ ஹ ஹா. அதைப் படித்ததால்தானோ விபத்து? எனிவே, சூப்பரு நண்பா.

HajasreeN on September 28, 2011 at 10:13 AM said...

பொல்லாதவன் தனுஷ் மாதிரி பெசுரிங்கனா

கோகுல் on September 28, 2011 at 10:13 AM said...

அட!மைன்ட் வாய்ச கேட்ச் பண்ணிட்டிங்க!நான்தான் லாலலாலாலா பாடிட்டு இருந்தேன்!

//
.இன்னொரு முறை என் பைக்கிற்கு அடிப்ப‌ட‌ விடுவ‌தாயில்லை. //

உங்களுக்கும் படாம பாத்துக்கங்க!

jeSu valan on September 28, 2011 at 10:15 AM said...

அண்ணா உங்க வயசு என்னனா?

Live cipher on September 28, 2011 at 10:25 AM said...

இனி நீ கண்டிப்பா அனுஷ்காவை ந‌ல்லா பாத்துப்ப, முதுல்ல உன்ன பாத்துக்க தம்பி. உன்ன ந‌ம்பி குஜ்ஜு இருக்காங்க! Take care!

Suresh Kumar on September 28, 2011 at 10:30 AM said...

marupadiyum solluren boss, udambai paathukkunga..
naama olunga ottinaalum ellaarum nammala maathiri olunga otta maattaanga..appadi irukkum bothu, nammale olunga ottalainaa eppadi...
twitter-la neenga ellaaraiyum kannabinnanu ottuveengale athu maathiri ottatheenga boss ;)

Renu on September 28, 2011 at 10:52 AM said...

ஆட்டோக்காரன்ட்ட மாமூல் வசூல் பண்ணீங்களா இல்லையா அத சொல்லுங்க மொதல்ல ?

பரிசல்காரன் on September 28, 2011 at 11:03 AM said...

My Bike is B(l)ack - நச்!!

சேஃபா ஓட்டு சகா.. எந்த ‘வண்டி’யானாலும்..

Sen22 on September 28, 2011 at 11:11 AM said...

நானும் ஒரு பைக் நேசன் என்பதை இங்கே தெரியபடுத்த ஆசைப் படுகிறேன்..

Safe-a ட்ரைவ் பண்ணுங்க பாஸ்..

யுவகிருஷ்ணா on September 28, 2011 at 12:31 PM said...

interesting writeup saga...

suryajeeva on September 28, 2011 at 1:26 PM said...

நீங்கள் பைக்கை உதைத்ததால் பைக்கேச்வரன் உங்களுக்கு சாபம் குடுத்து விட்டாரோ என்னவோ?

நடராஜன் on September 28, 2011 at 2:27 PM said...

A consultant consulting dentist for the change of the bike! :) அப்படியே அந்த தலைக்கவசத்தையும் படம் பிடித்து போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்! (எ)உங்க தலையைக் காத்த கவசம் அல்லாவா! :)

Rajan on September 28, 2011 at 2:40 PM said...

உங்கள் நகைச்சுவை உணர்ச்சி வியக்க வைக்கிறது. பார்த்து செல்லுங்கள் தோழரே

தர்ஷன் on September 28, 2011 at 6:16 PM said...

இவ்வளவு காலமும் அனுஷ்கா மேலத்தான் ஏறிப்போனிங்களா?
அட விஜய் ரசிகர்ங்றத 7வத் பத்தில காட்டுட்டிங்களே
அரசியல் எல்லாம் கலந்துகட்டி நகைச்சுவையுடன் ஓர் அனுபவப்பதிவை வெகு சுவாரஸியமாக தந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சகா

KSGOA on September 29, 2011 at 7:23 AM said...

நல்ல ரசனையான பதிவு.உங்கள மாதிரி
யூத்துக்கு பைக்தான் சரி(!).ஆனா கவனமாக ஓட்டுங்க.

Sendhilkumar AV on September 29, 2011 at 5:16 PM said...

Drive safely,U got the skills to impress others in story telling..man.,
Cheers, Sendhil

sivakasi maappillai on September 30, 2011 at 1:09 PM said...

கவனம்....

எத ஓட்டுனாலும்....

IlayaDhasan on September 30, 2011 at 8:51 PM said...

குஜிவை கூட்டிக்கொண்டு பார்த்த முதல் நாளே பாட வாழ்த்துக்கள் .

நான் சிரிச்சா தீபாவளி - அனுஷ்காவின் அடுத்த அட்டாக்

ஆத்தாடி பாவாடை காத்தாட - பார்ட் 1

அன்புடன் அருணா on September 30, 2011 at 9:38 PM said...

Take care Karki!

கொங்கு நாடோடி on October 1, 2011 at 2:02 AM said...

பைக் வங்கி ஒண்ணரை வருஷம் ஆகியும் பில்லியன் சீட் புதுசு மாதிரியே இருக்கு, தோழி உக்காறது இல்லையா?

பாத்து வண்டி ஒட்டு பாஸ், அப்போரும் இதையும் குப்பை வண்டிக்கு அள்ளி கொடுதுடாதே!

இரசிகை on October 2, 2011 at 6:00 PM said...

bike is b(l)ack...

nice.

take care..

கார்க்கி on October 2, 2011 at 11:17 PM said...

அனைவருக்கும் நன்றி

நான் மதன் on December 27, 2011 at 10:46 AM said...

தமாசு தமாசு.,:-)

 

all rights reserved to www.karkibava.com