May 31, 2011

த‌ம்மை வெறுப்போம்

5 கருத்துக்குத்து

 

  இன்று புகையிலை எதிர்ப்பு தின‌மாம்.. அலுவ‌ல‌க‌த்தின் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் த‌ம்ம‌டிக்க‌ போன‌ போது ம‌ட‌க்கி எடுத்த‌ ப‌ட‌மிது.. சிக‌ரெட் ப‌ற்றி நீண்ட‌ நாட்க‌ளுக்கு முன்பெழுதிய‌ ஒரு மொக்கை க‌தையையும் மீள்ப‌திவு செஞ்சிசுக்கிறேன்

IMG_0329

ஆறாம் விர‌ல்

அந்தக் கூட்டம் அரிச்சந்திரன் கோவிலைத் தாண்டி சென்றுக் கொண்டிருந்தது . கையில் தீச்சட்டியுடன் முன்னே நடந்துக் கொண்டிருந்தான் மதன். வாழ்க்கையில் அவனுக்கு வழிகாட்டியாக இருந்த அவன் தந்தை இவனுக்குப் பின்னால். மதனுக்கு எப்போதும் துணையாய் இருந்தவருக்கே அன்று நாலு பேரின் உதவி தேவையாயிருந்தது.

சம்பிராதாயங்களும் ஆயத்தங்களும் முடிந்து தீ மூட்ட வேண்டிய நேரம் வந்தது. கொஞ்சம் கைக்கருகில் வந்தாலும் தீப்பந்தம் மதனின் கண்ணீரால் அணைந்து விடுவது போல் இருந்தது. யாரோ ஒருவர் வலுக்கட்டாயமாக அவனின் கையைப் பிடித்து தீ வைத்தார். படுத்திருந்தவர் மதனுக்கு மட்டும் எழுந்து காட்சி கொடுத்து வழக்கமாய் அவர் சொல்லும் வசனத்தை சொன்னார்."கொள்ளி வைக்க கூட நீ தேவையில்லடா. அதான் நானே எனக்கு வச்சுக்கிறேன்".

மதனுக்கு எல்லாமே அவன் தந்தைதான்.சினிமாவில் வருவதைப் போல இருவரும் அமர்ந்து நண்பர்கள் போல உரையாடியதில்லை. அவரின் ஒவ்வொரு செயலும் அவனுக்கு பாடமாய் இருந்தது. ஒரு நல்ல கணவனாக, தந்தையாக வாழ்ந்தவரிடம் ஒரு விஷயம் மட்டும் உறுத்தலாய் இருந்தது. அவரின் புகைப் பழக்கம். முடிந்த வரையில் வீட்டில் புகைக்காமல் இருந்தாலும் சில நேரங்களில் மதனிடம் பிடிபட்டு விடுவார். கேள்விகளால் துளைக்கும் அவனுக்கு ஒற்றைச் சிரிப்பு மட்டுமே பதிலாக கிடைக்கும். புகைப்பவர்கள் தனக்குத் தானேக் கொள்ளி வைத்துக் கொள்ளும் பாக்கியம் பெற்றவர்கள் என்பான் மதன். ஆமாம். நீ உன்னைப் பார்த்துக் கொண்டால் போதும். வழக்கமாய் கொள்ளி வைப்பதற்காகவாது மகன் வேண்டுமென்பார்கள். அந்த கஷ்டம் கூட உனக்கு நான் வைக்க மாட்டேன் என்பார் சிரித்துக் கொண்டே. ஆம். சிரித்துக் கொண்டே.

அவரிடம் இருந்த ஒரே ஒரு தீயப் பழக்கம் அவரின் உயிரையே பறித்து விட்டது என்பதை மதனால் நம்ப முடியவில்லை. முடங்கிப் போன அவன் தேற சில மாதங்கள் ஆனது. அவன் தந்தையின் விருப்பப்படி திரைத்துறையில் சேர வேண்டும் என நினைத்தான். முதல் படியாக ஒரு விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இயக்குனரிடம் அறிமுகப்படுத்தப் பட்டான். எல்லாம் எதிர்பார்த்தப்படியே நடந்தது. படப்பிடிப்பு நாளன்று தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வேறு ஒரு விளம்பரம் எடுக்க வேண்டியதாயிற்று. அதற்கும் மதனையே போடலாம் என முடிவெடுத்த இயக்குனர், மதனிடம் "தம்பி சிகரெட் பிடிங்க பார்க்கலாம்" என்றார்.

தடுமாறிய மதன், புகைப்பதில்லை என்றான்.

அட.. சும்மா ரெண்டு பஃப் ஸ்டைலா இழுத்து விடுங்க. புகை நல்லா வரணும்.

அதற்குள் யாரோ ஒருவர் பற்ற வைக்கப்பட்ட சிகரெட்டுடன் வந்தார். அவனின் கையில் திணிக்கப்பட்டது. செய்வதறியாத மதன் அதை தூக்கிப் போட்டுவிட்டு வேகமாய் வெளியேறினான்.

இரண்டு நாட்கள் க‌ழித்து இயக்குனரை சந்தித்து, நடந்ததைக் கூறினான். அவன் தோளை அழுத்திய இயக்குனர் எடுக்கப்பட்ட விளம்பரத்தை போட்டார். புகையின் பாதிப்பை அழுத்தமாய் காட்டும் அந்த விளம்பரத்தின் முதல் காட்சியில் இளைஞன் ஒருவன் வளையம் வளையமாக புகை விட்டுக் கொண்டிருந்தான்

May 29, 2011

ஐ.பி.எல் கமென்ட்ஸ்

7 கருத்துக்குத்து

 

saurabh Tiwary of Royal Challengers Banglore loses his bat while playing a stroke during the Indian Premier League final between Royal Challengers Bangalore and Chennai Super Kings in Chennai, India, Saturday, May 28, 2011. (AP Photo/Saurabh Das)

133353

dhoni-gayle_JVmmS_17022

கெயிலு : எப்படி இப்படி ஆடுறேன்னு கேட்கிறாரு தோனி. எங்க டீம் ஓனரு சரக்கு கம்பெனி வச்சிருக்காரில்லை!!

தோனி: எங்க டீம் பில்டிங்கும் ஸ்ட்ராங். பேஸ்மெண்ட்டும் ஸ்ட்ராங். எங்க ஓனரு சிமெண்ட் கம்பெனி வச்சிருக்காருப்பா

_______________________________________________________________________

caption

அதிக விக்கெட் எடுத்தா பர்ப்பிள் கலர் கேப் தர்றாங்களாம்.. இந்த அர்ச்சனாவிடம் எத்தனை விக்கெட் காலியாச்சோ!! டிரஸே பர்ப்பிள் கலர்ன்னா????????

_______________________________________________________________________________

 

இவனுங்க கமென்ட்ரி சொல்ற‌ மைக் மட்டும் பெருசா இருந்தா நலந்தானா வாசிக்க சொல்லலாம்.. நாதஸ்..டேய் நாதஸ்..

_____________________________________________________________________

May 20, 2011

கனிமொழி இந்தி படிச்ச ரகசியம்

16 கருத்துக்குத்து

 

ஜெயிலர்: க்யா ச்சாஹியே? /
கனி:எங்கப்பன் என்னை ஏன் இந்தி படிக்க வச்சார்ன்னு இப்பதான் தெரிது

ராசா பாடியதின் விளைவே சிபிஐ என்கொயரி, அரெஸ்ட் எல்லாமாம்.என்ன பாட்டா?    “சிபிஐ எங்கே தேட சொல்லு கொஞ்சம். காணவில்லை நெஞ்சம் காணவில்லை நெஞ்சம்”

தந்தையை கத்தியால் குத்தினார் மகள் - தந்தியில் செய்தி.  இத கனிமொழி கண்ணுல படாம பார்த்துக்கணும் சித்தப்பூ

சிறைக்கைதிகளிடம் அடுத்த மாதம் சன் டிவி கருத்துக்கணிப்பு நடத்தவிருக்கிறதாம். அங்கேயும் மதுரை ஆட்சியா அல்லது சிதம்பரமா என

இன்று சன் டிவியில் தில்லு முல்லு. நாளை சிறையில் பூத்த சின்ன மலராம்

ராம்கோபால் வர்மா ட்விட்டர் ஹேண்டில் தெரிஞ்சா சொல்லுங்க. ஸ்பெக்ட்ரம் கதையை படமா எடுக்க சொல்லலாம். கனி வேடத்திற்கு என் சாய்ஸ் ராதிகா

சாய்பாபா உயிரோடு இருந்திருந்தால் லிங்கம் எடுப்பது போல கனிமொழியை வெளியே கொண்டுவந்திருப்பார் என்ற சத்தம் கேட்கிறதாம் சிஐடி காலனி வீட்டில்

சீரியல் ஜெயில்களில் வரும் ரவுடி பெண்களை பிடிங்க. திஹார் ஜெயிலுக்கு பார்சல் பண்ணுவோம்

ஸ்டாலின், அழகிரி, கனிமொழி எல்லாம் ஒண்ணா ஒத்துமையா இருந்தா விக்ரமன வச்சு படமாவாது எடுத்திருக்கலாம்.. ச்சே. லாலாலாலா மிஸ் ஆயிடுச்சு..

கனிமொழி சென்னை வெயில் தாங்காம தான் ஜெயிலுக்கு சென்றார்.. அறிக்கை அழகன் வீரமணிக்கு டிப்ஸ்..

எஸ்குஸ்மீ ஜெயிலர்.. எங்க கொல விளக்கு கனிமொழிக்கு மஞ்சள் நிற சீருடை கொடுப்பிங்களா?

ராசாவுக்கு சிறையில் மொபைல் வசதி இல்லையாம். டேய் டேய்.. செல்ஃபோன் கம்பெனிகாரங்களா! உங்களுக்கு ஸ்பெக்ட்ரம் கொடுத்தவரே அவர்தாண்டா

கனிமொழி ஜெயிலுக்கு போனதுக்கு ராமாயனம் வனவாசத்தை குறிப்பிட இருந்தாராம் கலைஞர். ஸ்டாலின் தான் 14 வருஷம் உள்ள வச்சிடுவாங்கன்னு தடுத்தாராம்

காங். உடனான உறவு திருப்தியாக இருக்கிறதாம் கலைஞருக்கு. எதையும் தாங்கும் இதயம்னு இனி அண்ணாவ சொல்லாதீங்கப்பா

ர‌த்த‌ம் – குறும்ப‌ட‌ம்

32 கருத்துக்குத்து

 

ர‌த்த‌ம் ‍ டிரெய்ல‌ர் பார்த்துட்டு பாராட்டிய‌வ‌ர்க‌ளுக்கு முத‌ல்ல‌ ந‌ன்றி. வீட்டுல‌ யாரும் இல்லாத (அதாவ‌து நான் ம‌ட்டும்)ஒரு நாள் ஏதாவது ப‌ட‌மெடுப்போம்ன்னு முய‌ற்சி செய்த‌துதான் அந்த‌ டிரெய்ல‌ர்.. யாருடைய‌ உதவியும் இல்லாம‌ ஒரே ஆளா ப‌ட‌மெடுக்க‌ முடியுமான்னு செய்த‌ முய‌ற்சி. எங்க‌ள் டீம் கேம‌ரா ஆதியிட‌ம் மாட்டிக்கிட்ட‌தால வீட்டுல‌ இருந்த‌ ஒரு சாதார‌ண‌ கேம‌ரால‌ ப‌ட‌மெடுக்க‌ வேண்டிய‌தா போச்சு. கேம‌ரால‌ நாய்ஸ் அதிக‌ம்.

எப்ப‌டியோ ப‌ட‌த்த‌ முடிச்சாச்சு.. நிச்ச‌ய‌ம் இதுவும் ஒரு அமெச்சூர் முய‌ற்சிதான். ஆனா ஒரேய‌டியா மொக்கை போடாம‌ கொஞ்ச‌ம் சீரிய‌ஸா எடுத்தேன். கேம‌ரா எப்ப‌டியெல்லாம் ப‌ய‌ன்ப‌டுத்தினேன் என்ப‌தை ப‌ட‌த்தோட‌ முடிவுல‌ சில‌ க்ளிப்பிங்க்ஸ்ல‌ காட்டியிருக்கேன். இன்னும் பெட்ட‌ரா ப‌ண்ணியிருக்க‌லாம். அடுத்த‌டுத்த‌ முய‌ற்சில‌ அத‌ பார்த்துக்க‌லாம்ன்னு விட்டுட்டேன். எடுத்த‌வ‌ரைக்கும் ப‌ட‌த்தை எவ்ளோ முய‌ற்சி செய்தும்ன்னு இதுக்கு மேல‌ கொண்டு வ‌ர‌ முடில‌. இதிலே நேர‌த்த‌ செல‌வு ப‌ண்ற‌த‌ விட‌ இதை ரிலிஸ் ப‌ண்ணிட்டு அடுத்த‌ ப‌ட‌த்த‌ ஒழுங்கா, முறையா எடுக்க‌லாம்னு முடிவு செஞ்சி ரிலீஸ் ப‌ண்றேன்.

இதுல‌ வ‌ர்ற‌ பிஜிஎம் இணைய‌த்துல‌ இல‌வ‌ச‌மா கிடைக்கிற‌ த‌ள‌ங்க‌ளில் எடுக்க‌ப்ப‌ட்ட‌து. (http://www.royaltyfreemusic.com/) அப்புற‌ம்‌ ப‌ட‌த்தோடு Psycho இசையும் இருக்கு. இன்னும் 4 நாள் செல‌வு செய்தா எடிட்டிங்ல‌ நேர்த்தியா‌ சில‌ மாற்ற‌ங்க‌ள் செய்ய‌லாம். அதையெல்லாம் ஒழுங்கா எடுத்த‌ ப‌ட‌த்துக்கு பார்த்துக்க‌லாம்ன்னு விட்டுட‌லாம். :)

முத‌ன்முத‌லில் பார்த்து க‌ருத்து சொன்ன‌ என் ந‌ட்பு குழுவிற்கும், இணைய‌த்தோழிக்கும் ந‌ன்றி.  திட்டோ, அறிவுரையோ, ஆறுத‌லோ.. ஏதாவது ஒண்ணு சொல்லிட்டு போங்க‌.

 

May 15, 2011

ரத்தம் – டிரெயிலர்

16 கருத்துக்குத்து

 

எல்லோருக்கும் வணக்கம்.

ஏற்கனவே மங்காத்தா, வேலாயுதம்  படங்களின் ட்ரெயிலர் சிலருக்கு சந்தோஷத்தையும், பலருக்கு பயத்தையும் தந்திருப்பதாக செய்தி வருது. இப்ப என் பங்குக்கு நானும் ஒரு டிரெயிலர ரிலீஸ் பண்ணிக்கிறேன்..

அடுத்த குறும்படத்தின் பெயர் “ரத்தம்”. கொஞ்சம் சீரியஸா ஒரு முயற்சி பண்ணலாம்னு தோணுச்சு. இந்த படத்துல பார்க்கிற வேலைய தவிர எல்லாம் வேலையும் நானே. அதாவது கேமரா கூட அடுத்தவர் உதவி இல்லாமல் எடுத்திருக்கேன். சில இடங்களில் கேமரா ஆடும். நகரும். திரும்பும். படம் எப்படியும் இந்த வாரம் வெளியாகிவிடும். அதற்கு முன் ஒரு சின்ன முன்னோட்டம்.. மறக்காம கருத்த சொல்லுங்க.

May 12, 2011

சைட்டடிக்கலாம் வாங்க - 2

17 கருத்துக்குத்து

 

முதல் அத்தியாயம் படிக்க இங்கே க்ளிக்கவும்

ஹாய் சக சைட் சிங்கங்களே!! அடுத்த பார்ட் எழுதறதுக்கு ரொம்ப கேப் விழுந்துடுச்சு. இந்த வாரம் சைட் அடிக்கும் புராசசை ஃப்லோ சார்ட்டாக தந்திருக்கிறேன். ஏன்னா எது செஞ்சாலும் பிளான் பண்ணி பண்ணணும்.. ஏதேனும் சந்தேகம் என்றால் கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டபின் களத்தில் இறங்க வேண்டும்..

ஆல் த பெஸ்ட்..

அழகான பெண்கள் பட்டியலில் இருந்து தொடங்க வேண்டும்..

image

மு.கு: MBA (Full time) படித்துவிட்டு பெங்களூரில் பிசினஸ் கன்சல்டண்டாக வேலை செய்யும் திரு.கஃபில் அவர்கள் வேலை நேரமென்றும் பார்க்காமல் இந்த ஃப்லோ சார்ட் செய்ய நமக்காக உதவியதை மறக்க கூடாது. அவரது பாஸ் கண்ணில் இது பட வேண்டும் என்று பிரார்த்திப்போம்.  அவரது ட்விட்டர் ஐடி @ikingkafil

May 5, 2011

ந‌ன்றி - புதிய‌ த‌லைமுறை

18 கருத்துக்குத்து

 

  சென்ற‌ வெள்ளிய‌ன்று வெளியான‌ புதிய‌ த‌லைமுறை இத‌ழில் "ஆட்டோமொபைல் துறையில் ஆட்டோமேட்டிக்காக வேலை!" என்ற‌ த‌லைப்பில் வெளியான‌ க‌ட்டுரை இது. அந்த‌ ட‌ப்பாக்குள்ள‌ தொப்பி போட்டுக்கிட்டு இருக்கிற‌து நான் தான். :)

ஆட்டோமொபைல் துறையில் ஆட்டோமேட்டிக்காக வேலை!

IMG_0291[1]

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நீங்கள் உங்கள் ஹெர்க்குலிஸ் சைக்கிளில் ஏதேனும் போக்குவரத்து சிக்னலில் நின்றிருக்கலாம். கொஞ்சம் நினைவுகூர்ந்துப் பாருங்கள். உங்களோடு சிக்னலில் நின்றிருந்த இருசக்கர வாகனங்கள் எத்தனை, கார்கள் எத்தனை என்று. இன்று காலை கூட நீங்கள் உங்களது ஹீரோ ஹோண்டாவில் ஆரோகணித்து சிக்னலில் நின்றிருப்பீர்கள். எத்தனை கார்கள் உங்களோடு பச்சை சமிக்ஞைக்காக காத்திருந்தன?

இந்திய சாலைகளில் ஓடும் கார்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பதாக உங்களுக்கு தோன்றலாம்.

“இது ஒரு மாயை” என்கிறார் கார்க்கி. மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணிபுரியும் இளைஞரான கார்க்கி, மற்ற நாடுகளை ஒப்பிடும்போது நம் நாட்டில் கார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. நடுத்தர வர்க்கத்து இந்தியர்கள் கார் வாங்கியே தீருவேன் என்று திடீர் புத்தாண்டு சபதம் எடுத்துக் கொண்டிருப்பதால், இத்துறையில் வேலைவாய்ப்பு கொட்டோ கொட்டுவென்று கொட்டுமென்றும் ஜோசியம் சொல்கிறார்.

“உண்மையில் ஆயிரம் இந்தியர்களுக்கு 12 கார்கள்தான் சாலைகளில் ஓடுகிறது. ஆயிரம் அமெரிக்கர்களுக்கு 765 கார். ஆயிரம் மலேசியர்களுக்கு 273 கார். சைக்கிள்கள் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வரும் சீனாவில் கூட ஆயிரம் சீனர்களுக்கு 128 கார். இந்நாடுகளோடு இந்தியாவை ஒப்பிட்டுப் பாருங்கள்.

  அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆயிரம் இந்தியர்களுக்கு 30 கார் இருக்கலாம் என்று நாமாகவே கணித்துக் கொள்வோம். இந்த தேவைக்கே பல லட்சம் கார்கள் தயாரிக்கப்பட வேண்டும். வருமான வரி உச்சவரம்பு தளர்த்தப்பட்டிருப்பதால் நாம் கணிக்கும் எண்ணிக்கை சாத்தியமாகிவிடக் கூடிய வாய்ப்பும் அதிகம்.

இன்றைய தேதியில் இங்கே வருடத்திற்கு 18 லட்சம் கார்கள் தயாரிக்கப்படுகின்றன. வெகுவிரைவில் இந்த எண்ணிக்கை 30 லட்சத்தை தொட்டுவிடும். இது தவிர இந்தியாவில் உற்பத்தியாகி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கார்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது. எனவே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவிகித அளவில் இருக்கும் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி, வரும் வருடங்களில் நாம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க இயலாத வண்ணம் வளர்ந்திருக்கும்.

ஆட்டோமொபைல் துறையில் வேலை பார்க்க நினைக்கும் இளைஞர்கள், வேலை தேடி அலையவேண்டியதில்லை. ஆட்டோமேடிக்காக அவர்கள் வீடுதேடி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வரும்.

பொதுவாக இயந்திரவியல் படித்தவர்களுக்கு மட்டும்தான் இத்துறையில் வேலை கிடைக்கும் என்றொரு கருத்து நிலவி வருகிறது. இது உண்மையல்ல.

புதிதாக சந்தைக்கு வரும் கார்களில் சில சிறப்பம்சங்களை நீங்கள் கண்டிருக்கலாம். ரிமோட் கண்ட்ரோல் மூலமாக ஆட்டோமேடிக்காக கார் கதவைத் திறப்பது. இதுமாதிரி மின்னணு, கணிப்பொறி வல்லுனர்களின் பங்கு அவசியமான நிறைய வசதிகள் பெரிய கார்களில் மட்டுமன்றி, நாலு லட்ச ரூபாய் விலையில் விற்கக்கூடிய சிறிய கார்களிலும் வந்துவிட்டது. எனவேதான் அடித்துச் சொல்கிறேன். இயந்திரவியல் படித்தவர்களுக்கு மட்டுமல்ல. வேறு துறையில் படித்தவர்களுக்கும் ஆட்டோமொபைல் துறை வேலைவாய்ப்பினை கொட்டித்தரப் போகிறது.

ஆட்டோமொபைல் சார்ந்த auto-embedded திட்டங்களில் பிரபலாமாக இருக்கும் நிறுவனம் Robert Bosch. சமீபத்தில் இந்நிறுவனம் கோவையில் ஆரம்பித்த ஒரு கிளைக்கு மட்டும் 5000 பொறியாளர்களை பணிக்கு சேர்த்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

தற்போது மாணவர்களாக இருப்பவர்கள் ஆட்டோமொபைல் துறையை குறிவைத்து ஏதேனும் துணைப்படிப்புகள் (crash courses) பயின்று வைத்துக் கொள்வது நலம். ஏற்கனவே Auto / Auto Ancillary துறைகளில் பணியாற்றுபவர்களும் கூட இதுபோன்ற துணைப்படிப்புகளை படித்து வைத்துக் கொண்டால், வெகுவிரைவில் பிரமோஷன் வாங்கலாம். நல்ல சம்பளமும் பெறலாம்.

ஆட்டோமொபைல் துறைக்கு நல்ல எதிர்காலம் நிச்சயம் உண்டு. இது ஜோசியமல்ல. நடைபெறப்போகும் உண்மை” என்று நம்பிக்கை தரும் விதமாக பேசுகிறார் கார்க்கி.

இளைஞர்களே, கேட்டுக் கொள்ளுங்கள்.

 

ந‌ன்றி  “புதிய‌ த‌லைமுறை” -  கிருஷ்ணா

 

all rights reserved to www.karkibava.com