Jul 26, 2011

தெய்வத்திருமகள்–நிலா


 

அபியும் நானும் படத்தில் ஒருகாட்சி. த்ரிஷா வீட்டில் இருக்கும் வேலைக்காரன், பிரகாஷ்ராஜிடம் பேச வருவார். தன் மகள் இன்னொருவனை காதலிக்கிறாள் என தெரிந்து ஒருவித கலக்கத்தில் இருப்பார் பிரகாஷ்ராஜ். மனதில் தோன்றியதை பேசியபின் முடிவில் வேலைக்காரன் சொல்வார்

“உனக்குத்தான் சார் அது பொண்ணு.. எனக்கு அம்மா சார்”.

  வசனத்தின் முடிவில் சில நொடிகள் மெளனத்தை  பேசவிட்டு பின் ஒரு இசை சேர்த்திருப்பார் வித்யாசாகர். அந்த குறிப்பின் முடிவில் பாடல் தொடங்கும். இசை ஆரம்பிக்கும் புள்ளியில்தான் அந்த சிலிர்ப்பு நமக்கு ஏற்படும். அடுத்தமுறை படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் மறக்காமல் கவனியுங்கள்.

  செல்லுலாய்டின் வழி உணர்ச்சிகளை கடத்தும் யுத்தி எல்லோருக்கும் தெரிவதில்லை. கதையோ, நடிகர்களோ,இசையோ எதுவோ ஒன்று இயக்குனருக்கு உதவி செய்யும், அஞ்சலி போன்ற ஒரு சில திரைப்படங்களில் மட்டும் எல்லாமே நிறைவாய் அமையும். தெய்வத்திருமகளில் இசையைத் தவிர மற்ற அனைத்தும் துணை புரிந்திருக்கிறது.

பெண்களே தேவதைகள். பெண் குழந்தைகளை என்னவென்று சொல்ல! தேவதைகளின் தேவதை எனலாமா? ஆம் என்றால் நிலா தேவதைகளின் தேவதைகளின் தேவதை. இந்தக்கனம்  இதயம் முழுவதும் நிறைந்திருக்கிறாள். கைவிரித்து, அகல கண்விரித்து நிலா செய்யும்  அந்த கடைசி காட்சியில் உறைந்த நான் இன்னும் மீளவில்லை. திரையரங்கில் இருந்து வீடு வரை சாலையை பார்த்து வண்டி ஓட்டவேயில்லை. வானில் இருந்த நிலவிடம் ஏதேனும் அவசரம் என்றால் சொல்ல சொல்லியிருக்கிறாள் நிலா. வீடு சேரும்வரை சிலபல விஷயங்களை சொல்லியிருக்கிறேன்.

”ஷ்வேதா” என்று அழைக்கும்போது அவள் முகம் போகும் கோணலை கவனித்தீர்களா? விக்ரம் கதை சொல்கிறேன் என்று படுத்தும்போது அவள் கண்கள் பேசியதை கவனித்தீர்களா? விக்ரம் சாவியை கொடுக்காமல் தாமதமாக வரும்போது காரணம் தெரியாமல் கோவப்பட்டுவிட்டு, பின்பு உண்மை தெரிந்து “சாரி” கேட்கும் காட்சியில் அவள் உடல்மொழியை கவனித்தீர்களா? நீண்ட நாட்களுக்கு பின்பு விக்ரமை கோர்ட்டில் பார்த்த நொடியில் சாப்பிடாம ஒல்லியாயிட்ட என்று சைகை காட்டும்பொழுது.. .. இப்படிக் கேட்டுக் கொண்டேயிருந்தால் பதிவு முழுவதும் கவனித்தீர்களா மட்டும்தான் இருக்கும். நிலா என்னுள் நீக்கமற நிறைந்துவிட்டாள்.

இதை தட்டச்சும் பொழுது கூட கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் ஒன்று சேர்த்து நிலா வந்தாச்சு என்று சொல்லிப்பார்த்து விட்டுதான் தொடர்கிறேன். படம் பார்க்கும்பொழுது எங்கேயும் நான் கலங்கவில்லை. படம் முடிந்துவிட்டது போடா டேய் என்று பெயர் போட்டபொழுதுதான் லேசாக கலங்கினேன். அப்போது நிலா தூங்கிக் கொண்டிருந்தாள். நானும் கிருஷ்ணாவும் சத்தம் போடாமல் வந்துவிட்டோம்.

படத்தை பற்றி எழுத நிறைய இருக்கலாம்.இது சுட்டது. திருடியது.  எனக்கு அதெல்லாம் கவலையில்லை. எனக்கிருக்கும் ஒரே ஒரு பிரச்சினை நானும் கிருஷ்ணாவும் நிலாவை பிரிந்து கவலைப்படுகிறோம். ஆனால் நிலா கிருஷ்ணாவை மட்டும்தானே தேடுவாள். ???

 Sad smile

26 கருத்துக்குத்து:

சத்யா on July 26, 2011 at 11:16 PM said...

நமக்கு நிலா மட்டும் தான். ஆனா அந்த நிலாவுக்கு நம்பள மாதிரி பாதித்த ஆர்வலர்கள் ஏராளம்.

Natarajan on July 26, 2011 at 11:17 PM said...

விடுங்க! ஒரு டிவிடி வாங்கிடுங்க! நிலா வீட்டிலேயே இருப்பாள்

Gunasekaran on July 26, 2011 at 11:33 PM said...

Boss.. Neenga twitterla reply panna pinnaadi konjam yosichi pathen. Mean while I read the below link "http://ilavarasanr.blogspot.com/2011/07/blog-post_25.html". This link force me to compare vijay(actor) & vickram. Vickram 100 % copied sean penn.

Arunmozhi on July 26, 2011 at 11:36 PM said...

முதல் கமெண்ட் என்றால் அதற்குள் போட்டுவிட்டார்கள்.

நீங்கள் படத்தை சரியாக விமர்சிக்கவில்லை. ஆனால் உங்கள் விமர்சனம் நன்றாக உள்ளது. நானும் அழக்கூடாது என்று உறுதியுடன் போனேன் முடியவில்லை. நான் மூன்றாம் மனிதனாய் கிருஷ்ணாவயும் நிலாவையும் வேடிக்கை பார்த்ததே காரணம். உங்கள் கோணம் நன்றாக இருக்கிறது.

அப்பா, யானை ஏம்பா பெருசா இருக்கு?ம்.. ம்.. அது நெறயா சாப்பிடுது இல்ல அதுனால :)

Gunasekaran on July 26, 2011 at 11:39 PM said...

But Nila.. I don't have words to describe her. In Tamil movie history, I've never seen a girl performed like SARA(Nila)..

King Viswa on July 26, 2011 at 11:50 PM said...

யாருங்க இந்த கிருஷ்ணா? நம்ம யுவகிருஷ்ணாவா?

King Viswa on July 26, 2011 at 11:51 PM said...

//நானும் கிருஷ்ணாவும் நிலாவை பிரிந்து கவலைப்படுகிறோம். ஆனால் நிலா கிருஷ்ணாவை மட்டும்தானே தேடுவாள்//

யாருங்க இந்த கிருஷ்ணா? நம்ம யுவகிருஷ்ணாவா?

Arunkumar on July 27, 2011 at 12:12 AM said...

Anushka va ye marakkadikkum alavukku nila asathi irukkiral pola? :)

wild bull on July 27, 2011 at 7:13 AM said...

ka ka ka po

எட்வின் on July 27, 2011 at 7:31 AM said...

தெய்வதிருமகள் I'm Sam என்ற ஆங்கில திரைப்படத்தின் தழுவலாய் இருந்தாலும். தீம் சாங். ப ப பா பா பாப்பா பாடல் Robin Hood Cartoon பாடலின் தழுவலாய் இருந்தாலும். விக்ரம் மற்றும் சாராவின் நடிப்பு நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

தேவதைகளின் தேவதை... நல்லா இருக்கே!! :)

பரிசல்காரன் on July 27, 2011 at 7:59 AM said...

கடைசி வரில எனக்கும் கலங்கீடுச்சு. 

சகா.. வீட்டுக்கு வாடா.

வினோத் கெளதம் on July 27, 2011 at 10:31 AM said...

Superb thala..

பிரபா on July 27, 2011 at 11:08 AM said...

//படத்தை பற்றி எழுத நிறைய இருக்கலாம்.இது சுட்டது. திருடியது. எனக்கு அதெல்லாம் கவலையில்லை. எனக்கிருக்கும் ஒரே ஒரு பிரச்சினை நானும் கிருஷ்ணாவும் நிலாவை பிரிந்து கவலைப்படுகிறோம். ஆனால் நிலா கிருஷ்ணாவை மட்டும்தானே தேடுவாள். ???///

என்னையும் தேட மாட்டாளா பாஸ் ?

Anonymous said...

வணக்கம் .,
நிலா ., நீங்க சொன்னது போல் தேவதைகளின் தேவதைகளின் தேவதையா தான் இருக்க முடியும் ., நான் படம் பார்த்த போது படத்தில் வாழ்ந்த கதாபத்திரங்களுடன் பயணித்து கதை கேட்டேன் ., நீங்களோ அவர்களோடு வாழ்ந்து கதை படித்து உள்ளீர்கள் ., மிகவும் அருமையா உணர்வின் வெளிபாடு !!!!!!!

உங்களை நினைத்து நிலா தேடி வந்ததால் எனை பற்றி மறவாமல் கூறவும் !!!!!!!

வேதாளம் on July 27, 2011 at 12:10 PM said...

வீட்டில் உங்களுக்கே உங்களுக்காய் ஒரு நிலா வர, விரைவில் திருமணம் செய்யவும்.
// குரு, உங்க பதிவ படிச்சதும் தான் கல்லுக்குள் ஈரம என்பதற்கு அர்த்தம புரிந்தது. எவ்ளோ ஜாலியா இருக்க நீங்க ஃபீல் பண்ணி என்னையும் ஃபீல் பண்ண வெச்சுட்டிங்க.

ராம்குமார் - அமுதன் on July 27, 2011 at 12:13 PM said...

அருமையான பீல் கார்க்கி...

//ஆனால் நிலா கிருஷ்ணாவை மட்டும்தானே தேடுவாள். ???//

உணர முடிந்தது...

அமுதா கிருஷ்ணா on July 27, 2011 at 12:32 PM said...

பப்லு கோவிச்சக்க போறான் ...

Sen22 on July 27, 2011 at 12:42 PM said...

நானும் நிலா-வை பார்க்காலாமுனு... சன்டே போனேன்... எனக்கு டிக்கட்டே கிடைக்கவில்லை.. (House full-Hosur) என்ன மாதிரியே நிறைய பேர் வந்திருந்தாங்க... நிலா-வை பார்க்க.. நான் அடுத்த வாரம் நிலா-வை கண்டிப்பாக பார்க்க போரேன்...

Good review..

amas on July 27, 2011 at 12:45 PM said...

எனக்கு சின்ன விஷயத்துக்கெல்லாம் கண் கலங்கி விடும், தொண்டையில் ஒரு உருண்டை அடைத்துக்கொள்ளும். அதனால் மிக நல்லாப படம் எனத்தெரிந்தும் தெய்வத்திருமகள் இன்னும் பார்க்கவில்லை. உங்கள் பதிவின் அழுத்தமும் என்னை போக விடாமலேத் தடுக்கின்றது!
amas32

LOSHAN on July 27, 2011 at 2:59 PM said...

நானும் ரசித்து, உருகிய நிலா :)
தேவதைகளின் தேவதையே தான் :)

ஆரம்பத்தில் சொல்லிய அபியும் நானும் காட்சிக்காக மீண்டும் பார்க்கப் போகிறேன் சகா

இசைப்பிரியன் on July 27, 2011 at 7:53 PM said...

நானும் கிருஷ்ணாவும் நிலாவை பிரிந்து கவலைப்படுகிறோம். ஆனால் நிலா கிருஷ்ணாவை மட்டும்தானே தேடுவாள். ???

Next step vanthuteengannu nenaikkaren Karki .... Love that

இசைப்பிரியன் on July 27, 2011 at 7:54 PM said...
This comment has been removed by the author.
ganesh on July 28, 2011 at 1:09 AM said...

நிலா மிகவும் அற்புதமான நடிப்பு.

இரசிகை on July 31, 2011 at 10:18 PM said...

azhagu..!

இரசிகை on August 1, 2011 at 10:17 PM said...

naan marupadiyum vaasithen..

கார்க்கி on August 4, 2011 at 2:08 PM said...

special thanks rasikai

 

all rights reserved to www.karkibava.com