Sep 28, 2011

பைக்கேஸ்வ‌ர‌ன்

23 கருத்துக்குத்து

 

அது என்ன‌ப்பா பைக்கேஸ்வ‌ர‌ன்னு கேட்காதீங்க‌. என்னை ஏத்துக்கிட்டு உஸ்ஸ்ஸ்ன்னு ர‌ன் ப‌ண்ற‌ பைக்க‌த்தான் பைக்கேஸ்வ‌ர‌ன்னு சொல்றேன். என‌க்கும் பைக்குக்குமான‌ ஸ்நான‌ பிராப்தி அதிக‌மில்லை ஜென்டில்மேன், 7 வ‌ருஷ‌ம் தான். 2004ல‌‌ எங்க‌ அன்ண‌ன் ப‌ல்ச‌ர‌ கொடுடான்னு கேட்ட‌ போது பைக்க‌ ஸ்லோப்புல‌ இற‌க்கி சென்ட்ட‌ர் ஸ்டேன்ட் போடு. கொடுக்கிறேன்னு சொல்வான். அப்ப‌ ந‌ம்ம‌ளோட‌ பேஸ்மென்ட், பில்டிங் ரெண்டுமே த‌னுஷுக்கு ச‌வால் விடும் நிலைமையில் இருந்த‌து இங்கே குறிப்பிட‌த்த‌க்க‌து. வாஞ்சையோட‌ வ‌ண்டிக்கு வாட்ட‌ர் வாஷ் ப‌ண்ற‌தோடு ச‌ரி. பில்லிய‌ன‌ர் ஆன‌ ச‌ந்தோஷ‌த்த‌ பைக் பில்லிய‌ன்ல‌ ச‌வாரி செய்யும் போதே அனுப‌வித்த‌வ‌ன் நான்.

அப்ப‌டி இப்ப‌டி என‌ போராடி 2008ல் ப‌ஜாஜ் XCD ஒண்ணு வாங்கினேன். செல்ஃப் ஸ்டார்ட். 125 சிசி, அலாய் வீல், DTS-i எஞ்சின் என‌ கிளாம‌ர் காட்டிய‌ வ‌ண்டி வாங்கிய‌ பின் தான் ஒரு உண்மையை விள‌க்கிய‌து. க‌வ‌ர்ச்சி ந‌டிகை க‌வ‌ர்ச்சிக்கு ம‌ட்டும்தான்.. மெயின் ஹீரோயினை மிஞ்ச‌வே முடியாது. கிள‌ட்ச்சோடு ப‌ல்லையும் இறுக‌ க‌டித்த‌ப‌டியே 25000 கிமீ ஓட்டினேன். ம்ஹூம். ப‌ல்லு ந‌ம‌க்கு மிக‌ முக்கிய‌ம் என்ற‌ ஒரு டென்டிஸ்ட்டின் பேச்சைக் கேட்டு பைக் மாற்றுவ‌தென‌ முடிவான‌து. இந்த‌ முறை அ‌ல்ஃபோன்ஸா, சோனாவையெல்லாம் ந‌ம்புவ‌தாக‌ இல்லை. ச‌ம்ப‌ள‌ம் அதிக‌ம், கால்ஷீட் பிர‌ச்சினை என‌ ப‌ல‌ இன்ன‌ல்க‌ள் இருந்தாலும் அனுஷ்கா தான் ந‌ம்ம‌ சாய்ஸ் என‌ ஒரேம‌ன‌தாக‌ முடிவு செய்து ய‌ம‌ஹா ஷோரூம் சென்றேன்.

ஷோரூமில் கிடைத்த‌ ஒரு ஞான‌த்தை ப‌கிர்ந்துக் கொன்ட‌பின் தொட‌ர‌லாம். ம‌ஹால‌ட்சுமி என்ற‌ பெண்ணையோ, ம‌ஹால‌ட்சுமி போன்ற‌ பெண்ணையோ காத‌லித்த‌ தேவ‌தாசுக‌ள், அழுத்தி சொல்றேன் தேவ‌தாஸுக‌ள், ய‌ம‌ஹாவையே அதிக‌ம் வாங்குகிறார்க‌ள். ந‌ம்ம‌ வியாப‌ர‌‌த்திற்கு வ‌ருவோம். 1.2 ல‌ட்ச‌த்தில் இருந்து ப‌டிப்ப‌டியே இற‌ங்கி வ‌ர‌ வேண்டிய‌ நிலைமை. இறுதியில் என் ம‌ன‌தில் ப‌ச்ச‌க் ப‌ச்ச‌க் என‌ ஒட்டிக்கொண்ட‌து Yamaha FZ 16. ஆனால் என் ப‌ட்ஜெட்டோ 65000 ரூபாய்தான். என் மேல‌ அதீத‌மான‌ அன்பு கொண்ட‌ ஒரு ந‌ல்லாத்மா வாங்குடா க‌ண்ணு நான் பார்த்துக்கிறேன் என்ற‌து. க‌ருப்பு நிற‌ ய‌ம‌ஹா பிற‌ந்த‌ வீட்டை விட்டு என் வீட்டில் புகுந்த‌து. இங்கே குறிப்பிட‌த்த‌க்க‌ விஷ‌ய‌ம், வ‌ர‌த‌ட்ச‌ணை நான் தான் கொடுத்திருக்கிறேன். மேலும், பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்வ‌து உள‌விய‌ல் சிக்க‌லை ஏற்ப‌டுத்திய‌தால் கிக்க‌ரே இல்லாத‌ பைக்கை தேர்வு செய்தேன்.

அன்றிலிருந்து இன்று வ‌ரை என் பைக் தான் என‌து சிற‌ந்த‌ ந‌ண்ப‌ன். (எவ‌ன்டா அங்க‌ லாலாலா பாடுற‌து??) பைக் ச‌வாரி என‌க்கு காரை விட‌ பிடித்த‌மான‌ ஒன்றாக‌ இருக்கிற‌து. முற்றிலும் அடைக்க‌ப்ப‌ட்ட‌ காரில் செல்வ‌து அதிமுக‌வுட‌னான‌ கூட்ட‌ணி போல‌. சொகுசாக‌ போய் சேர்ந்துவிட‌லாம் என்றாலும் கை, வாயை எல்லாம் சுருட்டிக் கொண்டு போக‌ வேண்டும். ஏதோ ஒரு அடிமைத்த‌ன‌ம் ஒன்றிப் போயிருக்கும். பைக் ச‌வாரி என்ப‌து த‌னியே நிற்ப‌து போல‌. ம‌ழை போன்ற‌ கார‌ணிக‌ளால் ப‌ய‌ணமே தடைப‌ட‌லாம் என்றாலும் "எங்க‌ளைப் போல‌ த‌னியே நிற்க‌ காங்கிர‌சிற்கு தெம்புன்டா" என‌ பாஜ‌க‌ போல‌ ச‌வுன்ட் விட‌லாம். மேலும் ஒரு யூத் என்ப‌வ‌ன் க‌ரென்ட் டிரென்டை பின்ப‌ற்ற‌ வேண்டும் அல்ல‌வா? உள்ளாட்சி தேத‌லில் எல்லா க‌ட்சிக‌ளும் அகில‌ இந்திய‌ நாடாளும் ம‌ன்ற‌ க‌ட்சி த‌லைவ‌ர் கார்த்திக் அவ‌ர்க‌ள் சென்ற‌ பொதுத்தேர்த‌லில் பின்ப‌ற்றியே யுத்தியை பின்ப‌ற்றுகிறார்க‌ள். அத‌னால் நானும் காரை விட்டு இன்றிலிருந்து பைக்கில் ப‌ய‌ணிக்கிறேன்,

பைக்குக்கு என்ன‌ ஆச்சுன்னு கேட்க‌றீங்க‌ளா? 10 நாட்க‌ளுக்கு முன்பு ஒரு விப‌த்து. க‌த்திபாரா மேம்பால‌த்தின் கீழ் ஒரு ம‌ழை நின்ற‌ ந‌ன்னாளில் போய்க் கொண்டிருந்தேன். "என் ச‌மூக‌ம் உன‌க்கு முன்பாக‌ செல்லும்" என்ற‌ வாச‌க‌ம் கொண்ட‌ ஆட்டோ முன்னே போய்க் கொண்டிருந்த‌து. திடிரென‌ ம‌த‌ம் மாறிய‌ ஆட்டோ டிரைவ‌ர் பிரேக் அடித்து நிறுத்தினார். அது ஒன்வே. ம‌ழை பெய்த‌ சாலை என்ப‌தால் டிஸ்க் பிரேக் அடிக்க‌ வேண்டாமென‌ வ‌ல‌துபுற‌த்தில் ஆட்டோவை முந்தினேன். எதிரில் ஒன்வே இல்லைடா இது என்வே என்ற‌ கொக்க‌ரிப்போடு வேற்று ம‌தத்தை சேர்ந்த‌ ஒரு ஆட்டோ வ‌ந்துவிட்ட‌து. ஆச்சு.

ஆட்டோவும் பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட‌து. மீண்டும் ஒன்ஸ்மோர் கேட்டு ரிவ‌ர்ஸில் எல்லாம் போக‌ முடியாத‌ ஒற்றை வாழ்க்கை. காவ‌ல‌னாக‌ ஹெல்மேட் போட்டுக் கொண்டுதான் இருந்தேன். பைக்கில் ப‌ற‌க்கிறாய் என‌ ம‌ற்றவ‌ர்க‌ள் சொன்னாலும் அப்போது குருவி போல‌ வான‌த்தில் ப‌ற‌த்து த‌ப்பிக்க‌ முடிய‌வில்லை. கில்லியாக‌ சீறிப்பாய‌வும் இய‌ல‌வில்லை. அடிப்ப‌ட்டு கீழே கிட‌ந்தேன். வ‌லி மிகுதியால் அந்த‌ ஆட்டோ டிரைவ‌ரிட‌ம் போக்கிரித்த‌ன‌த்தை காட்ட‌வில்லை. இங்கிலாந்து டூரில் காய‌மான‌ ச‌ச்சினை போல‌ ப‌ய‌ண‌த்தை பாதியிலே நிறுத்த‌ வேண்டிய‌தாய் போன‌து. என‌க்கு ப‌ர‌வாயில்லை. பைக் தான் சின்னாபின்னாமான‌து.

IMG_0588

அன்றிலிருந்து அலுவ‌ல‌க‌த்திற்கு அதிமுக‌ கூட்ட‌ணி. நேற்றுதான் வ‌ண்டி த‌யாராகி கைக்கு வ‌ந்த‌து.முத‌ல் சில‌ ப‌த்திக‌ளில் சொன்ன‌ கார‌ண‌ங்க‌ளால் பைக் திரும்ப‌ கிடைத்த‌ போது ம‌ங்காத்தா டீம் போல‌ அள‌வில்லாத‌ ச‌ந்தோஷ‌ம். எப்போதும் கொஞ்ச‌ம் சேஃபாக‌த்தான் ஓட்டுவேன். இனி அது இன்னும் அதிக‌ரிக்கும். ஒன்வே ஆட்டோ, ம‌ண‌ல் லாரி என‌ எல்லோரின் ச‌வாலையும் எதிர்கொள்ள‌ த‌யாராய் இருக்கிறேன்.இன்னொரு முறை என் பைக்கிற்கு அடிப்ப‌ட‌ விடுவ‌தாயில்லை. ஏனெனில் குஜ்ஜு இன்னும் ஒரு முறை கூட‌ இந்த‌ பைக்கில்  என்னுட‌ன் பிர‌யாணிக்க‌வில்லை.

IMG_0613 

                           MY BIKE IS B(L)ACK

Sep 16, 2011

குஜ‌ராத் கும‌ரி – 6

4 கருத்துக்குத்து

 

குஜ‌ராத் கும‌ரி  – 1

குஜ‌ராத் கும‌ரி – 2

குஜ‌ராத் கும‌ரி – 3

குஜ‌ராத் கும‌ரி – 4

குஜ‌ராத் கும‌ரி – 5

________________________

உனக்கு புகுந்த வீடென்று ஏதும் இருக்க போவதில்லை. நீ கால் வைக்கும் இடமெல்லாமே வசந்த மாளிகைதான்.

நீ சிரிக்குபோதெல்லாம் இன்னும் க்யூட் ஆவதும், நான் ம்யூட் ஆவதும் நம் தினசரி வேலைகளில் ஒன்று

KARKI என்று சந்தேகத்துடன் கேட்டுவிட்டு sweet name என்றாய். உன் வாயால் சொன்ன பின் வேறு எப்படி இருக்கும்?

உன்னைப் படைத்த பின் நிகழ்ந்த அப்ரைஸலில் பிரம்மனுக்கு 100% சம்பள உயர்வு கிடைத்திருக்கும்

உன் கையால் கிடைக்கும் க்ரோசினிற்காகவே எப்போதும் காய்ச்சல் வர வேண்டுமடி எனக்கு

நீ அதிகம் சிரித்த நாளில் எல்லாம் நான் குறைவாகவே தூங்கியிருப்பேன்.

முதல் நாள் உன்னை பார்த்தபோது “யாருடா பூந்தொட்டியை இங்க வச்சது?” என்றுதான் கேட்க நினைத்தேன்.

”ஆஃபீஸ் போய் என்னத்த கிழிச்சன்னு” உன்னை யாரும் கேட்க முடியாது. அவரக்ளிடம் என் மனச காட்டு

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுடி காந்தி நாட்டு பெண்ணே.. அது கிஸ் அடித்தாலும் பொருந்தும்

துடிக்கும் இதயம் தானே? நீ சிரிக்கும் போது மட்டும் வெடிக்கும் இதயமாவதேன்???

மழைத்தூறும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன்.. நீ எங்கேயே சிரித்துக் கொண்டிருக்கிறாய் என

Sep 13, 2011

இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து

40 கருத்துக்குத்து

 

வீடு இது போல் அமைதியாக என்றுமே இருந்ததில்லை. சன் மியூசிக்கில் சூப்பர்ஸ்டார் சத்தமின்றி துபாய் பாடல் பாடிக்கொண்டிருந்தார். பப்லு கருப்பு நிற சோஃபா மீது வெள்ளை முண்டா பணியனோடு அமர்ந்திருந்தான். அம்மா அவனுக்கு 167 டிகிரி எதிர்புறத்தில், தரையில் சிதறியிருந்த புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அவ்வபோது பப்லுவை முறைப்பது போலிருந்தது. மேலே படிக்கட்டில் இருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தார் அக்கா. அவர்தான் பப்லுவின் அம்மா. என்னைக் கண்ட பப்லு ”மாமா” என அழுதுக் கொண்டே ஓடிவந்தான்.

”ஏய். எங்க ஓடுற? ஒழுங்கா அங்கேயே உட்காரு”. அம்மாவின் அதட்டல் குரலுக்கு பயந்து அப்படியே உட்கார்ந்துவிட்டான்.  மெதுவாக அவனருகில் போய் அமர்ந்தேன். அம்மாவின் குரல் சன்னமாய் திட்டிக் கொண்டேயிருந்தது.

”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”

“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”

”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”

உற்று கேட்டபோது ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டான் என்பது மட்டும் புரிந்தது. கண்களில் கண்ணீரே இல்லாமல் அழுதுக் கொண்டிருந்தான் பப்லு. மாடிப்படியில் நின்றுக் கொண்டிருந்த அக்கா முறைத்துக் கொண்டேயிருந்தார். பப்லுவிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தேன்.

ஸ்விம்மிங் கிளாஸ் போனியாடா?

ம்ம்ம்

டியூஷன்?

ம்ம்

ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சிட்டியா?

ம்ம்

ஸ்கூல்ல யார் கூடவாது சண்டையா?

ம்ஹூம்.

எல்லாக் கேள்விகளுக்கும் வாயை திறக்காமலே பதில் சொன்ன விதம் லேசாக எரிச்சலை தந்தது என்பது உண்மைதான்.

என்னடா செஞ்ச?

ஒண்ணும் செய்யலடா.

அப்புறம் ஏன் அம்மா,பாட்டியெல்லாம் திட்டுறாங்க.?

அவங்க திட்டினா..

அவங்க திட்டினா நீ தப்பு செஞ்சிருக்கன்னு அர்த்தம். எதிர்த்து பேசாத.

நிஜமாவா?

ஆமாம்.

அவங்க திட்டினது என்னை இல்லை. உன்னை.

என்னையா? என்னடா.

பாட்டியும் நானும் மாடிக்கு துணிக் காய போட போனோம்.

இப்போது நான் ம்ம் கொட்டத் துவங்கினேன்.

ஈரமா இருந்த துணிய காய வச்சாங்க. சீக்கிரம் போலாம் பாட்டின்னா அவங்க செடிக்கு தண்ணி ஊத்த போனாங்க.

ம்ம்

இருட்டா இருந்துச்சா. எனக்கு பயமா இருந்துச்சு.

ம்ம்

கார்க்கி மாமா பயப்படவே மாட்டான் தெரியுமான்னு சொன்னாங்க. நானும் உடனே நீ சொல்ற மாதிரி  ஒண்ணு சொன்னேன். அதுக்குத்தான் திட்டுறாங்க.

என்னடா சொன்ன?

“பாட்டி. துணி ஈரமா இருக்குன்னு காய வைக்கிற. செடி காய்ஞ்சு போயிருக்குன்னு ஈரமாக்க தண்ணி ஊத்துற. இதான் பாட்டி வாழ்க்கைன்னு சொன்னேன்.

அந்த நேரம் பார்த்து ஆபத்பாந்தவன், அனாதரட்சகன் மாதிரி பரிசல் அழைத்தார், ஃபோனை காதில் வைத்துக் கொண்டே அம்மா, அக்காவைப் பார்க்காமல் வெளியே நைசாக சென்றுவிட்டேன். பரிசல் பேசிய எதுவும் கேட்காமல் அம்மா சொன்னது எதிரொலித்துக் கொண்டேயிருந்தது

”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”

“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”

”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”

என்னைத்தான் திட்டியிருக்கிறார்கள் :(((

Sep 7, 2011

பூ..புஷ்பம்..புய்ப்பம்.. (Karki)

6 கருத்துக்குத்து

 

தோழியின் வீட்டிற்கு லேண்ட்மார்க் கேட்கிறார்கள். வால்வுகள் 4 இருக்கும். மென்மையான வீடு. என் இதயத்திற்கு வேறென்ன அடையாளங்கள் இருக்கு?

________________________________________________________

பூ....புய்ப்பம்..புஷ்பம்… தோழி

________________________________________________________

கிரிக்கெட்டில் யாராச்சும் க்ளீன் போல்ட் ஆனா தோழியும், அவள் பார்வையும் ஏனோ நினைவுக்கு வருகிறது

________________________________________________________

முழு போதைல பார்த்தா தெளிவாகுறதும், தெளிவா பார்த்தா போதையேத்துறதும் .. அப்பப்ப்ப்ப்ப்ப்பா.. தோழிய‌ அடிச்சிக்க‌ அழ‌கியே இல்ல‌ப்பா

________________________________________________________

எனது டிபியை தோழி வால்பேப்பராக வைத்திருக்கிறாளாம். கூடவே “என்னைப் பார் காதல் வரும்” என்ற பன்ச் லைனும் இருக்காம்

________________________________________________________

அக‌ர‌ முத‌ல‌ எழுத்தெல்லாம் என்
தோழி முத‌ற்றே அழ‌கு

________________________________________________________

தேவதை வம்சம் நீயோ.. தேநிலா அம்சம் நீயோ.. பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ  #பா.விஜ‌ய் தோழியை எப்போதோ பார்த்திருப்பார் போல‌

________________________________________________________

நான் ரவுடி என்றால்,அவள் சொர்ணாக்கா என்றாள் தோழி. "நீ சொர்ணம் மட்டும் தான் செல்லம்.அக்கா எல்லாம் இல்லை" என்ன் நான்

________________________________________________________

மழையில் நனையும்போதெல்லாம் ஒன்று தோன்றும்.இதே மழை எங்கேயாவது அவளையும் நனைத்துக் கொண்டிருக்கலாம்

Sep 6, 2011

Jolly tweets


 

இதுல‌ எதுவுமே என் ட்வீட் இல்லைங்க‌. க‌ண்னுல‌ ப‌ட்டுச்சு.. ச்சும்மா ஷேரிங். மிஸ் சொல்லி த‌ர‌லையா? ஷேரிங்ங்ங்ங்ங் :)

அப்புற‌ம் எதிர்ப‌திவு போடுற‌வ‌ங்க‌ திட்டுற‌வ‌ங்க‌ எல்லாம் அந்த‌ந்த‌ ஐடிக்கு நேரா அனுப்ப‌லாம். ஐ அம் ஜ‌ஸ்ட் அஸிஸ்டென்ட் :)

______________________________________________________________________________

Natarajan_G Natarajan Ganesan

ஒன்னை அஞ்சா பிரிப்பது பெரிசா? நால அஞ்சா பிரிப்பது பெரிசா? இந்த கருமத்த எல்லாம் கேட்டுட்டு நான் உயிரோட இருக்கிறது தான் பெரிசு!

navi_n Naveen Kumar

அஜித் ரசிகர்களுக்கு கெட்டுப்போன சோறே பிரியாணி தான். மங்காத்தாவ கொண்டாட கூடாதுன்னு அவங்ககிட்ட சொல்றதுல என்ன நியாயம்? :-)

iParisal Parisalkaaran

படத்துல அஜீத், அர்ஜூன் மட்டும்தான் உயிரோட இருக்காங்க. நம்மளைக்கூட சாகடிச்சுடறாங்க சில சீன்ல.. #mangathada

kolaaru kolaaru

மங்காத்தா ஃபீவர்னு சொன்னது சரிதான் போல,படம் பார்த்து வந்த தலவலியும் காய்ச்சலும் இன்னும் போகல #mankkatha

athisha அதிஷா

took some practice by watchng pulivesam b4 mangatha. Coz smtimes watchng thala film s injurious

TPKD_ TPKD / TBCD

இன்று மாலை மங்காத்தாடா பார்த்துட்டு வந்து ”நல்லா இருக்கு” என்று சொன்ன ஒவ்வொருவரையும் குற்றவாளிக்கூண்டி ஏத்துறேன் !

KokkiKuma Kumar

Usualla thala than director ku aappu adipar but ithula thalaiku @dirvenkatprabhu aapadichitar. #MangathaDa

iParisal Parisalkaaran

மொதல்ல நல்லா நடிங்க. அப்பறம் நல்லவனா நடிக்கலாம்...

kaarthikarul Kaarthik Arul

கழுதை தேய்ந்து கட்டெறும்பானது Chennai 600028 < Saroja < Goa < Mankatha

kullabuji IAS

மானிங் மங்காத்தா போகனும் ,சீக்கரம் தூங்கப்போறேன்.. #கடைசி தூக்கமாகக்கூட இ௫க்கலாம் ..

madhankarky Madhan Karky

Back from #Mankatha. Not my kind of a movie. I hope it will be a good one for Actor Ajith's fans.

krpthiru தமிழ் திரு

அஜீத் ஊமையாக நடித்தால் நன்றாக நடித்திருக்கிறார் என்று ஒருவேளை சொல்லலாம். அவருடைய டைலாக் டெலிவரிக்கு விஜய் 100 % பெட்டர் !

athisha அதிஷா

எங்கள் அலுவலக போட்டோகிராபர் மங்காத்தாவை திராபை என்கிறார்.. அவருடைய விமர்சனம் எப்போதும் பொய்க்காது! #ஸ்வீட் எடு கொண்டாடு

anbumathy anbumathy

நாளைக்கு நான் சப்பாத்திக்கு மாவு பிணையுற மாதிரி தல ஆடுற டான்ஸ் பார்க்கபோறேனே..

 

___________________

Sep 4, 2011

மங்காத்தா, கவுண்டமணி மற்றும் ஒரு தல ரசிகன்


 

தல ரசிகன்: என்ன தல? மங்காத்தா பார்த்தாச்சா?

கவுண்டர்:  டேய்.. பேன் மண்டையா.. என்ன எதுக்குடா தலன்னு திட்டுற? உங்க படத்த பார்த்துட்டுதான் விக்ஸ் தடவிட்டு இருக்கேன்

தல ரசிகன்: படம் தாறுமாறு தக்காளி சோறு இல்லை?

கவுண்டர்: ம்க்கும். எழவெடுத்த எலுமிச்சை சோறு. என் வாய கிளறாத. போயிடு.

தல ரசிகன்: 50வது படத்துல மசாலவே இல்லாம கெத்து ஸ்க்ரிப்ட் எடுத்திருக்காரு தல. உங்களுக்கு பொறுக்காதே!

கவுண்டர்: அட ராமா!! என்ன ஏன் இந்த கழிசடை பசங்க கூடலாம் சேர்த்து விடுற. முதல் சீனுல 10 பேர் கூட சண்டை போடுறாரு. அடுத்து பேரு போடுறாங்க. அப்புறம் ஓப்பனிங் சாங்க போடுறாங்க. இந்த கெரகமெல்லாம் முடிஞ்ச பிறகுதான் தியேட்டருக்கு போனியாடா நீ?

தல ரசிகன்: அத விடுங்கண்ணே.. இந்த மாதிரி இமேஜ் பார்க்காம சால்ட்&பெப்பர் ஹேர்ஸ்டைலோடு நடிக்க யாருக்காச்சும் தில்லு வருமா? ரஜினிக்கு அடுத்து தலதான்..

கவுண்டர்: அடேய் அடேய்.. அடடடேய்.. இதுக்கு முன்னாடி உங்க தலயோட தல சர்ஃப் எக்செல் போட்ட மாதிரின்னு தெரியுமாடா நாய உனக்கு? எங்க போனாலும் டை அடிச்ச தலையோடுதானே சுத்துனான்? இப்போ என்ன திடிர்ன்னு இமேஜ் மேரேஜ்ஜ்னு, போடா நாய, இல்லைன்னா கடிச்சு வச்சிடுவேன். சால்ட்டாம் பெப்பராம்.

தல ரசிகன்: அதில்லண்ணே. ஒரு மாஸ் ஹீரோ அப்படி நடிச்சா படம் ஓடும்ன்னு நம்பணும் இல்ல?

கவுண்டர்: அண்ணாமலைல பால்காரனாடா மாஸ்? அந்த கிழவன் ரஜினிதானே தூள் கிளப்புவாரு. படையப்பாலயும் அதானே? டைரடக்கர் ஜான் க்ளூனி தம்பி படத்த சுட்டிருக்காரு. உங்காளு அந்த ஹேர்ஸ்டைல லவட்டிட்டாரு. இதுக்கு இப்படி ஒரு ஹிஸ்டிரியாடா ஹிப்போபொட்டமாஸ் வாயா?

தல ரசிகன்: சரி விடுங்கண்ணே.. 50வது படத்துல முழுக்க முழுக்க நெகட்டிவ் கேரக்டர் பண்ணனும்ன்னு முடிவெடுத்தது பெரிய விஷயமில்லையா?

கவுண்டர்: எத்த திண்ணா பித்தம் தெளியும்ன்னு அவரும் போலீஸு, மார்ச்சுவரி பாய், கேங்லீடர், ஏன் ஸ்டூண்டண்ட்டா கூட நடிச்சு..ச்சீ ச்சீ.. நடந்து பார்த்துட்டாரு. எதையும் ஓட்டல நீங்க. மவனே செத்திங்கடான்னு இப்போ வில்லனா நடிக்கிறாரு. அதுக்கும் ரீலு ஓட்டுறீங்க பாருங்க. டேய் நாராயண இந்த கொசுத்தொல்லை தாங்கலடா

தல ரசிகன்: சரிண்ணே.. படத்த பத்தி பேசுவோம். செம ஸ்க்ரீன்ப்ளே இல்லை?

கவுண்டர்: டேய் நாதஸ்.. படம் ஆரம்பிச்சா சில லுச்சா பசங்க ஒவ்வொருத்தனா லேட்டா வருவான். இங்க என்னடான்னா ஸ்க்ரீன்ல ஒவ்வொரு சீன்லயும் புதுசு புதுசா வந்துக்கிட்டே இருக்காங்க. தல 50ன்னா நான் கூட அலிபாபா 40 திருடர்கள் மாதிரி தலயும் கூடவே 50 பேரும்ன்னு நினைச்சிட்டேன்.

தல ரசிகன்: ஆனா அவங்க எல்லோருமே கதைக்கு, செகண்ட் ஹாஃபுல தேவைதானே?

கவுண்டர்: அடங்கொன்னியா! அவனுங்க என்ன கமரக்கட்டையா திருடுறாங்க? 500 கோடிடா. இது எப்படி லட்சுமி ராய்க்கு தெரிஞ்சுது? அவள ஏன் கூட்டு சேர்த்தானுங்க? உங்களுக்கு பாட்டுல ஆட ஆள் இல்லைன்னா ஒரு பொண்ண சேர்த்துக்கிட்டு ஸ்க்ரீன்ப்ளேவாம். பேசாம போயிடு. இல்லன்னா மூஞ்சில ஆசிட்ட ஊத்திடுவேன்

தல ரசிகன்: என்னண்ணே!! த்ரிஷா, அஞ்சலி எல்லாம் நல்லா தானே இருக்காங்க?

கவுண்டர்: அடேய் எருமுட்டி வாயா.. நான் அவங்க நல்லா இல்லைன்னா சொல்றேன்? ஒரு பாட்டுல பாரு. அஞ்சலி வைபவ் கசமுசா. அதே பாட்டுல அர்ஜுன், ஆண்ட்ரியா கசமுசா. அதே பாட்டுல அஜித் த்ரிஷா கசமுசா. இப்போ இதுல யாருடா ஹீரோ? யாருடா ஹீரோயின்? மூணு பேத்துக்கும் பாவம் அந்த சரண் தம்பியே பாடித்தொலைக்குது.

தல ரசிகன்: இதுஒரு ஃபேமிலி படம்ன்னே. அவங்க எல்லாம் கல்யாணம் கட்டிக்கிட்டவங்க

கவுண்டர்: ஒரு ஃபேமிலியாடா? படத்துல மொத்தம் 99 ஃபேமிலி இருக்குடா.தலக்கு மட்டும்தான் இல்லை.

தல ரசிகன்: தல நடிப்பு சான்சே இல்லையில்ல? அதுவும் செஸ் போர்டு சீன்

கவுண்டர்: அடேய் வூடு மாறி பெருச்சாளி !உனக்கு வேலையில்லை. எனக்கும் வேலையில்லை. அந்த எழவுக்குத்தான் நான் படத்த பார்த்தேன். உன்கிட்ட பேசிட்டு இருக்கேன். அதுக்குன்னு இப்படியெல்லாம் பேசினா மவனே தலைல கல்ல போட்டு ஜெயிலுக்கு ராசா கூட களி திண்ண போயிடுவேன்

தல ரசிகன்: ஏண்ணே?

கவுண்டர்: சிரிக்கும்போது அழகா இருக்கான். அதுக்காக சிரிச்சிட்டே அவன் எது செஞ்சாலும் நடிப்பா? டேய் பாறாங்கால் வாயா.. உனக்கு ஒருத்தன பிடிக்குதுன்னா தப்பேயில்லை. ஆமாண்டா. நான் தல ரசிகன்னு போயிட்டே இரு. ஆனா அவன் நடிக்கிறான், படம் சூப்பர்ன்னு சொன்னேன் வை. கடல்ல தூக்கிப்போட்டு கைகழுவிடுவேன் ஜாக்கிரதை.

தல ரசிகன்: போங்கண்ணே.. நீங்க விஜய் ரசிகர் போலிருக்கு.

கவுண்டர்: அதானே பார்த்தேன். A காயுதே..இன்னும் B வரக்காணோமேன்னு. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடான்ன்னா.. கதையும் சுட்டுது.. கெட்டப்பும் சுட்டது. பாட்டும் சுட்டுது. அதுவும் மொக்கையா எடுத்திருக்கானுங்க. அத சொல்லுடான்னா நீங்க உஷா ஃபேன்தானே,.. வீடியோகான் கூலர்தானேனு.

தல ரசிகன்: அதுக்கே வறேன் தல. செகன்ட் ஹாஃபுல எத்தனை ட்விஸ்ட் பார்த்தீங்களா?

கவுண்டர்: அய்யோ அய்யோ.. டேய். கதைல ட்விஸ்ட்டுன்னா பார்க்கிறவன் சீட்டு நுனிக்கு வரணும். உங்க ட்விஸ்ட்ட பார்த்துட்டு அவனவன் தூங்கி எழுந்தா மாதிரி திமிரு முறுக்கிறானுங்க. உங்க ட்விஸ்ட்ட விட பார்க்கிறவன் உடம்புலதாண்டா நாய அதிக ட்விஸ்ட்

தல ரசிகன்: அப்போ அர்ஜுனும், அஜித்தும் கூட்டுன்னு முன்னாடியே தெரியுமா

கவுண்டர்: அடேய் சப்புற வாயா. சரோஜா படம் பார்க்கவேயில்லையா நீ? அதுல ஜெயராம்தான் அர்ஜூனாம். சம்பத்தான் அஜித்தாம்., இப்ப புரியுதா?

தல ரசிகன்: அட. ஆமாண்ணே

கவுண்டர்: அப்புறம் லட்சுமிராய் ட்விஸ்ட்டு, அவ ஸ்விம்மிங் பூல்ல திரும்பி நின்னு யோசிக்கும்போதே தெரியலயடா நாய, அவ வேற ஸ்கெட்ச் போடுறான்னு?

தல ரசிகன்: ம்ம். இப்பதானே புரியுது.

கவுண்டர்: இருடா இத்துப்போனவனே.. எங்க போனாலும் கோட்டு போடுவார் சரி. அந்த ட்ரக் அடில போய் ஸ்க்ரூவ கழட்டும்போது கூடவாடா கோட்டு போடுவாரு உங்க தல? அது வேற 10 MM ஸ்க்ரூவ 4 கழட்டுவாராம். உடனே கண்டெயினர் வண்டிய விட்டு தனியா வந்துடுமாம்.

தல ரசிகன்: போங்கன்ணே நீங்க பேசி பேசி என்னை யோசிக்க வைக்கறீங்க. எப்படி இருந்தாலும் படம் செம கலெக்‌ஷன். தெரியுமில்லை?தல தான் கிங் ஆஃப் ஓப்பனிங்.

கவுண்டர்: இங்க வாடா கண்ணா. நான் என்ன அஜித்துக்கு மாஸே இல்லைன்னா சொல்றேன்? இந்த கலகெஷன அசலுக்கும், ஏகனுக்கும் காட்ட வேண்டியதானே?5 நாள் வரிசையா லீவு. போதாதுக்கு புலிவேஷம்ன்னு டைட் காம்பிட்டேஷன். அள்ளிட்டீங்க.

தல ரசிகன்:இருந்தாலும் நாங்க இப்போ நம்பர் 3.சிவாஜி, தசாவாதாரம் அடுத்து மங்காத்தா.  தல மாதிரி தில்லா ரசிகர் மன்றம் கலைச்சிட்டு இத செய்றது சாதாரண விஷயமா?

கவுண்டர்: இந்த டகால்ட்டி வேலை எல்லாம் நம்மக்கிட்ட வேணாம் மவனே.. படம் கலெக்‌ஷன் அள்ளுது. சரி. ஆனா பேருக்கு பின்னாடி பட்டம் வச்சுக்கிறது எல்லாம் வெட்டிவேலைன்னு சொன்னாரு. தல என்ன அவர் படிச்ச வாங்கன பட்டமா? அப்புறம், தியேட்டருல பேனரா வச்சு அடையாறு கிளை திருவான்மியூர் இலைன்னு வச்சிருக்காங்களே? அவங்களாம் யாராம்? உங்க தல சொன்னா கேட்க மாட்டாங்களா அவனுங்க?

தல ரசிகன்: விடுங்க தலைவா.படத்த பத்தி ஒரு வரில நச்சுன்னு சொல்லுங்க

கவுண்டர்: அதான் யாரோ ஒருத்தர் சொன்னாரே.. தண்ணி.. தம்மு.. கன்னு. பொண்ணு

தல ரசிகன்: அவ்ளோதானா?

கவுண்டர்: இன்னும் ஒரு வார்த்தைல கூட சொல்லுவேன். என்னை கெட்ட வார்த்தை பேச வச்சிடாத

தல ரசிகன்: என்ன ஆனாலும் தல நல்ல மனுஷன். நான் எப்பவும் அவர் ஃபேன்தான்.

கவுண்டர்: அடேய் சாக்ரடீஸ்.. இத்தனை நாளா இதான செஞ்சீங்க? தலையை பத்தி பேசுவீங்க. அவர் படத்த பத்தி பேச மாட்டீங்க. இனியும் இதையே கண்டினியூ பண்ணா நான் ஏன் பேசப்போறேன். தல? நல்லவர். தலைக்கு டை அடிக்காதாவரு. வாட்ச்மேன கூட சார்ன்னு தான் கூப்பிடுவாரு. நல்லா வண்டி ஓட்டுவாரு. இப்படியே சொல்லிட்டு இருங்க. அத விட்டு படம் சூப்பர்ன்னு வாய தொறந்த, பல்லிய புடிச்சு வாயில போட்டுடுவேன் சொல்லிட்டேன்.

 

all rights reserved to www.karkibava.com