Jul 28, 2011

குஜ‌ராத் கும‌ரி – 4

12 கருத்துக்குத்து

 

குஜ‌ராத் கும‌ரி  – 1

குஜ‌ராத் கும‌ரி – 2

குஜ‌ராத் கும‌ரி – 3

 

ட்விட்ட‌ரில் ADD YOUR LOCATION என்ற‌ ப‌ட்ட‌னை அழுத்தினால் "தோக்ளாவின் ம‌ன‌சு" என்றுதானே காட்ட‌ வேண்டும்? ஏதோ BUG போல‌

{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

ச‌ந்தேக‌மே இல்லை. குஜ்ஜுவின் அப்பா Structural engineer ஆக‌த்தான் இருக்க‌ணும்

{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

தோக்ளா என் எக்ஸ்டென்ஷ‌னுக்கு அழைத்தால் ம‌ட்டும் லேன்ட்லைன் கூட‌ மொபைல் ஆகி ப‌ற‌ந்து என் கைக‌ளுக்கு வ‌ருகிற‌து.

{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

குஜராத்திக்கு கூழ் பிடிக்காது. அவங்க ஸ்டைலில் மேங்கோ ஜூஸ் படைக்கலாம் என இருக்கிரேன். #ஆடி

{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

  ஏதோ ஒரு குஜ‌ராத்தி மெல‌டி பாட‌லை கால‌ர் ட்யூனாக‌ வைத்திருக்கிறாள் தோக்ளா. அழைக்கும் போதெல்லாம் ஃபோனை எடுத்து பேசுகிறாளா அல்ல‌து பாட‌ல்தானா என்று தெரிவ‌தேயில்லை.

{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

அம்மாவுக்கு கூட தோக்ளா பற்றி தெரிந்துவிட்டது. நம்ம பரம்பரைக்கே சக்கரை வியாதி இருந்துச்சுடா.. அவ வேணுமான்னு யோசிச்சிக்க என்கிறார்.

{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

தோக்ளாவிற்கு ஆன்சைட் வாய்ப்பே இல்லை. அந்த நாடுக்கு சென்றால் இவள் Cubicleஐ சுற்றி "Hot & Confined space" என்று எழுதி வைக்கிறார்களாம்.

{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

காஃபி குடிப்பதற்கு முன் ஸ்வீட் சாப்பிட கூடாது என்பது போல, கோவிலுக்கு போகும்முன் தோக்ளாவை பார்க்க கூடாது. தெய்வத்தை உணரவே முடிவதில்லை.

{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

வார‌த்தின் முத‌ல்நாள் எல்லோரையும் என‌ர்ஜைஸ் செய்ய‌ வேண்டும் என்ற‌ எண்ண‌த்துட‌ன் உடைய‌ணியும் குஜ‌ராத்திக்கு ப‌த்ம‌பூஷ‌ன் ப‌ரிந்துரைக்கிறேன்

{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

என் ம‌ன‌சே ஒரு ஃபேஸ்புக் வாலு.. அதுல‌ க‌விதையை எழுதிட்டு போறா என் ஆளு #குஜ்ஜுவுட‌ன் குஜால் ஃப்ரைடே

{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

கண்ணுக்கு கண் கூடாதென்று காந்தி சொன்னது வேறு அர்த்தத்தில். கொஞ்சம் என்னைப் பாரேன். (உப‌ய‌ம்:ப‌ரிச‌ல்)

Jul 26, 2011

தெய்வத்திருமகள்–நிலா

26 கருத்துக்குத்து

 

அபியும் நானும் படத்தில் ஒருகாட்சி. த்ரிஷா வீட்டில் இருக்கும் வேலைக்காரன், பிரகாஷ்ராஜிடம் பேச வருவார். தன் மகள் இன்னொருவனை காதலிக்கிறாள் என தெரிந்து ஒருவித கலக்கத்தில் இருப்பார் பிரகாஷ்ராஜ். மனதில் தோன்றியதை பேசியபின் முடிவில் வேலைக்காரன் சொல்வார்

“உனக்குத்தான் சார் அது பொண்ணு.. எனக்கு அம்மா சார்”.

  வசனத்தின் முடிவில் சில நொடிகள் மெளனத்தை  பேசவிட்டு பின் ஒரு இசை சேர்த்திருப்பார் வித்யாசாகர். அந்த குறிப்பின் முடிவில் பாடல் தொடங்கும். இசை ஆரம்பிக்கும் புள்ளியில்தான் அந்த சிலிர்ப்பு நமக்கு ஏற்படும். அடுத்தமுறை படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் மறக்காமல் கவனியுங்கள்.

  செல்லுலாய்டின் வழி உணர்ச்சிகளை கடத்தும் யுத்தி எல்லோருக்கும் தெரிவதில்லை. கதையோ, நடிகர்களோ,இசையோ எதுவோ ஒன்று இயக்குனருக்கு உதவி செய்யும், அஞ்சலி போன்ற ஒரு சில திரைப்படங்களில் மட்டும் எல்லாமே நிறைவாய் அமையும். தெய்வத்திருமகளில் இசையைத் தவிர மற்ற அனைத்தும் துணை புரிந்திருக்கிறது.

பெண்களே தேவதைகள். பெண் குழந்தைகளை என்னவென்று சொல்ல! தேவதைகளின் தேவதை எனலாமா? ஆம் என்றால் நிலா தேவதைகளின் தேவதைகளின் தேவதை. இந்தக்கனம்  இதயம் முழுவதும் நிறைந்திருக்கிறாள். கைவிரித்து, அகல கண்விரித்து நிலா செய்யும்  அந்த கடைசி காட்சியில் உறைந்த நான் இன்னும் மீளவில்லை. திரையரங்கில் இருந்து வீடு வரை சாலையை பார்த்து வண்டி ஓட்டவேயில்லை. வானில் இருந்த நிலவிடம் ஏதேனும் அவசரம் என்றால் சொல்ல சொல்லியிருக்கிறாள் நிலா. வீடு சேரும்வரை சிலபல விஷயங்களை சொல்லியிருக்கிறேன்.

”ஷ்வேதா” என்று அழைக்கும்போது அவள் முகம் போகும் கோணலை கவனித்தீர்களா? விக்ரம் கதை சொல்கிறேன் என்று படுத்தும்போது அவள் கண்கள் பேசியதை கவனித்தீர்களா? விக்ரம் சாவியை கொடுக்காமல் தாமதமாக வரும்போது காரணம் தெரியாமல் கோவப்பட்டுவிட்டு, பின்பு உண்மை தெரிந்து “சாரி” கேட்கும் காட்சியில் அவள் உடல்மொழியை கவனித்தீர்களா? நீண்ட நாட்களுக்கு பின்பு விக்ரமை கோர்ட்டில் பார்த்த நொடியில் சாப்பிடாம ஒல்லியாயிட்ட என்று சைகை காட்டும்பொழுது.. .. இப்படிக் கேட்டுக் கொண்டேயிருந்தால் பதிவு முழுவதும் கவனித்தீர்களா மட்டும்தான் இருக்கும். நிலா என்னுள் நீக்கமற நிறைந்துவிட்டாள்.

இதை தட்டச்சும் பொழுது கூட கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் ஒன்று சேர்த்து நிலா வந்தாச்சு என்று சொல்லிப்பார்த்து விட்டுதான் தொடர்கிறேன். படம் பார்க்கும்பொழுது எங்கேயும் நான் கலங்கவில்லை. படம் முடிந்துவிட்டது போடா டேய் என்று பெயர் போட்டபொழுதுதான் லேசாக கலங்கினேன். அப்போது நிலா தூங்கிக் கொண்டிருந்தாள். நானும் கிருஷ்ணாவும் சத்தம் போடாமல் வந்துவிட்டோம்.

படத்தை பற்றி எழுத நிறைய இருக்கலாம்.இது சுட்டது. திருடியது.  எனக்கு அதெல்லாம் கவலையில்லை. எனக்கிருக்கும் ஒரே ஒரு பிரச்சினை நானும் கிருஷ்ணாவும் நிலாவை பிரிந்து கவலைப்படுகிறோம். ஆனால் நிலா கிருஷ்ணாவை மட்டும்தானே தேடுவாள். ???

 Sad smile

Jul 22, 2011

குஜ‌ராத் கும‌ரி – 3

10 கருத்துக்குத்து

 

குஜ‌ராத் கும‌ரி  – 1

குஜ‌ராத் கும‌ரி - 2

 

"க‌விதை எழுதுவ‌து எப்ப‌டி" என‌ புத்த‌க‌ம் போட‌ நினைப்ப‌வ‌ர்க‌ள் எங்க‌ள் அலுவ‌ல‌க‌த்தில் எப்ப‌டி சேர்வ‌து என்ப‌து ப‌ற்றி எழுத‌லாம். பிற்‌பாடு க‌விதை தானாக‌ வ‌ந்துவிடும்.

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

தோக்ளா க‌ருவில் இருந்த‌போது என் அத்தை நிறைய‌ குங்கும‌ப்பூ சாப்பிட்டிருக்க‌லாம் என நினைத்தேன். ஊரெங்கும் சில்லென்ற‌ தூற‌லோடு லேசாக‌ சார‌ல் வ‌ந்த‌ நாளில்தான் புத்தி தெளிந்த‌து. அவ‌ள் பிற‌க்கும்முன் இப்பூவுல‌கில் ஏது குங்க‌ம‌ப்பூ?

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

நாலு இன்ச் இடைவெளியில் வ‌ள‌ர்பிறையும், தேய்பிறை‌யும் ஒரே ச‌ம‌ய‌த்தில் ந‌டைபெறுவ‌து தோக்ளாவிட‌ம் ம‌ட்டுமே சாத்திய‌ம்.

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

தோக்ளாவின் க‌ல‌ர் குறித்து ஆச்ச‌ரிய‌ப்ப‌டும் போதெல்லாம் ந‌ண்ப‌ன் "நீயும் பாலிஷாயிட்டே வ‌ர்ற‌ ம‌ச்சி" என்கிறான். "நில‌வு தானே ஒளியை கட‌ன் வாங்கும்? நானென்ன‌.. நில‌விட‌மே வாங்குகிறேன்?" என்று அவ‌னிட‌ம் சொன்னால் புரியாது. அத‌ற்குத்தானே நீங்க‌ள் இருக்கிறீர்க‌ள்!

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

அடுத்த‌ முறை ம‌லைவாச‌ஸ்த‌ல‌ம் செல்லும் போது "ஆப‌த்தான‌ வ‌ளைவுக‌ள்" போர்டை எடுத்துக் கொண்டு வ‌ந்துவிட‌ வேண்டும். தோக்ளாவுக்கு ப‌ய‌ன்ப‌டும்.

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

"ப‌டித்த‌தில் பிடித்த‌து".. இந்த‌க் கேள்வியை யார் என்னிட‌ம் கேட்டாலும் தோக்ளாவின் நிஜ‌ப்பெய‌ரை சொல்ல‌ச் சொல்லி ஒரு உந்துச‌க்தி என்னை உசுப்புகிற‌து.

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

Wirelessஐ க‌ண்டுபிடித்த‌வ‌ன் போல‌வே Sleevelessஐ க‌ண்டுபிடித்த‌வ‌னும் போற்ற‌துலுக்குரிய‌வ‌ன்தான். தோக்ளாவை Sleevelessல் பார்க்கும் எல்லோருமே Speechless ஆகிப் போகிறார்க‌ள் என்கிற‌து வ‌ர‌லாறு.

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

என்ன‌ பிர‌ச்சினையோ தெரிய‌வில்லை. நேற்று முழுவ‌தும் உம்மென்றே இருந்தாள் தோக்ளா. செய்திக‌ளில் கூட‌ குஜ‌ராத்தில் நில‌ந‌டுக்க‌மோ, புய‌லோ என ஏதும் சொல்ல‌வில்லை. எல்லோரிட‌மும் அப்ப‌டியே இருந்த‌தால் அது என‌க்கான‌ ப‌திலாக‌ இருக்க‌விய‌லாது. இருந்தாலும் ஒரு வித‌ "காண்டு" ம‌ன‌நிலையில் இதை எழுதிவிட்டேன்.

 

நான் உன்னைப் பார்த்து சிரிச்சா நீ என்ன‌ ப‌ண்ண‌னும்?
சொல்லு செல்ல‌ம். என்ன‌ ப‌ண்ண‌னும்?
ஒண்ணு சிரிக்க‌ணும். இல்லைன்னா ஹாய் சொல்ல‌ணும்.
அத‌ விட்டுட்டு ஏன் முறைக்கிற‌?
நீ என்ன‌ அவ்ளோ பெரிய‌ அப்பா ட‌க்க‌ரா.. அப்பா ட‌க்க‌ரான்னு கேட்கிறேன்
த‌மிழ்நாட்டு ம‌ரும‌க‌ள் ஆக‌ப் போற‌ உன‌க்கே இவ்ளோ அதுப்புன்னா.. த‌மிழ்நாட்டு பைய‌ன் நான். என‌க்கு எவ்ளோ அதுப்பு இருக்கும்? இல்லை கேட்கிறேன். எவ்ளோ அதுப்பு இருக்கும்?

Jul 16, 2011

குஜ‌ராத் கும‌ரி ‍ - 2

10 கருத்துக்குத்து

 

குஜ‌ராத் கும‌ரி ‍ - 1

முத‌லில் இந்த‌ குஜ்ஜு ப‌ற‌வைக்கு பெய‌ர் வைத்துவிட‌லாம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பெய‌ர் சொல்லி எழுதுவ‌தில் சிக்க‌ல்க‌ள் வ‌ருகின்ற‌ன‌. தோக்ளா. ம‌ஞ்ச‌ள் நிற‌ இட்லியைப் போல, செவ்வ‌க‌ வ‌டிவில் இருக்கும் குஜ‌ராத்தி உணவுப்ப‌ண்ட‌ம் அது. ப‌ற‌வைக்கு அப்பெய‌ர் சூட்ட‌ வ‌டிவ‌ம் நிச்ச‌ய‌ம் ஒரு கார‌ண‌ம‌ல்ல‌. இருவ‌ரும் குஜ‌ராத்தி ம‌ண்ணின் புக‌ழை ப‌ர‌ப்புவ‌தை அடிப்ப‌டைக் கார‌ண‌மாக‌ க‌ருதிக் கொண்டு நாம் ல‌ன்சுக்கு செல்வோம் வாருங்க‌ள்.

அம்மாவின் ப‌த‌வியேற்புக்கு மோடி வ‌ந்த‌போது புரிய‌வில்லை க‌ட‌வுளின் திருவிளையாட‌ல். குறிப்பால் உண‌ர்த்தியிருக்கிறார் என்று உட‌ன் ப‌டியேறிய‌ ந‌ண்ப‌னிட‌ம் சொன்னேன். அஜால் குஜால் ப‌ட‌த்தில் நாய‌க‌ன் பேசும் வ‌ச‌ன‌த்தை ச‌ட்டை செய்யாத‌ கிழ‌வ‌ன் போல‌ பார்த்தான். இர‌ண்டிர‌ண்டு ப‌டிக‌ளாக‌ தாண்டி ஓடினான். இவ‌ன் ச‌ர்க்க‌ரை வியாதிக்கார‌னாச்சே! இவ‌ன் ஏன் ல‌ட்டுக்கு அலைகிறான் என்ற‌ எண்ண‌ம் அப்போதுதான் உதித்த‌து. அனுஷ்காவையே ர‌சிக்காத‌வ‌ன் தோக்ளாவை வெறிப்ப‌த‌ன் கார‌ண‌ம‌றிவேன். அவ‌ள் ஆயிர‌ம் அனுஷ்கா.

  இப்போது எங்க‌ளிருவ‌ருக்குமிடையேயான‌ உரையாட‌ல் நீள‌த் துவ‌ங்கியிருந்த‌து. இருந்த‌ சொற்ப‌ கூட்ட‌த்தில் குஜ‌ராத்தை ப‌ற்றி அதிக‌ம் அறிந்த‌வ‌னாக‌ நானிருந்த‌து கார‌ண‌மாக‌யிருக்க‌லாம். அவ‌ளுக்கு குஜ‌ராத் என்றாள் கொள்ளைப்பிரிய‌ம், என‌க்கு அவ‌ளைப் போல‌. த‌மிழ்நாடு போலில்லையாம். மின்சார‌ தேவையில் குஜ‌ராத் த‌ன்னிறைவாம்.பெருமையாக‌ சொன்னாள். க‌ண்ணுலே க‌ர‌ண்ட் வ‌ச்சிருக்கிற‌ பொண்ணுங்க‌ இருந்தா ஏன் ஆகாது என்றேன் த‌மிழில். அவ‌ள் டீம் மேட் என‌து முழிப்பெய‌ர் க‌மென்ட்டை மொழிப்பெய‌ர்த்து சொல்ல, ஒரு மெல்லிய‌ புன்ன‌கை ஒன்றை பூத்தாள்.

“Dude. Did u get your carlsberg beer last night” என‌ ச‌ம்ப‌ந்த‌மேயில்லாம‌ல் ஆர‌ம்பித்தான் ச‌ர்க்க‌ரை வியாதிக்கார‌ன். “இல்லைடா.கேஷ‌வ் வேணாம்னு சொல்லிட்டான்” என‌ ப‌தில‌ளித்திருப்பேன்.ஆனால் தோக்ளாவின் ரியாக்ஷ‌னை அறியும்பொருட்டு “Yup. Not bad” என்றேன். தோக்ளா ரொட்டியில் க‌வ‌ன‌குவிப்பை செய்து கொண்டிருந்தாள். குஜ‌ராத்தில் ம‌துவில‌க்கு தானே என‌ நானே ஆர‌ம்பித்தேன். ஆமாம் என்ற‌வ‌ளிட‌ம் "பார்வையிலே கிக் த‌ரும் பொண்ணு இருக்கும்போது எத‌ற்கும் நெப்போலிய‌னும், ஜானி வாக்க‌ரும்?" என்று சொல்லும் தைரிய‌ம் வ‌ர‌வில்லை. அவ‌ளுக்கு பிய‌ர் பிடிக்க‌வில்லை.இனி என‌க்கும். காந்தி பிற‌ந்த‌ மாநில‌த்தில் ச‌ர‌க்கு விற்காத‌து அவ‌ளுக்கு பெருமையாக‌ இருக்கிற‌தாம். காந்தியும் தோக்ளா பிற‌ந்த‌ குஜ‌ராத்தை சேர்ந்த‌வ‌ர் என்று அறிந்த‌போது என‌க்கும் பெருமையாக‌ இருந்த‌து. இனி Ahmedabad என்று சொல்ல‌க்கூடாது Ahmedagood என்றுதான் அழைக்க‌ வேண்டுமென‌ முடிவு செய்தேன்.

அடுத்த‌ நாள் ஆர‌ஞ்சு நிற‌ குர்தியில் வ‌ந்திருந்தாள் தோக்ளா. ந‌ன்றாக‌ இருப்ப‌தாக‌ சொல்லிவிட்டு மேலே வ‌ந்துவிட்டேன்.எதிரில் வ‌ந்த‌ அட்மின் ந‌ண்ப‌ர் புது ஐடி கார்டில் குறிப்பிடுவ‌த‌ற்காக‌ என் வ‌ய‌தை கேட்டார். "2 மினிட்ஸ்" என்றேன். வ‌ய‌தை சொல்ல‌ எத‌ற்கு இர‌ண்டு நிமிட‌ங்க‌ள் என‌ குழ‌ம்பிய‌வ‌ருக்கு எப்ப‌டி தெரியும் நான் மீண்டும் பிற‌ந்த‌து ஆர‌ஞ்சி நிற‌ குர்தியை த‌ரிசித்த‌போதுதான்‌ என‌. அன்று நான் அம்மாவிட‌ம் சொல்லி க‌ச்சோடி செய்து கொண்டு வ‌ந்திருந்தேன்.அத்தைக்கு(!) இதெல்லாம் செய்ய‌ தெரியுமென்றால் யாருக்குத்தான் ச‌ந்தோஷ‌மாக‌ இருக்காது? என் அண்ணி கூட‌ குஜ‌ராத்திதான். அவ‌ர்தான் சொல்லிக் கொடுத்தார் என‌ எங்க‌ள் 2300 கிமீ தூர‌ உற‌வு முறைக்கு அடித்த‌ள‌ம் போடும் வ‌ண்ண‌ம் எடுத்துரைத்தேன். அம்மாவுக்கு ந‌ன்றி சொல்ல‌ சொன்னாள். அதையும் குஜ‌ராத்தியிலே சொன்னாள்.நான் பார‌தியிட‌ம் கேட்கிறேன்.. குஜ‌ராத்தி மொழியை கேட்காம‌லே எப்ப‌டி தெலுங்கை சுந்த‌ர‌ தெலுங்கு என்று சொல்ல‌லாம்?

பேச்சு சினிமா ப‌க்க‌ம் திரும்பிய‌து. அவ‌ளுக்கு அமீர் கான் தான் பிடிக்குமாம். ஆர‌ண்ய‌ காண்ட‌த்தில் ர‌ஜினி, க‌ம‌லை வைத்து ஒரு வித்தை சொல்லிக்கொடுப்பார்க‌ள். நான் எப்போதுடா ஆர‌ண்ய‌ காண்ட‌த்தை இந்தியில் ரீமேக்குவார்க‌ள் என‌ நொந்துப் போனேன். என‌க்கு இம்ரான் ஹாஷ்மிதான் பிடிக்குமென்றால் கார‌ண‌ம் புரிந்துவிடுமே என‌ ச‌ல்லுவிட‌ம் ச‌ர‌ண‌டைந்தேன். சென்ற‌ மாத‌ம்தான் அப்ரைச‌லில் "What u expect from management to increase productivity? என்ற‌ கேள்விக்கு “Hire girls. Fire boys” என‌ சொல்லியிருந்தேன். அடுத்த‌ முறையும் கேட்டால் என் க்யுபிக்க‌ளுக்கு ப‌க்க‌த்தில் தோக்ளா வேண்டுமென‌ சொல்லிவிடுவ‌து என‌ முடிவு செய்துக்கொண்டேன்.

என் 20 வ‌ருட‌ சைட் ச‌ர்வீஸீல் சொல்கிறேன்.. இந்த‌ குஜ‌ராத்தி பொண்ணுக்கிட்ட‌ என்ன‌வோ ஸ்பெஷ‌லா இருக்குப்பா..

-ப‌ற‌வை ப‌ற‌க்கும்

Jul 12, 2011

குஜ‌ராத் கும‌ரி ‍ - 1

12 கருத்துக்குத்து

 

டிஸ்கி: இது உண்மைச் ச‌ம்ப‌வ‌ம்

_________________________________ 

வ‌ற‌ண்ட‌ த‌மிழ் மாநில‌ கிராம‌ங்க‌ளை பார்த்திருக்கிறீர்க‌ளா? க‌ளிம‌ண் நில‌ம் பிள‌ந்து போயிருக்கும். க‌ருத்து, சுருங்கிய‌ தோலுட‌னும் ஒரு குச்சியிட‌னும் தாத்தா க‌ண்ணுக்கு மேல் கைக‌ளை வைத்து வான‌ம் பார்த்த‌ப‌டி ந‌ட‌ந்துக் கொண்டிருப்பார். மிக‌ப்பெரிய‌ ஏரியின் ந‌டுவே நிற்கும் த‌ண்ணீரான‌து எத்த‌னை காக‌ங்க‌ள் வ‌ந்து க‌ற்க‌ள் போட்டாலும் மேலே வ‌ராது. க‌ர்ண‌ணுட‌ன் பிற‌ந்த‌ க‌வ‌ச‌ குண்ட‌ல‌த்தைப் போல‌ எல்லோரும் கையில் ஒரு குட‌த்துட‌ன் அண்டை ஊரின் மீது நீர்ப்போர் தொடுத்துக் கொண்டேயிருப்பார்க‌ள். பொங்க‌லும், தீபாவ‌ளியும் அவ‌ர்க‌ளுக்கு மாத‌ம் பார்த்து வ‌ருவ‌தில்லை. வான‌ம் பார்த்தே வ‌ரும்.

இப்ப‌டி ஒரு பாலைவ‌ன‌மாக‌த்தான் இருந்த‌து எங்க‌ள் அலுவ‌ல‌க‌மும். நான் இங்கே சேர்ந்து 9 மாத‌மாகிற‌து. ஆனால் 9 வ‌ருட‌ வ‌ர‌லாறும் கேட்டுவிட்டேன். தின‌ம் தின‌ம் ம‌திய‌ இடைவெளியில் இது குறித்து பேசாம‌ல் இருக்க‌வே மாட்டோம். காத‌லிக்கு நேர‌மில்லை முத்துராம‌ன் போல‌ "அலுவ‌ல‌க‌த்தில் காத‌லிக்க‌ ஜாத‌க‌த்தில் வ‌ழியுமில்லை" என்று பாடித் திரிந்தோம்.இருந்த‌ 4 பெண்க‌ளும் எட்டாவாது ப‌டிக்கும் பிள்ளைக‌ளின் ப‌ராக்கிர‌ம‌ங்க‌ளை பேசியே போர‌டித்துக் கொண்டிருந்த‌ன‌ர். இதையே கார‌ண‌ம் காட்டி வேலையை ராஜினாமா செய்துவிட‌லாமா என்ற‌ ஆழ்ந்த‌ யோசைனையில் நான் இருந்த‌போதுதான் அச்ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌து.

எங்க‌ள் அலுவ‌ல‌க‌ சீனிய‌ர் ஆன்ட்டி அதிச‌ய‌மாக‌ எங்க‌ள் ஃப்ளோருக்கு வ‌ந்தார்.எங்க‌ள் ஃப்ளோர் என்ப‌து இர‌ன்டாவ‌து த‌ள‌ம். இங்கே க‌ட்டிள‌ம் காளைய‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே அனும‌தி. ம‌ற்ற‌ எல்லோரும் முத‌ல் த‌ள‌த்திலே முட‌ங்கிவிட வேண்டிய‌துதான். சுருக்க‌மாக‌ சொல்ல‌ப்போனால் இது ஒரு சிவாஜிப்ப‌ட‌ ஆஃபீஸ் ரூம். ஆச்சா? இவ‌ர் ஏன் இங்கே வ‌ருகிறார் என‌ யோசிக்க‌த் தொட‌ங்கினேன். பாபாவை தொட‌ர்ந்து வ‌ந்த‌ ச‌ந்திர‌முகி போல‌, குசேல‌னுக்கு பின்னால் வ‌ந்த‌ சிவாஜியைப் போல‌ ஆன்டிக்கு பின்னால் வ‌ந்தார் அந்த‌ கோதுமை நிற‌ அழ‌கி. அவ‌ரை கொஞ்ச‌ம் ர‌சித்து வ‌ர்ணிக்க‌ வேண்டியிருப்ப‌தால் த‌னிப்ப‌த்திக்கு போய்விட‌லாம். வாருங்க‌ள்.

100ல் இருந்து 40 க‌ழித்து, அதை இர‌ண்டால் வகுத்து அதில் அம்மாவின் ராசி எண்ணான‌ 9ஐயோ, புது ராசியான‌ 7 ஐயோ க‌ழித்துவிடுங்க‌ள். அவ‌ர் வ‌ய‌து அதுவாக‌த்தான் இருக்கும். ஏஷிய‌ன் பெயின்ட் த‌ள‌த்திற்கு சென்று 40% சிவ‌ப்பு, 30% வெள்ளை, 30% பிங்க் என‌ குழைத்துப் பாருங்க‌ள். அதுதான் அவ‌ரின் நிற‌ம். த‌ம‌ன்னாவையும், சிம்ர‌னையும் கூட்டி அதை இர‌ண்டால் வ‌குத்து ஒரு ஃபிக‌ரை கொண்டு வாருங்க‌ள். அப்ப‌டித்தான் இருந்தார் அவ‌ர். காதுக‌ளில் மின்னிய‌ க‌ல், இவ‌ர் தேக‌ ஸ்ப‌ரிச‌ம் கொண்ட‌ நாளில்தான் மின்ன‌த் தொட‌ங்கியிருக்க‌ வேண்டும். நெற்றியில் ச‌ரிந்த கேச‌த்தை ஒதுக்கிய‌ அவ‌ர் விர‌ல்க‌ள் வீணையின் குளோனிங்காக‌த்தான் இருக்க‌க்கூடும். காங்கிர‌சிற்கு திமுக‌வை பிடிக்குமா, பிடிக்காதா என்ற‌ ச‌ந்தேக‌த்தைப் போல‌வே அவ‌ர் உடை இருந்த‌து. ஒரு கோண‌த்தில் பிடிப்ப‌து போல‌வும், இன்னொரு கோண‌த்தில் தொள‌தொள‌வென்றும் இருந்த‌து. ஜ‌ன்ன‌லின் அருகே எப்போதும் அசையும் ம‌ர‌ம் நின்றுபோயிருந்த‌து.

திஸ் இஸ் கார்க்கி என்ற‌ ஆன்ட்டி என்னைப் பார்த்து நியூ ஜாய்னீ.. _______ என்றார். அவ‌ர் பெய‌ர் சொல்லும் நேர‌ம் அந்த‌ பொம்மை என்னை நோக்கி கைக‌ள் நீட்டியிருந்த‌தால் காதில் விழ‌வில்லை. "அழ‌கான‌ ப‌ற‌‌வைக்கு பெய‌ர் வேண்டுமா" என‌ நா.மு காதில் ஓதிக்கொண்டிருந்தார். அடுத்த‌ சில‌ ம‌ணி நேர‌ங்க‌ள் கோமாவில் இருந்தேன் என‌ யூகிக்கிறேன்.

மொத்த‌ ஆஃபிஸும் இதை ப‌ற்றிதான் பேசிக்கொன்டிருக்கிறார்க‌ள்.இப்ப‌டியொரு அழ‌கியை "இதை" என்றா சொல்வ‌து என்ற‌ கோவ‌ம் வேண்டாம். நான் கோமாவில் விழுந்த‌ க‌தையை சொல்கிறேன். இது ந‌ல்ல‌த‌ல்ல‌ என்று இன்று காலையில் இருந்து அவ‌ர் இருந்த‌ திசைப்ப‌க்க‌மே போகாம‌ல் இருந்தேன்.ம‌ணி 1 ஆன‌போது மீண்டும் அதே குசேல‌னும், சிவாஜியும் வ‌ந்தார்க‌ள். என் மொக்கை ப‌ராக்கிர‌ம‌ங்க‌ளை எடுத்து சொன்னாராம் குசேல‌ன் ஆன்ட்டி. என்னுட‌ன் ல‌ன்ச் சாப்பிட‌ விரும்புவ‌தாக‌ அந்த‌ ப‌ற‌வை சொன்ன‌து. நான் ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்தேன். சொல்லிவிட்டேனா? இன்று அந்த‌ குஜ‌ராத்தி ப‌ற‌வை ஸ்லீவ்லெஸ்ஸில் வேறு வ‌ந்திருக்கிற‌து.

ஹேய்..ராசாத்தி..குஜ‌ராத்தி.. வா வா வா..

அடியே சீமாட்டி.. சுக்கா ரொட்டி தா தா தா..

கோதுமையே..கோதுமையே..

மாலை சூடும் குஜ்ஜு கும‌ரியே

ம‌ன‌சு த‌னியே பாடிக்கொண்டிருந்த‌து.

ல‌ன்ச் முடிந்த‌வுட‌ன் இதை தோழியிட‌ம் சொல்லிவிடுவ‌தே ந‌ல்ல‌து என்று அழைத்தேன்.  "இர‌ண்டாவ‌து நாளே ஸ்லீவ்லெஸ்ஸா?நீ ஒரு நாலு நாள் க‌ழிச்சு க‌தை சொல்லு அம்மு" என்று வைத்துவிட்டாள். புரிந்துதான் சொன்னாளா?????‍

-ப‌ற‌வை ப‌ற‌க்கும்

Jul 11, 2011

பாஸ் என்கிற‌ பாக‌வ‌த‌ர்.

7 கருத்துக்குத்து

 

   ம‌னைவி அமைவ‌தெல்லாம் இறைவ‌ன் கொடுத்த‌ வ‌ர‌ம்னு சொல்வாங்க‌. ந‌ம்ம‌ள‌ மாதிரி மாத‌ச் ச‌ம்ப‌ள‌த்துக்கார‌ங்க‌ளுக்கு எல்லாம் பாஸ் அமைவ‌து சாத்தான் த‌ந்த‌ சாப‌ம்னு தான் சொல்ல‌ணும். என்ன‌தான் ஒழுங்கா வேலை செய்தாலும் தின‌ம் ஒரு தட‌வையாச்சும் ந‌ம்ம‌ பாஸ் ந‌‌ம்மள‌ கடிக்காம‌ இருக்க மாட்டாரு. அதுக்குன்னு பாஸ‌ ந‌ம்ம‌ கைக்குள்ள‌ போட்டுக்கிட்டா அவ‌ர் வேலையையும் சேர்த்து ந‌ம்ம‌ள‌ செய்ய‌ வ‌ச்சிடுவாரு. ம‌த்த‌ள‌த்துக்கு ரெண்டு ப‌க்க‌மும் அடின்ற‌ மாதிரி ஏதாவது ஒரு வ‌கையில் நாம‌ எல்லோருமே "பாஸ்வ‌தைக்கு" ஆளாயிட்டுதான் இருக்கோம். வ‌ல்ல‌வ‌னுக்கு வ‌ல்ல‌வ‌ன் பூமியில் ம‌ட்டுமில்ல‌, ஆஃபிஸ்ல‌யும் இருப்பாரு. அத‌னால‌ ந‌ம்ம‌ பாஸின் பாஸும் இப்ப‌டித்தானா என்ற‌ ச‌ந்தேக‌ம் என‌க்கு அடிக்க‌டி வ‌ரும். ஆனா எப்ப‌டி இருந்தாலும் பாஸ் என்ப‌வ‌ர் பாஸ்தான் என்ற‌ த‌ர்க்க‌த்தில் என‌க்கு முழு ந‌ம்பிக்கை உண்டு.

அது என்ன‌ பாஸ் என்கிற‌ பாக‌வ‌த‌ர்.. அப்படின்னு த‌லைப்பு என‌ நீங்க‌ யோசிக்க‌லாம். ம‌ண்டே மார்னிங் இதுக்கெல்லாம் நேர‌த்தை வேஸ்ட் ப‌ண்ணாதீங்க‌. அது சும்மா ரைமிங்க்காக‌ வ‌ச்ச‌து.

ச‌ரி. இந்த‌ தொட‌ர்ல‌ நாம‌ என்ன‌ பார்க்கப்‌ போறோம். தொட‌ர்ந்து நான், இல்லையில்ல‌ நாம‌.. நாம‌.. பாஸ்கிட்ட‌ வாங்குற‌ ப‌ல்பு, திட்டு,அல்வான்னு எல்லாத்தையும் பார்க்க‌ போறோம். வேற‌ ஒண்ணுமில்லைங்க‌.  ஆர‌ம்ப‌த்துல‌ ட்விட்டு மாதிரி சின்ன‌ சின்ன‌தா இருந்தாலும் வ‌ரும் வார‌ங்க‌ளில் முழுச்ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் விவ‌ரிக்க‌ப்ப‌டும்.

அப்புற‌ம் முக்கிய‌மா நீங்க‌ உங்க‌ பாஸ்கிட்ட‌ ப‌ட்ட‌ அவ‌ஸ்தைக‌ள் இருந்தா என‌க்கு எழுதுங்க‌. iamkarki@gmail.com.  அதையும் சேர்த்திடுவோம். போலாம்..ரைட்ட்ட்ட்ட்ட்ட்

_____________________________

ஓடுகிற‌ மோட்ட‌ர் என்றால் அத‌ன் ஹார்ஸ் ப‌வ‌ர் சொல்ல‌லாம். துருப்பிடிச்சு ஓடாத‌ மோட்டார் என்றால் அது எங்க‌ பாஸ்ப‌வ‌ரில் தான் சொல்ல‌ணும். ங்கொய்யால‌.. 20 வ‌ருஷ‌மா சும்மாவே இருக்காருன்னு நினைக்கிறேன்.

பாஸ் என்கிற‌ பாஸ்க‌ர‌ன் ப‌ட‌த்த‌ என் பாஸ் பார்க்க‌வே இல்லையாம். அதுக்குன்னு பாஸ் பார்க்காத‌ பாஸ்க‌ர‌ன்னா சொல்ல‌ முடியும்?

உல‌கின் சிற‌ந்த‌ ரீட்விட்டாள‌ர் என‌து பாஸ்தான். என் மெயில்க‌ளை எல்லாம் அவ‌ர் பெய‌ரில் ஃபார்வ‌ர்ட் செய்கிறார்

White rice ம‌ட்டும்தான் இருக்குன்னு க‌வ‌லைப்ப‌ட‌றாரு பாஸ்..ஸ்பூன‌ தூக்கிப்போட்டு கை வைங்க‌ சார். சாதா சாத‌ம், சாம்பார் சாத‌ம் ஆயிடும்

How many closures do u have in pipeline என்கிறார் பெரிய‌ பாஸ். என‌க்கு Timeline ம‌ட்டும்தான் சார் தெரியும். (Timeline என்ப‌து ட்விட்ட‌ர் சொல்.)

பாஸ் என‌ப்ப‌டுப‌வ‌ர் யாரெனில் அதிகார‌ம் பொருந்திய‌ அல்ல‌க்கை.

வ‌ய‌தாகிவிட்ட‌து என்ப‌து ம‌ட்டுமே த‌குதியாக‌ இருப்ப‌தால் தான் அவ‌ர் Man Ager

ம‌ன‌சுக்கு புடிச்ச‌ ம‌னைவி அமைவதை விட‌ முக்கிய‌ம் பாஸ் அமைவ‌து. ம‌னைவியிட‌ம் முத்த‌மாவ‌து கிடைக்கும்.

அடுத்த‌ ஐபிஎல்லில் டாஸுக்கு ப‌தில‌ எங்க‌ பாஸ‌ தூக்கி போட‌ சொல்ல‌ணும். என்னையே சுத்தி சுத்தி வ‌ர்றாரு.

____________________

பி.கு: இத ப‌டிச்சிட்டு இருக்கும் போது கூட‌ உங்க‌ பாஸ் பின்னாடியே ச‌த்த‌ம் போடாம‌ ஒரு ஃபைலை தூக்கிட்டு வ‌ருவாரு. அப்போ என்ன‌ செய்ய‌ணும் தெரியுமா? இங்க‌ க்ளிக்கி பாருங்க‌.

Jul 7, 2011

வேங்கை–God Bless

15 கருத்துக்குத்து

 

  ஆற்காடு வீராசாமி என்ற விஞ்ஞானி கண்டுபிடித்த மின்தடையால் திருமணமான அன்பர்களுக்கு பல நன்மைகள் நடந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. சிலர் அவர் மீது உண்மையான நன்றி கொண்டு ”அச்சம்பவத்தால்” பிறந்த குழந்தைக்கு வீராசாமி எனவும், சில பீட்டர் மாமாக்கள் Bravo God என்பதை சுருக்கி Broad எனவும் பெயரிட்டு மகிழ்ந்த சம்பவங்கள் நம் செவிப்பறையையும், ரெட்டீனாவையும் தாக்குகின்றன. மொட்டைப் பையனான எனக்கு அது போல  வியத்தகு வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், அவ்வபோது சிற்சில லாபகரமான விஷயங்கள் நடைபெறுவதுண்டு. அதில் ஒன்றாக நேற்று அலுவகம் அரை நாள் விடுமுறை கண்டது. என்ன செய்யலாம் என யோசித்தபோதுதான் காலையில் அலுவலகம் வரும்போது கண்ட போஸ்டர் நினைவுக்கு வந்தது. நல்ல, ஆறடி நீள அரிவாள் ஒன்று தனுஷை தூக்கி வைத்திருந்தது போல இருந்தது அப்போஸ்டர். இன்று அலுவலகம் விடுமுறை என்பதால்தான் வியாழன் அன்றே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும் என்று பட்டாம்பூச்சி விளைவை நினைத்துக் கொண்டு, அதில் என் குருவான உலக நாயகனுக்கு நன்றி சொல்லிக் கொண்டு யமஹா என்னும் பஞ்ச கல்யாணியை சத்யம் நோக்கி விரட்டினேன். ரஜினிக்கு லட்சுமியைப் போல, எனக்கு பஞ்ச கல்யாணி. நான் ஆக்ஸிலேட்டரை திருகும் முறையை வைத்தே நான் தேடிப்போவது சினிமாவா, தோழியா, ஆதியா, வீடா என தெரிந்துக் கொள்ளும். அதற்கேற்ப சீறும்.

தனுஷின் மாஸ் என்னை நிலைகுலைய செய்தது. சத்யமில் படம் ஹவுஸ் ஃபுல் இல்லை. சிலர் 180க்கு சென்றார்கள். படத்தைப் பற்றி பேசும்முன் தேவையே இல்லாத சில விஷயங்களை பேசி விடுவோம். வீட்டிற்கு வந்தவுடன் பப்லு சொன்னான் “வேங்கை ஹரி படமா? சண்டைலாம் சூப்பரா இருக்கும்”. பப்லுவுக்கு தெரிந்த விஷயம் கூட தெரியாத சிலர் வேங்கைக்கு “முன்பழமைத்துவ காவியம்”, “பின்நவீன பிஞ்ச செருப்பு” என விமர்சனம் எழுதலாம். நான் எந்த அடிப்படையில் இப்பதிவை எழுதுகிறேன் என்பதை சொல்லிவிடுகிறேன். ஹரி இப்படத்தை கான்ஸ் திரைப்படவிழாவிற்கோ, சீனாவிற்கோ அனுப்ப போவதில்லையாம். தேனியிலும், அம்பாசமுத்திரத்திலும் தானாம். அதே போல் புதுமையாக எதுவும் இல்லையாம். எனவே ஆரண்ய காண்டத்திற்கு நான் வைத்த அளவுகோலை வேங்கைக்கு வைக்காதது கண்டு ஆச்சரியம் அடையும் ஆத்மாக்கள் பின்னூட்டத்தில் ஏமாற்றத்தை வெளியிட வேண்டாம். ஹிந்து எடிட்டோரியலில் எங்க ஏரியா லேம்ப் போஸ்ட் எரிவதே இல்லை என லெட்டர் போடுபவர்கள் அத்தோடு நிற்கலாம். இது ஹரி படம். குத்துப்பாட்டுக்கும், டாட்டா சுமோவிற்கும் குத்தாளமிடும் மனநிலை கொண்டவர்களுக்கானது. அதில் ஏதும் ஏமாற்றமிருக்கிறதா என்பதை மட்டும் பார்ப்போம்.

ஹீரோ தனுஷ். அவர் அப்பா ராஜ்கிரன், ஊரில் நல்ல பெயர் எடுத்து 50000 ஃபாலோயர் கொண்டவர். அவர் சொன்னால் தமிழ்மணத்திலும், இண்ட்லியும் கூட வோட்டு போட தயாராக இருக்கிறார்கள் சிவகங்கை மாவட்ட மக்கள். ராஜ்கிரணிடம் நல்லவனாய் வாழ்வேன் என்று சத்யம் செய்து எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவர்தான் வில்லன் என யூகித்தற்கெல்லம் ஷொட்டு கிடையாது. கதை மட்டும் கேளுங்கள். தனுஷ் அடங்காமல் திரிகிறார். நோ ஷொட்டு. அவர் வேலை கற்றுக் கொண்டு நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமென்றும், ராஜ்கிரனால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை எதுவும் செய்துவிடக் கூடாது என்பதற்காகாவும் அவரை வெளியூருக்கு அனுப்புகிறார்கள். அங்கே தனுஷின் மாமா ரியல் எஸ்டேட் அதிபர். நோ ஷொட்டு. அந்த ஊரில்தான் தனுஷ் தமன்னாவை பார்க்கிறார். காதல் வருகிறது.பாடல் வருகிறது. நோ ஷொட்டு. தனுஷை கொல்ல பிரகாஷ்ராஜ் ஆள் ஏற்பாடு செய்கிறார். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக வில்லன்கள் குழு அவரை வம்புக்கு இழுக்கிறார்கள். ஆனால் தந்தை சொல்படி தனுஷ் அடங்கி போகிறார்.  நோ ஷொட்டு. ராஜ்கிரன் பிரகாஷ்ராஜ் ஒரு “ராசா” என்பதை கண்டுபிடித்துவிடுகிறார். அவரின் சொத்துகளை மக்களுக்கே கிடைக்குமாறு செய்துவிடுகிறார் தனுஷ். கோவம் பீறிட்டு வருகிறது பிரகாஷ்ராஜுக்கு. நோ ஷொட்டு. இடைவேளைக்கு முன் ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால் தனுஷ் இறங்கி அதகளம் செய்ய, தமன்னா அதைப் பார்த்து வந்த காதலை விழுங்க, விஷயம் கேள்விப்பட்டு ராஜ்கிரன் சிலபல குவாலீஸ்களோடு வர, வில்லன்கள் குழு சிதற.. இடைவேளை.. நோ ஷொட்டு. நன்றி கேபிள்.

IMG_0464 இடைவேளையில் அனுஷ்கா படம் டிரெயிலர்

இப்போது பிரகாஷ்ராஜ் மந்திரி ஆகிவிடுகிறார். ராஜ்கிரனின் வீட்டிற்கு ஹெலிகாப்டரில் வந்து “பருப்பில் சிறந்தது முந்திரி. பதவியில் சிறந்தது மந்திரி” என பன்ச் அடிக்கிறார். ராஜ்கிரன் சிரிக்கிறார். தனுஷ் பொங்குகிறார். அவர் வீட்டிற்கே சென்று “கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு எல்லாம் கிலோல வாங்குவாங்க. முந்திரி மட்டும் கிராம்லதான் வாங்குவாங்க” என்று எதிர் பன்ச் அடிக்கிறார். இருவரும் 30 நாட்களுக்குள் யாராவது ஒருவர் தலையை எடுப்பதாக சவால் விடுகிறார்கள். அதன் பின் தனுஷ் தமன்னாவை தேடியும், பிரகாஷ்ராஜ் வேறு படத்தில் நடிக்கவும் போய் விடுகிறார்கள். அவ்வபோது இருவரும் சீண்டி சீண்டி விளையாடுகிறார்கள். கடைசியில் தனுஷ் வெல்கிறார்/ இதற்கு நிச்சயம் நோ ஷொட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு.

மெட்ராஸ் –மதுரை என போர்டு போட்டி வண்டி ஓட்டுபவர் ஹரி. இவர் படத்தில் மதுரைக்கு அடுத்து திருச்சி, திருச்சிக்கு அடுத்து திண்டிவனம், என யூகிப்பதில் அர்த்தமேயில்லை. அதனால் நான் சொன்ன கதையில் எந்த பிரச்சினையும் இல்லை. அது டெம்ப்ளேட் கதை.  சண்டைக்கோழியில் இருந்து கதையை திருடும்போது ராஜ்கிரனை இலவசமாக எடுத்திருக்க வேண்டாம். அவரும் வழக்கம் போல அஷ்ட கோணலில் முகபாவனைகள் காட்டி மிளிர்கிறார். புத்திசாலித்தனமான திரைக்கதையாலும், வேகமான இயக்கத்தாலும் ஹரி எக்ஸ்பிரஸ் எப்போதும் வேகமாக ஊர் சேரும். வேங்கை எவ்வளவு வேகத்தில் சேர்ந்தது என்பதுதான் முக்கியம். எளிதில் சொன்னால் சாமி, சிங்கம் அளவிற்கு எக்ஸ்பிரஸ் வேகமும் இல்லை. அருள், சேவல் அளவிற்கு பேசஞ்சரும் இல்லை. 60கிமீ வேகத்தில் வேங்கை ஓடுகிறது. பிரச்சினை என்னவென்றால் சீரான வேகமில்லை. முதல் பாதியில் நிதானமாக ஓடிய படம் இடைவேளைக்கு 15 நிமிடம் முன்பு சடாரென ராக்கெட் வேகத்தில் பாய்ந்தது.

சார்மினர் எக்ஸ்பிரஸில் பயணித்தவர்களுக்கு தெரியும். 8.10க்கு செண்ட்ரல் வர வேண்டுமென்றால் 6.55க்கே திருவொற்றியூர் வந்துவிட்டு ஆமை வேகத்தில் நகரும். அது போல க்ளைமேக்ஸை நோக்கி ஓடிய வேங்கை அங்கே தொங்கிவிட்டது. தமன்னாவின் கால்ஷீட் இருக்கிறது என்பதற்காக அவருக்கு ஒரு ஃப்ளாஷ் பேக் சொருகி, அதை நிகழ்காலத்தில் தீர்க்க முனைந்து பஞ்சர் ஆகிறது. மீண்டும் வேகமெடுக்கும்போது இன்னுமா தாம்பரம் வரலை என்கிறான் பயணி. எனக்கு படம் பைசா வசூல். நல்ல டைம் பாஸ் என்றுதான் சொல்வேன்.

ஹரியின் ஆளுமை எனக்கு பிடிக்கிறது. சினிமா ஒரு கலை, வலை என்று சொல்வார்கள். நாம் எல்லோரும் செய்யும் வேலையே ஒரு கலைதான். அதில் ஒரு நேர்த்தி இருக்கும். அல்லது தொழில்நுட்பம் மிளிரும். ஆனால் நாம் அதை எப்படி செய்கிறோம்? கிளையண்ட் தரும் பிரஷரால் சரியான நேரத்தில் முடித்தால் போதுமென்போமா? அல்லது அதில் 100% வரும் வரை பொறுத்து தருவோமா? எந்த ஒரு வடிவமும் வியாபரமயமாகி வரும் காலம் இது. விளையாட்டு, கலை, எழுத்து,தொழில்நுட்பம் என எதுவுமே இதற்கு விதிவிலக்கல்ல. அப்படித்தான் சினிமாவும். ஹரி அதை தொழிலாக பார்க்கிறார். அதற்கு எந்த பங்கமும் அவர் வைப்பதில்லை. சரியான திட்டமிடல், அயராத உழைப்பு, வேகமான செயல்பாடுகள் என அழகாக வேலை செய்கிறார். ஒளிப்பதிவாளர், எடிட்டர், நாயகன் என யார் மாறினாலும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஹரியின் முத்திரை ஆழமாக இருக்கிறது. இந்த ஆளுமையைத்தான் நான் ரசிப்பதாக சொல்கிறேன். இதை பலரும் ஆமோதிக்க மறுக்கலாம். ஆனால் சினிமாவில் ஒரு பகுதி வணிக சினிமாவாக இருப்பதை நான் ஆதரிக்கிறேன். எல்லா சினிமாவும் கலை நோக்கோடுதான் எடுக்கப்பட வேண்டுமென்பதில் எனக்கு ஒப்புதல் இல்லை.

பெரிதாக படம் பற்றி நான் எழுதவில்லை. காரனம் திரைப்படம் பற்றிய என் எல்லாப் பதிவுகளுமே நான் சினிமா பார்த்த அனுபவம் குறித்துதானே ஒழிய, திரைப்பட விமர்சனமில்லை. இறுதியாக வேங்கை சிங்கத்திடமும், சாமியிடமும் தோற்கும். அருளிடமும், சேவலிடமும் ஜெயிக்கும். தாமிரபரணியோடும், வேலிடமும் பரிசை பகிர்ந்துக் கொள்ளும் என்று சொல்லி முடிக்கிறேன். தட்ஸ் ஆல் யுவர் ஹானர்.

_______________________________

ட்விட்டர் டைம் (தியேட்டரில் இருந்து ட்விட்டியது)

மாரியாத்தா..காப்பாத்து.. http://twitpic.com/5mf3z6

வேங்கை போஸ்ட‌ர் பார்த்தாலே செக‌ன்ட் ரிலீஸ் மாதிரி இருக்கு.. சேவ‌ல் தான்னு நினைக்கிறேன். பார்ப்போம்

கோவில் போனாலும் ஃபிகரத்தான் பார்ப்போம் என்பது போல, வேங்கை பார்க்க வந்தாலும் நமக்கு அனுஷ்காவும், அமலா பாலும்தான். http://twitpic.com/5mfjxt   http://twitpic.com/5mfk4y

டேய் டேய்.. இது விஷால் படம்டா.. ஊரு விட்டு போறாரு ஹீரோ. திருந்தனுமாம்.

வேங்கை இடைவேளை பதுங்கியே இருக்கிறது. இனி பாயுமோ?

கோக் வாங்க Qல நிக்க சொன்னிங்க சரி. உட்கார எதுக்கு Q? என் சீட் நம்பர் Q22 ஆம்.

யப்பா.. தனூஷு. உனக்கு பாட்டு மட்டும் செட் ஆகல சாமீ..

________________________________

தலைப்பு : தனுஷ் எப்போது ட்விட்டினாலும் GOD BLESS என்றுதான் முடிப்பார். அதான்.

Jul 4, 2011

அழகின் அலகு

13 கருத்துக்குத்து

 

பேரழகியான தோழிக்கு என் ப‌க்க‌தில் நிற்கும்போது ம‌ட்டும்  அவ‌ள‌ழகு போத‌வில்லையாம். என்ன‌ செய்ய‌? கால‌ம் முழுக்க‌‌ என் கூட‌த்தானே நின்றாக‌ணும்!!!

###############################################################################

தின‌மும் க‌ட‌வுளுக்கு ந‌ன்றி சொல்கிறாள் தோழி நான் கிடைத்த‌ற்கு..நான் சாத்தானுக்கு சொல்ல‌ணுமா?  #தோழிமீதுகோவ‌ம்

###############################################################################

தோழி தோழியென என் தேவ‌தை தேடி நான் அலைவ‌தாக‌ நினைக்க‌ வேணாம். என்னை காணாமல்‌ அவ‌ள் த‌விப்பாளே என்ற‌ ந‌ல்ல‌ எண்ண‌ம் தான்.

###############################################################################

குமுத‌மும் விக‌ட‌னும் நீ ப‌டிப்பாயென‌ வாச‌க‌ன் ஆகிவிட்டேன்..போதாதென‌ பிளாகு வேற எழுதி வ‌ச்சிருக்கேன். எங்க‌ம்மா இருக்க‌ தாயீ #தோழியை காணும் முன் எழுதியது

###############################################################################

ஜோதிகாவை போல‌ நான் தூர‌த்தில் வ‌ரும்போதே தோழி பிடித்த‌ பாடலை பாடுவாளோ என ப‌ய‌மாக‌ இருக்கிற‌து.அப்பாட‌ல் என் ராசாவின் ம‌ன‌சில‌ என்ற பட‌த்தில் வ‌ரும்.

###############################################################################

என்னைப் பார்த்தால் த‌ன‌து க‌ஸின் மாதிரியே இருப்ப‌தாக‌ சொன்னார் தோழியின் தோழி  அப்படியா? எந்த‌ ஸ்கூலில் ப‌டிக்கிறார் என்று கேட்டதைக் கேட்டு இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறாள் தோழியின் தோழி. தோழி மட்டும் நர்சிம்மராவாகவே இருக்கிறாள் இன்னமும்.

###############################################################################

வேறு எந்த‌ ந‌டிகை ந‌டித்திருந்தாலும் இந்த‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்திருக்காது. யார் தெய்வ‌த்திரும‌க‌ள்? அனுஷ்காவா அல்ல‌து அம‌லா பாலா என்று கேட்டது தவறில்லை. ஆனால் தோழியிடம் கேட்டிருக்க கூடாது. வடிவேலுவுக்கு வீங்கியதை போல் உப்பிவிட்டது மண்டை.

###############################################################################

தோழி இன்று சிக்கன் செய்தாளாம். எப்படி இருக்குன்னு கேட்டால் "செத்து போச்சு கோழி" என்று உதட்டை சுழிக்கிறாள். #நல்லதோழி

###############################################################################

எடைக்கு கிலோ, தூரத்திற்கு மீட்டர் போல அழகுக்கு தோழியின் பெயரை அலகாக பயன்படுத்தவிருக்கிறார்களாம். அதுவும் அதற்கு 0 - 0.99 வரைதான் மதிப்பாம். அதாவது அனுஷ்கா =0.99 தோழி,  த்ரிஷா = 0.25 தோழி என்று சொல்ல வேண்டுமாம். ஒன்றிற்கு மேலிருந்தால் முன்னால் மைனஸ் சிம்பள் இருக்குமாம்.

Jul 1, 2011

அழைப்பு

16 கருத்துக்குத்து

 

  என‌து ப‌ள்ளிக்கால‌ம் திண்டிவ‌ன‌த்தில் க‌ழிந்த‌து‌. 15 வ‌ய‌துவ‌ரை அங்குதான் வ‌ள‌ர்ந்தேன். அங்கே அப்பாவும் அவ‌ர‌து சில‌ ந‌ண்ப‌ர்க‌ளும் ந‌க‌ர‌ க‌ல்வி மேம்பாட்டுக் குழு என‌ ஒன்றை தொட‌ங்கி ந‌க‌ர‌த்தில் க‌ல்வியை முன்னிட்டு சில‌ ஆரோக்கிய‌மான‌ விஷ‌ய‌ங்களையும், த‌னிப்ப‌யிற்சி டொனேஷ‌ன் போன்ற‌வ‌ற்றிற்கு எதிராக‌ போர‌ட்ட‌ங்க‌ளையும் ந‌ட‌ந்தி வ‌ந்தார்க‌ள். 99ல் அப்பாவின் ம‌றைவுக்கு பின் மெல்ல‌ அழிந்தே போன‌து க‌ல்வி மேம்பாட்டுக் குழு. இதில் ஆர‌ம்ப‌க்கால‌த்தில் மருத்துவ‌ர்.ராம‌தாஸ்,பேராசிரிய‌ர்.க‌ல்யாணி, எழுத்தாள‌ர் ராசேந்திர‌ சோழ‌ன்(அஸ்வ‌கோஷ்) போன்ற‌‌வ‌ர்க‌ள் எல்லாம் முனைப்போடு இருந்தார்க‌ள்.

நீண்ட‌ கால‌த்திற்கு பின் ந‌க‌ர‌ க‌ல்வி மேம்பாட்டுக் குழு சென்ற‌ ஆண்டு உயிர் பெற்ற‌து. கூட‌வே அப்பாவின் பெய‌ரில் "ப‌வ‌ண‌‌ந்தி க‌ல்வி அற‌க்க‌ட்ட‌ளை" என‌ ஒன்றையும் தொட‌ங்கினார்க‌ள். இந்த‌ ஆண்டு கிராம‌‌ப்புற‌ அர‌சு ப‌ள்ளிக‌ளில் ப‌த்தாவ‌து தேர்வில் அதிக‌ ம‌திப்பெண் எடுத்த‌ மூவ‌ருக்கு உத‌வித்தொகை கொடுக்க‌விருக்கிறார்க‌ள். நீண்ட‌ நாட்க‌ளாக‌வே என‌து பால்யத்தில் அப்பாவின் மூல‌ம் நான் பெற்ற‌ அனுப‌வ‌த்தையும், உரிமையோடு நான் ச‌ட்டைப்பையை துழாவிய‌ சில‌ த‌மிழ் ஆர்வ‌ல‌‌ர்க‌ள் ப‌ற்றியும் எழுத‌ வேண்டுமென‌ நினைத்துக் கொண்டிருக்கிறேன்.பிறிதொரு ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் பார்ப்போம்.

வ‌ரும் ஞாயிறு திண்டிவ‌ன‌த்தில் இந்நிக‌ழ்வு ந‌டைபெறுகிற‌து. உங்க‌ள் அனைவ‌ரையும் அன்போடு அழைக்கிறேன். இதை ந‌ட‌த்திக் கொண்டிருக்கும் ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் ந‌ன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

IMG_0445

IMG_0446

 

all rights reserved to www.karkibava.com