May 20, 2011

கனிமொழி இந்தி படிச்ச ரகசியம்


 

ஜெயிலர்: க்யா ச்சாஹியே? /
கனி:எங்கப்பன் என்னை ஏன் இந்தி படிக்க வச்சார்ன்னு இப்பதான் தெரிது

ராசா பாடியதின் விளைவே சிபிஐ என்கொயரி, அரெஸ்ட் எல்லாமாம்.என்ன பாட்டா?    “சிபிஐ எங்கே தேட சொல்லு கொஞ்சம். காணவில்லை நெஞ்சம் காணவில்லை நெஞ்சம்”

தந்தையை கத்தியால் குத்தினார் மகள் - தந்தியில் செய்தி.  இத கனிமொழி கண்ணுல படாம பார்த்துக்கணும் சித்தப்பூ

சிறைக்கைதிகளிடம் அடுத்த மாதம் சன் டிவி கருத்துக்கணிப்பு நடத்தவிருக்கிறதாம். அங்கேயும் மதுரை ஆட்சியா அல்லது சிதம்பரமா என

இன்று சன் டிவியில் தில்லு முல்லு. நாளை சிறையில் பூத்த சின்ன மலராம்

ராம்கோபால் வர்மா ட்விட்டர் ஹேண்டில் தெரிஞ்சா சொல்லுங்க. ஸ்பெக்ட்ரம் கதையை படமா எடுக்க சொல்லலாம். கனி வேடத்திற்கு என் சாய்ஸ் ராதிகா

சாய்பாபா உயிரோடு இருந்திருந்தால் லிங்கம் எடுப்பது போல கனிமொழியை வெளியே கொண்டுவந்திருப்பார் என்ற சத்தம் கேட்கிறதாம் சிஐடி காலனி வீட்டில்

சீரியல் ஜெயில்களில் வரும் ரவுடி பெண்களை பிடிங்க. திஹார் ஜெயிலுக்கு பார்சல் பண்ணுவோம்

ஸ்டாலின், அழகிரி, கனிமொழி எல்லாம் ஒண்ணா ஒத்துமையா இருந்தா விக்ரமன வச்சு படமாவாது எடுத்திருக்கலாம்.. ச்சே. லாலாலாலா மிஸ் ஆயிடுச்சு..

கனிமொழி சென்னை வெயில் தாங்காம தான் ஜெயிலுக்கு சென்றார்.. அறிக்கை அழகன் வீரமணிக்கு டிப்ஸ்..

எஸ்குஸ்மீ ஜெயிலர்.. எங்க கொல விளக்கு கனிமொழிக்கு மஞ்சள் நிற சீருடை கொடுப்பிங்களா?

ராசாவுக்கு சிறையில் மொபைல் வசதி இல்லையாம். டேய் டேய்.. செல்ஃபோன் கம்பெனிகாரங்களா! உங்களுக்கு ஸ்பெக்ட்ரம் கொடுத்தவரே அவர்தாண்டா

கனிமொழி ஜெயிலுக்கு போனதுக்கு ராமாயனம் வனவாசத்தை குறிப்பிட இருந்தாராம் கலைஞர். ஸ்டாலின் தான் 14 வருஷம் உள்ள வச்சிடுவாங்கன்னு தடுத்தாராம்

காங். உடனான உறவு திருப்தியாக இருக்கிறதாம் கலைஞருக்கு. எதையும் தாங்கும் இதயம்னு இனி அண்ணாவ சொல்லாதீங்கப்பா

16 கருத்துக்குத்து:

Kaarthik on May 21, 2011 at 12:03 AM said...
This comment has been removed by the author.
Kaarthik on May 21, 2011 at 12:05 AM said...

ROTFL :-D

ராதிகா ரொம்ப ஓல்ட் ஆச்சே. ராதிகா ஆப்டே OK! அப்போ ராசாவுக்கு உங்கள் Choice யாரு?

சுசி on May 21, 2011 at 3:43 AM said...

:))

Om on May 21, 2011 at 9:33 AM said...

:-D

ஆதிமூலகிருஷ்ணன் on May 21, 2011 at 11:00 AM said...

சில வரிகளில் சில வார்த்தைகள் Bad taste.!

கார்க்கி on May 21, 2011 at 11:05 AM said...

wநன்றி கார்த்திக், சுசி

ஆதியண்ணே,

ஜெ.வை யாராவ்து இப்படி விமர்சிச்சா ஹிஹிஹி.. கனிமொழிய சொன்னா பேட் டேஸ்.. ஏன்னா அவங்க திமுக.. வாழ்க நடுநிலைமை..

ஆனா மத்தவங்கள நாம விசலடிச்சான் குஞ்சுகன்னு சொல்லணும்.. நாம அபப்டி இல்லை :))

ஆதிமூலகிருஷ்ணன் on May 21, 2011 at 11:08 AM said...

கருத்துகள் விருப்பம் சார்ந்தவை, அதைப்பற்றி நான் ஏதும் சொல்லவில்லை. சில வார்த்தைகள் என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன்.

ஜெ.வை சொல்லியிருந்தாலும் என் பின்னூட்டம் இதுவாகத்தான் இருக்கும்.

Natraj on May 21, 2011 at 12:34 PM said...

"ராதிகா ரொம்ப ஓல்ட் ஆச்சே. ராதிகா ஆப்டே OK! அப்போ ராசாவுக்கு உங்கள் Choice யாரு?"

வடிவேலு தான் வேற யாரு

Jayadev Das on May 21, 2011 at 4:30 PM said...

\\ராசாவுக்கு சிறையில் மொபைல் வசதி இல்லையாம். டேய் டேய்.. செல்ஃபோன் கம்பெனிகாரங்களா! உங்களுக்கு ஸ்பெக்ட்ரம் கொடுத்தவரே அவர்தாண்டா\\ அடிச்சதிலேயே சூப்பரான ஆப்பு.

இரசிகை on May 21, 2011 at 8:12 PM said...

//

ராசாவுக்கு சிறையில் மொபைல் வசதி இல்லையாம். டேய் டேய்.. செல்ஃபோன் கம்பெனிகாரங்களா! உங்களுக்கு ஸ்பெக்ட்ரம் கொடுத்தவரே அவர்தாண்டா

//

:))

சிநேகிதன் அக்பர் on May 22, 2011 at 12:11 AM said...

//ராசாவுக்கு சிறையில் மொபைல் வசதி இல்லையாம். டேய் டேய்.. செல்ஃபோன் கம்பெனிகாரங்களா! உங்களுக்கு ஸ்பெக்ட்ரம் கொடுத்தவரே அவர்தாண்டா//

இது டாப்

Katz on May 22, 2011 at 1:55 AM said...

ellaam super

தராசு on May 23, 2011 at 8:53 AM said...

ஆமா,

இப்பல்லாம் உங்க பதிவுல ஏன் முதல் கமெண்ட் டெலீட் ஆகியே இருக்குது...
எங்கியோ எதுவோ நடக்கிறது.

Sen22 on May 23, 2011 at 12:13 PM said...

:)))))

Appavi on May 24, 2011 at 10:47 PM said...

suuupr

Nalliah on May 28, 2011 at 5:45 PM said...

முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்த போது, ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,சென்னையில் உள்ள மருத்துவமனையில் 1968 ஜனவரி முதலாந் திகதி ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு கனிமொழி என்ற பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி?என்ற ஒரு சிறிய செய்தியை வெளியிட்டிருந்ததை மறக்க முடியுமா?
ராசாத்தி என்றழைக்கப்படும் .தர்மாம்பாள் யார் என்றே தனக்கு தெரியாது. தனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’ என்று கூறி முதல்வர் முத்துவேல் கருணாநிதி அறிவித்தார் . நீதிமன்றத்துக்கும் போனார்…பெண் குழந்தை ..மகள்.ஏன்று யாருமே கிடையாது என்று முழங்கினார் முதல்வர் கருணாநிதி .
எந்த பெண் குழந்தை கனிமொழியை தன் மகளே இல்லை என கருணாநிதி மறுத்தாரோ…எந்த பெண் குழந்தை கனிமொழியின் பெயரை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ…,அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று அனைத்தையும் இழந்திருக்கிறார் முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி.

கனிமொழி கைதானது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, உங்கள் வீட்டில் உங்கள் பெண் ஒரு குற்றமும் செய்யாமல் சிறைக்கு அனுப்பப்பட்டால், என்ன மனநிலையில் இருப்பீர்களோ, அதே நிலையில் இருக்கிறேன் என்று முழுப்பூசணிக்காயை எப்படியாவது சோற்றில் மறைப்பதில் உறுதியாக கருணாநிதி இருக்கிறார்
செய்யாத குற்றத்துக்காக கருணாநிதியின் குடும்ப சண்டையில் அப்பாவி 3 பேர் தினகரன் ஆபீசில் எரித்துக்கொல்லப் பட்டதை மறக்க முடியுமா….
கருணாநிதி கல்லூரியையே மிதிக்காமல் டாக்டர் பட்டம் வாங்குவதை எதிர்த்த அண்ணாமலை பல்கலை கழக மாணவர் உதயகுமாரை கொன்றுவிட்டு அவன் போலீசால் நிர்ப்பந்திக்கப்பட்ட தந்தையை விட்டு ‘இறந்தது என் மகனே அல்ல ‘ என்று வாக்குமூலம் கொடுக்க பண்ணியதை மறக்க முடியுமா?
சம்பத், கண்ணதாசனை கட்சியில் இருந்து நீக்க செய்த சதிகளை மறக்க முடியுமா?, சட்ட மன்றத்தில் அனந்தநாயகி பேசும்போது குறுக்கிட்டு பொழிந்த ஆபாச வசைககளை மறக்க முடியுமா?, காமராஜர் மீது கிளப்பிய அவதூறுகளை மறக்க முடியுமா?; நெடுஞ்செழியனை ஓரம் கட்ட செய்த மோசடி முயற்சிகளை மறக்க முடியுமா?, ஜனநாயகம், முற்போக்கு என்று பேசிக்கொண்டு முகம்மது பின் துக்ளக் படம் வெளி வராது செய்ய சம்பந்தப்பட்ட கலைஞர்களை மிரட்டியதை மறக்க முடியுமா? கூலிப்படையை கொண்டு திரை அரங்கங்களில் இருக்கைகளை கிழிக்க வைத்து படம் ஓடாது தடுத்ததை மறக்க முடியுமா?; எம்ஜியாரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் வெளியிடாமல் தடுக்க மறக்க முயன்றதை முடியுமா?, எம்ஜியாரை ராமாவரம் பாலத்துக்கு அருகில் தாக்கிட ரௌடிகளை அமர்த்தியதை மறக்க முடியுமா?

நல்லையா தயாபரன்

 

all rights reserved to www.karkibava.com