Jul 7, 2011

வேங்கை–God Bless


 

  ஆற்காடு வீராசாமி என்ற விஞ்ஞானி கண்டுபிடித்த மின்தடையால் திருமணமான அன்பர்களுக்கு பல நன்மைகள் நடந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. சிலர் அவர் மீது உண்மையான நன்றி கொண்டு ”அச்சம்பவத்தால்” பிறந்த குழந்தைக்கு வீராசாமி எனவும், சில பீட்டர் மாமாக்கள் Bravo God என்பதை சுருக்கி Broad எனவும் பெயரிட்டு மகிழ்ந்த சம்பவங்கள் நம் செவிப்பறையையும், ரெட்டீனாவையும் தாக்குகின்றன. மொட்டைப் பையனான எனக்கு அது போல  வியத்தகு வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், அவ்வபோது சிற்சில லாபகரமான விஷயங்கள் நடைபெறுவதுண்டு. அதில் ஒன்றாக நேற்று அலுவகம் அரை நாள் விடுமுறை கண்டது. என்ன செய்யலாம் என யோசித்தபோதுதான் காலையில் அலுவலகம் வரும்போது கண்ட போஸ்டர் நினைவுக்கு வந்தது. நல்ல, ஆறடி நீள அரிவாள் ஒன்று தனுஷை தூக்கி வைத்திருந்தது போல இருந்தது அப்போஸ்டர். இன்று அலுவலகம் விடுமுறை என்பதால்தான் வியாழன் அன்றே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும் என்று பட்டாம்பூச்சி விளைவை நினைத்துக் கொண்டு, அதில் என் குருவான உலக நாயகனுக்கு நன்றி சொல்லிக் கொண்டு யமஹா என்னும் பஞ்ச கல்யாணியை சத்யம் நோக்கி விரட்டினேன். ரஜினிக்கு லட்சுமியைப் போல, எனக்கு பஞ்ச கல்யாணி. நான் ஆக்ஸிலேட்டரை திருகும் முறையை வைத்தே நான் தேடிப்போவது சினிமாவா, தோழியா, ஆதியா, வீடா என தெரிந்துக் கொள்ளும். அதற்கேற்ப சீறும்.

தனுஷின் மாஸ் என்னை நிலைகுலைய செய்தது. சத்யமில் படம் ஹவுஸ் ஃபுல் இல்லை. சிலர் 180க்கு சென்றார்கள். படத்தைப் பற்றி பேசும்முன் தேவையே இல்லாத சில விஷயங்களை பேசி விடுவோம். வீட்டிற்கு வந்தவுடன் பப்லு சொன்னான் “வேங்கை ஹரி படமா? சண்டைலாம் சூப்பரா இருக்கும்”. பப்லுவுக்கு தெரிந்த விஷயம் கூட தெரியாத சிலர் வேங்கைக்கு “முன்பழமைத்துவ காவியம்”, “பின்நவீன பிஞ்ச செருப்பு” என விமர்சனம் எழுதலாம். நான் எந்த அடிப்படையில் இப்பதிவை எழுதுகிறேன் என்பதை சொல்லிவிடுகிறேன். ஹரி இப்படத்தை கான்ஸ் திரைப்படவிழாவிற்கோ, சீனாவிற்கோ அனுப்ப போவதில்லையாம். தேனியிலும், அம்பாசமுத்திரத்திலும் தானாம். அதே போல் புதுமையாக எதுவும் இல்லையாம். எனவே ஆரண்ய காண்டத்திற்கு நான் வைத்த அளவுகோலை வேங்கைக்கு வைக்காதது கண்டு ஆச்சரியம் அடையும் ஆத்மாக்கள் பின்னூட்டத்தில் ஏமாற்றத்தை வெளியிட வேண்டாம். ஹிந்து எடிட்டோரியலில் எங்க ஏரியா லேம்ப் போஸ்ட் எரிவதே இல்லை என லெட்டர் போடுபவர்கள் அத்தோடு நிற்கலாம். இது ஹரி படம். குத்துப்பாட்டுக்கும், டாட்டா சுமோவிற்கும் குத்தாளமிடும் மனநிலை கொண்டவர்களுக்கானது. அதில் ஏதும் ஏமாற்றமிருக்கிறதா என்பதை மட்டும் பார்ப்போம்.

ஹீரோ தனுஷ். அவர் அப்பா ராஜ்கிரன், ஊரில் நல்ல பெயர் எடுத்து 50000 ஃபாலோயர் கொண்டவர். அவர் சொன்னால் தமிழ்மணத்திலும், இண்ட்லியும் கூட வோட்டு போட தயாராக இருக்கிறார்கள் சிவகங்கை மாவட்ட மக்கள். ராஜ்கிரணிடம் நல்லவனாய் வாழ்வேன் என்று சத்யம் செய்து எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவர்தான் வில்லன் என யூகித்தற்கெல்லம் ஷொட்டு கிடையாது. கதை மட்டும் கேளுங்கள். தனுஷ் அடங்காமல் திரிகிறார். நோ ஷொட்டு. அவர் வேலை கற்றுக் கொண்டு நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமென்றும், ராஜ்கிரனால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை எதுவும் செய்துவிடக் கூடாது என்பதற்காகாவும் அவரை வெளியூருக்கு அனுப்புகிறார்கள். அங்கே தனுஷின் மாமா ரியல் எஸ்டேட் அதிபர். நோ ஷொட்டு. அந்த ஊரில்தான் தனுஷ் தமன்னாவை பார்க்கிறார். காதல் வருகிறது.பாடல் வருகிறது. நோ ஷொட்டு. தனுஷை கொல்ல பிரகாஷ்ராஜ் ஆள் ஏற்பாடு செய்கிறார். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக வில்லன்கள் குழு அவரை வம்புக்கு இழுக்கிறார்கள். ஆனால் தந்தை சொல்படி தனுஷ் அடங்கி போகிறார்.  நோ ஷொட்டு. ராஜ்கிரன் பிரகாஷ்ராஜ் ஒரு “ராசா” என்பதை கண்டுபிடித்துவிடுகிறார். அவரின் சொத்துகளை மக்களுக்கே கிடைக்குமாறு செய்துவிடுகிறார் தனுஷ். கோவம் பீறிட்டு வருகிறது பிரகாஷ்ராஜுக்கு. நோ ஷொட்டு. இடைவேளைக்கு முன் ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால் தனுஷ் இறங்கி அதகளம் செய்ய, தமன்னா அதைப் பார்த்து வந்த காதலை விழுங்க, விஷயம் கேள்விப்பட்டு ராஜ்கிரன் சிலபல குவாலீஸ்களோடு வர, வில்லன்கள் குழு சிதற.. இடைவேளை.. நோ ஷொட்டு. நன்றி கேபிள்.

IMG_0464 இடைவேளையில் அனுஷ்கா படம் டிரெயிலர்

இப்போது பிரகாஷ்ராஜ் மந்திரி ஆகிவிடுகிறார். ராஜ்கிரனின் வீட்டிற்கு ஹெலிகாப்டரில் வந்து “பருப்பில் சிறந்தது முந்திரி. பதவியில் சிறந்தது மந்திரி” என பன்ச் அடிக்கிறார். ராஜ்கிரன் சிரிக்கிறார். தனுஷ் பொங்குகிறார். அவர் வீட்டிற்கே சென்று “கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு எல்லாம் கிலோல வாங்குவாங்க. முந்திரி மட்டும் கிராம்லதான் வாங்குவாங்க” என்று எதிர் பன்ச் அடிக்கிறார். இருவரும் 30 நாட்களுக்குள் யாராவது ஒருவர் தலையை எடுப்பதாக சவால் விடுகிறார்கள். அதன் பின் தனுஷ் தமன்னாவை தேடியும், பிரகாஷ்ராஜ் வேறு படத்தில் நடிக்கவும் போய் விடுகிறார்கள். அவ்வபோது இருவரும் சீண்டி சீண்டி விளையாடுகிறார்கள். கடைசியில் தனுஷ் வெல்கிறார்/ இதற்கு நிச்சயம் நோ ஷொட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு.

மெட்ராஸ் –மதுரை என போர்டு போட்டி வண்டி ஓட்டுபவர் ஹரி. இவர் படத்தில் மதுரைக்கு அடுத்து திருச்சி, திருச்சிக்கு அடுத்து திண்டிவனம், என யூகிப்பதில் அர்த்தமேயில்லை. அதனால் நான் சொன்ன கதையில் எந்த பிரச்சினையும் இல்லை. அது டெம்ப்ளேட் கதை.  சண்டைக்கோழியில் இருந்து கதையை திருடும்போது ராஜ்கிரனை இலவசமாக எடுத்திருக்க வேண்டாம். அவரும் வழக்கம் போல அஷ்ட கோணலில் முகபாவனைகள் காட்டி மிளிர்கிறார். புத்திசாலித்தனமான திரைக்கதையாலும், வேகமான இயக்கத்தாலும் ஹரி எக்ஸ்பிரஸ் எப்போதும் வேகமாக ஊர் சேரும். வேங்கை எவ்வளவு வேகத்தில் சேர்ந்தது என்பதுதான் முக்கியம். எளிதில் சொன்னால் சாமி, சிங்கம் அளவிற்கு எக்ஸ்பிரஸ் வேகமும் இல்லை. அருள், சேவல் அளவிற்கு பேசஞ்சரும் இல்லை. 60கிமீ வேகத்தில் வேங்கை ஓடுகிறது. பிரச்சினை என்னவென்றால் சீரான வேகமில்லை. முதல் பாதியில் நிதானமாக ஓடிய படம் இடைவேளைக்கு 15 நிமிடம் முன்பு சடாரென ராக்கெட் வேகத்தில் பாய்ந்தது.

சார்மினர் எக்ஸ்பிரஸில் பயணித்தவர்களுக்கு தெரியும். 8.10க்கு செண்ட்ரல் வர வேண்டுமென்றால் 6.55க்கே திருவொற்றியூர் வந்துவிட்டு ஆமை வேகத்தில் நகரும். அது போல க்ளைமேக்ஸை நோக்கி ஓடிய வேங்கை அங்கே தொங்கிவிட்டது. தமன்னாவின் கால்ஷீட் இருக்கிறது என்பதற்காக அவருக்கு ஒரு ஃப்ளாஷ் பேக் சொருகி, அதை நிகழ்காலத்தில் தீர்க்க முனைந்து பஞ்சர் ஆகிறது. மீண்டும் வேகமெடுக்கும்போது இன்னுமா தாம்பரம் வரலை என்கிறான் பயணி. எனக்கு படம் பைசா வசூல். நல்ல டைம் பாஸ் என்றுதான் சொல்வேன்.

ஹரியின் ஆளுமை எனக்கு பிடிக்கிறது. சினிமா ஒரு கலை, வலை என்று சொல்வார்கள். நாம் எல்லோரும் செய்யும் வேலையே ஒரு கலைதான். அதில் ஒரு நேர்த்தி இருக்கும். அல்லது தொழில்நுட்பம் மிளிரும். ஆனால் நாம் அதை எப்படி செய்கிறோம்? கிளையண்ட் தரும் பிரஷரால் சரியான நேரத்தில் முடித்தால் போதுமென்போமா? அல்லது அதில் 100% வரும் வரை பொறுத்து தருவோமா? எந்த ஒரு வடிவமும் வியாபரமயமாகி வரும் காலம் இது. விளையாட்டு, கலை, எழுத்து,தொழில்நுட்பம் என எதுவுமே இதற்கு விதிவிலக்கல்ல. அப்படித்தான் சினிமாவும். ஹரி அதை தொழிலாக பார்க்கிறார். அதற்கு எந்த பங்கமும் அவர் வைப்பதில்லை. சரியான திட்டமிடல், அயராத உழைப்பு, வேகமான செயல்பாடுகள் என அழகாக வேலை செய்கிறார். ஒளிப்பதிவாளர், எடிட்டர், நாயகன் என யார் மாறினாலும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஹரியின் முத்திரை ஆழமாக இருக்கிறது. இந்த ஆளுமையைத்தான் நான் ரசிப்பதாக சொல்கிறேன். இதை பலரும் ஆமோதிக்க மறுக்கலாம். ஆனால் சினிமாவில் ஒரு பகுதி வணிக சினிமாவாக இருப்பதை நான் ஆதரிக்கிறேன். எல்லா சினிமாவும் கலை நோக்கோடுதான் எடுக்கப்பட வேண்டுமென்பதில் எனக்கு ஒப்புதல் இல்லை.

பெரிதாக படம் பற்றி நான் எழுதவில்லை. காரனம் திரைப்படம் பற்றிய என் எல்லாப் பதிவுகளுமே நான் சினிமா பார்த்த அனுபவம் குறித்துதானே ஒழிய, திரைப்பட விமர்சனமில்லை. இறுதியாக வேங்கை சிங்கத்திடமும், சாமியிடமும் தோற்கும். அருளிடமும், சேவலிடமும் ஜெயிக்கும். தாமிரபரணியோடும், வேலிடமும் பரிசை பகிர்ந்துக் கொள்ளும் என்று சொல்லி முடிக்கிறேன். தட்ஸ் ஆல் யுவர் ஹானர்.

_______________________________

ட்விட்டர் டைம் (தியேட்டரில் இருந்து ட்விட்டியது)

மாரியாத்தா..காப்பாத்து.. http://twitpic.com/5mf3z6

வேங்கை போஸ்ட‌ர் பார்த்தாலே செக‌ன்ட் ரிலீஸ் மாதிரி இருக்கு.. சேவ‌ல் தான்னு நினைக்கிறேன். பார்ப்போம்

கோவில் போனாலும் ஃபிகரத்தான் பார்ப்போம் என்பது போல, வேங்கை பார்க்க வந்தாலும் நமக்கு அனுஷ்காவும், அமலா பாலும்தான். http://twitpic.com/5mfjxt   http://twitpic.com/5mfk4y

டேய் டேய்.. இது விஷால் படம்டா.. ஊரு விட்டு போறாரு ஹீரோ. திருந்தனுமாம்.

வேங்கை இடைவேளை பதுங்கியே இருக்கிறது. இனி பாயுமோ?

கோக் வாங்க Qல நிக்க சொன்னிங்க சரி. உட்கார எதுக்கு Q? என் சீட் நம்பர் Q22 ஆம்.

யப்பா.. தனூஷு. உனக்கு பாட்டு மட்டும் செட் ஆகல சாமீ..

________________________________

தலைப்பு : தனுஷ் எப்போது ட்விட்டினாலும் GOD BLESS என்றுதான் முடிப்பார். அதான்.

15 கருத்துக்குத்து:

HajasreeN on July 7, 2011 at 10:36 PM said...

sema kutthu boss

jroldmonk on July 7, 2011 at 10:50 PM said...

விமர்சனமும் போர் அடிக்காம ஜனரஞ்சகமா இருக்கு .

Sankar on July 7, 2011 at 11:33 PM said...

ஊரில் நல்ல பெயர் எடுத்து 50000 ஃபாலோயர் கொண்டவர். அவர் சொன்னால் தமிழ்மணத்திலும், இண்ட்லியும் கூட வோட்டு போட தயாராக இருக்கிறார்கள் சிவகங்கை மாவட்ட மக்கள்

Indha lineku award kodukkanum

நாய்க்குட்டி மனசு on July 8, 2011 at 8:42 AM said...

ஊரில் நல்ல பெயர் எடுத்து 50000 ஃபாலோயர் கொண்டவர். அவர் சொன்னால் தமிழ்மணத்திலும், இண்ட்லியும் கூட வோட்டு போட தயாராக இருக்கிறார்கள் சிவகங்கை மாவட்ட மக்கள்.//
சீக்கிரம் ஒரு நல்ல டாக்டரை பார்ப்பது நல்லது

முரளிகண்ணன் on July 8, 2011 at 9:34 AM said...

கார்க்கி, நேற்று படம் பார்க்கும் போது தனுஷ்க்குப் பதில் விஜயை வைத்துப் பார்த்தேன். காவலனைவிட நன்கு இருந்திருக்கும் என்று தோன்றியது.

உங்களுக்கு?

கார்க்கி on July 8, 2011 at 9:35 AM said...

ஹீரோவின் ப‌ல‌ தெரிஞ்சு ந‌ட‌ப்ப‌வ‌ர் ஹ‌ரி. ஒரு காட்சியில் தென்னை ம‌ர‌த்தில் ஏறும் த‌னுஷ் அரிவாளை ம‌ர‌த்தில் குத்தி அதை பிடித்து தொங்குவார். அவ‌ர‌து எஅடையை அரிவாள் தாங்கிக் கொள்ளுமாம் :)

கார்க்கி on July 8, 2011 at 9:37 AM said...

முர‌ளி, ப‌திவில் அதையும் சேர்க்க‌ நினைத்தேன்.. ஹ‌ரியுட‌ன் விஜ‌ய் ஒரு ப‌ட‌ம் ப‌ண்ணினால் எப‌ப்டி இருந்தாலும் ஹிட்டுதான்.. ஆனான் அத‌ன் பின் இருவ‌ரும் ப‌ல‌ ப‌ட‌ங்க‌ள் இணைவார்க‌ள் என்ப‌து என் க‌ணிப்பு..

மோகன் குமார் on July 8, 2011 at 9:48 AM said...

ஹரி தயாரிப்பாளர் கிட்டே கூட இவ்ளோ எளிமையா கதை சொல்லிருக்க மாட்டார். அவ்ளோ சிம்பிளா புரியும் படி
கதை சொன்னீங்க. வழக்கம் போல் பல வரிகள் சிரிப்பு வெடி.

அதிசயமா ஒரு போட்டோ ப்ளாகில் போடுறீங்க. இன்னும் நல்ல அனுஷ்கா போட்டோ கிடைக்கலையா ?

அனுஜன்யா on July 8, 2011 at 10:58 AM said...

ரொம்ப நாள்களுக்குப் பிறகு நல்லா ஃப்ளோ. பழைய்ய்ய்ய கார்க்கி.

அன்பு on July 8, 2011 at 11:43 AM said...

//அதன் பின் தனுஷ் தமன்னாவை தேடியும், பிரகாஷ்ராஜ் வேறு படத்தில் நடிக்கவும் போய் விடுகிறார்கள்.//
இந்த பன்ச் நல்லா இருக்கே....!

Sen22 on July 8, 2011 at 12:15 PM said...

அருமையான விமர்சனம் கார்கி..

//ஊரில் நல்ல பெயர் எடுத்து 50000 ஃபாலோயர் கொண்டவர். அவர் சொன்னால் தமிழ்மணத்திலும், இண்ட்லியும் கூட வோட்டு போட தயாராக இருக்கிறார்கள் சிவகங்கை மாவட்ட மக்கள்.///

Superb....:)))

பாண்டி-பரணி on July 8, 2011 at 12:40 PM said...

ஊரில் நல்ல பெயர் எடுத்து 50000 ஃபாலோயர் கொண்டவர்.

ராஜ்கிரன் பிரகாஷ்ராஜ் ஒரு “ராசா” என்பதை கண்டுபிடித்துவிடுகிறார்.

அதன் பின் தனுஷ் தமன்னாவை தேடியும், பிரகாஷ்ராஜ் வேறு படத்தில் நடிக்கவும் போய் விடுகிறார்கள்


நச் நச் வரிகள்

பின்ர போப்பா !

ivindishan on July 8, 2011 at 1:00 PM said...

ippo theriyutha national award yedukku ravan ellam nalla nadiganum illa ....vangathavan yellam nadikka theriyathavanum illa..

Natarajan on July 10, 2011 at 3:04 PM said...
This comment has been removed by the author.
Rajan on July 12, 2011 at 9:17 AM said...

வித்தியாசமான பார்வை பாஸ். கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு விமர்சனம் நான் என் நண்பர்களிடம் நேற்று இரவு சொன்னேன்.
நான் உலக படம் எதிர் பார்த்து வேங்கை படம் பார்க்க வில்லை. எதிர்பார்ப்புகள் இல்லை அதனால் ஏமாற்றங்கள் இல்லைன்னு

 

all rights reserved to www.karkibava.com