Jun 14, 2011

ஆரண்ய காண்டம் - கிளாஸ்


 

எப்படி தொடங்குவது என்று புரியாமல் எழுத அமர்ந்திருக்கிறேன். ஒரு நல்லப்படம் வந்திருக்கிறது என்ற நண்பர்களின் அறைகூவலை கேட்டு ஆவலுடன் போய் பார்த்தப் படம் தான் ஆரண்ய காண்டம். இது எந்த வகையான படம், படத்தில் என்னவெல்லாம் இருக்கும் என ஓரளவு தெரிந்துக் கொண்டேதான் படம் பார்க்க சென்றேன். எனவே எதிர்பாராத ஏமாற்றம் என்னை ஆட்கொண்டு எழுதுவதாக நினைத்துவிட வேண்டாம். முடிவுடனே ஆரம்பிக்கிறேன். படம் எனக்கு பிடிக்கவில்லை. படத்தைப் பற்றி நெகட்டிவாக ட்விட்டரில் சொன்ன போதே ஒருவர் எல்லோரும் பாராட்டினா எதிர்த்து பேசி அட்டென்ஷன் சீக் பண்றீங்களா என்றார். அதை தவிர்க்கவே தலைப்பை இப்படி வைத்தேன்.

எது தர்மம்? உனக்கு எது தேவையோ அதுவே தர்மம். இதைத்தான் திரைக்கதை எழுதும் முன் இயக்குனர் மனதில் காப்பி பேஸ்ட் செய்து கொண்டார். அதனால் கதையில் வரும் எல்லோரையும் எப்போது வேண்டுமென்றாலும் அவரால் திசை திருப்ப முடிகிறது. இதுபற்றி மேலும் நாம் பேசும் முன்பு கதையை ஓரளவு தெரிந்துக் கொள்ளுதல் உசிதம்.கதை சொன்னால் இனிமேல் பார்க்கிரவர்களுக்கு சுவாரஸ்யம் போய்விடுமே என்பீர்களேயானால், பரவாயில்லை.இனிமேல் படம் பார்க்க போகிறவர்களை பற்றி நான் கவலைப்படுவதாயில்லை.

ஜாக்கி ஷெராஃப் ஒரு தாதா. அவரிடம் வேலை செய்கிறார் சம்பத். போதை பவுடர் ஒரு பாக்கெட்(2 கோடி ரூபாயாம்) சீப்பாக வருவதாக சொல்கிறார். அது எதிரணிக்கு போக வேண்டிய மருந்து. குருவியாக அதை எடுத்த சென்ற நபர் காசுக்கு ஆசைப்பட்டு இவரிடம் பேரம் பேசுகிறார். ஜாக்கி வேண்டாம் என்று சொல்ல “நீங்க டொக்கு ஆயிட்டீங்க” என்று சொல்லிவிடுகிறார். சம்பத்தே அதை டீல் செய்ய நினைக்க, ஜாக்கி தன் அடியாட்களிடம் சம்பத்தை போட்டுத் தள்ள சொல்கிறார். எதிரணியும் சம்பத்தை நோக்கி நகர, மருந்து குருவியிடமிருந்து சென்னைக்கு பஞ்சம் புகும் ஒரு அப்பா , மகனிடம் சிக்குகிறது. இதற்கு நடுவில் ஜாக்கியின் சிறுவயது செட்டப்பிற்கும், ஜாக்கியின் கூடவே இருக்கும் ரவிகிருஷ்ணாவிற்கும் காதலாம். அவர்கள் ஜாக்கியின் வசம் இருக்கும் 50 லட்சத்துடன் மும்பைக்கு எஸ்ஸாக பிளான் போடுகிறார்கள். போதை மருந்து என்ன ஆனது, சம்பத் தப்பித்தாரா, அப்பா மகனுக்கு என்னவாகிறது என்ற முடிவை நோக்கி படம் நகர்கிறது. ஆம் நகர்கிறது.

திரைக்கதையில் மிளிர்கிறார் இயக்குனர். குழப்பமான கதையை நன்றாகவே விளக்கியிருக்கிறார். சிலர் பதிவில் சொன்னது போல குவென்டின் டொரண்டினோ ஸ்டைல், நான் லீனியர் எழவெல்லாம் சத்தியமாக ஏதுமில்லை. மிக மிக தெளிவான திரைக்கதை யுத்திதான். ஆனால் இருக்கையின் நுனிக்கு நம்மை வரவழைத்து பறக்க வேண்டிய காட்சிகள் நத்தை வேகத்தில் நகர்வது ஏமாற்றம். படத்தில் எனக்கு பிடித்த ஒரு சில விஷயங்களில் திரைக்கதையும், பாத்திரத்தேர்வும் முக்கியமானவை.

அப்படி என்றால் பிரச்சினை? எல்லோருக்கும் பிடித்திருந்த ஒளிப்பதிவு எனக்கு எரிச்சலையே தந்தது. காரணம் ஒளியமைப்பு. மஞ்சள் நிற பேக்டிராப் என முடிவு செய்துவிட்டார்கள். ஒரு வேளை ஜாக்கி ஒரு காட்சியில் பால் குடித்திருந்தால் அவர் மஞ்சள் நிறப்பாலையே குடித்திருப்பார். காட்சி எங்கு நடக்கிறதென்றாலும் ஒளிப்பதிவாளருக்கு ஒரே ஒரு விதிதான். ஒரு அடிக்கு வெளிச்சம். அடுத்த 4 அடிகள் இருட்டு.. அடுத்து ஒரு அடி வெளிச்சம். மீண்டும் 4 அடிகள் இருட்டு. அந்த வெளிச்சம் அந்த இடத்தில் எப்படி வருமென்று யோசிப்பது அவர் வேலையில்லை. பகல் நேரத்தில் ஒரு டீக்கடை காட்டுகிறார்கள். அதுவும் இருட்டுதான். ஒரு லாட்ஜை காட்டுகிறார்கள் அங்கேயும் கேண்டில் லைட் டின்னர் தான். ஜாக்கியின் வீடும் அப்படித்தான். கோணங்கள் என்றளவில் பெரிதாய் பிரச்சினையில்லை. ஆனால் ஒளிப்பதிவு மோசமானதாய் எனக்கு தெரிந்தது.

அடுத்து வசனம். இதுவும் பலராலும் பாராட்டப்பட்டது. எனக்கு வசனங்கள் புத்திசாலித்தனமானவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அது படத்தில் யாரால் பேசப்பட்டது என்பதில் உண்டு.

“சம்பத்: அப்பானா உனக்கு ரொம்ப புடிக்குமாடா”

பையன்: அப்படியில்லை. ஆனா அவர் எனக்கு அப்பா”

அந்த பையன் படத்தில் அப்படி பேசுவது ஏற்றுக் கொள்ள முடிகிறதா என்பதே என் கேள்வி. அவனைக் கூட கொஞ்சம் புத்திசாலியாக காட்டுகிறார்கள். ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் 50 லட்சம் கொள்ளையடிக்க திட்டமிடும் போது கூட வீடியோகேம் ஆடும் ரவிகிருஷ்ணா பேசுகிறார்.

“மீன் புழுவை சாப்பிடுது. மீன மனுஷன் சாப்பிடுறான். எல்லாம் கரெக்ட்டுதான்”

இவ்வசனம் எப்படிபட்டது என்பதை விடுங்க. ரவி இப்படி பேசும் பாத்திரமா? இப்படி படம் நெடுக உலவும் அனைத்து கதாபாத்திரங்களும் இயக்குனரின் புத்திசாலித்தனத்தை சீரிய இடைவெளியில் பறைசாற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். கதை வடசென்னையில் நடப்பதாக எங்கேவாது சொன்னார்களா என தெரியவில்லை. ஆனால் போதை மருந்தை வைத்திருக்கும் அப்பா-மகன் செளகார்பேட்டை ஏரியாவில் இருப்பதாக ஒரு போர்டு சொன்னது. அதை வைத்து உறுதி செய்துகொண்டேன். தமிழில் இருக்கும் எல்லா வசை சொற்களும் வாரி இறைக்கும் பாத்திரங்கள் சென்னையின் இனிஷியலை ஒரு இடத்தில் கூட உபயோகித்ததாக தெரியவில்லை. கிட்டத்தட்ட தாதாக்கள், அடியாட்கள் மாநாடே நடத்தலாம் என்றளவிற்கு ஆட்கள் இருந்தும் ஒருவர் கூட சென்னை பாஷை பேசவேயில்லை.

மதராச(ப்)பட்டணம் என்ற படத்தை பாராட்டிய விகடன் “40களில் சென்னை மக்களின் மொழியையும், உடையையும் இன்றைய சந்ததியினர் இப்படம் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்” என்றெழுதியிருந்தது. 88 வயதான எங்கள் தெரு தாத்தா வாக்கிங்கில் சொன்னார், அப்படி ஒரு உடையை சென்னை மக்கள் யாரும் அணிந்ததே இல்லையாம். பின்னர் அது லகானை பார்த்து டிசைன் செய்தது என்றறிந்தேன். பெயரில் கூட “ப்” இல்லாமல் இருந்தது. இதுதான் இவர்களின் ஹோம் ஒர்க். இதை நாம் நல்ல முயற்சி என்று சொல்லாவிட்டால் ஏளனமாக பார்க்கப்படுவோம். இந்தப் படத்தில் ஓரளவிற்கு நன்றாகவே டீடெயிலிங் செய்திருக்கிறார் இயக்குனர். ஆனால் வசனம் சென்னையை பிரதிபலிக்கவில்லை. இந்த முயற்சியையாவது நாம் பாராட்ட வேண்டும் என்றால் யார்தான் கஷ்டப்படாமல் படம் எடுக்கிறார்கள்? பாராட்டு முயற்சிக்கா, படத்திற்கா?

ஒரு பேட்டியில் கதையில் எதிர்பாராத தருணங்கள் அதிகம் என்றார் சம்பத். நான் மட்டுமல்ல என்னுடன் படம் பார்த்த இன்னும் சிலரும் சம்பத்தின் நடவடிக்கைகளை அழகாய் எடுத்தியம்பினார்கள், காட்சிகள் வரும் முன்பே. ரவி – செட்டப் காதல் ஜோடியின் முடிவு, ஜிஸ்ம் என்ற இந்தி படத்தை பிட் மட்டுமின்றி முழுவதுமாய் பார்த்த எல்லோருமே எளிதில் யூகித்து விடுவார்கள். ஆக ஜாக்கியின் முடிவும் தெரிந்த ஒன்றுதான். இதில் என்ன புதுசு என்பது புரியவில்லை.

படத்தில் ஏதேனும் குறியீடுகள் ஒளிந்திருக்கின்றனவா என்றறிய கையில் விளக்கெண்ணய் வைத்திருந்தேன். யாஸ்மின் என்ற பெயரை ”யெஅஸ்மின்” என்றும் P.S வினோத் என்பதில் S க்கு பிறகு புள்ளியில்லாமலும் போட்டதை தவிர வேறு எந்த பாடாவதி குறியீடும் கண்ணில் படவில்லை. சம்பத் போலிஸ் ஜீப்பில் இருந்து தப்பிக்கும் காட்சியொன்றில் இடது பக்கமிருந்து மீடியன் கோட்டை தாண்டி வலது பக்க சாலையில் ஓடுகிறார். இது அவர் போக்கை மாற்றுவதாக குறிக்குமேயானால் பின்நவீன குறியீடு 3 என எடுத்துக் கொள்ளலாம். அதைத் தவிர வேறேதும் எனக்கு தெரியவில்லை.

நடிகர்களில் ஜாக்கியின் உடல் மொழி பிரமாதம். ஆனால் குரல் தெளிவாக இல்லை. சம்பத் வழக்கம் போல. அவரின் பாத்திரம் நன்றாக இருப்பதால் பிடித்து போய்விடுகிறது. மற்றபடி அனைவரும் ஓரளவிற்கு சொன்ன வேலையை செவ்வனே செய்கிறார்கள். யார் யாருக்கு என்ன வேண்டுமோ அதை செய்து கொள்கிறார்கள். அதுதானே தர்மம்? கடைசிக் காட்சியில் ஜாக்கியின் செட்டப் பணத்தை மளிகை கடை அண்ணாச்சியிடம் கொடுத்து வைக்கிறார். அதை அண்ணாச்சி ஆட்டையை போடுவதாக காட்டியிருந்தால் இன்னொரு தர்மம் கூடியிருக்கும்.

படத்தின் பிண்ணனி இசை ஓக்கே. காதல் காட்சிகளில் அமைதியும், ஆக்‌ஷன் காட்சிகளில் ரொமாண்டிக் இசையும், கொலை செய்யும் போது புல்லாங்குழலும் அட போட வைக்கின்றன. எதையாவது புதுசா செய்ய வேண்டுமென்ற ஆர்வம் தெரிகிறது. அடுத்த முறை டூயட் பாடலை சோக ராகத்திலும், சுடுகாட்டு பாடலை அமெரிக்க பீட்டிலும் யுவன் முயற்சிக்கலாம்.

படத்தை என் கண்களால் பார்த்தேன். பிடிக்கவில்லை. அது படத்தின் பிரச்சினையல்ல. உன் கண்களின் பிரச்சினை என்று சொல்பவர்கள் சொல்லலாம். ஆனால் அவை என் கண்கள் என்பதால் நான் படத்தைத்தான் குறை சொல்லுவேன். ரத்த சரித்திரம், ஆரண்ய காண்டம் போன்ற வன்முறை படங்கள் எனக்கு பிடிக்காமல் போவதால் நானும் ஜாக்கியைப் போல “டொக்கு” ஆகிவிட்டேனோ என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனா இதே வகையிலான வேறு சில படங்கள் பிடித்து தொலைத்ததால் இன்னும் டக்கராகத்தான் இருக்கிறேன் என்பது நிரூபனம் ஆனது. இது ஒரு தமிழ்ப்படம். தமிழ்நாடு, இந்தியாவில் இருக்கிறது. இந்தியா உலகில் ஒரு நாடு. ஆக இதுவும் ஒரு உலகப்படம் என்று சொல்வதன் மூலமே இதற்கு உலகப்படம் என்ற லேபிள் கிடைக்கும். ஆனா அப்படி பார்த்தால் கரகாட்டக்காரனும், சம்சாரம் அது மின்சாரமும் கூட உலகப்படங்கள் ஆகிவிடும்.

மொத்தத்தில் ஆரண்ய காண்டம் – ஆபத்தான கண்டம்.

________________________

படத்தின் இடைவெளியில் அரங்கிலிருந்தே நான் எழுதிய சில ட்வீட்டுகள்:

1) யப்பா சாமீகளா.நீங்களும் உங்க உலகப்படமும். Total disappointment till interval

2) @parisalkaaraan போய்யா யோவ். Total artificial. சென்னைன்னா என்னா தெரியுமா? ராயபுரம்ன்னா என்ன தெரியுமா?

3) டேய். என்ன ரிலீஸ் பண்ணுங்கடா.. ஜாமீனாவது கொடுங்கடா. நான் என்ன கனிமொழியா?

4) இப்போது  உலகின் சந்தோஷமான மனிதன் நான் தான். படம் முடிந்துவிட்டது.

36 கருத்துக்குத்து:

யுவகிருஷ்ணா on June 14, 2011 at 4:56 PM said...

படம் பிடிக்கவில்லை என்கிற உங்கள் கருத்து அட்டென்ஷன் சீக்கிங்காக படவில்லை. ஆனால் இந்தப் பதிவு அப்படியொரு தோற்றத்தைக் கொடுக்கிறது

குழந்தபையன் on June 14, 2011 at 5:26 PM said...

வலுவான கண்டனகள் இந்த பதிவிற்கு..இளம் இயக்குனரின் முதல் படம் என்ற நினைப்போடு நீங்கள் படம் பார்க்கவில்லை என நான் நினைக்கிறன்..உதவி இயக்குனராக (ஓரம்போ வசனம் மட்டுமே) பணி புரியாமலே இயக்குனர் ஆனவர் இவர்.நீங்கள் தரும் காட்சி விளக்கம் எல்லாம் எனக்கு தெரியாது ஆனால் தமிழ் சினிமாவில் மாறுதல் வர போவதை உணர்த்தும் படமாக தான் இது உள்ளது..இதே படத்தை பாலாவோ இல்லை அவர் அனுபவத்திற்கு இணையான இயக்குனர் எடுத்திருந்தால் உங்கள் கருத்துக்கள் அனைத்துமே என் கருத்தாகவே இருந்திருக்கும்..

மசாலா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழையாமல் ஓர் உலக சினிமாவை தமிழில் வழங்கியமைக்காகேவே பாராட்ட பட வேண்டியவர் இயக்குனர்..

அமுதா கிருஷ்ணா on June 14, 2011 at 5:34 PM said...

பிடிக்காத படத்திற்கு பெரிய விமர்சனம்..

கார்க்கி on June 14, 2011 at 6:18 PM said...

நல்ல பின்னூட்டம் . நன்றி யுவா

குழந்தைபையன், நான் படம் பார்க்க பொகும்போது இய்க்குனரின் பயோடேட்டா பார்ப்பதில்லை. அப்படி பார்த்து பார்த்துதான் ஆயுத எழுத்து, தாஜ்மகால், ஆஞ்சனேயா, குருவி என அடி வாங்கினேன்

//உங்கள் கருத்துக்கள் அனைத்துமே என் கருத்தாகவே இருந்திருக்கும்//

என் கருத்து என்னவென்பதை மட்டுமாவது எனக்கு மட்டுமே இருக்க விட்டு கொடுப்பா.அதையும் நீயே சொன்னா எப்படி?

மறுபடியும் இதுதான் பிரச்சினை. இது உலக சினிமா அளவுக்கு இல்லை. நல்ல படம் என்பீர்களேயானல் உங்கள் அணியின் நானும் இணைவேன்

அமுதா மேடம், ஃபெயிலான பையனுக்குதான் ஸ்பெஷல் கிளாஸ் எடுப்பாங்க

Sen22 on June 14, 2011 at 6:51 PM said...

//நானும் ஜாக்கியைப் போல “டொக்கு” ஆகிவிட்டேனோ என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனா இதே வகையிலான வேறு சில படங்கள் பிடித்து தொலைத்ததால் இன்னும் டக்கராகத்தான் இருக்கிறேன் என்பது நிரூபனம் ஆனது.//

கார்க்கி டச்..

amas on June 14, 2011 at 7:20 PM said...

நீளமான விமர்சனம்.மெனக்கெட்டு எழுதியிருக்கிறீர்கள். பலர் பாராட்டியுள்ள படம் உங்கள்ளுக்கும் பிடிக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை. அதற்கானக் காரணத்தை உங்கள் மொழியில் கூறியுள்ளீர்கள்.நான் வன்முறை நிறைய உள்ள படங்களை பார்ப்பதில்லை. உங்கள் விமர்சனம் படிக்கப் பிடித்தது :)
amas32

M.G.ரவிக்குமார்™..., on June 14, 2011 at 8:23 PM said...

உங்கள் பதில் பின்னூட்டங்களும் ரசிக்க வைக்கின்றன சகா......

குழந்தபையன் on June 14, 2011 at 8:43 PM said...

வாய் ஜாலத்தில் வல்லவரே..உலக சினிமாக்களின் விமர்சகரே..உங்கள் கருத்தை உங்களிடமே கொடுத்து விடுகிறேன்..எதிர் கருத்து வந்தால் தான் வெற்றி பெரிதாகும் என யாரோ சொல்லி இருக்காங்க..ஒரு இளைஞன் புதிதாய் நுழைந்து ஏதோ செய்ய துடிக்கிறான் அதனால் என் ஆதரவு..

பி.கு: உங்கள் அளவுக்கு நான் உலக சினிமா பார்த்ததில்லை அதனால் தான் என்னவோ இது எனக்கு(என்னை போன்ற பலருக்கு)பிடித்ததுக்கு ஒரு(!) காரணம்

Thamizhmaangani on June 14, 2011 at 8:46 PM said...

//டேய். என்ன ரிலீஸ் பண்ணுங்கடா.. ஜாமீனாவது கொடுங்கடா. நான் என்ன கனிமொழியா?//

hahahahahaha classic comedy!:))

முரளிகுமார் பத்மநாபன் on June 14, 2011 at 9:13 PM said...

சகா, உங்கள் கருத்துக்களில் எனக்கும் சம்மதம் இல்லை. என சம்மதம் உங்களுக்கு தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் இதை ஏன் சொல்கிறேன் என்றால், பல விஷயங்களில் நமது ரசனை ஒத்துப்போகும் பொழுது இப்படி ஒரு காண்ட்டோவர்ஷியல் ரசனை நமக்கு வருவது சற்று ஏமாற்றமாக இருக்கிறது.

பரிசலுக்கு போன் பண்ணி அவசியம் படம் பாருங்கன்னு சொன்னது, அவரால் இந்த படத்தை ரசிக்க முடியும் என்பதால். ஒவ்வொருவர் பார்வையிலும் படம் எப்படியிருந்தது என்று தேடித்தேடி படித்துக்கொண்டிருக்கிறேன். அப்படிப்பார்க்கையில் உங்கள் பதிவும் பார்வையும் எனக்கு ஏமாற்றம்தான்

கார்க்கி on June 14, 2011 at 9:16 PM said...

சென், நன்றி :)

நன்று amas

ரவி, :))

பிரிட்டோ, வாய்ஜாலம் எல்லாம் இல்லை. எனக்கும் அதிக உலக சினிமா பரிச்சயம் இல்லை. நல்ல முயற்சின்னு பாராட்டினா 99% படங்களை பாராட்டணும். ஒரு ப்டத்த எடுப்பது சாதாரண வேலையல்ல.. இந்தப் படம் பிடிப்பதில் பிரச்சினையே இல்லை. படத்தின் புரமோ குழு, பதிவுலக நண்பர்கள் எல்லாம் இதுதான் தமிழின் முதல் உலக சினிமா என சொன்னதே எனக்கு ஏமாற்றம். அது தவிர்த்து பார்த்தால் எனக்கு நடிப்பு, திரைக்கதையென பிடித்த சில அம்சங்கள் கொண்ட படம் தான் இது..

தமிழ்மாங்கனி, எப்படியிருகிங்க? ரொம்ப நாளாச்சு

கார்க்கி on June 14, 2011 at 9:19 PM said...

முரளி, எனக்கும் தான். பரிசல் சொன்னதும் இன்று பார்த்தே ஆக வேண்டுமென போய் பார்த்தேன்.. ஏனோ பிடிக்கவில்லை.

எந்தவொரு கலையும் அது சார்ந்த மண், கலாச்சாரம், பண்பாடு(இதில் எனக்கு நம்பிக்கையில்லை), வாழ்வியல் முறையென ஏதோ ஒன்றை பிரதிபலிப்பதன் மூலமே கிளாசிக் ஆகும்.இதில் அபப்டி எதுவும் இல்லை. பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் போல ஹியுமன் டச்சும் இல்லை.

இந்த ஜானர் படங்கள் எடுத்தால் city of godன் தழுவலான புதுப்பேட்டை வடசென்னையின் வாழ்வியலை நன்றாக பிரதிபலித்த படம் என்பேன். இதில் அது 0%..

எந்த வகையில் இந்தப்படம் புதுமையென்றோ, வித்தியாசம் என்றோ, சுவாரஸ்யெம் என்றோ சொல்றீங்க?

கார்க்கி on June 14, 2011 at 9:52 PM said...

என் பிளாகில் சும்மா தேடிப்பார்த்தேன்.. தமிழ்ப்படம்,பாஸ் எ பாஸ்கரன், எந்திரன்,காவலன், தென்மேற்குப்பருவக்காற்று,பயணம் போன்ற படங்களை பிடித்ததாக எழுதி இருக்கிறேன்.

ஆரண்ய காண்டம், மாப்பிள்ளை, சித்து +2,ரத்த சரித்திரம்,பலே பாண்டியா,சுறா, காதல் சொல்ல வந்தேன் போன்ற படஙக்ளை பிடிக்கவில்லை என்று எழுதி இருக்கிறேன்.

மக்கள் இந்த படங்களுக்கு என்ன வரவேற்பு கொடுத்தார்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

http://www.karkibava.com/search/label/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88

மதுரை சரவணன் on June 14, 2011 at 11:03 PM said...

எதிர்ப்பும் ஆதரவும்... படம் பார்க்க தூண்டுகிறது... படம் பார்த்து மீண்டும் வருகின்றேன்...

bala on June 15, 2011 at 12:43 AM said...

indha dialog-la endha part "intelligent-a" irruku-nu innum ennaku puriyala...
//“சம்பத்: அப்பானா உனக்கு ரொம்ப புடிக்குமாடா”

பையன்: அப்படியில்லை. ஆனா அவர் எனக்கு அப்பா”//

Shanmuganathan on June 15, 2011 at 8:23 AM said...

டியர் சகா

சாரி சகா, நான் என் கண்களால் பார்த்ததால் படம் எனக்கு பிடித்திருந்தது என்று நினைக்கிறேன்...

முதலில் வசனங்கள்.... ரவிக்ரிஷ்ணவிடமிருந்து ஆரம்பிக்கிறேன்.... அவன் தான் முதலிலே சொல்லி விடுகிறானே எல்லாரும் என்னை சப்பை சப்பை நு நினைக்கிறாங்க ஆனால் நான் எப்டின்னு உனக்குத்தான் தெரியும்னு.. எல்லார்கிட்டயும் நாம் ஒரேமாதிரி பேசிவிட்டு போய்விட முடியாது நண்பா... அவன் ஹீரோ அந்த சமயத்தில்.. அவனுக்கு முழு சுதந்திரம் கிடைக்கிறது அவளிடத்தில். சகா எங்க தாத்தா கூடத்தான் வீடியோ கேம் விளையாடுவாரு.... அதற்காக... அப்புறம் அந்த சின்ன பைய்யன்.. முதலிலே அவனின் அப்பாவையே அவன் தான் வழிநடத்துவது போல் கான்ப்பிக்கிறார்கள்... மற்றும் அவன் சொல்லும் விதம் ((டயலாக் டெலிவரி) கூடவா உங்களுக்கு தெரிய வில்லை.. அப்புறம் சென்னையின் initial பற்றியது சென்னையில் படம் நடப்பது போல் காண்பித்தால் சென்னை பாஷை மட்டும் தான் பேசவேண்டும்னு என்ன விதியா... சென்னைல இந்த மாதிரி தொழில் பண்றவங்க சென்னை காரங்க மட்டும் இல்ல நண்பா..... அப்புறம் அந்த பெரியவரின் (ஜமீன்) காட்சி அமைப்புகளும் வசனங்களும் எனக்கு ஒரு சிறுகதை படிக்கும் உணர்ச்சியே தந்தது...

காட்சி அமைப்புகள்...
இருட்டான டீகடையை நீங்கள் டவுன்ல் பார்த்ததே இல்லையா... சிகரட் அடிக்க தொடங்கி இருக்கும் இளைஞனிடம் கேட்டு பாருங்க சகா... அப்புறம் ஜக்கி ஷெரபின் வீடு.. உங்களுக்கு அது ஒரு தாதாவின் வீடு என்பதை எப்படிதான் கண்பிப்பது சொல்லுங்கள்... நாயகன் போல் காண்பித்தால் நாயகனு மாதிரின்னு சொல்லிடிவீங்க.. எவ்வளவோ புதிய முயற்சிகள் படத்தில் காட்சி அமைப்பில் .. அந்த டிவி ஸ்க்ரீனில் அவர்கள் தெரிவது, சேவலை அறுக்கும் பொது நமக்கு பெரியவரை கொல்வது போல் தோணுவது... நீங்க படத்தை பார்க்காமல் த்வீத் மட்டும் செய்து கொண்டிருந்தால்... முதலில் இந்த செல்போனை தடை செய்ய வேண்டும் திரை அரங்கிற்குள்....

இசை...
ஆமாம் வெளிநாட்டு படங்களில் இதுபோல் இசை இடம் பெற்று இருந்தால் அவர்களில் திறமையே தனி என்று இருப்பீர்கள்... தொழில் நுட்ப உத்தி என்றல்லாம்.. அவர்கள் ரோட்டில் நடக்கும் போது லைவ் ரெகார்டிங் போல் சில சத்தங்களை கவனித்தீர்களா.. மிகவும் நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார்.... Really he has done great job...

கதாபத்திரங்களின் தேர்வு.... அவர்களின் நடிப்பு... திரைக்கதை.. வசனங்கள்... காட்சி அமைப்பு.. எல்லாமே சிறப்பாக இருந்தது...

எனக்கு ரத்த சரித்திரம் சுத்தமாக பிடிக்கவில்லை. அது ஒரு வன்முறையை ரசிக்க வைக்கும் ஒரு படம்..

இதில் அப்பாவிகளே கொல்லபடுவது கிடையாது கவனித்தீர்களா... அது தான் உங்களுக்கு பிடிக்கவில்லைன்னு நினைக்கிறேன்..

நான் வேறு எவரின் விமர்சங்களையும் படிக்க வில்லை..

மிகவும் அதிகம் பேசியிருந்தால், எழுத்துகளில் ஏதேனும் பிழை இருந்தால் மண்ணிக்கவும்...

நன்றியுடன்
Shanmuganathan

கார்க்கி on June 15, 2011 at 9:46 AM said...

ச‌ர‌வ‌ண‌ன், :))

பாலா, அப்ப‌ அதுல‌ பாராட்ட‌ என்ன‌ இருக்குன்னு என்றும் சொல்லிடுங்க‌ :)

ச‌ண்முக‌நாத‌ன், முத‌லில் ந‌ன்றி
வீடியோகேம் ஆடுவ‌தை கின்ட‌ல‌டிக்க‌வில்லை. 50 ல‌ட்ச‌ம் திருட‌, அதுவும் ஒரு பெரிய‌ தாதாவின் வீட்டிலே திருட‌ பிளான் போடும்போது கூட வீடியோகேம் ஆடும் ஒருவ‌ன் என்றுதான் சொல்லியிருக்கேன். அது கூட‌ சிறுப்பிள்ளைத்த‌ன‌மா இல்லைன்னு சொன்னா நான் எதுவும் பேச‌ல‌. அப்புற‌ம் அந்த‌ ஜ‌மீன் பைய‌ன். அத‌ற்கு நான் சொல்லியிருப்ப‌து
"அவனைக் கூட கொஞ்சம் புத்திசாலியாக காட்டுகிறார்கள். ஏற்றுக் கொள்ளலாம்"
நீங்க‌ளும் அதேதான் சொல்லியிருக்கிங்க‌.

சென்னையில் எல்லா ஊர்க்கார‌ங்க‌ளும் இருக்காங்க‌. ஆனா அந்த‌க் கூட்ட‌த்தில் ஒருவ‌ர் கூட‌ சென்னையில்லை. எல்லோரும் மைக்ர‌ன்ட் என்று சொல்வ‌து.. இதுதான் சார் நொண்டிசாக்கு

பாஸ்..என்னைவிட‌ அதிக‌ உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்டிருக்கிங்க‌. கோண‌ங்க‌ள் என்ற‌ வ‌கையில் ந‌ன்றாக‌ இருந்த‌து என்றே சொல்லியிருக்கேன். லைட்டிங்கில் தான் ஏமாற்ற‌ம். இன்னொரு முறை ப‌ட‌ம் பாருங்க‌ள். ஜ‌மீன் இருக்கும் லாட்ஜ், ஜாக்கியின் வீடு, டீக்க‌டை எல‌ எல்லாவ‌ற்றிலும் நான் சொன்ன‌ விதி ஒரே மாதிரி இருக்கா இல்லையா என‌ வ‌ந்து சொல்லுங்க‌ள்.

நான் ட்விட்ட‌ய‌து இடைவேளையிலும், ப‌ட‌ம் முடிந்த‌ பின்னும் என்ப‌து தெளிவாக‌ என் டிவ்விடிலே புரிகிற‌து. 3வ‌து ட்வீட் ம‌ட்டுமே இடையில் எழுதிய‌தாக‌ இருக்கும். இதுவே புரியாத‌ உங்க‌ளுக்கு ப‌ட‌ம் புரிந்திருக்கிற‌து. வாழ்த்துக‌ள் பாஸ்..

இசை.. நான் என்ன‌ சொல்லியிருப்பேன் என‌ நீங்க‌ள் க‌ண்ட‌றிய‌ வேண்டாம். இதுவ‌ரை அப‌ப்டி ஏதாவ்து சொல்லியிருந்தால் உதார‌ண‌‌ம் காட்ட‌வும்

//கதாபத்திரங்களின் தேர்வு.... அவர்களின் நடிப்பு... திரைக்கதை.. வசனங்கள்... காட்சி அமைப்பு.. எல்லாமே சிறப்பாக இருந்தது...//

என் விம‌ர்ச‌ன‌ம் முழுசா ப‌டிச்சிங்க‌ளா? நீங்க‌ சொன்ன‌தில் வ‌ச‌ன‌ம், காட்சிய‌மைப்பு த‌விர‌ ம‌ற்ற‌வ‌ற்றை நானும் பாராட்டியிருக்கிறேன்.

//இதில் அப்பாவிகளே கொல்லபடுவது கிடையாது கவனித்தீர்களா... அது தான் உங்களுக்கு பிடிக்கவில்லைன்னு நினைக்கிறேன்..//
என்ன‌ சொல்ல‌ வ‌றீங்க‌? அப்பாவிக‌ள் கொல்ல‌ப்ப‌ட‌ணும் என்று நான் ஆசைப்ப‌டுகிறேனா?

//மிகவும் அதிகம் பேசியிருந்தால், எழுத்துகளில் ஏதேனும் பிழை இருந்தால் மண்ணிக்கவும்...//

அதெல்லாம் இல்லை ச‌கா.. உங்க‌ளுக்கு புடிச்சிருக்குன்னு சொல்றீங்க‌. த‌வ‌றேதும் இல்லை. அதே போல் பிடிக்க‌வில்லை என்று சொல்ல‌ என்னையும் அனும‌திக்க‌லாம். ஏனெனில் அதுதான் த‌ர்ம‌ம். :)

தராசு on June 15, 2011 at 10:19 AM said...

லக்கி அண்ணனுக்கு ஒரு ஆமாம் சாமி.,,

Shanmuganathan on June 15, 2011 at 10:49 AM said...

:) நன்றி

குழந்தபையன் on June 15, 2011 at 2:19 PM said...

// உங்க‌ளுக்கு புடிச்சிருக்குன்னு சொல்றீங்க‌. த‌வ‌றேதும் இல்லை. அதே போல் பிடிக்க‌வில்லை என்று சொல்ல‌ என்னையும் அனும‌திக்க‌லாம். ஏனெனில் அதுதான் த‌ர்ம‌ம். :)//
இதன் எதிர் பதமும் புரிந்திருக்க வேண்டும் உங்களுக்கு

கார்க்கி on June 15, 2011 at 2:27 PM said...

////போலீஸில் மாட்டிக்கொள்ளும் ஹீரோ ஜீப்பில் ரகளை செய்து தப்பிப்பது, அதற்கு பிறகு போலீஸும் அவரை ஒன்றுமே செய்யாமல் விட்டுவிடுவது, மனைவியை கடத்தப்போகிறார்கள் என்பது தெரிந்தவுடன் போலீஸிடமிருந்து தப்பிக்கும் ஹீரோ, போகும் வழியில் ஒரு போன் பண்ணி மனைவியை தப்பிக்க சொல்லக்கூடவா அவனுக்கு சிந்தனையிருக்காது.. இத்தனைக்கும் அதற்கு முந்தைய காட்சியில் அவன் செல்போனில் மனைவியோடுதான் பேசிக்கொண்டிருப்பான்​! //

Athisha rockssss

http://www.athishaonline.com/2011/06/blog-post_15.html

கார்க்கி on June 15, 2011 at 3:06 PM said...

//அது படத்தின் பிரச்சினையல்ல. உன் கண்களின் பிரச்சினை என்று சொல்பவர்கள் சொல்லலாம்.//

//இந்தப் படம் பிடிப்பதில் பிரச்சினையே இல்லை. படத்தின் புரமோ குழு, பதிவுலக நண்பர்கள் எல்லாம் இதுதான் தமிழின் முதல் உலக சினிமா என சொன்னதே எனக்கு ஏமாற்றம்//

நான் எங்கேயும் பிடிக்கும்னு சொன்ன‌வ‌ர்க‌ளை த‌வ‌றென்று சொல்ல‌வில்லை மாஸ்ட‌ர்.குழ‌ந்தைப்பைய‌ன் :)

இளந்தென்றல் on June 15, 2011 at 3:28 PM said...

உண்மையிலேயே டொக் ஆகிட்டீங்க பாஸ்

இளந்தென்றல் on June 15, 2011 at 3:28 PM said...

உண்மையிலேயே டொக் ஆகிட்டீங்க பாஸ்

கார்க்கி on June 15, 2011 at 8:21 PM said...

இளந்தென்றல், நீங்க சரியா இருக்கிங்க இல்ல? அது போதும் பாஸ்

Mervin on June 15, 2011 at 11:29 PM said...

பிடிக்கும் பிடிக்காது என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால் பிடிக்காத விஷயத்தை ஏன் பிடிக்கவில்லை என்று நியாப்படுத்துவது பக்கத்து இலையில் பிரியாணியை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டிருப்பவனிடம் 'இதைப் போய் சாப்பிடுறியே' என்று ஆரம்பித்து லெக்சர் வைப்பதற்கு சமம். பெயிலான பையனுக்கு கிளாஸ் எடுக்கலாம். ஆனா கிளாஸ் எடுத்தே ஒருத்தனை பெயிலாக்க கூடாது.

கார்க்கி on June 16, 2011 at 12:16 AM said...

மெர்வின்,

பிடிக்காத விஷயத்தை ஏன் பிடிக்கவில்லை என்று நியாயாமக விளக்குவது தவறா? :)))

அப்புறம் எது முதல்ல நடந்தது? கிளாஸ் எடுத்ததா, ஃபெயில் ஆனதா?

உங்க பேச்சும் ஆ.காண்டம் மாதிரி லாஜிக்கே இல்லாம இருக்கு பாஸ்.. :)

sivakasi maappillai on June 16, 2011 at 3:28 PM said...

என்னவோ போங்க....

sivakasi maappillai on June 16, 2011 at 3:30 PM said...

எனக்கு பருத்தி வீரன் சுத்தமா பிடிக்கலை....

ஆரண்ய காண்டம் ரொம்ப பிடிச்சிது.... அப்ப நான் யார்... மக்கா... டொக்கா....

Vijay Armstrong on June 17, 2011 at 12:05 AM said...

மாறுபட்ட திரைமொழியை 'தமிழில்' முயன்றுபார்த்த திரைப்படம் என சொல்லலாம். ஒரு திரைவடிவத்தின் ஆதார காரணிகளான 'கதை', 'திரைக்கதை', 'வசனம்', 'இயக்கம்' ஆகிய நான்கில் 'கதை,திரைக்கதை' ஆகியவை நன்றாக இருக்கிறது. 'வசனம்' பொருத்தமட்டில் அளவுக்கு அதிகமான புத்திசாலித்தனம் கதாபாத்திரங்களை மீறி வெளிப்படுகிறது. அதையும் மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம், ஏனெனில் மாறுப்பட்ட திரைமொழிக்கு அதுவும் ஒரு காரணமாக இருப்பதினால்.

இந்தபடம் மெதுவாக நகருகிறது. 100 கிலோ மீட்டரிலில் ஓடவேண்டியது, 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லுகிறது. சிலருக்கு அது குறையாக தெரியாமல் போகலாம். அல்லது போதுமானதாக இருக்கலாம். ஆனால் மெதுவாக நகருகிறது என்பதை மறுக்க முடியாது. அதற்கு காரணம் 'இயக்கத்'திலிருக்கும் குறை என்பது என் அபிப்பிராயம். அது இயக்குனரின் தகுதி இன்மை இல்லை. அவரையும் மீறி அது வராமல் போய் இருக்கலாம். இது முதல் படம் தானே. அடுத்தப்படத்தில் இதை அவர் சரி செய்துவிடுவார் என நினைக்கிறேன். கதாபாத்திரத் தேர்வு, நடிப்பு, வசனம் உச்சரிப்பு, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம், காட்சித்துண்டுகளை உறுவாக்கியவிதம்(Shot Construction) போன்றவற்றில் இயக்குனரின் திறமை வெளிப்படுகிறது.

ஒளிப்பதிவைப் பொருத்தவரையில் நான் 'கார்க்கியின்' கருத்தில் உடன் படுகிறேன். இன்னும் நன்றாக ஒளி அமைப்பு செய்திருக்கலாம் என்பதுதான் என் கருத்தும். பின்னனி இசை வித்தியாசமாக இருக்கிறது அவ்வளவுதான். சிறப்பானது இல்லை. போதுமானதும் இல்லை.

ஒரு மாறுபட்ட முயற்சி என்ற விதத்திலும், அதை நேர்த்தியாக கொடுக்க முயன்றதிலும், முதல் படத்திலேயே இயக்குனருக்கான திரைமொழியோடு வெளிப்பட்டதிலும் நாம் இயக்குனரைப் பாராட்டலாம். வரவேற்கலாம்.

ஆனால் உலகப்படம், தமிழின் தலைவிதியை மாற்றும் படம் என்றெல்லாம் சொல்லி ஒரு வளரும் கலைஞனை தவரான இடத்திற்கு கொண்டுச்சென்று விடாதீர்கள். சிறந்தவற்றை பாராட்டும் நாம் தான் தவறையும் அவருக்கு சுட்டி காட்ட வேண்டும். அப்போதுதான் அவரால் இன்னும் சீரிய முறையில் தன் படைப்புகளை முன் நகர்த்த முடியும்.

--
சிறப்பான விமர்சனம் கார்க்கி. நேர்மையானதும் கூட..இதற்கு பின்னால் எந்த வித உள்நோக்கமும்(எல்லோரும் பாராட்டினா எதிர்த்து பேசி அட்டென்ஷன் சீக் பண்றீங்களா) இல்லை என்பதை நான் நம்புகிறேன்.

Bizzarree on June 17, 2011 at 1:14 PM said...

"பிடிக்கும் பிடிக்காது என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால் பிடிக்காத விஷயத்தை ஏன் பிடிக்கவில்லை என்று நியாப்படுத்துவது பக்கத்து இலையில் பிரியாணியை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டிருப்பவனிடம் 'இதைப் போய் சாப்பிடுறியே' என்று ஆரம்பித்து லெக்சர் வைப்பதற்கு சமம்"-நன்றி நண்பா !
தெரியாம இங்க வந்துட்டேன் ! இனி இந்த பக்கம் வரவே மாட்டேன் ! மொக்க பதிவு ! இந்த படம் பிடிக்கலன்னா உனக்கு எந்த படம் பிடிக்கும் டொக்கு பையா ?
- Bloorockz Ravi

Julia on June 17, 2011 at 4:55 PM said...

யுவனின் இசையை கிண்டலடித்திருப்பதன் மூலம் தங்களுடைய இசை அறிவும், இந்தப் படத்தின் ஒளிபதிவு சரியில்லை என்பதன் மூலம் தங்களுடைய கலைக் கண்ணோட்டத்தையும், யாஸ்மின் என்ற பெயரை ”யெஅஸ்மின்” என்றும் P.S வினோத் என்பதில் S க்கு பிறகு புள்ளியில்லாமலும் போட்டதை கண்டு பிடித்ததிலிருந்து தங்களுடைய உற்று நோக்கும் தன்மையும்(மதராச பட்டிணம் மோசமான படம் ஏன்னா அதுல "ப்" இல்ல) இது தவிர எந்திரனை நல்ல படம் என்பதிலிருந்து தங்களுடைய தொழில் நுட்ப அறிவும், ஆரண்ய காண்டத்தை கரகாட்டக் காரனோடு ஒப்பிட்டதிலிருந்து தங்களது சினிமா அறிவும் தெள்ளென விளங்கிக் கொண்டோம். இன்னும் நிறைய இது போல டொக்குப் பதிவுகளை இடவும். நன்றி..

கார்க்கி on June 18, 2011 at 12:31 AM said...

நன்றி விஜய்.

//ஆனால் உலகப்படம், தமிழின் தலைவிதியை மாற்றும் படம் என்றெல்லாம் சொல்லி ஒரு வளரும் கலைஞனை தவரான இடத்திற்கு கொண்டுச்சென்று விடாதீர்கள். சிறந்தவற்றை பாராட்டும் நாம் தான் தவறையும் அவருக்கு சுட்டி காட்ட வேண்டும். அப்போதுதான் அவரால் இன்னும் சீரிய முறையில் தன் படைப்புகளை முன் நகர்த்த முடியும்//

இதுதான் முக்கியம்

_____________

பிசாரே, நீங்கதான் திரும்ப வர மாட்டிங்களே.. எதுக்கு பதில் சொல்லி என் நேரத்தை விரயம் செய்யணும்ன்னு யோசிக்கிறேன். திரும்ப வருவீங்கன்னா சொல்லுங்க. பிடித்த படங்களை எவையென்று சொல்கிறேன்.

இப்படிக்கு,
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

கார்க்கி on June 18, 2011 at 8:38 PM said...

ஜூலியா,

யுவன் இசை கிண்டலடிக்கும் அளவிற்கு என்றும் இராது என்று நம்பும்போது உங்களின் வெகுளித்தனத்தையும், ஒளிப்பதிவு பற்றி நான் சொன்னது தவறு என்று குட்டிய போது உங்களின் ஞானத்தையும், மதராசப்பட்டணத்தில் “ப்”போடாததால்தான் மோசமான படமென்று நான் சொன்னதாக எழுதிய இடத்தில் உங்களின் வாசிப்பனுபவத்தையும்,எந்திரன் எனக்கு பிடித்தது என்றதை நல்லப்படமென நான் சொன்னதாக மாற்றியதில் உங்களின் சாமர்த்தியத்தையும் கண்டு ஆச்சரியமுற்றேன். இன்னும் இது போல பல டக்கரான பின்னூட்டம் இட வேண்டுகிறேன். நன்றியோ நன்றி

இசைப்பிரியன் on June 21, 2011 at 4:30 PM said...

ஆறு பாலையும் ஒரெ நேரத்துல sixer அடிக்கற Talent உங்களுக்கு உண்டு கார்க்கி

…பின்னூட்டத்தில் தெரிகிறது :)

சசிகுமார் on December 21, 2011 at 5:09 AM said...

உங்களுக்கு எல்லாம் விக்ரமன் ராம. நாராயணன் , பேரரசு ,தரணி போன்ற இயக்குனர் படம் மட்டும் தான் பிடிக்கும் நான் பார்த்ததில்2011 இன் சிறந்த படம் ஆரண்ய காண்டம்

 

all rights reserved to www.karkibava.com