Aug 25, 2011

அவன் இவன் - குறும்படம்

16 கருத்துக்குத்து

 

  இவனுக்கு வேற வேலையே இல்லையான்னு திட்டிட்டு, அப்பாலிக்கா இத படிங்க. கொஞ்ச நாளா கேமரா கையுமாதான் அலையுறேன். இல்லை அலையுறோம். அப்படி எடுத்து உங்கள படுத்திட்டு இருக்கிற ஃப்ளாஷ்பேக் எல்லாம் வேணாம். நேரா விஷயத்துக்கு வந்துடறேன். எங்க படத்த பார்த்துட்டு பெங்களூரு நண்பர் பலராமன் ஒரு நாள் அழைத்து நாம ஒரு புராஜெக்ட் சேர்ந்து பண்ணலாம் என்றார். (ஆமாங்க. அவரும் “பெங்களூரு” அப்படின்னே ஒரு படம் எடுத்திருக்காரு.) எங்க புராஜெக்ட ஒரு குறும்படமாக மட்டுமில்லாம ஏதாச்சும் புதுசா ட்ரை பண்ணலாம்ன்ன பேசினோம். அதாவது ஒரு experiment மாதிரி. அவர் ஏற்கனவே என் பிளாகுல எழுதின ஒரு பதிவ எடுக்கிறதுன்னு முடிவோடதான் சென்னைக்கு வந்தார். இரண்டு பேரு நடிக்க வேண்டிய படமது. ரெண்டையும் அவரையே நடிக்க வச்சு டபுள் ஆக்‌ஷன் படம் பண்ணலாம்னு முடிவாச்சு. அப்ப என் வேலை? டொட்டடாய்ங்…டைரக்‌ஷன்.

நல்லதொரு நாளில் அவர் சென்னைக்கு வந்தார். அவரு, நானு, ஹீரோவோட நண்பர் பாலமுருகன், அப்புறம் கேமரா, கோகுலிடம் வாங்கிய ட்ரைபோட், ஷேவிங் க்ரீம், ரேசர் என எல்லோரும் ecr பக்கம் ஒரு கடற்கரையில் ஒதுங்கினோம். ஆமாங்க. கதையில் வர்ற ஒரு ஹீரோவுக்கு மீசை, தாடி உண்டு. இன்னொருத்தருக்கு கிடையாது. இப்ப எங்கக்கிட்ட இருக்கிறது 3 மணி நேரம். அதுல ரெண்டு ஷெட்யுலையும் முடிச்சாகணும். இல்லைன்னா ஹீரோ பெங்களூரு போயிடுவாரு. முதல்ல தாடியோட எடுக்க வேண்டிய ஷாட்ஸ் எல்லாம் எடுக்கணும். அப்புறம் ஒரே ஷாட்ல ரெண்டு ஹீரோவும் வர வேண்டிய சீன எடுக்கணும். இப்ப போய் ஷேவ் பண்ணிட்டு வருவார். வந்தவுடனே டபுள் ஆக்‌ஷன் சீன்ல இன்னொரு கேரக்டர எடுக்கணும். கடைசில மீசையில்லா ஹீரோவோட டயலாக்க எடுக்கணும். ஏதாச்சும் மிஸ் பண்ணிட்டா மீசை ஒரு மணி நேரத்துல வளராது. பக்கா பிளானோட, பாலமுருகன் உதவியோட ஷூட்டிங் ஆரம்பிச்சோம். எல்லாம் நல்லபடியா போச்சு. ஹீரோ அடுத்த கெட்டப்பிற்கு ஷேவ் பண்ண போயிட்டாரு, ட்ரைபோடு அசையக்கூடாது. அதுக்காக நான் காவலுக்கு நிக்குறேன். அப்ப எண்ட்ரீ கொடுத்தாருங்க வில்லன்.

வெள்ளை சட்டை, கருப்பு ஃபேண்ட். நல்ல தொப்பை. பார்த்தவுடனே தெரிஞ்சிடுச்சு இவரு ஒரு ஜூனியர் வக்கீல்ன்னு. கைல கிளாசோட, கிளாஸ்ல சரக்கோடு வந்து கேட்டார் “பிரதர், என்ன பண்றீங்க?”. ஷூட்டிங்கண்ணா என்றேன். கதை கேட்டாரு சொன்னேன். ஹீரோயின் யாருன்னு கேட்டார் சொன்னேன். யாருமில்லைன்னு. மீசிக்ன்னு கேட்டாரு. வாயாலன்னு சொன்னேன். வசனம் கேட்டாரு. அதுக்குள்ள ஹீரோ வந்து சேரவே அப்பாலிக்கா சொல்றேன் தலன்னு எஸ்கேப் ஆகி மீதிப்படம் முடித்தோம். அப்போது திமுக ஆட்சிதான் என்றாலும் சூரியன் மறைஞ்சு போயிடுச்சு. ஒரு வழியா எஸ்கேப் ஆகி ஷூட்டிங்கை முடித்துவிட்டு வந்தோம். வந்தா… அங்க ஒரு ட்விஸ்ட்.

நாங்க பண்ண டெஸ்ட் ஃபெயில். அதாவது எங்களிடம் இருந்த எடிட்டரில் நாங்க எடுத்த சீன்ஸ் எல்லாம் கரெக்ட்டா சிங்க் ஆகல. போதுமான பயிற்சி இல்லாததால் ஒரு டெக்னிக்கல் எரர் வந்து படத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்து முடியாம போச்சு. பவர் எடிட்டர், avs என பல சாஃப்ட்வேர வச்சு முயற்சி செய்தும் ம்ஹூம். படத்த crop பண்ணி எடிட் செய்தா மகா மட்டமான வீடியோ குவாலிட்டியே கிடைச்சது. எடுத்தாச்சு, அப்படியே ரிலீஸ் பன்ணலாம்னு யோசிச்சாலும் அது வேணாம்ன்னே கடைசில முடிவாச்சு. என்னால முடிஞ்ச எல்லாத்தையும் ட்ரை செஞ்சிட்டு விட்ட சமயத்துலதான் ஒரு சூப்பர்ஸ்டார் கிடைச்சாரு. கதை எடுத்த கதைல அடுத்த ட்விஸ்ட்.

அவர் பேரு ஜெயகுமார். பெங்களூருல இருக்காரு. அவர்கிட்ட இத பத்தி பேசினப்ப ட்ரை பண்ணலாமேன்னு நம்பிக்கை தந்தாரு. நம்ம படத்தோடு ஹீரோ வேக வேகமா காரியத்துல இறங்க, ஒரு வழியா எடிட் பன்ணி முடிச்சிட்டாரு. கோலிவுட்டில் ரிலீசாகாம போன படங்களில் லிஸ்ட்டில் சேர இருந்த படம் ஒரு வழியா ரிலீஸ்க்கு  தயாராச்சு. படத்த பார்த்திடுங்க. அடுத்த பதிவுல அதுல இருக்கிற டெக்னிக்கல் சமாச்சாரங்களையும், அவர் கொடுத்த பல நல்ல டிப்ஸ்களையும் டீட்டெயிலா பார்க்கலாம். ஆனா ஒண்ணு. ஜெயகுமார் இல்லைன்னா படம் வந்தே இருக்காது. நன்றிண்ணா. அவர்தான் காரணம். அடிக்கிறவங்க அவர அடிக்கலாம்.

அப்புறம் நண்பர் சரவண ராம்குமார்தான் இசை சேர்ப்பு வேலையை செஞ்சாரு. வழக்கமா இதெல்லாம் என் குருநாதர் ஆதி செய்வாரு. இப்ப டீம் பெருசாயிடுச்சு. அவருக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி.

கடைசியா ஹீரோ. பலராமன். என் கூட படம் எடுக்கணும்ன்னு தோணுச்சு பாருங்க. அத தவிர வேற எந்த பாவமும் செய்யாதவர். படத்துக்காக மீசையெல்லாம் எடுக்க துணிஞ்ச மவராசன். அதை விட படத்துக்கு என்ன ஆச்சுன்னு கரெக்ட்டா ஒவ்வொரு வாரமும் விசாரிப்பாரு பாருங்க..நானும் பதில் சொல்ல முடியாம தவிப்பேன். ஆனா பொறுமையா என்னையும் சமாளிச்சு, படத்தையும் சமாளிச்சு ரிலீஸூம் பண்ணிட்டாரு. நான் செஞ்சிருக்க வேண்டியத அவரு செஞ்சிருக்காரு. இதுக்கு நான் செய்ய போறேன்? விடுங்க சகா. உங்கள வச்சு நான் இன்னொரு படம் எடுத்து ரிலீஸ் பண்ணல.

“ஹலோ ஹீரோ. ஓடாதீங்க. உங்க படம் தான் ஓடணும். நீங்க இல்லை. கிர்ர்ர்ர்”

நன்றி பலராமன், பாலமுருகன், ஜெயகுமார், சரவண ராம்குமார் அப்புறம் முக்கியமா (கேமரா மூவ். க்ளோசப். ஆக்‌ஷன்) 

 

 

உங்களுக்கு…….

Aug 21, 2011

தளபதி–Remix குறும்படம்

31 கருத்துக்குத்து

 

M17 Production, வசனம் - கார்க்கி

மறக்காம திட்டிட்டு போங்கப்பா

Aug 18, 2011

குஜ‌ராத் கும‌ரி - 5

7 கருத்துக்குத்து

 

குஜ‌ராத் கும‌ரி  – 1

குஜ‌ராத் கும‌ரி – 2

குஜ‌ராத் கும‌ரி – 3

குஜ‌ராத் கும‌ரி – 4

குஜ்ஜுவை க‌ட‌ந்து செல்லும் போது என் கால் அவ‌ர் மீது ப‌ட்டுவிட்ட‌து. தெய்வ‌குத்த‌ம் செஞ்சா சாமி க‌ண்ண‌ குத்துமாம். தேவ‌தை குத்த‌ம் செஞ்சிருக்கேன்.. என்ன‌ ஆக‌ போகுதோ!!

குஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜு

காலையில் இருந்து குஜ்ஜு ஒரே ஹேப்பி. 40 smiles per hour வேக‌த்தில் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

குஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜு

க‌ட‌ந்த‌ 3 நாட்க‌ளாக‌ நான் ட‌ய‌ட்டில் இருந்தேன். குஜ்ஜுவை பா‌ர்க்க‌வில்லை.

குஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜு

இன்று பியர் டேவாம்.. குஜ்ஜு பியரெல்லாம் இல்லை. டக்கீலா..

குஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜு

குஜ்ஜு என் எக்ஸ்டென்ஷ‌னுக்கு ஃபோன் ப‌ண்ணி Whats ur lunch என்கிற‌து. நீதான்னு சொல்லாம‌ இருக்க‌ நான் ப‌ட்ட‌ பாடு..அப்ப்ப்ப்ப்ப‌ப்ப்ப்ப்பா

குஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜு

அதான்டா இதான்டா ஐஅம்கார்க்கி நான் தான்டா..அன்னைகுஜ‌ராத் நாட்டுல‌ நான் அனைவ‌ருக்கும் சொந்த‌ம்டா.

குஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜு

எங்க‌ ஆஃபிஸ்ல‌ Oven க்கு வேலையே இல்லை. ல‌ன்ச்பாக்ஸ் குஜ்ஜு கைல‌ கொடுத்தா 30 நொடில‌ பாக்ஸ் சூடாயிடுது

குஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜு

குஜ்ஜு என்னை க‌ட‌க்கும் போதெல்லாம் ல‌ஷ்ம‌ண் ஆகிவிடுகிறேன். #கையும் ஓட‌ல‌.. காலும் ஓட‌ல‌

குஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜு

நான் ப‌ட்டு வேட்டி ச‌ட்டையிலும், குஜ்ஜு காக்ரா சோளியிலும் ஆட‌ bloggers,twitters எல்லாம் குச்சி வைத்து தாண்டியா ஆடுவ‌து போல‌‌ க‌ன‌வு நேற்று.

குஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜு

பிளாக், மெயில்,ட்விட்ட‌ர் வின்டொவை மினிமைஸ் ப‌ண்ண‌வே முடியாம‌ இருந்தேன். இப்போ குஜ்ஜு ஃபோட்டோ வால்பேப்ப‌ர். எல்லா வின்டோஸும் மினிமைஸ்ஸ்ஸ்

Aug 17, 2011

சில‌ புகைப்ப‌ட‌ங்க‌ள்..

4 கருத்துக்குத்து

சென்ற‌ வார‌ இறுதியில் மூன்று நாட்க‌ள் ஏல‌கிரி, ஹொகேன‌க்க‌ல் சுற்றுலா சென்று வ‌ந்தோம். சில‌ புகைப்ப‌ட‌ங்க‌ள்..

ஹொகேன‌க்க‌லில் த‌ண்ணீர் வ‌ர‌த்து அதிக‌மாக‌ இருக்கிற‌து. மெயின் ஃபால்ஸ் அருகே ப‌ரிச‌லில் அழைத்து செல்கிறார்க‌ள். போக‌ நினைக்கிற‌வ‌ர்க‌ள் சீக்கிர‌மே சென்று வாருங்க‌ள்.

Aug 10, 2011

ம‌ங்காத்தா

19 கருத்துக்குத்து

Mangatha Trailor from karki on Vimeo.

ஆடியோவோடு கேளுங்க‌. சில‌ உட்டால‌க்க‌டி வேலை செஞ்சிருக்கேன் :)

ஆனா டிரெயில‌ர் ந‌ல்லா இருக்கு. ப‌ட‌ம் வெற்றி பெற‌ வாழ்த்துக‌ள்

Few tweets:

த‌ல‌க்கு கொஞ்ச‌ம் தொப்பை இருக்குன்னு விநாய‌க்னு பேரு வ‌ச்சான் பாரு வெங்க‌ட்டு.. அவ‌ந்தான்யா பின்ந‌வீன‌த்துவ‌வாதி

ஈகோ பார்க்காம‌ல் அஜித்துட‌ன் இணைந்து ந‌டித்த‌ பிரேம்ஜிக்கு வாழ்த்துக‌ள் - ‍இவ‌ன் பிரேம்ஜி ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம், ட்விட்ட‌ர் கிளை

ரெட்டுக்கு மொட்டை அடிச்ச‌ ப‌ய‌லுங்க‌ எல்லாம் சுண்ணாம்பு வாங்க‌ க‌டைக்கு போயிருக்காங்க‌ளா இல்லையா?

த‌ல‌ ம‌ன‌சும் ம‌யிறும் மாதிரிதான்.. அட‌ வெள்ளைன்னு சொன்ன‌ன்ப்பா

இது அழ‌கிரியின் ம‌க‌ன் த‌யாரிக்கும் ப‌ட‌மென்ப‌தை ம‌ட்டும் எப்ப‌டியாவ‌து அம்மாவிட‌ம் சொல்லிவிட‌ வேண்டிம். பின் எங்க‌ளுக்கு வேலையிருக்காது

ஆடி மாச‌த்துல‌ ஆடியோ வ‌ருது கேள‌டி நீயாத்தா.. அடுத்த‌ மாச‌ம் ப‌ட‌மும் வ‌ரும் பார‌டி நீயாத்தா.. போடு ம‌ங்காத்தா.. ம‌ன்ற‌ம் எங்காத்தா??

ம‌ங்காத்தா வெளியான‌ உட‌ன் ரைமிங்கா ப‌ன்ச் வைக்கும் விம‌ர்ச‌க‌ர்க‌ளுக்கு ஒரு அறிவுரை # நோ ரைமிங் பேட் வேர்ட்ஸ் ப்ளீஸ்

Aug 2, 2011

புட்டிக்கதை - குறும்படமாக

29 கருத்துக்குத்து

 

 

இதை கதையாக படிக்க இங்கே க்ளிக்கவும்.

 

all rights reserved to www.karkibava.com