Jul 11, 2011

பாஸ் என்கிற‌ பாக‌வ‌த‌ர்.


 

   ம‌னைவி அமைவ‌தெல்லாம் இறைவ‌ன் கொடுத்த‌ வ‌ர‌ம்னு சொல்வாங்க‌. ந‌ம்ம‌ள‌ மாதிரி மாத‌ச் ச‌ம்ப‌ள‌த்துக்கார‌ங்க‌ளுக்கு எல்லாம் பாஸ் அமைவ‌து சாத்தான் த‌ந்த‌ சாப‌ம்னு தான் சொல்ல‌ணும். என்ன‌தான் ஒழுங்கா வேலை செய்தாலும் தின‌ம் ஒரு தட‌வையாச்சும் ந‌ம்ம‌ பாஸ் ந‌‌ம்மள‌ கடிக்காம‌ இருக்க மாட்டாரு. அதுக்குன்னு பாஸ‌ ந‌ம்ம‌ கைக்குள்ள‌ போட்டுக்கிட்டா அவ‌ர் வேலையையும் சேர்த்து ந‌ம்ம‌ள‌ செய்ய‌ வ‌ச்சிடுவாரு. ம‌த்த‌ள‌த்துக்கு ரெண்டு ப‌க்க‌மும் அடின்ற‌ மாதிரி ஏதாவது ஒரு வ‌கையில் நாம‌ எல்லோருமே "பாஸ்வ‌தைக்கு" ஆளாயிட்டுதான் இருக்கோம். வ‌ல்ல‌வ‌னுக்கு வ‌ல்ல‌வ‌ன் பூமியில் ம‌ட்டுமில்ல‌, ஆஃபிஸ்ல‌யும் இருப்பாரு. அத‌னால‌ ந‌ம்ம‌ பாஸின் பாஸும் இப்ப‌டித்தானா என்ற‌ ச‌ந்தேக‌ம் என‌க்கு அடிக்க‌டி வ‌ரும். ஆனா எப்ப‌டி இருந்தாலும் பாஸ் என்ப‌வ‌ர் பாஸ்தான் என்ற‌ த‌ர்க்க‌த்தில் என‌க்கு முழு ந‌ம்பிக்கை உண்டு.

அது என்ன‌ பாஸ் என்கிற‌ பாக‌வ‌த‌ர்.. அப்படின்னு த‌லைப்பு என‌ நீங்க‌ யோசிக்க‌லாம். ம‌ண்டே மார்னிங் இதுக்கெல்லாம் நேர‌த்தை வேஸ்ட் ப‌ண்ணாதீங்க‌. அது சும்மா ரைமிங்க்காக‌ வ‌ச்ச‌து.

ச‌ரி. இந்த‌ தொட‌ர்ல‌ நாம‌ என்ன‌ பார்க்கப்‌ போறோம். தொட‌ர்ந்து நான், இல்லையில்ல‌ நாம‌.. நாம‌.. பாஸ்கிட்ட‌ வாங்குற‌ ப‌ல்பு, திட்டு,அல்வான்னு எல்லாத்தையும் பார்க்க‌ போறோம். வேற‌ ஒண்ணுமில்லைங்க‌.  ஆர‌ம்ப‌த்துல‌ ட்விட்டு மாதிரி சின்ன‌ சின்ன‌தா இருந்தாலும் வ‌ரும் வார‌ங்க‌ளில் முழுச்ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் விவ‌ரிக்க‌ப்ப‌டும்.

அப்புற‌ம் முக்கிய‌மா நீங்க‌ உங்க‌ பாஸ்கிட்ட‌ ப‌ட்ட‌ அவ‌ஸ்தைக‌ள் இருந்தா என‌க்கு எழுதுங்க‌. iamkarki@gmail.com.  அதையும் சேர்த்திடுவோம். போலாம்..ரைட்ட்ட்ட்ட்ட்ட்

_____________________________

ஓடுகிற‌ மோட்ட‌ர் என்றால் அத‌ன் ஹார்ஸ் ப‌வ‌ர் சொல்ல‌லாம். துருப்பிடிச்சு ஓடாத‌ மோட்டார் என்றால் அது எங்க‌ பாஸ்ப‌வ‌ரில் தான் சொல்ல‌ணும். ங்கொய்யால‌.. 20 வ‌ருஷ‌மா சும்மாவே இருக்காருன்னு நினைக்கிறேன்.

பாஸ் என்கிற‌ பாஸ்க‌ர‌ன் ப‌ட‌த்த‌ என் பாஸ் பார்க்க‌வே இல்லையாம். அதுக்குன்னு பாஸ் பார்க்காத‌ பாஸ்க‌ர‌ன்னா சொல்ல‌ முடியும்?

உல‌கின் சிற‌ந்த‌ ரீட்விட்டாள‌ர் என‌து பாஸ்தான். என் மெயில்க‌ளை எல்லாம் அவ‌ர் பெய‌ரில் ஃபார்வ‌ர்ட் செய்கிறார்

White rice ம‌ட்டும்தான் இருக்குன்னு க‌வ‌லைப்ப‌ட‌றாரு பாஸ்..ஸ்பூன‌ தூக்கிப்போட்டு கை வைங்க‌ சார். சாதா சாத‌ம், சாம்பார் சாத‌ம் ஆயிடும்

How many closures do u have in pipeline என்கிறார் பெரிய‌ பாஸ். என‌க்கு Timeline ம‌ட்டும்தான் சார் தெரியும். (Timeline என்ப‌து ட்விட்ட‌ர் சொல்.)

பாஸ் என‌ப்ப‌டுப‌வ‌ர் யாரெனில் அதிகார‌ம் பொருந்திய‌ அல்ல‌க்கை.

வ‌ய‌தாகிவிட்ட‌து என்ப‌து ம‌ட்டுமே த‌குதியாக‌ இருப்ப‌தால் தான் அவ‌ர் Man Ager

ம‌ன‌சுக்கு புடிச்ச‌ ம‌னைவி அமைவதை விட‌ முக்கிய‌ம் பாஸ் அமைவ‌து. ம‌னைவியிட‌ம் முத்த‌மாவ‌து கிடைக்கும்.

அடுத்த‌ ஐபிஎல்லில் டாஸுக்கு ப‌தில‌ எங்க‌ பாஸ‌ தூக்கி போட‌ சொல்ல‌ணும். என்னையே சுத்தி சுத்தி வ‌ர்றாரு.

____________________

பி.கு: இத ப‌டிச்சிட்டு இருக்கும் போது கூட‌ உங்க‌ பாஸ் பின்னாடியே ச‌த்த‌ம் போடாம‌ ஒரு ஃபைலை தூக்கிட்டு வ‌ருவாரு. அப்போ என்ன‌ செய்ய‌ணும் தெரியுமா? இங்க‌ க்ளிக்கி பாருங்க‌.

7 கருத்துக்குத்து:

முரளிகண்ணன் on July 11, 2011 at 10:21 AM said...

:-)))

Niroo on July 11, 2011 at 10:24 AM said...

கலக்கல்

சத்யா on July 11, 2011 at 10:26 AM said...

The best entertainment article

Suresh Kumar on July 11, 2011 at 7:48 PM said...

இந்த பாஸ் பிரச்சினைக்கு எல்லாம் ஒரே வழி, நீங்க ஏதாவது எக்ஸாம் எழுதி பாஸ் ஆகி பாஸ் ஆயிடுங்க :) இல்லேன்னா ஒரு கொள்ளை கூட்டத்துக்கு தலைவனானா உங்களை எல்லாரும் பாஸ் பாஸ்ன்னு தான் கூப்பிடுவாங்க..

அதிலை on July 11, 2011 at 9:32 PM said...

கலக்குங்க பாஸ்!!!

கார்க்கி on July 12, 2011 at 9:34 AM said...

ப‌திவுல‌க‌ம் ட‌ல்லடிக்கும் நேர‌த்திலும் பொறுப்பாக‌ ஊக்க‌ப‌ப்டுத்திய‌ ஐந்து ந‌ல் உள்ள‌ங‌க்ளுக்கு ந‌ன்றியோ ந‌ன்றி :))

suguna on July 15, 2011 at 1:35 AM said...

Man Ager..wow! very nice:) thx.

 

all rights reserved to www.karkibava.com