Jun 9, 2011

கூகிள் மிராக்கிள்


 

Untitled

இணைய‌ ப‌ய‌னாள‌ர்க‌ள் அனைவ‌ரும் தின‌மும் மின்ன‌ஞ்ச‌ல் திற‌‌க்கிறார்க‌ளோ இல்லையோ, கூகிளில் தேடாம‌ல் இருப்ப‌தில்லை. ப‌க்க‌த்து வீட்டுக்கார‌ன் பிற‌ந்த‌நாளில் இருந்து ஒபாமாவின் அடுத்த‌க்க‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை வ‌ரை எதை தேடினாலும் சிறு விள‌க்க‌ம் கொடுக்க‌ த‌வ‌றுவ‌தில்லை கூகிள். அப்ப‌டி ப‌ய‌ங்க‌ர‌ டிராஃபிக் கொண்ட‌ கூகிளில் முக‌ப்பு ப‌க்க‌த்தில் இதுவ‌ரை நீங்க‌ள் விள‌‌ம்ப‌ர‌ங்க‌ள் க‌ண்ட‌துன்டா? 75% ப‌க்க‌ம் வெள்ளையாக‌, காலியாக‌த்தானே இருக்கு? பின் ஏன் எந்த‌ விள‌ம்ப‌ர‌மும் இல்லை? க‌ட‌ந்த‌ 6 வ‌ருட‌ங்க‌ளாக‌ உறுத்திக் கொண்டிருக்கும் இந்த‌க் கேள்விக்கும் ப‌திவிற்கும் எந்த‌ ச‌ம்ப‌த‌ம‌முமில்லை என்று சொல்லி உங்க‌ள் வ‌யிற்றில் பீர் வார்க்கிறேன்.

கூகிள் டோட‌ல் என்று இப்போதெல்லாம் தின‌மும் ஒரு டிச‌னை வெளியிடுகிற‌து கூகிள் நிறுவ‌ன‌ம். பிர‌ப‌ல‌ங்க‌ளில் பிற‌ந்த‌நாள் அல்ல‌து திருவிழா என‌ அந்த‌ந்த‌ நாளின் சிற‌ப்பிற்கு தொட‌ர்பாக‌ ஒரு டோட‌ல் வெளியிடுகிற‌து. இன்று பிர‌ப‌ல‌மா‌‌ன இசைக்க‌லைஞ‌ர் லெஸ் பால் என்ப‌வ‌ர‌து பிற‌ந்த‌ நாளாம். அவ‌ரை சிற‌ப்பிக்கும் வித‌மாக‌ ஒரு கிடார் டோட‌லை வெளியிட்டிருக்கிற‌து கூகிள். ம‌வுசைக் கொண்டு த‌ந்திக‌ளை மீட்டினால் கிடார் இசை பொங்குகிற‌து. அத‌ன் வ‌டிவ‌ம் GOOGLE  என்று இருக்குமாறு டிசைன் செய்திருக்கிறார்க‌ள். ம‌வுஸ் ம‌ட்டுமின்றி, கீபோர்டில் த‌ட்ட‌சுவ‌த‌ன் மூல‌மாக‌வும் ச‌த்த‌த்தை எழுப்ப‌லாம். அத‌ற்கு முத‌லில் அந்த‌ டோட‌லில் இருக்கும் கீபோர்ட் ப‌ட‌த்தை க்ளிக்குங்க‌ள். இல்லையெனில் நீங்க‌ள் டைப்புவ‌து எல்லாம் தேடுவ‌த‌ற்கான‌ குறிச்சொற்க‌ளாக‌ எடுத்துக் கொள்ளும் கூகிள்.

இப்போது கீழே இருக்கும் எழுத்துக‌ளை த‌ட்ட‌ச்சி பாருங்க‌ள். ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டாருக்கான‌ நோட்ஸை கூகிள் டோட‌லுக்கு ஏற்ற‌து போல் எழுதி இருக்கிறேன். நீங்க‌ள் செய்ய‌ வேண்டிய‌தெல்லாம் அந்த‌ பாட‌லில் எங்கெல்லாம் கேப் வ‌ருமோ அங்கெல்லாம் இடைவெளி விட்டு த‌ட்ட‌ச்ச‌ வேண்டும்.

உதார‌ண‌த்திற்கு “YY EE” என்ப‌தை த‌ட்டச்சும் போது “YY” அடுத்த‌டுத்தும், பின் ஒரு சின்ன‌ இடைவெளி விட்டு “EE” என்ப‌தை அடுத்த‌டுத்தும் டைப்ப‌ வேண்டும். சில‌ நோட்ஸ் ச‌ரியாக‌ வ‌ர‌வில்லை. அது என் த‌ப்பா, கூகிள் குறையா என்ப‌தை நீங்க‌ளே முடிவு செய்து கொள்ளுங்க‌ள் :)

YY  EE  RR E

WW  II  UU  Y

EE  WW  II  U

EE  WW  II  U

நான் காலைல‌ இருந்து என் இனிய‌ பொன் நிலாவே, நெஞ்சுக்குள் பெய்திடும் மாம‌ழை, என்னுள்ளே என்னுள்ளே எல்லாம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்

5 கருத்துக்குத்து:

MASTER ALA MOHAMED on June 9, 2011 at 2:49 PM said...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்கிறீர்கள்

சுசி on June 9, 2011 at 3:29 PM said...

காலேலவே பார்த்தேன்.. ஆனா அதுல இவ்ளோ விஷயம் இருக்குன்னு தெரியல.. பகிர்வுக்கு நன்றி கார்க்கி..

அய்.. கிட்டார் கத்துக்கலாம் போல இருக்கே.. :))

தராசு on June 9, 2011 at 3:48 PM said...

//நான் காலைல‌ இருந்து என் இனிய‌ பொன் நிலாவே, நெஞ்சுக்குள் பெய்திடும் மாம‌ழை, என்னுள்ளே என்னுள்ளே எல்லாம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்//

ஆபீஸ்ல வேற வேலை இல்லையா..,

ஆனா, தட்டிப் பார்த்தா நல்லாத்தான் இருக்கு கார்க்கி, டேங்சு

"என் ராஜபாட்டை"- ராஜா on June 9, 2011 at 7:48 PM said...

New information thanks

LOSHAN on June 14, 2011 at 10:23 AM said...

நானும் இரண்டுநாட்களாக வாசித்தேன்..
//என் இனிய‌ பொன் நிலாவே, நெஞ்சுக்குள் பெய்திடும் மாம‌ழை, என்னுள்ளே என்னுள்ளே எல்லாம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்//
:)

 

all rights reserved to www.karkibava.com