Jul 16, 2011

குஜ‌ராத் கும‌ரி ‍ - 2


 

குஜ‌ராத் கும‌ரி ‍ - 1

முத‌லில் இந்த‌ குஜ்ஜு ப‌ற‌வைக்கு பெய‌ர் வைத்துவிட‌லாம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பெய‌ர் சொல்லி எழுதுவ‌தில் சிக்க‌ல்க‌ள் வ‌ருகின்ற‌ன‌. தோக்ளா. ம‌ஞ்ச‌ள் நிற‌ இட்லியைப் போல, செவ்வ‌க‌ வ‌டிவில் இருக்கும் குஜ‌ராத்தி உணவுப்ப‌ண்ட‌ம் அது. ப‌ற‌வைக்கு அப்பெய‌ர் சூட்ட‌ வ‌டிவ‌ம் நிச்ச‌ய‌ம் ஒரு கார‌ண‌ம‌ல்ல‌. இருவ‌ரும் குஜ‌ராத்தி ம‌ண்ணின் புக‌ழை ப‌ர‌ப்புவ‌தை அடிப்ப‌டைக் கார‌ண‌மாக‌ க‌ருதிக் கொண்டு நாம் ல‌ன்சுக்கு செல்வோம் வாருங்க‌ள்.

அம்மாவின் ப‌த‌வியேற்புக்கு மோடி வ‌ந்த‌போது புரிய‌வில்லை க‌ட‌வுளின் திருவிளையாட‌ல். குறிப்பால் உண‌ர்த்தியிருக்கிறார் என்று உட‌ன் ப‌டியேறிய‌ ந‌ண்ப‌னிட‌ம் சொன்னேன். அஜால் குஜால் ப‌ட‌த்தில் நாய‌க‌ன் பேசும் வ‌ச‌ன‌த்தை ச‌ட்டை செய்யாத‌ கிழ‌வ‌ன் போல‌ பார்த்தான். இர‌ண்டிர‌ண்டு ப‌டிக‌ளாக‌ தாண்டி ஓடினான். இவ‌ன் ச‌ர்க்க‌ரை வியாதிக்கார‌னாச்சே! இவ‌ன் ஏன் ல‌ட்டுக்கு அலைகிறான் என்ற‌ எண்ண‌ம் அப்போதுதான் உதித்த‌து. அனுஷ்காவையே ர‌சிக்காத‌வ‌ன் தோக்ளாவை வெறிப்ப‌த‌ன் கார‌ண‌ம‌றிவேன். அவ‌ள் ஆயிர‌ம் அனுஷ்கா.

  இப்போது எங்க‌ளிருவ‌ருக்குமிடையேயான‌ உரையாட‌ல் நீள‌த் துவ‌ங்கியிருந்த‌து. இருந்த‌ சொற்ப‌ கூட்ட‌த்தில் குஜ‌ராத்தை ப‌ற்றி அதிக‌ம் அறிந்த‌வ‌னாக‌ நானிருந்த‌து கார‌ண‌மாக‌யிருக்க‌லாம். அவ‌ளுக்கு குஜ‌ராத் என்றாள் கொள்ளைப்பிரிய‌ம், என‌க்கு அவ‌ளைப் போல‌. த‌மிழ்நாடு போலில்லையாம். மின்சார‌ தேவையில் குஜ‌ராத் த‌ன்னிறைவாம்.பெருமையாக‌ சொன்னாள். க‌ண்ணுலே க‌ர‌ண்ட் வ‌ச்சிருக்கிற‌ பொண்ணுங்க‌ இருந்தா ஏன் ஆகாது என்றேன் த‌மிழில். அவ‌ள் டீம் மேட் என‌து முழிப்பெய‌ர் க‌மென்ட்டை மொழிப்பெய‌ர்த்து சொல்ல, ஒரு மெல்லிய‌ புன்ன‌கை ஒன்றை பூத்தாள்.

“Dude. Did u get your carlsberg beer last night” என‌ ச‌ம்ப‌ந்த‌மேயில்லாம‌ல் ஆர‌ம்பித்தான் ச‌ர்க்க‌ரை வியாதிக்கார‌ன். “இல்லைடா.கேஷ‌வ் வேணாம்னு சொல்லிட்டான்” என‌ ப‌தில‌ளித்திருப்பேன்.ஆனால் தோக்ளாவின் ரியாக்ஷ‌னை அறியும்பொருட்டு “Yup. Not bad” என்றேன். தோக்ளா ரொட்டியில் க‌வ‌ன‌குவிப்பை செய்து கொண்டிருந்தாள். குஜ‌ராத்தில் ம‌துவில‌க்கு தானே என‌ நானே ஆர‌ம்பித்தேன். ஆமாம் என்ற‌வ‌ளிட‌ம் "பார்வையிலே கிக் த‌ரும் பொண்ணு இருக்கும்போது எத‌ற்கும் நெப்போலிய‌னும், ஜானி வாக்க‌ரும்?" என்று சொல்லும் தைரிய‌ம் வ‌ர‌வில்லை. அவ‌ளுக்கு பிய‌ர் பிடிக்க‌வில்லை.இனி என‌க்கும். காந்தி பிற‌ந்த‌ மாநில‌த்தில் ச‌ர‌க்கு விற்காத‌து அவ‌ளுக்கு பெருமையாக‌ இருக்கிற‌தாம். காந்தியும் தோக்ளா பிற‌ந்த‌ குஜ‌ராத்தை சேர்ந்த‌வ‌ர் என்று அறிந்த‌போது என‌க்கும் பெருமையாக‌ இருந்த‌து. இனி Ahmedabad என்று சொல்ல‌க்கூடாது Ahmedagood என்றுதான் அழைக்க‌ வேண்டுமென‌ முடிவு செய்தேன்.

அடுத்த‌ நாள் ஆர‌ஞ்சு நிற‌ குர்தியில் வ‌ந்திருந்தாள் தோக்ளா. ந‌ன்றாக‌ இருப்ப‌தாக‌ சொல்லிவிட்டு மேலே வ‌ந்துவிட்டேன்.எதிரில் வ‌ந்த‌ அட்மின் ந‌ண்ப‌ர் புது ஐடி கார்டில் குறிப்பிடுவ‌த‌ற்காக‌ என் வ‌ய‌தை கேட்டார். "2 மினிட்ஸ்" என்றேன். வ‌ய‌தை சொல்ல‌ எத‌ற்கு இர‌ண்டு நிமிட‌ங்க‌ள் என‌ குழ‌ம்பிய‌வ‌ருக்கு எப்ப‌டி தெரியும் நான் மீண்டும் பிற‌ந்த‌து ஆர‌ஞ்சி நிற‌ குர்தியை த‌ரிசித்த‌போதுதான்‌ என‌. அன்று நான் அம்மாவிட‌ம் சொல்லி க‌ச்சோடி செய்து கொண்டு வ‌ந்திருந்தேன்.அத்தைக்கு(!) இதெல்லாம் செய்ய‌ தெரியுமென்றால் யாருக்குத்தான் ச‌ந்தோஷ‌மாக‌ இருக்காது? என் அண்ணி கூட‌ குஜ‌ராத்திதான். அவ‌ர்தான் சொல்லிக் கொடுத்தார் என‌ எங்க‌ள் 2300 கிமீ தூர‌ உற‌வு முறைக்கு அடித்த‌ள‌ம் போடும் வ‌ண்ண‌ம் எடுத்துரைத்தேன். அம்மாவுக்கு ந‌ன்றி சொல்ல‌ சொன்னாள். அதையும் குஜ‌ராத்தியிலே சொன்னாள்.நான் பார‌தியிட‌ம் கேட்கிறேன்.. குஜ‌ராத்தி மொழியை கேட்காம‌லே எப்ப‌டி தெலுங்கை சுந்த‌ர‌ தெலுங்கு என்று சொல்ல‌லாம்?

பேச்சு சினிமா ப‌க்க‌ம் திரும்பிய‌து. அவ‌ளுக்கு அமீர் கான் தான் பிடிக்குமாம். ஆர‌ண்ய‌ காண்ட‌த்தில் ர‌ஜினி, க‌ம‌லை வைத்து ஒரு வித்தை சொல்லிக்கொடுப்பார்க‌ள். நான் எப்போதுடா ஆர‌ண்ய‌ காண்ட‌த்தை இந்தியில் ரீமேக்குவார்க‌ள் என‌ நொந்துப் போனேன். என‌க்கு இம்ரான் ஹாஷ்மிதான் பிடிக்குமென்றால் கார‌ண‌ம் புரிந்துவிடுமே என‌ ச‌ல்லுவிட‌ம் ச‌ர‌ண‌டைந்தேன். சென்ற‌ மாத‌ம்தான் அப்ரைச‌லில் "What u expect from management to increase productivity? என்ற‌ கேள்விக்கு “Hire girls. Fire boys” என‌ சொல்லியிருந்தேன். அடுத்த‌ முறையும் கேட்டால் என் க்யுபிக்க‌ளுக்கு ப‌க்க‌த்தில் தோக்ளா வேண்டுமென‌ சொல்லிவிடுவ‌து என‌ முடிவு செய்துக்கொண்டேன்.

என் 20 வ‌ருட‌ சைட் ச‌ர்வீஸீல் சொல்கிறேன்.. இந்த‌ குஜ‌ராத்தி பொண்ணுக்கிட்ட‌ என்ன‌வோ ஸ்பெஷ‌லா இருக்குப்பா..

-ப‌ற‌வை ப‌ற‌க்கும்

10 கருத்துக்குத்து:

பாண்டி-பரணி on July 16, 2011 at 1:51 PM said...

அத்தைக்கு(!) இதெல்லாம் செய்ய‌ தெரியுமென்றால் யாருக்குத்தான் ச‌ந்தோஷ‌மாக‌ இருக்காது?//

நீ கலக்கு பாஸ் :)

முரளிகண்ணன் on July 16, 2011 at 1:56 PM said...

கலக்கல் கார்கி

குழந்தபையன் on July 16, 2011 at 3:00 PM said...

யோவ் எப்புடியா உன்னால இப்புடி எல்லாம் எழுத முடியுது.. வாக்கியங்களை மீண்டும் மீண்டும் படித்து சிலாகித்தேன்...இந்த வித்தையை கற்று கொடு குருவே

திருவாருரிலிருந்து சுதர்சன் on July 16, 2011 at 4:08 PM said...

Hmm..hmm... Kalakkunga Boss.. kalakkunga... Jaakradha... Avanga family members yaaravadhu ram sena layo.. Rss layo irukka poranga.. :) :) :)

a family members yaaravadhu ram sena layo.. Rss layo irukka poranga.. :) :) :)

♠ ராஜு ♠ on July 16, 2011 at 4:23 PM said...

அமீர்கான் பிடிக்குமென்று சொன்னதால், அவர்,'கலைப்படைப்பு' என்று தெரிகிறது.
BTW,நீங்கள் இம்ரான் ஆஸ்மியைப் பிடிக்குமென சொல்லியிருந்தால், 'மர்டர்' ஆகியிருக்கும்.எனிவே,'ஆஷிக் பனாயா'-வுக்கு வாழ்த்துகள்.
:-)

Kaarthik on July 16, 2011 at 5:19 PM said...

//இனி Ahmedabad என்று சொல்ல‌க்கூடாது Ahmedagood என்றுதான் அழைக்க‌ வேண்டுமென‌ முடிவு செய்தேன்// - Too much :-)

"2 மினிட்ஸ்" - செம :-))

rajasundararajan on July 16, 2011 at 11:01 PM said...

//நான் பார‌தியிட‌ம் கேட்கிறேன்.. குஜ‌ராத்தி மொழியைக் கேட்காம‌லே எப்ப‌டித் தெலுங்கை சுந்த‌ரத்‌ தெலுங்கு என்று சொல்ல‌லாம்?//

கவிதைக்குப் பொய் அழகு.

நானும் குஜராத்தில் (வடோதராவில்) ஏழு ஆண்டுகள் பிழைப்பு நடத்தி இருக்கிறேன். குஜ்ஜுப் பெண்கள் அழகோ அழகுதான்.

“நம் திக்கமும் கூட வெளித்தோல் வெள்ளை வெளேரென்று இருக்கும்; உள் உதடுகள் ஆனால் அங்கே கருஞ்செறிவு காட்டிவிடும். பொன்தொலிச் சிக்குக் கனி பிளந்தன்ன... அதுதான் ஆரிய நிற மூலம் என்பது எளியேனின் ஆராய்ச்சி முடிபு,” என்று எனது 'நாடோடித் தடம்' நூலில், குஜராத் நினைவுகள் என்னும் அத்தியாயத்தில், நானும் வியந்திருக்கிறேன். ஆனால்...

பெண்கள் பேசினால், எந்த மொழியும் தேனாகிவிடும்; ஆனால் குஜராத்தி மொழி மட்டும் விதிவிலக்கு என்பது என் செவிஞானம். நம்மூர்க் குறத்திகள் பேசுவது குஜராத்தியேதான்.

கவிதைக்குப் பொய் அழகு. காதலுக்கும்தான். ஆனால் பாருங்கள் பாரதி சொன்னதில் ஓரளவு உண்மை இருக்கிறது.

Sen22 on July 18, 2011 at 1:09 PM said...

//"பார்வையிலே கிக் த‌ரும் பொண்ணு இருக்கும்போது எத‌ற்கும் நெப்போலிய‌னும், ஜானி வாக்க‌ரும்?" என்று சொல்லும் தைரிய‌ம் வ‌ர‌வில்லை. அவ‌ளுக்கு பிய‌ர் பிடிக்க‌வில்லை.இனி என‌க்கும். //

சும்மாதானே சொன்னீங்க பாஸ்..

//"What u expect from management to increase productivity? என்ற‌ கேள்விக்கு “Hire girls. Fire boys” என‌ சொல்லியிருந்தேன். அடுத்த‌ முறையும் கேட்டால் என் க்யுபிக்க‌ளுக்கு ப‌க்க‌த்தில் தோக்ளா வேண்டுமென‌ சொல்லிவிடுவ‌து என‌ முடிவு செய்துக்கொண்டேன்.

என் 20 வ‌ருட‌ சைட் ச‌ர்வீஸீல் சொல்கிறேன்.. இந்த‌ குஜ‌ராத்தி பொண்ணுக்கிட்ட‌ என்ன‌வோ ஸ்பெஷ‌லா இருக்குப்பா..//

Superb....

கலக்கரீங்க கார்கி..

waiting for next updates.... :))

sivakasi maappillai on July 19, 2011 at 11:17 AM said...

கல்யாணமான குஜ்ஜூ பொண்ணுங்கள பாத்தா நொந்துடுவீங்க... பத்து குசேலன், பதினைஞ்சு வில்லு கலந்த கலவை ஆயிடுவாளுங்க....

கொங்கு நாடோடி on September 29, 2011 at 3:45 AM said...

என் 20 வ‌ருட‌ சைட் ச‌ர்வீஸீல் சொல்கிறேன்..

வயசு 29 ஆனா 20 வ‌ருட‌ சைட் சர்வீஸ்... இமம் பிஞ்சிலேயே பழுதிட்டியா?

 

all rights reserved to www.karkibava.com