Apr 28, 2011

சுப ஆரம்பம்


 

  ஹாய் ஹாய் ஹாய்..

  எல்லோரும் நல்லா இருக்கிங்களா? நம்ம ராம் கோபால் வர்மா அஞ்சே நாள்ல ஒரு படத்தை எடுத்திருக்காராம். இதுல ஷூட்டிங் மட்டும்தான் கணக்கு. ஸ்க்ரிப்ட், போஸ்ட் புரொடக்‌ஷன் ஒர்க் எல்லாம் தனி. அந்த மாதிரி நாம ஏன் குறும்படத்துல..நோ நோ.. திட்டாம கேளுங்க. நாம ஏன் ஒரு மணி நேரத்துல ஒரு குறும்படம் எடுக்க கூடாதுன்னு யோசிச்சேன். குறும்படம் எடுக்க முடியலைனாலும் ஒரு விளம்பரப்படம் எடுக்கலாமேன்னு யோசிச்சு எடுத்தும் முடித்துவிட்டோம். கான்செப்ட் யோசிச்சது, படப்பிடிப்பு, எடிட்டிங் என எல்லாமே ஒரு மணி நேரத்தில் முடித்துவிட்டோம். இதை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம். ஆனால் ஒரு மணி நேரம் என்பதை கெடுவாக வைத்துக் கொண்டதால் முடிந்தவரை முடித்து வலையேற்றுகிறோம். இதே கான்செப்ட்டில் இன்னும் சில விளம்பரப்படங்கள் எடுக்கவிருக்கிறோம். அவை அவுட்டோரில், நல்ல கேமராவில், நல்ல முறையில் எடுக்க ஆசை. இந்தப் படம் சாதாரன டிஜிட்டல் கேமராவிலும், மொபைல் கேமராவிலும் எடுக்கப்பட்டது.

இதில் வரும் கிட்டார் பிட் ட்விட்டர் ஒருவர் வாசித்தது. அதையே நான் வாசித்து உபயோகப்படுத்த எண்ணினேன். அந்த 1 மணி நேரக்கணக்கால் அதுவும் இயலாமல் போனது. சிறந்த விளம்பரப்படத்திற்கான விருதுக்கு இது செல்லக்கூடும் என்பதால்(ஹிஹி) லைவ் ரெக்கார்டிங் முறை என்று முடிவானது. சற்று இரைச்சல் இருக்கக்கூடும்.

33 கருத்துக்குத்து:

Kafil on April 28, 2011 at 11:46 PM said...

சார் மணிரத்தினம், பத்து அடி தள்ளி நிக்கணும் , படம் அள்ளுது, நீங்க ஏன் கான்ஸ் விருத்துக்கு இந்த படத்த அனுப்ப கூடாது

சுசி on April 28, 2011 at 11:51 PM said...

கலக்கல் கார்க்கி.

பப்லு க்க்க்க்க்யூட்.. மாமாவ விட பதினாறில்ல 32 அடி பாய்வார் :))

துளியூண்டு சாக்லெட்ட கிள்ளிக் கொடுத்த வள்ளல் கார்க்கி வாழ்க!!

முயற்சிக்கு வாழ்த்துகள்.

Phoenix on April 28, 2011 at 11:51 PM said...

haha sema expression at the end! really comical reaction! :-D

Phoenix on April 28, 2011 at 11:53 PM said...

idhukkaagave next time filmfare la ad nu oru category create panni ungalukku award kudukka poraanga nu ninaikirein boss ;-)

Kaarthik on April 28, 2011 at 11:56 PM said...

கார்க்கி சூப்பர் பப்லூ சூப்பரோ சூப்பர் :-)

Mohamed Faaique on April 28, 2011 at 11:57 PM said...

படம் சொல்லும் கருத்து சூப்பர் ஸார். நாமளும் இத ஏன் பின்பற்றக் கூடாது????

சும்மா பேசலாம் on April 29, 2011 at 12:24 AM said...

அருமை... நல்ல நகைச்சுவை.. சுப்பர் கான்செப்ட்....

நிரூபன் on April 29, 2011 at 1:01 AM said...

சுபகாரியங்களுக்கு சாக்கிலேட்..
தத்துவம் கலந்த தமிழ் விளம்பரமாக எடுத்திருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள் சகோ.
தொடர்ந்தும் ஜமாயுங்கோ

தெய்வசுகந்தி on April 29, 2011 at 1:17 AM said...

நல்ல முயற்சி!!

பிரதீபா on April 29, 2011 at 2:28 AM said...

கஞ்சப்பிசினாரியப்பா நீங்க. சின்னப்பையன் கேக்கறான், துளியூண்டு சாக்லேட் தர யோசிக்கறதப் பாருங்க ..

Guru on April 29, 2011 at 2:39 AM said...

கார்க்கி நல்ல முயற்சி.. உங்க கிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.பப்லுவுக்கு ஒரு ஷொட்டு.விளம்பரம் போலவே இதுவும் ஒரு நல்ல ஆரம்பம்.

ஆதிமூலகிருஷ்ணன் on April 29, 2011 at 9:20 AM said...

ஒரு மணி நேர டுபாகூர்லாம் விடாம அப்படியே மாடியிலயோ, பக்கத்து பார்க்குலயோ வச்சு ஃப்ரீயா பண்ணியிருந்தா இன்னும் நல்லா வந்திருக்கும்.

அப்புறம் பப்லுவை ரீடேக் வாங்கியிருக்கலாம். இருந்தாலும் முதல் முயற்சி பாராட்டுக்குரியதுதான். அதோட முக்கிய விஷயம் என்னான்னா உன்னோட எக்ஸ்ப்ரஷன்ஸ்ல நல்ல முன்னேற்றம், வெரிகுட்.

எடிடிங் கூட பரவாயில்லைபா.. கீப் கோயிங்.!

ஆதிமூலகிருஷ்ணன் on April 29, 2011 at 9:22 AM said...

for follow up..

என். உலகநாதன் on April 29, 2011 at 9:33 AM said...

நல்லா இருக்கு கார்க்கி.

amas on April 29, 2011 at 10:17 AM said...

Great idea, well executed and really funny! Kudos to you.
amas32

சிட்டி பாபு on April 29, 2011 at 10:36 AM said...

அசத்து கார்கி நீ சினிமா காரங்க கண்ணுல படாம இருந்துக்கோ கூட்டீட்டு போய்ட போறாங்க

மோகன் குமார் on April 29, 2011 at 10:51 AM said...

நல்லாருக்கு கார்க்கி. பப்லுவை முதல் முறையா பாக்குறேன். அவர் கொல்கத்தா டீம் விசிறியா?

அமுதா கிருஷ்ணா on April 29, 2011 at 11:53 AM said...

பப்லு அம்மா எடுத்த முடிவு அற்புதம்..

பொன்கார்த்திக் on April 29, 2011 at 12:18 PM said...

அட்ராசக்க அட்ராசக்க காச பணமா அள்ளி போடுங்க சகா அருமை..

ஷர்புதீன் on April 29, 2011 at 12:44 PM said...

ஆகா, ஆஸ்காருகான முதல் சின்ன படி

ARUN THE ROCKER on April 29, 2011 at 2:25 PM said...

thala KO review enga???
unga kitta neraya edhir paakurom...

Vijay Armstrong on April 29, 2011 at 2:51 PM said...

அடுத்த தடவை இந்த மாதிரியான உலகப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ஒரு அறிய வாய்ப்பை எனக்கு அருளும் படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நான் தான் முதலில் கேட்டு இருக்கிறேன். வேறு யாரு கேட்டாலும் தரக்கூடாது..நேர்மையாக நடந்துக்கொள்ள வேண்டும்.

உங்களின் கடைசி 'எக்ஸ்பிரஷன்' அருமை கார்க்கி..

விக்னேஷ்வரி on April 29, 2011 at 4:36 PM said...

நிஜமாவே உங்க ஃபேஸ் ரியாக்‌ஷன்ல நல்ல முன்னேற்றம். இன்னும் பெட்டரா ட்ரை பண்ணியிருக்கலாம் கார்க்கி. பட் நாட் பேட்.

Athammohamed on April 30, 2011 at 12:01 PM said...

சின்ன குழந்தைக்கு கொடுக்காமல் திண்ணா இப்படிதான் வயிறு வளர்ந்துகிட்டே போகும்.

Om on April 30, 2011 at 6:45 PM said...

//துளியூண்டு சாக்லெட்ட கிள்ளிக் கொடுத்த வள்ளல் கார்க்கி வாழ்க!!//

Repeat

Om on April 30, 2011 at 6:52 PM said...

Last la unga Face Reaction Superb !!!!!!

கார்க்கி on April 30, 2011 at 9:21 PM said...

அட நெசமா நல்லா வந்துடுச்சு போல.. நன்றியோ நன்றி எல்லோருக்கும்

@விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்,
எங்கள நம்பினா அதான் ஆகும்ன்னு சொல்றீங்களா பாஸ்????????????

கயல் on May 1, 2011 at 1:04 AM said...

அருமை கார்க்கி! வாழ்த்துக்கள் பப்லு!

Maheswari on May 3, 2011 at 2:32 AM said...

பப்லு சூப்பர் ! இருந்தாலும் காட்பாரீசை கிள்ளிகொடுத்த முதல் வள்ளல் நீங்க தான் ! முதல் முயற்சி சூப்பர்.

உமா கிருஷ் on May 3, 2011 at 12:05 PM said...

நல்ல முயற்சி!எனக்கு இறுதி expression தான் பிடிச்சிருக்கு.இருந்தாலும் எதுக்கு இந்த அதிர்ச்சி ஏற்கனவே தெரிஞ்ச விசயத்துக்கு :)))

நர்மதன் on May 4, 2011 at 8:23 AM said...

see this
http://cablesankar.blogspot.com/2011/05/2011.html

குசும்பன் on May 15, 2011 at 11:09 AM said...

நந்தலாலா மிஷ்கின் இப்ப விளம்பர படத்தில் எல்லாம் நடிக்க ஆரம்பிச்சிட்டாரா?:))

Natarajan on July 10, 2011 at 3:30 PM said...

அய்யோ ஒரு சின்ன பையனுக்கு தெரிஞ்சது கூட எனக்கு தெரியாம போயிடுச்சே! வாடா பப்லு எனக்கும் ஒரு பீஸ் சாக்லேட் கொடு

 

all rights reserved to www.karkibava.com