Sep 16, 2011

குஜ‌ராத் கும‌ரி – 6


 

குஜ‌ராத் கும‌ரி  – 1

குஜ‌ராத் கும‌ரி – 2

குஜ‌ராத் கும‌ரி – 3

குஜ‌ராத் கும‌ரி – 4

குஜ‌ராத் கும‌ரி – 5

________________________

உனக்கு புகுந்த வீடென்று ஏதும் இருக்க போவதில்லை. நீ கால் வைக்கும் இடமெல்லாமே வசந்த மாளிகைதான்.

நீ சிரிக்குபோதெல்லாம் இன்னும் க்யூட் ஆவதும், நான் ம்யூட் ஆவதும் நம் தினசரி வேலைகளில் ஒன்று

KARKI என்று சந்தேகத்துடன் கேட்டுவிட்டு sweet name என்றாய். உன் வாயால் சொன்ன பின் வேறு எப்படி இருக்கும்?

உன்னைப் படைத்த பின் நிகழ்ந்த அப்ரைஸலில் பிரம்மனுக்கு 100% சம்பள உயர்வு கிடைத்திருக்கும்

உன் கையால் கிடைக்கும் க்ரோசினிற்காகவே எப்போதும் காய்ச்சல் வர வேண்டுமடி எனக்கு

நீ அதிகம் சிரித்த நாளில் எல்லாம் நான் குறைவாகவே தூங்கியிருப்பேன்.

முதல் நாள் உன்னை பார்த்தபோது “யாருடா பூந்தொட்டியை இங்க வச்சது?” என்றுதான் கேட்க நினைத்தேன்.

”ஆஃபீஸ் போய் என்னத்த கிழிச்சன்னு” உன்னை யாரும் கேட்க முடியாது. அவரக்ளிடம் என் மனச காட்டு

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுடி காந்தி நாட்டு பெண்ணே.. அது கிஸ் அடித்தாலும் பொருந்தும்

துடிக்கும் இதயம் தானே? நீ சிரிக்கும் போது மட்டும் வெடிக்கும் இதயமாவதேன்???

மழைத்தூறும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன்.. நீ எங்கேயே சிரித்துக் கொண்டிருக்கிறாய் என

4 கருத்துக்குத்து:

Sen22 on September 16, 2011 at 12:46 PM said...

//முதல் நாள் உன்னை பார்த்தபோது “யாருடா பூந்தொட்டியை இங்க வச்சது?” என்றுதான் கேட்க நினைத்தேன்.

”ஆஃபீஸ் போய் என்னத்த கிழிச்சன்னு” உன்னை யாரும் கேட்க முடியாது. அவரக்ளிடம் என் மனச காட்டு//

Superb...!!! :)))

இரசிகை on September 16, 2011 at 5:47 PM said...

cute-mute is cutest one...:)

KSGOA on September 16, 2011 at 5:55 PM said...

எல்லாமே நல்லாயிருக்கு.(டிஸ்கி:எங்க
வீட்டுல இன்று சாயங்காலம் டிபன் டோக்ளா)














0

vanila on September 17, 2011 at 1:24 AM said...

அருமைய்யா.. அருமைய்யா.. ஏன்னா.. சாமர்த்தியம் என்பது, அந்த சூழலுக்கு எது சரியோஒஒ அதை எப்படி ச்சொல்லவேண்டுமோஒஒ.. எப்படி ச்சொன்னால், எல்லோருக்குமே பிடிக்குமோஒஒ.. அப்படி ச்சொல்லுவது.. இப்படியே குஜராத் குமரியும், மீல்பதிவுமா போயிட்டிருந்தா எப்படிய்யா.. அனாலும் நல்லாத்தான்யா ச்சொல்லுற.

 

all rights reserved to www.karkibava.com