May 20, 2011

ர‌த்த‌ம் – குறும்ப‌ட‌ம்


 

ர‌த்த‌ம் ‍ டிரெய்ல‌ர் பார்த்துட்டு பாராட்டிய‌வ‌ர்க‌ளுக்கு முத‌ல்ல‌ ந‌ன்றி. வீட்டுல‌ யாரும் இல்லாத (அதாவ‌து நான் ம‌ட்டும்)ஒரு நாள் ஏதாவது ப‌ட‌மெடுப்போம்ன்னு முய‌ற்சி செய்த‌துதான் அந்த‌ டிரெய்ல‌ர்.. யாருடைய‌ உதவியும் இல்லாம‌ ஒரே ஆளா ப‌ட‌மெடுக்க‌ முடியுமான்னு செய்த‌ முய‌ற்சி. எங்க‌ள் டீம் கேம‌ரா ஆதியிட‌ம் மாட்டிக்கிட்ட‌தால வீட்டுல‌ இருந்த‌ ஒரு சாதார‌ண‌ கேம‌ரால‌ ப‌ட‌மெடுக்க‌ வேண்டிய‌தா போச்சு. கேம‌ரால‌ நாய்ஸ் அதிக‌ம்.

எப்ப‌டியோ ப‌ட‌த்த‌ முடிச்சாச்சு.. நிச்ச‌ய‌ம் இதுவும் ஒரு அமெச்சூர் முய‌ற்சிதான். ஆனா ஒரேய‌டியா மொக்கை போடாம‌ கொஞ்ச‌ம் சீரிய‌ஸா எடுத்தேன். கேம‌ரா எப்ப‌டியெல்லாம் ப‌ய‌ன்ப‌டுத்தினேன் என்ப‌தை ப‌ட‌த்தோட‌ முடிவுல‌ சில‌ க்ளிப்பிங்க்ஸ்ல‌ காட்டியிருக்கேன். இன்னும் பெட்ட‌ரா ப‌ண்ணியிருக்க‌லாம். அடுத்த‌டுத்த‌ முய‌ற்சில‌ அத‌ பார்த்துக்க‌லாம்ன்னு விட்டுட்டேன். எடுத்த‌வ‌ரைக்கும் ப‌ட‌த்தை எவ்ளோ முய‌ற்சி செய்தும்ன்னு இதுக்கு மேல‌ கொண்டு வ‌ர‌ முடில‌. இதிலே நேர‌த்த‌ செல‌வு ப‌ண்ற‌த‌ விட‌ இதை ரிலிஸ் ப‌ண்ணிட்டு அடுத்த‌ ப‌ட‌த்த‌ ஒழுங்கா, முறையா எடுக்க‌லாம்னு முடிவு செஞ்சி ரிலீஸ் ப‌ண்றேன்.

இதுல‌ வ‌ர்ற‌ பிஜிஎம் இணைய‌த்துல‌ இல‌வ‌ச‌மா கிடைக்கிற‌ த‌ள‌ங்க‌ளில் எடுக்க‌ப்ப‌ட்ட‌து. (http://www.royaltyfreemusic.com/) அப்புற‌ம்‌ ப‌ட‌த்தோடு Psycho இசையும் இருக்கு. இன்னும் 4 நாள் செல‌வு செய்தா எடிட்டிங்ல‌ நேர்த்தியா‌ சில‌ மாற்ற‌ங்க‌ள் செய்ய‌லாம். அதையெல்லாம் ஒழுங்கா எடுத்த‌ ப‌ட‌த்துக்கு பார்த்துக்க‌லாம்ன்னு விட்டுட‌லாம். :)

முத‌ன்முத‌லில் பார்த்து க‌ருத்து சொன்ன‌ என் ந‌ட்பு குழுவிற்கும், இணைய‌த்தோழிக்கும் ந‌ன்றி.  திட்டோ, அறிவுரையோ, ஆறுத‌லோ.. ஏதாவது ஒண்ணு சொல்லிட்டு போங்க‌.

 

32 கருத்துக்குத்து:

ஸ்வாமி ஓம்கார் on May 20, 2011 at 9:16 AM said...
This comment has been removed by the author.
ஸ்வாமி ஓம்கார் on May 20, 2011 at 9:16 AM said...

பட்..படம் சூப்பர். நல்ல கிரியேட்டிவிட்டி (சீரியஸ் கமெண்ட்)

writerpara on May 20, 2011 at 9:20 AM said...

கார்க்கி, வாழ்த்து! நல்ல நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் என்பதால் குறைகள் பெரிதாகத் தெரியவில்லை. இரண்டு ஷாட்களில் நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறீர்கள்.

Truth on May 20, 2011 at 10:04 AM said...

Clapping hands...

Shanmuganathan on May 20, 2011 at 10:34 AM said...

ஹலோ கார்க்கி,
உங்களின் நடிப்பு, இசை சேர்ப்பு மற்றும் சொல்ல வந்த விடயமும் சரியாக இருந்தது, மிகவும் படம் அருமைநு சொல்லத்தான் ஆசையா இருக்கு.. ஆனால் முடியல... உங்களிடம் நிறைய எதிர்பார்க்கும் ஒரு சகா...
இந்த அளவிற்கு...
http://www.youtube.com/watch?v=xsz2wRpsgZI

நன்றி,
சண்முகநாதன்

Regan on May 20, 2011 at 10:48 AM said...

nice

குழந்தபையன் on May 20, 2011 at 10:51 AM said...

குரு..இந்த முறை இன்னும் பெருமையோடு சொல்கிறேன்..நீர் தான் என் குரு...அருமையான சிந்தனை...முகத்த கழுவிட்டு நடிச்சிருக்கலாம்....:):)

eechuu on May 20, 2011 at 11:11 AM said...

கார்க்கி படம் அற்புtham முயற்சி thodara valthukall

தங்கம்பழனி on May 20, 2011 at 12:13 PM said...

ரொம்ப நல்லா இருக்கு.. ! வாழ்த்துக்கள்..!!

Dhamu on May 20, 2011 at 12:42 PM said...

படம் நல்லா இருக்கு!
முயற்சிக்கு வாழ்த்துக்கள்...!

சுசி on May 20, 2011 at 1:41 PM said...

உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் கார்க்கி. மிக நல்ல ஒரு விழிப்புணர்வை உங்க டச்சோட எடுத்தது ரொம்ப நல்லா இருக்கு.

வர வர உங்க நடிப்புத் திறன் மெருகேறிட்டே போகுதுப்பா.

:)))))))

நீங்கள் சொல்லி இருக்கும் அத்தனை திருத்தங்களுடனும் கலக்கலான இன்னொரு குறும்படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

புன்னகை on May 20, 2011 at 1:47 PM said...

Wowie!!!!! :-)

Deepan on May 20, 2011 at 1:50 PM said...

முயற்சிக்கு வாழ்த்துக்கள்...!கொஞ்ச நேரத்துலேயே விழிப்புணர்வு படம்நு தெரிஞ்சுடுச்சு.. "Addicted to Drug" லெவல் எதாவது இருக்கும்னு எதிர்பார்த்தேன்.. :-) -Deeps_itsme

old acc on May 20, 2011 at 3:03 PM said...

தனியொரு ஆளாக ஒரு குறும்படத்தை எடுத்து முடிச்சுடீங்களே கலக்குங்க! நல்ல
முயற்சி...

ஷர்புதீன் on May 20, 2011 at 5:08 PM said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 50/100 மார்க். நன்றி!

Natarajan on May 20, 2011 at 6:41 PM said...

Hats off to the theme 1st!! Surprised to see "Ratham" & "Making of Ratham" within 5 mins!! கலக்கிட்ட்ங்க!!!!!!!

நாய்க்குட்டி மனசு on May 20, 2011 at 8:33 PM said...

u have done a fantastic job karki,

தராசு on May 20, 2011 at 9:02 PM said...

சொன்ன செய்திக்காக வாழ்த்துக்கள்.

வந்தியத்தேவன் on May 21, 2011 at 12:11 AM said...

கலக்கல் சகா அதுவும் கமெரா சில இடங்களில் உலகத்தரம்.

Kaarthik on May 21, 2011 at 6:19 AM said...

நல்ல முயற்சி. வாழ்த்துகள். ஃப்ரிட்ஜ் சீன், முகம் கழுவவது எல்லாத்தையும் விட கேமரா உங்களைப் பின் தொடர்வதுதான் பெஸ்ட். அதையெல்லாம் கடைசியில் காட்டியது அருமை

Expressions-ல பின்றீங்க. ரெண்டு எடத்துல மட்டும் கேமராவ பாக்குறீங்க (காதல் சடுகுட பாட்டுல மாதவன் பாக்குற மாதிரி :-))

'இது ஓர் உண்மை சம்பவம்' அப்படின்னு முன்னாடி போட்டிருக்கலாம் :-)

Keep rocking !!!

சி.கருணாகரசு on May 21, 2011 at 6:57 AM said...

உங்க திறமையையும்... ஆக்கத்தையும் பாராட்டுகிறேன்,
வாழ்த்துக்கள்.

Aishwarya Govindarajan on May 21, 2011 at 7:54 AM said...

அருமை கார்க்கி, நான் கூட உங்க பாணில ஏதாவது "கொசுத்தொல்லை இனி இல்லை"ன்னு ப்ளேட் போட்டுடுவீங்கலோனு நினைத்தேன்.Nice way to create awareness.இதை ஏதாவது ரத்ததானம் தொடர்பான வலைதளத்தில் வெளியிட்டால் இன்னும்,நன்றாக இருக்குமே?!:-).நான் கூட ரெண்டு நாட்களா கண்தானம் விழிப்புணர்வு பற்றி யோசிச்சுட்டு இருக்கேன்.அருமையான எக்ஸ்ப்ரெஷன்கள்,பின்னணி இசையும் :-).பாராட்டுக்கள்:-)

அருண் on May 21, 2011 at 11:06 AM said...

நிச்சயமாய் ஒரு பூங்கொத்து.வாழ்த்துக்கள்.
-அருண்-

இரசிகை on May 21, 2011 at 8:09 PM said...

sabaash...

fun aakkiduveengalonnu payanthen.
but,azhahaakkeetteenga kaarki.

manamaarntha vaazhthukal...:)

ARUNA on May 21, 2011 at 8:52 PM said...

good one Karki. உங்கள் மொக்கைகளும் நன்றாக இருக்கிறது இந்த மாதிரி விழிப்புணர்வு செய்திகளும் நன்றாக இருக்கிறது

அருணா ஸ்ரீநிவாசன்

Dubukku on May 21, 2011 at 10:21 PM said...

ஒன் மேன் ஷோவுக்கு நல்லாவே வந்திருக்கு பாஸ். மேன் மேலும் உயர வாழ்த்துகள் !!

M.Shanmugan on May 23, 2011 at 9:32 AM said...

Superb. Good message for public. in here i was given blood every 4 months

கார்க்கி on May 25, 2011 at 4:20 PM said...

அனைவ‌ருக்கும் ந‌ன்றி,

டுபுக்கு, உங்க‌ அக்மென்ட்ட‌ ரொம்ப‌வே எதிர்பார்த்தேன் :)

காவேரிகணேஷ் on May 29, 2011 at 11:39 AM said...

கார்க்கி,

அருமைடா, இன்று தான் பார்த்தேன், நன்றாக நடிக்க வருகிரது.

கேமரா, உங்களின் முயற்சி என்பதால் குறை சொல்ல தோணவில்லை.
திறமைகள் உங்களிடம் நிறைய இருக்கிறது.

தொடரட்டும், வாழ்த்துக்கள்

raamaarun (இராம அருண் ) on May 31, 2011 at 11:30 AM said...

மிகவும் பாராட்டபட வேண்டிய முயற்சி அதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை பாஸ்.

உங்களின் இனிவரும் படைப்புகளை, சூப்பர், கலக்கிட்டீங்க சொல்ல ஆசைப்படுறேன், என் ஆசையை பூர்த்தி செய்யும் திறமையும் திறனும் இருக்கு என்றும் நம்புகிறேன்.

இனிவரும் படைப்புகளில் கொஞ்சம் லைட்டிங் பாதுக்குங்க, அவுட்புட் இன்னும் சிறப்பாக இருக்கும்.

வாழ்த்துகள்.

இப்ப நான் செய்யப்போவது உங்கள் முந்தய படைப்புகளை தேடிப் பார்ப்பது.

Sangeetha TV on June 2, 2011 at 5:24 PM said...

ippo dhaan paakaren indha movie :) nalla concept :) super :)

starting paathappo, as usual edhavthu kadaisi la comedy(mokkai) a mudikka poraaru nu nenaichen. but good one :)

சரவணகுமரன் on June 4, 2011 at 7:55 PM said...

மேக்கிங் பிரமாதம்’ன்னு சொல்லுவாங்களே! இதுக்கு நிஜமாவே அப்படி சொல்லலாம்.

ரிஸ்க் எடுத்து நடிப்பாங்க. முகம் கழுவும் சீன் - பயங்கர ரிஸ்க். கேமராவுக்கு.

வாழ்த்துக்கள்.

 

all rights reserved to www.karkibava.com