May 31, 2011

த‌ம்மை வெறுப்போம்


 

  இன்று புகையிலை எதிர்ப்பு தின‌மாம்.. அலுவ‌ல‌க‌த்தின் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் த‌ம்ம‌டிக்க‌ போன‌ போது ம‌ட‌க்கி எடுத்த‌ ப‌ட‌மிது.. சிக‌ரெட் ப‌ற்றி நீண்ட‌ நாட்க‌ளுக்கு முன்பெழுதிய‌ ஒரு மொக்கை க‌தையையும் மீள்ப‌திவு செஞ்சிசுக்கிறேன்

IMG_0329

ஆறாம் விர‌ல்

அந்தக் கூட்டம் அரிச்சந்திரன் கோவிலைத் தாண்டி சென்றுக் கொண்டிருந்தது . கையில் தீச்சட்டியுடன் முன்னே நடந்துக் கொண்டிருந்தான் மதன். வாழ்க்கையில் அவனுக்கு வழிகாட்டியாக இருந்த அவன் தந்தை இவனுக்குப் பின்னால். மதனுக்கு எப்போதும் துணையாய் இருந்தவருக்கே அன்று நாலு பேரின் உதவி தேவையாயிருந்தது.

சம்பிராதாயங்களும் ஆயத்தங்களும் முடிந்து தீ மூட்ட வேண்டிய நேரம் வந்தது. கொஞ்சம் கைக்கருகில் வந்தாலும் தீப்பந்தம் மதனின் கண்ணீரால் அணைந்து விடுவது போல் இருந்தது. யாரோ ஒருவர் வலுக்கட்டாயமாக அவனின் கையைப் பிடித்து தீ வைத்தார். படுத்திருந்தவர் மதனுக்கு மட்டும் எழுந்து காட்சி கொடுத்து வழக்கமாய் அவர் சொல்லும் வசனத்தை சொன்னார்."கொள்ளி வைக்க கூட நீ தேவையில்லடா. அதான் நானே எனக்கு வச்சுக்கிறேன்".

மதனுக்கு எல்லாமே அவன் தந்தைதான்.சினிமாவில் வருவதைப் போல இருவரும் அமர்ந்து நண்பர்கள் போல உரையாடியதில்லை. அவரின் ஒவ்வொரு செயலும் அவனுக்கு பாடமாய் இருந்தது. ஒரு நல்ல கணவனாக, தந்தையாக வாழ்ந்தவரிடம் ஒரு விஷயம் மட்டும் உறுத்தலாய் இருந்தது. அவரின் புகைப் பழக்கம். முடிந்த வரையில் வீட்டில் புகைக்காமல் இருந்தாலும் சில நேரங்களில் மதனிடம் பிடிபட்டு விடுவார். கேள்விகளால் துளைக்கும் அவனுக்கு ஒற்றைச் சிரிப்பு மட்டுமே பதிலாக கிடைக்கும். புகைப்பவர்கள் தனக்குத் தானேக் கொள்ளி வைத்துக் கொள்ளும் பாக்கியம் பெற்றவர்கள் என்பான் மதன். ஆமாம். நீ உன்னைப் பார்த்துக் கொண்டால் போதும். வழக்கமாய் கொள்ளி வைப்பதற்காகவாது மகன் வேண்டுமென்பார்கள். அந்த கஷ்டம் கூட உனக்கு நான் வைக்க மாட்டேன் என்பார் சிரித்துக் கொண்டே. ஆம். சிரித்துக் கொண்டே.

அவரிடம் இருந்த ஒரே ஒரு தீயப் பழக்கம் அவரின் உயிரையே பறித்து விட்டது என்பதை மதனால் நம்ப முடியவில்லை. முடங்கிப் போன அவன் தேற சில மாதங்கள் ஆனது. அவன் தந்தையின் விருப்பப்படி திரைத்துறையில் சேர வேண்டும் என நினைத்தான். முதல் படியாக ஒரு விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இயக்குனரிடம் அறிமுகப்படுத்தப் பட்டான். எல்லாம் எதிர்பார்த்தப்படியே நடந்தது. படப்பிடிப்பு நாளன்று தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வேறு ஒரு விளம்பரம் எடுக்க வேண்டியதாயிற்று. அதற்கும் மதனையே போடலாம் என முடிவெடுத்த இயக்குனர், மதனிடம் "தம்பி சிகரெட் பிடிங்க பார்க்கலாம்" என்றார்.

தடுமாறிய மதன், புகைப்பதில்லை என்றான்.

அட.. சும்மா ரெண்டு பஃப் ஸ்டைலா இழுத்து விடுங்க. புகை நல்லா வரணும்.

அதற்குள் யாரோ ஒருவர் பற்ற வைக்கப்பட்ட சிகரெட்டுடன் வந்தார். அவனின் கையில் திணிக்கப்பட்டது. செய்வதறியாத மதன் அதை தூக்கிப் போட்டுவிட்டு வேகமாய் வெளியேறினான்.

இரண்டு நாட்கள் க‌ழித்து இயக்குனரை சந்தித்து, நடந்ததைக் கூறினான். அவன் தோளை அழுத்திய இயக்குனர் எடுக்கப்பட்ட விளம்பரத்தை போட்டார். புகையின் பாதிப்பை அழுத்தமாய் காட்டும் அந்த விளம்பரத்தின் முதல் காட்சியில் இளைஞன் ஒருவன் வளையம் வளையமாக புகை விட்டுக் கொண்டிருந்தான்

5 கருத்துக்குத்து:

"ராஜா" on May 31, 2011 at 12:10 PM said...

Thammai verukkalam endru mudiveduththal antha veruppileye aduththa irandu mani neraththil irandu puff izhukka thondrukirathu. Puli valai illai thalayai pidiththa kathaithan.

வணங்காமுடி...! on May 31, 2011 at 1:40 PM said...

எத்தனையோ முறை எப்படியெல்லாமோ முயற்சித்தும், பதினோரு வருடங்களாக விட முடியாத புகைப்பழக்கத்தை, கடந்த வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தியே.... விட்டேன். இந்த நான்கு நாட்களாக சிறு சிறு அவஸ்தைகள் இருந்தாலும், மிகப் பெரிய நிம்மதியும் கூடவே....!

நிறுத்த வேண்டும் என்று மனதார விரும்பியும் விட முடியாதவர்களுக்கு சின்ன டிப்ஸ்.

உங்களுக்கு மிக நெருங்கிய உறவின் மீது ப்ராமிஸ் செய்து விடுங்கள் - புகைப்பதை விட்டு விடுவதாக - அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு, குறைந்தபட்சம் ஒரு வருடமாவது. ஒரு வருடம் புகைக்காமல் இருந்து விட்டால், எப்போதுமே இருந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விடும்.

அமுதா கிருஷ்ணா on May 31, 2011 at 2:36 PM said...

welldone வணங்காமுடி..

சுசி on May 31, 2011 at 3:42 PM said...

அலுவலகத்தில தம்மடிச்சிட்டு அவங்க திரும்பி வரும்போது ஒரு வாடையையும் கூடவே கொண்டு வருவாங்களே.. கொடும்ம்ம்ம்மை.. தலை வலி மண்டைய பொளக்க்க்கும் :((

வளர்ந்து வரும் ஒரு நடிகரோட புவியியல் மீண்டும் படிக்கவும் நல்லாருக்குப்பா :))

மல on June 1, 2011 at 11:54 AM said...

try pannuren........

 

all rights reserved to www.karkibava.com