Jul 4, 2011

அழகின் அலகு

பேரழகியான தோழிக்கு என் ப‌க்க‌தில் நிற்கும்போது ம‌ட்டும்  அவ‌ள‌ழகு போத‌வில்லையாம். என்ன‌ செய்ய‌? கால‌ம் முழுக்க‌‌ என் கூட‌த்தானே நின்றாக‌ணும்!!!

###############################################################################

தின‌மும் க‌ட‌வுளுக்கு ந‌ன்றி சொல்கிறாள் தோழி நான் கிடைத்த‌ற்கு..நான் சாத்தானுக்கு சொல்ல‌ணுமா?  #தோழிமீதுகோவ‌ம்

###############################################################################

தோழி தோழியென என் தேவ‌தை தேடி நான் அலைவ‌தாக‌ நினைக்க‌ வேணாம். என்னை காணாமல்‌ அவ‌ள் த‌விப்பாளே என்ற‌ ந‌ல்ல‌ எண்ண‌ம் தான்.

###############################################################################

குமுத‌மும் விக‌ட‌னும் நீ ப‌டிப்பாயென‌ வாச‌க‌ன் ஆகிவிட்டேன்..போதாதென‌ பிளாகு வேற எழுதி வ‌ச்சிருக்கேன். எங்க‌ம்மா இருக்க‌ தாயீ #தோழியை காணும் முன் எழுதியது

###############################################################################

ஜோதிகாவை போல‌ நான் தூர‌த்தில் வ‌ரும்போதே தோழி பிடித்த‌ பாடலை பாடுவாளோ என ப‌ய‌மாக‌ இருக்கிற‌து.அப்பாட‌ல் என் ராசாவின் ம‌ன‌சில‌ என்ற பட‌த்தில் வ‌ரும்.

###############################################################################

என்னைப் பார்த்தால் த‌ன‌து க‌ஸின் மாதிரியே இருப்ப‌தாக‌ சொன்னார் தோழியின் தோழி  அப்படியா? எந்த‌ ஸ்கூலில் ப‌டிக்கிறார் என்று கேட்டதைக் கேட்டு இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறாள் தோழியின் தோழி. தோழி மட்டும் நர்சிம்மராவாகவே இருக்கிறாள் இன்னமும்.

###############################################################################

வேறு எந்த‌ ந‌டிகை ந‌டித்திருந்தாலும் இந்த‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்திருக்காது. யார் தெய்வ‌த்திரும‌க‌ள்? அனுஷ்காவா அல்ல‌து அம‌லா பாலா என்று கேட்டது தவறில்லை. ஆனால் தோழியிடம் கேட்டிருக்க கூடாது. வடிவேலுவுக்கு வீங்கியதை போல் உப்பிவிட்டது மண்டை.

###############################################################################

தோழி இன்று சிக்கன் செய்தாளாம். எப்படி இருக்குன்னு கேட்டால் "செத்து போச்சு கோழி" என்று உதட்டை சுழிக்கிறாள். #நல்லதோழி

###############################################################################

எடைக்கு கிலோ, தூரத்திற்கு மீட்டர் போல அழகுக்கு தோழியின் பெயரை அலகாக பயன்படுத்தவிருக்கிறார்களாம். அதுவும் அதற்கு 0 - 0.99 வரைதான் மதிப்பாம். அதாவது அனுஷ்கா =0.99 தோழி,  த்ரிஷா = 0.25 தோழி என்று சொல்ல வேண்டுமாம். ஒன்றிற்கு மேலிருந்தால் முன்னால் மைனஸ் சிம்பள் இருக்குமாம்.

13 கருத்துக்குத்து:

மதுரை சரவணன் on July 4, 2011 at 11:20 PM said...

thooli asaththal ... tholaa thodarattum.. vaalththukkal

சத்யா on July 4, 2011 at 11:28 PM said...

எல்லாமே ட்விட்டரில் நீங்கள் எழுதியது என்கிற ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது உங்கள் பதிவை படித்தவுடன்

சத்யா on July 4, 2011 at 11:30 PM said...

உங்களுக்கு பிடிச்சா கமெண்ட் போடுங்க.. உங்களுக்கு பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க.. நீங்க கமெண்ட் போட்டா மட்டும் போதும்...போட்டா மட்டும் போதும்...அதனால் மட்டும் கமெண்ட் போடவில்லை, உங்களின் தொடர்சியான முயற்சியை ஊக்குவிக்கவும் தான்

தராசு on July 5, 2011 at 8:23 AM said...

கொஞ்சம் பிசிறடிக்குதே, கவனம் சிதறிப் போச்சோ.....

நாய்க்குட்டி மனசு on July 5, 2011 at 8:27 AM said...

கவிதைத் தலைப்பு !

தமிழ்தோட்டம் on July 5, 2011 at 3:09 PM said...

கலக்கல் பாராட்டுக்கல்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Sen22 on July 5, 2011 at 3:46 PM said...

Thozhi updates...

Nalla irukku Karki...

இரசிகை on July 5, 2011 at 6:29 PM said...

m....

thalaippu yeerkirathu.

//
எல்லாமே ட்விட்டரில் நீங்கள் எழுதியது என்கிற ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது உங்கள் பதிவை படித்தவுடன்
//

ithellaam kettu post pannaamal irukkaatheenga.
naanga inga mattumthaan padikkirom...:)

முரளிகண்ணன் on July 6, 2011 at 10:00 AM said...

அனுஷ்கா வுக்கு மார்க் கொஞ்சம் அதிகம்தான்

ரமேஷ் வைத்யா on July 6, 2011 at 11:54 AM said...

யோவ், சவாசு. அப்பிடிப் போடு.

niranj on July 9, 2011 at 11:34 PM said...

ushhaaabbbaaa....mudiyala....yaaru pa indha thozhi ???

suguna on July 15, 2011 at 1:46 AM said...

I agree with rasigai. we r reading here only. so pls continue writing.
Thanks.

M.J. on August 14, 2011 at 12:02 PM said...

eppadi ungalala mattum?..onnum solrathukilla...

itha padichuttu ella thozhlikalum avanga ammuva pathivu elutha solli torture panrathu ungalaku theriyuma?

en thozhli unga bloga padikakudathunu antha maruthamala murugana vendikeren

all rights reserved to www.karkibava.com