Jul 22, 2011

குஜ‌ராத் கும‌ரி – 3


 

குஜ‌ராத் கும‌ரி  – 1

குஜ‌ராத் கும‌ரி - 2

 

"க‌விதை எழுதுவ‌து எப்ப‌டி" என‌ புத்த‌க‌ம் போட‌ நினைப்ப‌வ‌ர்க‌ள் எங்க‌ள் அலுவ‌ல‌க‌த்தில் எப்ப‌டி சேர்வ‌து என்ப‌து ப‌ற்றி எழுத‌லாம். பிற்‌பாடு க‌விதை தானாக‌ வ‌ந்துவிடும்.

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

தோக்ளா க‌ருவில் இருந்த‌போது என் அத்தை நிறைய‌ குங்கும‌ப்பூ சாப்பிட்டிருக்க‌லாம் என நினைத்தேன். ஊரெங்கும் சில்லென்ற‌ தூற‌லோடு லேசாக‌ சார‌ல் வ‌ந்த‌ நாளில்தான் புத்தி தெளிந்த‌து. அவ‌ள் பிற‌க்கும்முன் இப்பூவுல‌கில் ஏது குங்க‌ம‌ப்பூ?

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

நாலு இன்ச் இடைவெளியில் வ‌ள‌ர்பிறையும், தேய்பிறை‌யும் ஒரே ச‌ம‌ய‌த்தில் ந‌டைபெறுவ‌து தோக்ளாவிட‌ம் ம‌ட்டுமே சாத்திய‌ம்.

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

தோக்ளாவின் க‌ல‌ர் குறித்து ஆச்ச‌ரிய‌ப்ப‌டும் போதெல்லாம் ந‌ண்ப‌ன் "நீயும் பாலிஷாயிட்டே வ‌ர்ற‌ ம‌ச்சி" என்கிறான். "நில‌வு தானே ஒளியை கட‌ன் வாங்கும்? நானென்ன‌.. நில‌விட‌மே வாங்குகிறேன்?" என்று அவ‌னிட‌ம் சொன்னால் புரியாது. அத‌ற்குத்தானே நீங்க‌ள் இருக்கிறீர்க‌ள்!

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

அடுத்த‌ முறை ம‌லைவாச‌ஸ்த‌ல‌ம் செல்லும் போது "ஆப‌த்தான‌ வ‌ளைவுக‌ள்" போர்டை எடுத்துக் கொண்டு வ‌ந்துவிட‌ வேண்டும். தோக்ளாவுக்கு ப‌ய‌ன்ப‌டும்.

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

"ப‌டித்த‌தில் பிடித்த‌து".. இந்த‌க் கேள்வியை யார் என்னிட‌ம் கேட்டாலும் தோக்ளாவின் நிஜ‌ப்பெய‌ரை சொல்ல‌ச் சொல்லி ஒரு உந்துச‌க்தி என்னை உசுப்புகிற‌து.

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

Wirelessஐ க‌ண்டுபிடித்த‌வ‌ன் போல‌வே Sleevelessஐ க‌ண்டுபிடித்த‌வ‌னும் போற்ற‌துலுக்குரிய‌வ‌ன்தான். தோக்ளாவை Sleevelessல் பார்க்கும் எல்லோருமே Speechless ஆகிப் போகிறார்க‌ள் என்கிற‌து வ‌ர‌லாறு.

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

என்ன‌ பிர‌ச்சினையோ தெரிய‌வில்லை. நேற்று முழுவ‌தும் உம்மென்றே இருந்தாள் தோக்ளா. செய்திக‌ளில் கூட‌ குஜ‌ராத்தில் நில‌ந‌டுக்க‌மோ, புய‌லோ என ஏதும் சொல்ல‌வில்லை. எல்லோரிட‌மும் அப்ப‌டியே இருந்த‌தால் அது என‌க்கான‌ ப‌திலாக‌ இருக்க‌விய‌லாது. இருந்தாலும் ஒரு வித‌ "காண்டு" ம‌ன‌நிலையில் இதை எழுதிவிட்டேன்.

 

நான் உன்னைப் பார்த்து சிரிச்சா நீ என்ன‌ ப‌ண்ண‌னும்?
சொல்லு செல்ல‌ம். என்ன‌ ப‌ண்ண‌னும்?
ஒண்ணு சிரிக்க‌ணும். இல்லைன்னா ஹாய் சொல்ல‌ணும்.
அத‌ விட்டுட்டு ஏன் முறைக்கிற‌?
நீ என்ன‌ அவ்ளோ பெரிய‌ அப்பா ட‌க்க‌ரா.. அப்பா ட‌க்க‌ரான்னு கேட்கிறேன்
த‌மிழ்நாட்டு ம‌ரும‌க‌ள் ஆக‌ப் போற‌ உன‌க்கே இவ்ளோ அதுப்புன்னா.. த‌மிழ்நாட்டு பைய‌ன் நான். என‌க்கு எவ்ளோ அதுப்பு இருக்கும்? இல்லை கேட்கிறேன். எவ்ளோ அதுப்பு இருக்கும்?

10 கருத்துக்குத்து:

சிட்டி பாபு on July 22, 2011 at 10:28 AM said...

என்ன‌ பிர‌ச்சினையோ தெரிய‌வில்லை. நேற்று முழுவ‌தும் உம்மென்றே இருந்தாள் தோக்ளா. செய்திக‌ளில் கூட‌ குஜ‌ராத்தில் நில‌ந‌டுக்க‌மோ, புய‌லோ என ஏதும் சொல்ல‌வில்லை. எல்லோரிட‌மும் அப்ப‌டியே இருந்த‌தால் அது என‌க்கான‌ ப‌திலாக‌ இருக்க‌விய‌லாது. இருந்தாலும் ஒரு வித‌ "காண்டு" ம‌ன‌நிலையில் இதை எழுதிவிட்டேன்.
தோக்ளா ஓட மெயில்ID கொடு மச்சி நான் கேட்டு சொல்லுறேன்.

சிட்டி பாபு on July 22, 2011 at 10:29 AM said...

என்ன‌ பிர‌ச்சினையோ தெரிய‌வில்லை. நேற்று முழுவ‌தும் உம்மென்றே இருந்தாள் தோக்ளா. செய்திக‌ளில் கூட‌ குஜ‌ராத்தில் நில‌ந‌டுக்க‌மோ, புய‌லோ என ஏதும் சொல்ல‌வில்லை. எல்லோரிட‌மும் அப்ப‌டியே இருந்த‌தால் அது என‌க்கான‌ ப‌திலாக‌ இருக்க‌விய‌லாது. இருந்தாலும் ஒரு வித‌ "காண்டு" ம‌ன‌நிலையில் இதை எழுதிவிட்டேன்.
தோக்ளா ஓட மெயில்ID கொடு மச்சி நான் கேட்டு சொல்லுறேன்.

பாண்டி-பரணி on July 22, 2011 at 12:00 PM said...

நானென்ன‌.. நில‌விட‌மே வாங்குகிறேன்?"

இது டைரக்டர் டச்சோ !

nice

Sen22 on July 22, 2011 at 12:06 PM said...

அய்ய்யோ அய்ய்யோ.... ஊர்ல இருக்கரவனெல்லாம் கவிதை எழுதரான்.. அவனுக்கெல்லாம் கமென்ட் போடவரமாட்டேங்குது..

But உனக்கு மட்டும் தான்யா கமென்ட் போடவருது..

நீ உண்மையிலே அப்பாடக்கர் தான்யா..

அதகளம் கார்க்கி.. :))

Sriram on July 22, 2011 at 7:44 PM said...

கலக்குறீங்களே பாஸ். அப்படியே நீங்க தோக்ளா கிட்ட நீங்க கடலை போடும் போது உங்க ஆபீஸ்ல உங்களையே உற்று பார்ப்பான்களே அவங்கள எப்படி சமாளிக்கீறீங்க? உங்க அனுபவம் தெரிஞ்சா எனக்கும் யூஸ்புல்லா இருக்கும்ல...அதான்..ஹிஹி.

nellai அண்ணாச்சி on July 23, 2011 at 12:14 AM said...

ம் ம் ம் .............. அனுபவி ராஜா அனுபவி .

மோகன் குமார் on July 23, 2011 at 1:59 PM said...

தோழி மற்றும் தோக்ளா ரெண்டுமே உங்க கற்பனை என்பது புரிந்து விட்டது. ஒரு உறையில் ரெண்டு கத்தி இருக்க முடியாது; அதுவும் இவ்வளவு வெளிப்படையா!!

கார்க்கி on July 23, 2011 at 4:51 PM said...

சிட்டிபாபு, தோக்ளா@கார்க்கிமனசு.காம் :)

பரணி, ஹிஹிஹி

நன்றி சென்ன்ன்ன்ன் :))

ஸ்ரீராம், கடலைப் போட முதல் தேவை பொண்ணு கூட இல்லை. மான, ரோஷமற்ற கள்ளங்கபடமில்லாத மனம் :)

அண்ணாச்சி, :))

மோகன், இல்லை. தோழியின் மனதில் நான். என் மனதில் தோக்ளா.

மோகன் குமார் on July 23, 2011 at 5:20 PM said...

//மோகன், இல்லை. தோழியின் மனதில் நான். என் மனதில் தோக்ளா.//

ம்ஹும் லாஜிக் இடிக்குதே. தோக்ளாவை விடுங்கள். தோழி (என்ற ஒருவர் இருந்தால்) அவர் இந்த பதிவுகளை படித்தால் நிச்சயம் உங்களை இந்நேரம் மனதிலிருந்து டைவர்ஸ் செய்திருப்பார். அவ்ளோ ஜொள்ளு ஓடுது !

குழந்தபையன் on August 15, 2011 at 1:06 PM said...

கார்க்கி இது போன்று சிறு சிறு updates க்கு பதிலாக..குஜராத்து குமரி 1 போன்ற நிகழ்வு பதிவு எழுதியிருந்த நன்றாக இருக்கும்

 

all rights reserved to www.karkibava.com