Apr 20, 2011

வ‌ள்ளுவ‌ர்தான்யா க்ரேட் (கார்க்கி)


 

  ஜன்னலுக்கு வெளியே தெரிந்த கொன்றை மரத்தை பார்த்துக்கொண்டிருந்தான். மழை ஓய்ந்த மஞ்சள் வெய்யிலில் பழுத்த இலைகளும் பச்சை இலைகளும் லேசான காற்றில் அசைந்து கொண்டிருந்தன.

"அதுக்காக‌ வ‌ச‌ந்த் டிவி பார்க்கிற‌‌தெல்லாம் ஓவ‌ர்டா" .க‌ணீர் குர‌ல் அவ‌னை திருப்பிய‌து.

நான் வ‌ந்த‌து கூட‌ தெரியாம‌ அப‌ப்டி என்ன‌டா வெறிச்சு பார்த்துட்டு இருக்க‌? உன் கூட‌ எல்லாம் ரூம் எடுத்தேன் பாரு.. என்னை சொல்ல‌ணும்" - எஃப்.எம் கேட்டுக் கொண்டே வேலை செய்வ‌து போல் அவ‌ன் எஃப்.எம் ஒலிப‌ர‌ப்பிக் கொன்டே த‌ன் வேலைக‌ளை செய்ய‌த் துவ‌ங்கினான்.

ஜ‌ன்ன‌லை வெறித்துக் கொண்டிருந்த‌வ‌ன் சேன‌லை மாற்றிவிட்டு த‌லையாட்டினான்.

"என்ன‌டா ஆச்சு உன‌க்கு? ஏன் பேய‌றைஞ்சா மாதிரி இருக்க‌?" ‍-  எஃப்.எம் ஆறுத‌லாய் கேட்ட‌து

 "என்ன‌டா சொல்ற‌து?  பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை

அப்ப‌டின்னா?

 "தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர் உரிமையாகச் செய்துவிட்டதைத் தானும் விரும்பிச் செய்தது போலவே காட்டவில்லை என்றால், நெடுங்காலமாகக் கொண்ட நட்பு என்ன பயனைத் தரும்?" இதான் அர்த்த‌ம். இந்த‌ மாதிரிதான் அவ‌ன் ஃப்ரென்ட்ஷிப்ப‌ நினைச்சேன்..

யாரு? அந்த‌ வெள்ளைய‌த்தேவ‌னை சொல்றியா?

ம்ம்.. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

இதுக்கு என‌க்கு அர்த்த‌ம் தெரியுமே!!உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் ,ந‌ண்பனுக்குத் துன்பம் வந்தால்அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு. க‌ரெக்ட்டா? நேத்துதான் நீ த‌ந்த‌ புக்ல‌ ப‌டிச்சேன்.

ம்ம். அப்ப‌டித்தானே நான் இருந்தேன்?

ஆனா நீ இப்ப‌ செய்ற‌ வேலை அப்ப‌டி இல்லையே? அவ‌ன் த‌ப்பு செஞ்சிட்டான்னு நீயுமா இப்ப‌டி செய்ய‌ணும்?

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது

இது நான் இன்னும் ப‌டிக்க‌ல‌. நீயே அர்த்த‌த்த‌ சொல்லு.

 உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது.

அப்ப‌டி என்ன‌ அவ‌ர் ந‌டிச்சிட்டாரு? ப‌டிப்பு, வேலையெல்லாம் பார்த்தா நீ ப‌ழ‌குவ‌? அப்ப‌டிப் பார்த்தா நீ என்கிட்ட‌ பேசியே இருக்க‌ கூடாதே?

உன் கேள்வியிலே‌ ப‌தில் இருக்கு பாரு. அது பார்த்து ப‌ழ‌க‌ல‌. ஆனா சொன்ன‌ எல்லாமே பொய்யுன்னு தெரிஞ்சா தாங்கிக்க‌ முடியுமா?

என்ன‌ ஆதாரம்? என்ன‌ ஏமாத்திட்டாரு உன்னை?

உன‌க்கு நிரூபிக்க‌ வேணாம்டா.. என‌க்கு தெரியும். கேட்க‌ வேண்டிய‌ கேள்வியெல்லாம் எஸ்.எம்.எஸ்ஸுல‌ கேட்டுட்டேன். அவ‌னும் எல்லாத்தையும் ஒத்துக்கிட்டு ம‌ன்னிப்பா கேட்டுட்டான். இந்த‌ மொபைல்ல‌தான் இருக்கு.

அப்புற‌ம் ஏன் ம‌த்த‌வ‌ங்க‌ கிட்ட‌ அவ‌ன‌ ப‌த்தி சொன்ன‌?

உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்?
 தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் வாழ்வதில் தமக்கு இணை இல்லாதவராய் இருப்பாரின் நட்பைப் பெற்றென்ன இழந்தென்ன?" இப்ப‌டி வாழுற‌ ஒருத்த‌ன‌ நாமே கொண்டாடினோம். இப்ப‌ அவ‌னால‌ நிறைய‌ பேருக்கு பிர‌ச்சினைன்னு வ‌ந்தா சொல்ல‌ வேண்டிய‌தும் நாம‌ தானே?

ம்ம். அப்ப‌ இங்க‌ "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" வ‌ராதா?

தெரியாம‌ செஞ்ச‌ த‌ப்புன்னா ப‌ர‌வாயில்லைடா. இது பிளான் ப‌ண்ணி செஞ்சது. யார்கிட்ட‌ பேசினாலும் நான் சொன்ன‌ குற்ற‌ச்சாட்டையே சொல்றாங்க‌.

ம்ம்..  இடிப்பாரில்லா ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும். அப்ப‌டி ஆயிட்டா?

இல்லைடா.. சில‌ மாச‌மாவே எல்லாம் ந‌ண்ப‌ர்க‌ளும் சொல்லிட்டுத்தான் இருந்தாங்க‌

இப்ப‌ என்ன‌ ப‌ண்ண‌ போற‌?

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.  செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும். அத‌னால் வில‌கிற‌துதான் க‌ரெக்ட். இனிமேல‌ எங்கேயும் இதை ப‌த்தி பேச‌ வேணாம்னு முடிவு செஞ்சிட்டேன்..

ம்.. விடு ம‌ச்சி.. ஆனா வ‌ள்ளுவ‌ர்தான்யா க்ரேட்.. எல்லாத்துக்கும் எழுதி வ‌ச்சிருக்கான் பாரு.

 
 
 

21 கருத்துக்குத்து:

குசும்பன் on April 20, 2011 at 10:51 AM said...

811.
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
812.
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.
813.
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
814.
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
815.
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
816.
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.
817.
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.
818.
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
819.
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
820.
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு

குசும்பன் on April 20, 2011 at 10:51 AM said...

821.
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
822.
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.
823.
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
824.
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
825.
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.
826.
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
827.
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
828.
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
829.
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
830.
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.

குசும்பன் on April 20, 2011 at 10:52 AM said...

91.
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
792.
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
793.
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.
794.
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
795.
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.
796.
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
797.
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
798.
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
799.
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.
800.
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.

குசும்பன் on April 20, 2011 at 10:52 AM said...

நட்பு
781.
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
782.
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
783.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
784.
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
785.
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
786.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
787.
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
788.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
789.
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
790.
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.

குசும்பன் on April 20, 2011 at 10:53 AM said...

கடைசியா ஒன்னே ஒன்னு...

314.
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.


இப்படிக்கு
திருவள்ளுவர்

புன்னகை on April 20, 2011 at 10:59 AM said...

Free eh vidu... He doesn deserve ur friendship...

சுசி on April 20, 2011 at 11:29 AM said...

விட்டுத் தள்ளுங்க கார்க்கி.

Anonymous said...

அவர் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
அவர் நெஞ்சே அவரைச் சுடாது.

மோகன் குமார் on April 20, 2011 at 11:59 AM said...

//செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்//

Yes. Time will heal the wound.

விக்னேஷ்வரி on April 20, 2011 at 12:14 PM said...

நாம தப்பு செய்யலை, ஏமாற்றப்பட்டோம்ங்கறதை எல்லாரும் பதிவெழுதி ஒத்துக்கிட்டா தான் நாம நல்லவங்களா கார்க்கி.. # நிஜமாவே டவுட்டாத் தான் கேக்கறேன்.

நிரூபன் on April 20, 2011 at 12:20 PM said...

ஜன்னலுக்கு வெளியே தெரிந்த கொன்றை மரத்தை பார்த்துக்கொண்டிருந்தான். மழை ஓய்ந்த மஞ்சள் வெய்யிலில் பழுத்த இலைகளும் பச்சை இலைகளும் லேசான காற்றில் அசைந்து கொண்டிருந்தன//

இயற்கைக் காட்சிகளுடன் இணைந்த வரணணை அழகு. ஆரம்பமே செம கலர் புல்லாக இருக்கிறதே.

நிரூபன் on April 20, 2011 at 12:21 PM said...

"அதுக்காக‌ வ‌ச‌ந்த் டிவி பார்க்கிற‌‌தெல்லாம் ஓவ‌ர்டா" .க‌ணீர் குர‌ல் அவ‌னை திருப்பிய‌து.//

ஏன் அவ்ளோ கொலை வெறியோடு அலைவாங்களா?

நிரூபன் on April 20, 2011 at 12:22 PM said...

"தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர் உரிமையாகச் செய்துவிட்டதைத் தானும் விரும்பிச் செய்தது போலவே காட்டவில்லை என்றால், நெடுங்காலமாகக் கொண்ட நட்பு என்ன பயனைத் தரும்?" இதான் அர்த்த‌ம். இந்த‌ மாதிரிதான் அவ‌ன் ஃப்ரென்ட்ஷிப்ப‌ நினைச்சேன்..//

அவ்............நம்ம நவீன பொழிப்புரையாசிரியர் கார்க்கியின் விளக்கவுரை அருமையாக இருக்கே..

ஹி...ஹி.

நிரூபன் on April 20, 2011 at 12:23 PM said...

உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் ,ந‌ண்பனுக்குத் துன்பம் வந்தால்அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு. க‌ரெக்ட்டா? நேத்துதான் நீ த‌ந்த‌ புக்ல‌ ப‌டிச்சேன்.//

என்னம்மா யோசிக்கிறாங்க...

நிரூபன் on April 20, 2011 at 12:24 PM said...

வள்ளுவரின் நட்பை அடிப்படையாக வைத்து, இக் காலத்திற்கு ஏற்றாற் போல யோசிச்சிருக்கீங்க..

பாவம் வள்ளுவர்.. அவர் இப்போ இருந்திருந்தா.. உங்க முன்னாடி சரண்டர் ஆகி இருப்பாரு.

niramilla sinthanai on April 20, 2011 at 4:53 PM said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க கார்க்கி.

ப்ரியமுடன் வசந்த் on April 20, 2011 at 8:46 PM said...

//குசும்பன் on April 20, 2011 10:53 AM said...
கடைசியா ஒன்னே ஒன்னு...

314.
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.


இப்படிக்கு
திருவள்ளுவர்//


தலைவா அதெல்லாம் பழசு

முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க மூஞ்சியில் குத்திவிடல்

இதான் புதுசு :))

கயல் on April 20, 2011 at 11:27 PM said...

ம்ம்ம்! என்னமோ நடக்குது! எனக்கு புரியல.ஆனா எதுனாலும்... லூசுல விடுங்க. காலம் பதில் சொல்லும்.

RaGhaV on April 21, 2011 at 1:11 AM said...

இதுக்குபோய் எதுக்கு வள்ளுவர டிஸ்டர்ப் பண்ணிகிட்டு?

நம்ம தளபதி சொல்லியிருக்காரு சகா..

"நியாயம் காயம் அவனே அறிவான் அவனிடம் அதை நீ விட்டுச் செல்"

அவ்வளவுதான்.. :-)

ஜ்யோவ்ராம் சுந்தர் on April 21, 2011 at 10:45 PM said...

இப்போதுதான் படித்தேன். ஆக மோசமான பதிவு இது :(

ஷர்புதீன் on April 23, 2011 at 9:47 PM said...

உங்கள் பதிவுகளின் பாலோவரான நான்., இனி வரும் காலங்களில் வாரம் வாரம் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில்., உங்களின் அந்தந்த வாரம் படிக்க தவறிய பதிவுகளை படிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்., பார்க்கலாம் எந்த அளவிற்கு நடைமுறை படுத்துகிறேன் என்பதை!
:)
மேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்!

 

all rights reserved to www.karkibava.com