Jul 1, 2011

அழைப்பு


 

  என‌து ப‌ள்ளிக்கால‌ம் திண்டிவ‌ன‌த்தில் க‌ழிந்த‌து‌. 15 வ‌ய‌துவ‌ரை அங்குதான் வ‌ள‌ர்ந்தேன். அங்கே அப்பாவும் அவ‌ர‌து சில‌ ந‌ண்ப‌ர்க‌ளும் ந‌க‌ர‌ க‌ல்வி மேம்பாட்டுக் குழு என‌ ஒன்றை தொட‌ங்கி ந‌க‌ர‌த்தில் க‌ல்வியை முன்னிட்டு சில‌ ஆரோக்கிய‌மான‌ விஷ‌ய‌ங்களையும், த‌னிப்ப‌யிற்சி டொனேஷ‌ன் போன்ற‌வ‌ற்றிற்கு எதிராக‌ போர‌ட்ட‌ங்க‌ளையும் ந‌ட‌ந்தி வ‌ந்தார்க‌ள். 99ல் அப்பாவின் ம‌றைவுக்கு பின் மெல்ல‌ அழிந்தே போன‌து க‌ல்வி மேம்பாட்டுக் குழு. இதில் ஆர‌ம்ப‌க்கால‌த்தில் மருத்துவ‌ர்.ராம‌தாஸ்,பேராசிரிய‌ர்.க‌ல்யாணி, எழுத்தாள‌ர் ராசேந்திர‌ சோழ‌ன்(அஸ்வ‌கோஷ்) போன்ற‌‌வ‌ர்க‌ள் எல்லாம் முனைப்போடு இருந்தார்க‌ள்.

நீண்ட‌ கால‌த்திற்கு பின் ந‌க‌ர‌ க‌ல்வி மேம்பாட்டுக் குழு சென்ற‌ ஆண்டு உயிர் பெற்ற‌து. கூட‌வே அப்பாவின் பெய‌ரில் "ப‌வ‌ண‌‌ந்தி க‌ல்வி அற‌க்க‌ட்ட‌ளை" என‌ ஒன்றையும் தொட‌ங்கினார்க‌ள். இந்த‌ ஆண்டு கிராம‌‌ப்புற‌ அர‌சு ப‌ள்ளிக‌ளில் ப‌த்தாவ‌து தேர்வில் அதிக‌ ம‌திப்பெண் எடுத்த‌ மூவ‌ருக்கு உத‌வித்தொகை கொடுக்க‌விருக்கிறார்க‌ள். நீண்ட‌ நாட்க‌ளாக‌வே என‌து பால்யத்தில் அப்பாவின் மூல‌ம் நான் பெற்ற‌ அனுப‌வ‌த்தையும், உரிமையோடு நான் ச‌ட்டைப்பையை துழாவிய‌ சில‌ த‌மிழ் ஆர்வ‌ல‌‌ர்க‌ள் ப‌ற்றியும் எழுத‌ வேண்டுமென‌ நினைத்துக் கொண்டிருக்கிறேன்.பிறிதொரு ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் பார்ப்போம்.

வ‌ரும் ஞாயிறு திண்டிவ‌ன‌த்தில் இந்நிக‌ழ்வு ந‌டைபெறுகிற‌து. உங்க‌ள் அனைவ‌ரையும் அன்போடு அழைக்கிறேன். இதை ந‌ட‌த்திக் கொண்டிருக்கும் ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் ந‌ன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

IMG_0445

IMG_0446

16 கருத்துக்குத்து:

Venky on July 1, 2011 at 9:37 AM said...

SUPER

Rajagopalan on July 1, 2011 at 10:16 AM said...

மிக மிக நல்ல விஷயம் கார்க்கி!
உங்கள் தந்தையை நினைத்து பெருமை அடைகிறேன்.!

வெண்பூ on July 1, 2011 at 10:21 AM said...

வாவ்.... சூப்ப‌ர்டா.. ச‌ந்தோச‌மா இருக்கு..

மோகன் குமார் on July 1, 2011 at 10:35 AM said...

நல்ல விஷயம் மகிழ்ச்சி

மோகன் குமார் on July 1, 2011 at 10:37 AM said...

எல்லாருமே சீரியஸா பேசினா எப்புடி.. அதுக்காக இதோ ரெண்டு மேட்டர்:

எங்க அண்ணன் கார்க்கி பேரு அழைப்பிதழில் எங்க? இதை ஒத்துக்க முடியாது !!

அப்புறம் அழைப்பிதழில் "ஏழு"மலைன்னு ஒரு பேர் இருக்கு அது நம்ம ஏழு வா? :))

kids doctor on July 1, 2011 at 10:49 AM said...

உங்க அப்பாவை நினைச்சா பெருமையா இருக்கு!!

Sen22 on July 1, 2011 at 11:30 AM said...

அருமையான விஷயம் கார்கி..

//அப்புறம் அழைப்பிதழில் "ஏழு"மலைன்னு ஒரு பேர் இருக்கு அது நம்ம ஏழு வா? :))//


:)))))))

இராகவன் நைஜிரியா on July 1, 2011 at 12:18 PM said...

படிக்க ரொம்ப நெகிழ்வா இருக்கு. விழா இனிதே நடைபெற வாழ்த்துகள்.

பரிசல்காரன் on July 1, 2011 at 1:05 PM said...

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்!

சுசி on July 1, 2011 at 1:52 PM said...

மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும், பெருமையும், பாராட்டுகளும், வாழ்த்துகளும் கார்க்கி.

அன்புடன் அருணா on July 1, 2011 at 7:28 PM said...

பூங்கொத்து!

"உழவன்" "Uzhavan" on July 1, 2011 at 9:31 PM said...

wow.. super. அனைவரும் பாராட்டப்படவேண்டியவர்கள்.

Kafil on July 2, 2011 at 1:43 AM said...

அப்பிடிப்பட்ட அப்பாவிற்கு எப்பிடி பட்ட பிள்ளை ஹ்ம்ம் எல்லாம் காலத்தின் கோலம் :(

கயல் on July 2, 2011 at 2:11 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி!

Rathnavel on July 2, 2011 at 6:17 AM said...

வாழ்த்துக்கள்.

குசும்பன் on July 3, 2011 at 1:52 PM said...

நல்லவிசயம். மகிழ்சியா இருக்கு.

இப்படிக்கு
ஒரு குசும்பன்

கார்க்கி உனக்கு இன்னொரு பேரு முத்துராஜா? பர்ஸ்ட் மார்க் எடுத்ததுக்கு வாழ்த்துகள்.
இப்படிக்கு
இன்னொரு குசும்பன்

 

all rights reserved to www.karkibava.com