Aug 25, 2011

அவன் இவன் - குறும்படம்


 

  இவனுக்கு வேற வேலையே இல்லையான்னு திட்டிட்டு, அப்பாலிக்கா இத படிங்க. கொஞ்ச நாளா கேமரா கையுமாதான் அலையுறேன். இல்லை அலையுறோம். அப்படி எடுத்து உங்கள படுத்திட்டு இருக்கிற ஃப்ளாஷ்பேக் எல்லாம் வேணாம். நேரா விஷயத்துக்கு வந்துடறேன். எங்க படத்த பார்த்துட்டு பெங்களூரு நண்பர் பலராமன் ஒரு நாள் அழைத்து நாம ஒரு புராஜெக்ட் சேர்ந்து பண்ணலாம் என்றார். (ஆமாங்க. அவரும் “பெங்களூரு” அப்படின்னே ஒரு படம் எடுத்திருக்காரு.) எங்க புராஜெக்ட ஒரு குறும்படமாக மட்டுமில்லாம ஏதாச்சும் புதுசா ட்ரை பண்ணலாம்ன்ன பேசினோம். அதாவது ஒரு experiment மாதிரி. அவர் ஏற்கனவே என் பிளாகுல எழுதின ஒரு பதிவ எடுக்கிறதுன்னு முடிவோடதான் சென்னைக்கு வந்தார். இரண்டு பேரு நடிக்க வேண்டிய படமது. ரெண்டையும் அவரையே நடிக்க வச்சு டபுள் ஆக்‌ஷன் படம் பண்ணலாம்னு முடிவாச்சு. அப்ப என் வேலை? டொட்டடாய்ங்…டைரக்‌ஷன்.

நல்லதொரு நாளில் அவர் சென்னைக்கு வந்தார். அவரு, நானு, ஹீரோவோட நண்பர் பாலமுருகன், அப்புறம் கேமரா, கோகுலிடம் வாங்கிய ட்ரைபோட், ஷேவிங் க்ரீம், ரேசர் என எல்லோரும் ecr பக்கம் ஒரு கடற்கரையில் ஒதுங்கினோம். ஆமாங்க. கதையில் வர்ற ஒரு ஹீரோவுக்கு மீசை, தாடி உண்டு. இன்னொருத்தருக்கு கிடையாது. இப்ப எங்கக்கிட்ட இருக்கிறது 3 மணி நேரம். அதுல ரெண்டு ஷெட்யுலையும் முடிச்சாகணும். இல்லைன்னா ஹீரோ பெங்களூரு போயிடுவாரு. முதல்ல தாடியோட எடுக்க வேண்டிய ஷாட்ஸ் எல்லாம் எடுக்கணும். அப்புறம் ஒரே ஷாட்ல ரெண்டு ஹீரோவும் வர வேண்டிய சீன எடுக்கணும். இப்ப போய் ஷேவ் பண்ணிட்டு வருவார். வந்தவுடனே டபுள் ஆக்‌ஷன் சீன்ல இன்னொரு கேரக்டர எடுக்கணும். கடைசில மீசையில்லா ஹீரோவோட டயலாக்க எடுக்கணும். ஏதாச்சும் மிஸ் பண்ணிட்டா மீசை ஒரு மணி நேரத்துல வளராது. பக்கா பிளானோட, பாலமுருகன் உதவியோட ஷூட்டிங் ஆரம்பிச்சோம். எல்லாம் நல்லபடியா போச்சு. ஹீரோ அடுத்த கெட்டப்பிற்கு ஷேவ் பண்ண போயிட்டாரு, ட்ரைபோடு அசையக்கூடாது. அதுக்காக நான் காவலுக்கு நிக்குறேன். அப்ப எண்ட்ரீ கொடுத்தாருங்க வில்லன்.

வெள்ளை சட்டை, கருப்பு ஃபேண்ட். நல்ல தொப்பை. பார்த்தவுடனே தெரிஞ்சிடுச்சு இவரு ஒரு ஜூனியர் வக்கீல்ன்னு. கைல கிளாசோட, கிளாஸ்ல சரக்கோடு வந்து கேட்டார் “பிரதர், என்ன பண்றீங்க?”. ஷூட்டிங்கண்ணா என்றேன். கதை கேட்டாரு சொன்னேன். ஹீரோயின் யாருன்னு கேட்டார் சொன்னேன். யாருமில்லைன்னு. மீசிக்ன்னு கேட்டாரு. வாயாலன்னு சொன்னேன். வசனம் கேட்டாரு. அதுக்குள்ள ஹீரோ வந்து சேரவே அப்பாலிக்கா சொல்றேன் தலன்னு எஸ்கேப் ஆகி மீதிப்படம் முடித்தோம். அப்போது திமுக ஆட்சிதான் என்றாலும் சூரியன் மறைஞ்சு போயிடுச்சு. ஒரு வழியா எஸ்கேப் ஆகி ஷூட்டிங்கை முடித்துவிட்டு வந்தோம். வந்தா… அங்க ஒரு ட்விஸ்ட்.

நாங்க பண்ண டெஸ்ட் ஃபெயில். அதாவது எங்களிடம் இருந்த எடிட்டரில் நாங்க எடுத்த சீன்ஸ் எல்லாம் கரெக்ட்டா சிங்க் ஆகல. போதுமான பயிற்சி இல்லாததால் ஒரு டெக்னிக்கல் எரர் வந்து படத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்து முடியாம போச்சு. பவர் எடிட்டர், avs என பல சாஃப்ட்வேர வச்சு முயற்சி செய்தும் ம்ஹூம். படத்த crop பண்ணி எடிட் செய்தா மகா மட்டமான வீடியோ குவாலிட்டியே கிடைச்சது. எடுத்தாச்சு, அப்படியே ரிலீஸ் பன்ணலாம்னு யோசிச்சாலும் அது வேணாம்ன்னே கடைசில முடிவாச்சு. என்னால முடிஞ்ச எல்லாத்தையும் ட்ரை செஞ்சிட்டு விட்ட சமயத்துலதான் ஒரு சூப்பர்ஸ்டார் கிடைச்சாரு. கதை எடுத்த கதைல அடுத்த ட்விஸ்ட்.

அவர் பேரு ஜெயகுமார். பெங்களூருல இருக்காரு. அவர்கிட்ட இத பத்தி பேசினப்ப ட்ரை பண்ணலாமேன்னு நம்பிக்கை தந்தாரு. நம்ம படத்தோடு ஹீரோ வேக வேகமா காரியத்துல இறங்க, ஒரு வழியா எடிட் பன்ணி முடிச்சிட்டாரு. கோலிவுட்டில் ரிலீசாகாம போன படங்களில் லிஸ்ட்டில் சேர இருந்த படம் ஒரு வழியா ரிலீஸ்க்கு  தயாராச்சு. படத்த பார்த்திடுங்க. அடுத்த பதிவுல அதுல இருக்கிற டெக்னிக்கல் சமாச்சாரங்களையும், அவர் கொடுத்த பல நல்ல டிப்ஸ்களையும் டீட்டெயிலா பார்க்கலாம். ஆனா ஒண்ணு. ஜெயகுமார் இல்லைன்னா படம் வந்தே இருக்காது. நன்றிண்ணா. அவர்தான் காரணம். அடிக்கிறவங்க அவர அடிக்கலாம்.

அப்புறம் நண்பர் சரவண ராம்குமார்தான் இசை சேர்ப்பு வேலையை செஞ்சாரு. வழக்கமா இதெல்லாம் என் குருநாதர் ஆதி செய்வாரு. இப்ப டீம் பெருசாயிடுச்சு. அவருக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி.

கடைசியா ஹீரோ. பலராமன். என் கூட படம் எடுக்கணும்ன்னு தோணுச்சு பாருங்க. அத தவிர வேற எந்த பாவமும் செய்யாதவர். படத்துக்காக மீசையெல்லாம் எடுக்க துணிஞ்ச மவராசன். அதை விட படத்துக்கு என்ன ஆச்சுன்னு கரெக்ட்டா ஒவ்வொரு வாரமும் விசாரிப்பாரு பாருங்க..நானும் பதில் சொல்ல முடியாம தவிப்பேன். ஆனா பொறுமையா என்னையும் சமாளிச்சு, படத்தையும் சமாளிச்சு ரிலீஸூம் பண்ணிட்டாரு. நான் செஞ்சிருக்க வேண்டியத அவரு செஞ்சிருக்காரு. இதுக்கு நான் செய்ய போறேன்? விடுங்க சகா. உங்கள வச்சு நான் இன்னொரு படம் எடுத்து ரிலீஸ் பண்ணல.

“ஹலோ ஹீரோ. ஓடாதீங்க. உங்க படம் தான் ஓடணும். நீங்க இல்லை. கிர்ர்ர்ர்”

நன்றி பலராமன், பாலமுருகன், ஜெயகுமார், சரவண ராம்குமார் அப்புறம் முக்கியமா (கேமரா மூவ். க்ளோசப். ஆக்‌ஷன்) 

 

 

உங்களுக்கு…….

16 கருத்துக்குத்து:

ILA(@)இளா on August 25, 2011 at 12:18 AM said...

:)

தர்ஷன் on August 25, 2011 at 12:37 AM said...

கலக்குறீங்க சகா
ஹீரோ நன்றாக நடித்திருக்கிறார். டிரெக்டர் ஸ்பாட்டில் ரொம்ப ஸ்டிக்ட்டோ?
நல்ல முயற்சி விட்டுடாம தொடருங்கள்

கத்தார் சீனு on August 25, 2011 at 8:24 AM said...

நல்லா இருக்கு கார்க்கி..வாழ்த்துகள்..
எடிட்டிங் & இசை அருமை !!!!

குசும்பன் on August 25, 2011 at 9:55 AM said...

:)) நல்ல முயற்சி

ஆமா கடைசிவரை அந்த ஹீரோயின் திரும்பவே இல்ல:))))

குசும்பன் on August 25, 2011 at 9:56 AM said...

காக்கா பறப்பது எல்லாம் என்ன குறீயிடுன்னு உலப்பட ஆர்வலர்கள்கிட்ட கேட்டு சொல்லு சகா!:))

M.G.ரவிக்குமார்™..., on August 25, 2011 at 10:47 AM said...

சகா அடுத்த வாரம் இந்தியா வர்றேன்! நம்மப் பண்றோம்......... மீட் பண்றோம்!

Sen22 on August 25, 2011 at 12:37 PM said...

நல்லா இருக்கு கார்க்கி..

All the best for next film...!!

நாய்க்குட்டி மனசு on August 25, 2011 at 7:08 PM said...

இ(ம்)சை சேர்த்தவர் சரியான வார்த்தை . சவுண்ட் தான் கொஞ்சம் இடைஞ்சலா இருந்தது. பொண்ணை சைட் அடிக்கிறத தாண்டி யோசிக்கலாமே சகா!

இராஜராஜேஸ்வரி on August 25, 2011 at 8:17 PM said...

அப்போது திமுக ஆட்சிதான் என்றாலும் சூரியன் மறைஞ்சு போயிடுச்சு//

சிம்பாலிக் ஷாட்??

சூரியன் நிஜமாகவே மறைந்துவிட்டதே!

இராஜராஜேஸ்வரி on August 25, 2011 at 8:18 PM said...

நல்ல முயற்சி தொடர வாழ்த்துக்கள். பராட்டுக்கள்.

KSGOA on August 28, 2011 at 7:55 AM said...

வாழ்த்துகள்.முயற்சி தொடரட்டும்.
குறும்பட ஆர்வம் காரணமாக எழுதுவதை குறைக்க வேண்டாம்.
தொடர்ந்து எழுதுங்கள்.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on August 28, 2011 at 9:49 PM said...

Nice

rr on September 1, 2011 at 12:02 AM said...

kaippulla thala padam hit aagiduchu, vaa oodeerlam

Athammohamed on September 3, 2011 at 5:05 PM said...

மொக்கை, எப்படிய்யா இதுக்கெல்லாம் இவ்ளோ மெனக்கெடுறீங்க.

அசோகபுத்திரன் on September 6, 2011 at 10:42 AM said...

தயவு செய்து இனிமேல் குறும்படம் எடுக்க வேண்டுமென்றால் வேறு ஏதாவது கதையை எடுங்கள். உங்களது அருமையான பதிவுகளை நீங்களே சிதைத்துக் கொண்டிருக்கிறீர்கள். முதலில் ஏழுவின் காதல், இப்போது இது... என்ன கொடும சார் இது ?

சுரேகா.. on September 8, 2011 at 2:32 AM said...

:)


டபுள் ஆக்ட் முயற்சி சூப்பர்!

Perfect ஆ வந்திருக்கு கார்க்கி!

வாழ்த்துக்கள்!

 

all rights reserved to www.karkibava.com