May 5, 2011

ந‌ன்றி - புதிய‌ த‌லைமுறை


 

  சென்ற‌ வெள்ளிய‌ன்று வெளியான‌ புதிய‌ த‌லைமுறை இத‌ழில் "ஆட்டோமொபைல் துறையில் ஆட்டோமேட்டிக்காக வேலை!" என்ற‌ த‌லைப்பில் வெளியான‌ க‌ட்டுரை இது. அந்த‌ ட‌ப்பாக்குள்ள‌ தொப்பி போட்டுக்கிட்டு இருக்கிற‌து நான் தான். :)

ஆட்டோமொபைல் துறையில் ஆட்டோமேட்டிக்காக வேலை!

IMG_0291[1]

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நீங்கள் உங்கள் ஹெர்க்குலிஸ் சைக்கிளில் ஏதேனும் போக்குவரத்து சிக்னலில் நின்றிருக்கலாம். கொஞ்சம் நினைவுகூர்ந்துப் பாருங்கள். உங்களோடு சிக்னலில் நின்றிருந்த இருசக்கர வாகனங்கள் எத்தனை, கார்கள் எத்தனை என்று. இன்று காலை கூட நீங்கள் உங்களது ஹீரோ ஹோண்டாவில் ஆரோகணித்து சிக்னலில் நின்றிருப்பீர்கள். எத்தனை கார்கள் உங்களோடு பச்சை சமிக்ஞைக்காக காத்திருந்தன?

இந்திய சாலைகளில் ஓடும் கார்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பதாக உங்களுக்கு தோன்றலாம்.

“இது ஒரு மாயை” என்கிறார் கார்க்கி. மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணிபுரியும் இளைஞரான கார்க்கி, மற்ற நாடுகளை ஒப்பிடும்போது நம் நாட்டில் கார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. நடுத்தர வர்க்கத்து இந்தியர்கள் கார் வாங்கியே தீருவேன் என்று திடீர் புத்தாண்டு சபதம் எடுத்துக் கொண்டிருப்பதால், இத்துறையில் வேலைவாய்ப்பு கொட்டோ கொட்டுவென்று கொட்டுமென்றும் ஜோசியம் சொல்கிறார்.

“உண்மையில் ஆயிரம் இந்தியர்களுக்கு 12 கார்கள்தான் சாலைகளில் ஓடுகிறது. ஆயிரம் அமெரிக்கர்களுக்கு 765 கார். ஆயிரம் மலேசியர்களுக்கு 273 கார். சைக்கிள்கள் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வரும் சீனாவில் கூட ஆயிரம் சீனர்களுக்கு 128 கார். இந்நாடுகளோடு இந்தியாவை ஒப்பிட்டுப் பாருங்கள்.

  அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆயிரம் இந்தியர்களுக்கு 30 கார் இருக்கலாம் என்று நாமாகவே கணித்துக் கொள்வோம். இந்த தேவைக்கே பல லட்சம் கார்கள் தயாரிக்கப்பட வேண்டும். வருமான வரி உச்சவரம்பு தளர்த்தப்பட்டிருப்பதால் நாம் கணிக்கும் எண்ணிக்கை சாத்தியமாகிவிடக் கூடிய வாய்ப்பும் அதிகம்.

இன்றைய தேதியில் இங்கே வருடத்திற்கு 18 லட்சம் கார்கள் தயாரிக்கப்படுகின்றன. வெகுவிரைவில் இந்த எண்ணிக்கை 30 லட்சத்தை தொட்டுவிடும். இது தவிர இந்தியாவில் உற்பத்தியாகி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கார்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது. எனவே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவிகித அளவில் இருக்கும் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி, வரும் வருடங்களில் நாம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க இயலாத வண்ணம் வளர்ந்திருக்கும்.

ஆட்டோமொபைல் துறையில் வேலை பார்க்க நினைக்கும் இளைஞர்கள், வேலை தேடி அலையவேண்டியதில்லை. ஆட்டோமேடிக்காக அவர்கள் வீடுதேடி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வரும்.

பொதுவாக இயந்திரவியல் படித்தவர்களுக்கு மட்டும்தான் இத்துறையில் வேலை கிடைக்கும் என்றொரு கருத்து நிலவி வருகிறது. இது உண்மையல்ல.

புதிதாக சந்தைக்கு வரும் கார்களில் சில சிறப்பம்சங்களை நீங்கள் கண்டிருக்கலாம். ரிமோட் கண்ட்ரோல் மூலமாக ஆட்டோமேடிக்காக கார் கதவைத் திறப்பது. இதுமாதிரி மின்னணு, கணிப்பொறி வல்லுனர்களின் பங்கு அவசியமான நிறைய வசதிகள் பெரிய கார்களில் மட்டுமன்றி, நாலு லட்ச ரூபாய் விலையில் விற்கக்கூடிய சிறிய கார்களிலும் வந்துவிட்டது. எனவேதான் அடித்துச் சொல்கிறேன். இயந்திரவியல் படித்தவர்களுக்கு மட்டுமல்ல. வேறு துறையில் படித்தவர்களுக்கும் ஆட்டோமொபைல் துறை வேலைவாய்ப்பினை கொட்டித்தரப் போகிறது.

ஆட்டோமொபைல் சார்ந்த auto-embedded திட்டங்களில் பிரபலாமாக இருக்கும் நிறுவனம் Robert Bosch. சமீபத்தில் இந்நிறுவனம் கோவையில் ஆரம்பித்த ஒரு கிளைக்கு மட்டும் 5000 பொறியாளர்களை பணிக்கு சேர்த்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

தற்போது மாணவர்களாக இருப்பவர்கள் ஆட்டோமொபைல் துறையை குறிவைத்து ஏதேனும் துணைப்படிப்புகள் (crash courses) பயின்று வைத்துக் கொள்வது நலம். ஏற்கனவே Auto / Auto Ancillary துறைகளில் பணியாற்றுபவர்களும் கூட இதுபோன்ற துணைப்படிப்புகளை படித்து வைத்துக் கொண்டால், வெகுவிரைவில் பிரமோஷன் வாங்கலாம். நல்ல சம்பளமும் பெறலாம்.

ஆட்டோமொபைல் துறைக்கு நல்ல எதிர்காலம் நிச்சயம் உண்டு. இது ஜோசியமல்ல. நடைபெறப்போகும் உண்மை” என்று நம்பிக்கை தரும் விதமாக பேசுகிறார் கார்க்கி.

இளைஞர்களே, கேட்டுக் கொள்ளுங்கள்.

 

ந‌ன்றி  “புதிய‌ த‌லைமுறை” -  கிருஷ்ணா

18 கருத்துக்குத்து:

Kaarthik on May 5, 2011 at 4:56 PM said...

Congrats Karki :-)

வள்ளி on May 5, 2011 at 5:04 PM said...

வாழ்த்துகள் கார்க்கி!

Nagasubramanian on May 5, 2011 at 5:12 PM said...

congrats.

ரேகா ராகவன் on May 5, 2011 at 5:14 PM said...

//auto-embedded திட்டங்களில் பிரபலாமாக இருக்கும்//

பிரபலமாக இருக்கும்?

நல்ல அலசல். வாழ்த்துகள்.

விக்ரமாதித்தன் வேதாளம் on May 5, 2011 at 5:15 PM said...

உங்க சிஷ்யன் ன்னு சொல்லிக்க ரொம்ப பெருமையா இருக்கு குரு..

Sen22 on May 5, 2011 at 5:18 PM said...

Congrats Karki..

மாணவன் on May 5, 2011 at 5:22 PM said...

வாழ்த்துக்கள் :)

அன்புடன் அருணா on May 5, 2011 at 5:55 PM said...

அட!பூங்கொத்து!

தர்ஷன் on May 5, 2011 at 6:17 PM said...

எல்லாம் சரி,
நீங்க தொப்பிய கழட்டலயோ இளைஞர்ன்னு சொல்றாங்க Anyway வாழ்த்துக்கள் சகா...........

மோகன் குமார் on May 5, 2011 at 8:10 PM said...

//அந்த‌ ட‌ப்பாக்குள்ள‌ தொப்பி போட்டுக்கிட்டு இருக்கிற‌து நான் தான். :)

இது சொல்லி தெரியனுமா என்ன? அவர் ஒரு வி.ஐ.பி ங்க
**
நிற்க. பதிவெழுத பிரபல பதிவர் கார்க்கிக்கு நேரமில்லை. தனது கருத்துகளை இப்போதெல்லாம் பேட்டி தான் தருகிறார். இதையும் அவர்கள் சொல்லியிருக்கலாம் (கடைசியாய் அவர் சாகலேட் சாப்பிட்டு கிட்டே பல்பு வாங்கிய நினைவு..)

நவநீதன் on May 5, 2011 at 11:44 PM said...

வாழ்த்துக்கள் கார்கி...!

மதுரை சரவணன் on May 6, 2011 at 1:42 AM said...

vaalththukkal kaarki

சுசி on May 6, 2011 at 2:52 AM said...

இங்கேயும் வாழ்த்துகள் கார்க்கி.

தமிழ் குமார் on May 6, 2011 at 12:43 PM said...

கலக்கல் கார்க்கி

இசைப்பிரியன் on May 6, 2011 at 3:18 PM said...

சித்துவுடன் இன்று இதைப்பட்றி பேசிக்கொன்டிருந்தேன், வாழ்துக்கள் கார்க்கி.

விக்னேஷ்வரி on May 9, 2011 at 3:53 PM said...

வாவ் சூப்பர் கார்க்கி. வாழ்த்துகள். நல்லா இருக்கு கட்டுரை. இப்படி உருப்படியா அப்பப்போ எழுதுங்க.

MSK / Saravana on May 10, 2011 at 12:15 AM said...

வாழ்த்துக்கள் சகா.. கலக்குங்க.. :)

மதன்ராஜ் மெய்ஞானம் on May 10, 2011 at 12:42 AM said...

Super Boss.. Congrats.. :)

 

all rights reserved to www.karkibava.com