Jun 18, 2011

அவன் இவன்


 

தமிழ்சினிமாவின் உண்மையான வளர்ச்சி படைப்பாளிகள் வசமோ, நடிகர்கள்வசமோ, தொழில்நுட்ப கலைஞர்கள் வசமோ நிச்சயம் இல்லை. அது பார்வையாளனிடம் உள்ளது. இன்னமும் மரத்தை சுத்தி டூயட் பாடும் நடிகனையும், சொடுக்கு போட்டு பன்ச் வசனம் பேசும் நாயகனையும் பார்த்து சிலிர்த்துக் கொண்டிருந்தால் உலகம் நம்மை மதிக்காது. தமிழ் ரசிகனும் இதை உணர்ந்தே வைத்திருக்கிறான். கடந்த சில வருடங்களாக இது பலமுறை உண்மையென்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அவன் இவனை தலைக்குமேல் தூக்கி வைத்து கொண்டாடுவதன் மூலம் இதை ஆணித்தரமாக நிரூபிக்கும் வாய்ப்பு நமக்கு கிட்டியிருக்கிறது. நான் கொண்டாடப் போகிறேன்.

சினிமா என்ற கலை கூட மேல்த்தட்டு மக்களுக்கானது என்றுதான் மாற்றி வைத்திருந்தார்கள் மணிரத்னங்களும், பாலச்சந்திரர்களும். முதல்முறையாக விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை பதிவு செய்ய துணிந்தவர் பாலா மட்டுமே. பின் பாலா போலவே படமெடுக்கிறேன் பேர்வழி என பலரும் குதித்தது தமிழ்மக்களின் ஏழரை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பாலா படத்தில் இருக்கும் உண்மையும், விசாலமும் வேறு எவரின் படத்திலும் இருப்பதில்லை. விசாலத்தோடு இப்படத்தில் விஷாலும் சேர்ந்திருக்கிறார். நடிப்பில் தனக்கான விலாசத்தையும் கண்டறிந்திருக்கிறார். இனி அவன் இவனை பற்றி பார்ப்போம்.

விஷாலும் ஆர்யாவும் சகோதர்கள். அப்பா ஒருவர், ஆனால் அம்மா வேறு. இதை படிக்கும் நேரத்தில் உங்கள் மனம் அக்னி நட்சத்திரத்தை நினைத்திருந்தால் அதுதான் நமது சாபக்கேடு. இதில் விஷால் சற்று பெண் சாயல் கொண்டவராக இருக்கிறார். மாறுகண் வேறு. அவர் அரவாணிதான் என்று எங்கும் பாலா சொல்லவில்லை. இவரும் ஆர்யாவும் ஊர் ஜமீனின் வளர்ப்பு பிள்ளைகளாக வளர்கிறார்கள். இருவரும் மோதிக் கொண்டே இருந்தாலும் அன்பின் இழை இருவருக்கு இடையேயும் மெல்லிய கீற்றாய் ஓடுவதை பாலா என்னும் கதை சொல்லி அழகாய் காட்டியிருக்கிறார். இவர்கள் இருவருக்கும், ஜமீனுக்கும் நடக்கும் ஒரு மிகப்பெரிய சம்பவம் தான் இரண்டாம் பாதி. ஜமீனை ஏன் கொல்கிறார்கள் என்பதும், அதற்கு ஆர்யாவும், விஷாலும் என்ன செய்தார்கள் என்பதும் காட்சிகள் மூலம் பார்த்து தெரிந்துக் கொள்ளப்படவேண்டியவை.

பாலாவின் மற்ற படங்களில் காட்சிகளில் தெறிக்கும் குரூரமான விடயங்கள் இதில் குறைவென்று சொல்ல முடியாது. இல்லையென்றே சொல்லலாம். அன்பும், அன்பு சார்ந்த இடமும் இனி பாலாவின் படமென்று சொன்னாலும் தவறேயில்லை. செய்வது திருட்டுத்தனம், வாழ்வது அடிமை வாழ்க்கை என்றாலும் ஒவ்வொரு பாத்திரமும் அன்புக்காக வாழ்வது அழகு. குரூரமென நான் சொன்ன மற்ற பாலா படங்களிலும் இந்த அன்பு வாழ்ந்துக் கொண்டுதான் இருந்தது.

ஒரு நாயகன் இதற்கு முன் என்ன ஆட்டம் போட்டிருந்தாலும் சரி, இல்லை ஆட்டமே போடத் தெரியாதவராகவும் சரி.பாலா என்ற மாயக்கலைஞனின் நிழல் பட்டதும் பிறவிக்கலைஞன் ஆகிவிடுவார். இதில் விஷாலுக்கு அப்பாக்கியம் கிடைத்திருக்கிறது. விக்ரமுக்கும், சூர்யாவிற்கும் இரண்டாம் முறையும் அந்த யோகம் கிடைத்தது போல ஆர்யாவிற்கு கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டவசமே. இந்த முறை ஆர்யாவிற்கு பெரிய சவால் ஏதுமில்லை. விஷாலின் உழைப்பும், அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது.

பாலாவின் மிகப்பெரிய பிரச்சினை அவரின் ஆணாதிக்க சிந்தனைதான். அவரின் எல்லா நாயகர்களும் வித்தியாசமாக சிந்திக்க கூடியவர்களாகவும், குரூரமாக இயங்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். தனக்கோ, தன்னை சார்ந்தவர்களுகோ ஏற்படும் துரோகங்களையும், இன்னல்களையும் எதிர்க்க அவர்கள் மிகப்பெரிய ஒரு ஆணாக எழ முயல்வதாகவே சித்தரிக்கிறார். பிதாமகனில் விக்ரமுக்கு வரும் அதே ஆக்ரோஷம்தான் இதில் விஷாலுக்கு வருகிறது. மரணத்தையும், பழிவாங்குதலையும் தாண்டி தலித்களுக்கும், விளிம்பு நிலை மாந்தர்களுக்கும் இருக்கும் பலப்பிரச்சினைகள் குறித்தும் பாலா மட்டுமே படம் ஏடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ் சினிமா இருக்கிறது. இதை மனதில் வைத்துக் கொண்டே பாலா செயல்பட்டால்….

 

 

 

 

உஸ்ஸ்ஸ்… இப்படி படத்தை பத்தி பேசாம வேற ஏதாச்சும் பேசினாதான் அவன் இவனை பாராட்ட முடியும். இப்பதான் ஆரண்ய காண்டம் பத்தி எழுதி இவனுக்கு சினிமாவே தெரியாதுன்னு பேரு வாங்கினேன். அதுக்குள்ள இதையும் குப்பை படம் எழுத நான் என்ன லூசா? இன்னொரு தடவ பதிவ படிங்க. படம் நல்லா இருக்கு. நல்லா இருக்கு.. நல்லா இருக்கு..சொல்லிட்டேன்

27 கருத்துக்குத்து:

M.G.ரவிக்குமார்™..., on June 18, 2011 at 12:26 AM said...

சகா.......படத்த விட இந்த விமர்சனம் நல்லாருக்கு......

சத்யா on June 18, 2011 at 12:28 AM said...

Its not a cinema review. Jus filling ur blog counting...

Kafil on June 18, 2011 at 12:29 AM said...

அண்ணே ரொம்ப நாள் கழிச்சி பின் நவீனத்துவ பதிவு போல இருக்கு :)

கார்க்கி on June 18, 2011 at 12:35 AM said...

ரவி, :))

கஃபில், எப்பூடி????? :)

சத்யா, இதை விமர்சனம் என்று நான் எங்கேயும் சொல்லவில்லை. என் பிளாகில் விமர்சனம் என்ற லேபிளும் இல்லை. நான் படம் பார்த்த அநுபவங்களை பகிர்ந்துக் கொள்வதால் “திரைப்படங்கள் சார்ந்தவை” என்றுதான் வகைபப்டுத்துகிறேன். என் பிளாகை ஃபில் செய்யதான் நான் பதிவெழுதுகிறேன். முழுவதும் ஃபில் செய்தால் எனக்கு அமெரிக்க H1B விசா கிடைக்கும் வாய்ப்பிருப்பதால் செய்து வருகிறேன். நன்றி

மதுரை சரவணன் on June 18, 2011 at 1:38 AM said...

kadaisiyila sothappiteengka sorry kulappitteengka... vaalththukkal

Vigneswari Khanna on June 18, 2011 at 8:08 AM said...

பாவம் சகா நீங்க. முதல்ல ஆரண்ய காண்டம், அடுத்து அவன் இவன்..

என்னவரை இந்தப் படத்துக்குக் கூட்டிட்டுப் போக சொன்னா உதைப்பாரோன்னு பயமா இருக்கு. என்ன பண்ண... :(

கார்த்தி on June 18, 2011 at 9:02 AM said...

எனக்கும் படம் "சும்மா பரவாயில்லை பாக்கலாம்" என்ற ரகம்தான்!

kobiraj on June 18, 2011 at 9:06 AM said...

படம் பார்த்திட்டு சொல்லுறன் அண்ணே

kobiraj on June 18, 2011 at 9:08 AM said...
This comment has been removed by the author.
PremaVenus on June 18, 2011 at 10:54 AM said...

Vimarsanam Mokkai.......
Padamo Marana Mokkai...
Ini Bala perai kettale escape thaan...

Subash on June 18, 2011 at 11:30 AM said...

is film good or not?

அன்பு on June 18, 2011 at 1:23 PM said...

விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை பாலாவிற்க்கு முன்பே பல இயக்குனர்கள் பல படங்களில் சொல்லியாயிற்று....!

சிநேகிதன் அக்பர் on June 18, 2011 at 1:36 PM said...

அதானே பார்த்தேன் :)

சிசு on June 18, 2011 at 5:21 PM said...

அண்ணே என்ன சொல்ல வரீங்கன்னு சத்தியமா புரியல.... :)
ஆனா உங்களுக்கு நல்லா 'அனுபவம்' கெடைச்சிருக்குன்னு மட்டும் புரியுது. :))

RaGhaV on June 18, 2011 at 11:51 PM said...

சகா.. படம் எப்படி இருக்கு? ஒரே வார்த்தைல பதில்ல சொல்லணும்.. எங்க சொல்லுங்க பாப்போம்..

kids doctor on June 19, 2011 at 11:20 AM said...

நன்றி !

Shanmuganathan on June 20, 2011 at 1:55 AM said...

:).. சில காட்சிகளை தவிர படம் பாலா அண்ணன் படமாகவே இருந்தது.... விஷால் விளையாடியிருக்கிறார்..... நீங்கள் சொன்ன அனைத்தும் அவர் செய்யக்கடவுக.. ஆணாதிக்கவாதியா???? வசனத்தை பற்றி ஒன்னும் சொல்லவே இல்ல சகா?

Rishi on June 20, 2011 at 9:03 AM said...

Super comments saga...

குழந்தபையன் on June 20, 2011 at 3:10 PM said...

பாலாவின் விசிறியல்ல நான்..ஆனாலும் இந்த மனிதனிடம் தனித்து ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை நான் கடவுள் முலம் அறிந்தேன்..அந்த தனித்தன்மையே சில கணங்களில் தலைகனமாக மாறிவிட்டது என நினைகிறேன்...என்ன ஏடுதல்லும் கை தட்ட ஆள் உண்டு என்ற நினைப்பு மேலோங்கியதே அவன்-இவன் படம்...

மற்றபடி பாலா பெயர் இல்லாமல் படத்தை பார்த்தால் நல்ல பொழது போக்காகவே உள்ளது ..கிளைமாக்ஸ் தவிர மற்றவை ரசிக்கும் ரகமே..புரட்சி தளபதி நடிக்க ஆரம்பித்து விட்டார்..தளபதியும் ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்(நமக்கு நம்ப பிரச்சனை கார்க்கி)

குழந்தபையன் on June 20, 2011 at 3:11 PM said...

//சினிமா என்ற கலை கூட மேல்த்தட்டு மக்களுக்கானது என்றுதான் மாற்றி வைத்திருந்தார்கள் மணிரத்னங்களும், பாலச்சந்திரர்களும்.///

கார்க்கி டச்

Tamil coimbatore on June 20, 2011 at 5:33 PM said...

Hi,

Thanks for posting u r views.

AVAN IVAN - 50% v.bad & 50% v.good.

Always we cannot expect 100% good

movie from any director.

jeyachandran on June 21, 2011 at 1:43 PM said...

nice flim. ithu vishal padam nu solra alavuku vishal nadichrukkaar.

Manivannan on June 24, 2011 at 3:14 PM said...

நாம ஒன்னு எழுதனுன்னு வந்துட்ட
எதை பத்தியும் யாரை பத்தியும் பயப்பட கூடாது! கவலை படகூடாது!. அப்படி யாராவது திட்டுவாங்களோனு
பயபட்டா எழுதவே வந்திருக்க கூடாது. இதுல வேற நான் படம் பார்த்துட்டு எனக்கு என்ன தோனுதோ அததான் எழுதுறேன்னு சொல்லுறீங்க. இது திரைவிமர்சனம்
இல்லைனு சொல்லுற நீங்க இந்த படமும் நல்ல இல்லைன்னு ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கணும். நீங்க பார்த்த ஆயிரம் படம் உங்களுக்கு நல்லா இல்லேன்னா நல்ல இல்லைன்னு தொடர்ந்து சொல்லலாம். ஏதோ வித்தியாசமா புதுசா கிழிக்கிறதா நினைச்சுக்கிட்டு மெண்டல் மாதிரி எழுத கூடாது.
இப்ப வருற தமிழ் படங்களுக்கு மத்தியில் இந்த படம் ரொம்ப அருமை. படத்துல ஹீரோயிசம் கிடையாது. படம் முடியுற வர ஆர்யா ஹீரோயிசத்தை காட்டுற மாதிரி எதாவது ஒரு சீன் இருக்குனு நினச்சேன் ஆனா கடைசிவரைக்கும் இல்லாதது மிக அழகு. இந்த கேரக்டர் இப்படித்தான் இருக்கு திடிர்னு சினிமா தனம் வராதுன்னு பாலா நிருபிச்சிருக்காறு. அதுக்கே அவருக்கு ஒரு ஜே!

கார்க்கி on June 25, 2011 at 11:00 AM said...

மணிவண்ணன், உங்க அளவுக்கு எனக்கு தைரியம் இல்லைங்க.. பாருங்க இப்ப உங்களுக்கு பதில் எழுதும் போது கூட கையெல்லாம் நடுங்குது..

அப்புறம் அராமபத்துலே நல்லா இல்லைன்னு சொல்லணுமா? நான் கடைசி வரை நல்லா இல்லைன்னே சொல்லலலியே பாஸ்.. விகடன்லதான் படம் குப்பைனு 39 மார்க் தந்திருககங்க. விடுங்க அவங்களும் மெண்டலா இருப்பாங்க..

நீங்க மாறிடாதீங்க பாஸ்> என்னை மாதிரி கோழையா இருக்காதீங்க. அவன் இவன் தான் பெஸ்ட் படம்னு கடைசி வரை தில்லா நிகக்ணும்.. நீங்க நிப்பீங்க பாஸ்>.

நீங்கா பாலாவுக்கு ஜெ போடுவீங்களோ, கலைஞர போடுவீங்களோ.. ஆனா இன்னொருதரம் நான் என்ன எழுதணும்ன்னு சொல்லித்தந்தா இந்த மெண்ட்டல் செருப்பால அடிக்கும்.. ஓடிபோயிடுங்க :)

Anitha on June 27, 2011 at 12:41 AM said...

enaku padam ok. still i miss something in the movie. bala voda matra moviesla vara sentimental touch illayonu thonudhu. but oru director movie eppovum ore patterna edhirpaarka koodadhonu thonuchu. unga commentla kadaisila neenga solla varadhu nejama puriyala. unga comment padika enaku eppavum pidikum. i like this one too. thanks karki.

Anitha on June 27, 2011 at 12:47 AM said...

எனக்கு படம் ஒ.கே. ஆனாலும் ஏதோ மிஸ்ஸிங். பாலாவோட மற்ற படங்களுக்கும் இந்த படத்துக்கும் கண்டிப்பா வித்யாசம் இருக்கு. உங்க கருத்தில் கடைசியில் நீங்க சொல்ல வரது நிஜமா புரியல. நல்லதோ கேட்டதோ உங்க வெளிப்படயான விமர்சனம்தான் எனக்கு மிகவும் பிடித்தது. நீங்க நிறைய எழுதனும். என் வாழ்த்துக்கள். நன்றி.

CITY TIMES on July 12, 2011 at 9:14 AM said...

Your Comment is Nice

 

all rights reserved to www.karkibava.com