Apr 12, 2011

மாப்பிள்ளையும் சில பின்குறிப்புகளும்


 

எம்ஜிஆர் படம் வரை தெரியும். அதற்கு முந்தைய டிரெண்ட் எனக்கு தெரியவில்லை. அம்மாவிற்கோ, நண்பனுக்கோ ஹீரோ ஒரு சத்தியம் செய்து கொடுத்துவிட,  அதை தெரிந்துக் கொண்டு வில்லன் ஹீரோ முன்னாடி அட்டகாசம் செய்ய, ஒரு கட்டத்திற்கு மேல் ஹீரோவால் பொறுக்க முடியாமல் சத்தியத்தை மானசீக வாபஸ் பெற்று களத்தில் இறங்க, அங்கே தொடங்கும் ஒரு ஃபைட். இப்படித்தான் இந்த ஏப்ரல் மாதம் முழுக்க பிளாக் எழுத மாட்டேன் என தோழியிடம் நான் சொல்லிவைக்க, அப்படியே அதை ஃபாலோ செய்து மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த மாலையில் அக்கா வந்து படத்திற்கு அழைக்க, தவிர்க்க முடியாமல் நானும் சென்றுவிட, இதோ நள்ளிரவு 2 மணிக்கு இந்தக் கருமத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

பத்தி 1ன் பின்குறிப்பு : விமர்சன சூறாவளி கேபிள் சங்கரின் சட்டப்படி முதல் பத்தி இப்படித்தான் “செய்ய,இறங்க,ஓட,முடிக்க” என கமா போட்டு எழுத வேண்டுமாம். மொத்த பத்தியும் இரண்டு வாக்கியங்களில் எழுதி விட வேண்டுமாம்.

மாப்பிள்ளை என்றொரு திரைக்காவியத்தை கண்ட நான் இங்கே உங்கள் முன்னால் பரோலில் வெளிவந்த கைதி போல் நிற்கிறேன். நான் பட்ட பாட்டை படிக்கும் நீங்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும்.  இது நீங்கள் எனக்கு செய்யும் உதவி இல்லை. கடமை. பெரு நாட்டில் இப்படி ஒரு படம் பார்த்துவிட்டு வந்து இரவு நேரமென்றும் பார்க்காமல் எழுதும் எழுத்தாளானை அம்மக்கள் கொண்டாடுகின்றனர்.. தமிழ்நாடு லைட்டை ஆஃப் செய்யுடா கஸ்மாலம் என்று பக்கத்து வீட்டுக்காரன் திட்டும் அளவிலே இருக்கிறது. என் வாழ்வில் மிகப்பெரிய இரண்டு சாபக்கேடுகள் இருக்கின்றன. ஒன்று இந்த விடியா தமிழகத்தில் பிறந்தது, இரண்டாவது மாப்பிள்ளை போன்ற ஆகாவலி படங்களை பார்த்து தொலைப்பது.

பிகு: இப்பத்தி புரிய உங்களுக்கு தற்கால கட்டுரையாளன் கம் நாவலிஸ்ட் குறித்த பிரக்ஞை இருக்க வேண்டும்

மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்? அது சூப்பர்ஸ்டார் நடித்த சூப்பர் ஹிட் படமாச்சே என்பவர்களுக்கு.. ஆம். அது உண்மைதான். மறுக்கவில்லை. ஆனால் ரஜினியின் மாப்பிள்ளை நடித்த இந்த மாப்பிள்ளை மாமனாரின் ஆல் டைம் பெஸ்ட் மொக்கையான குசேலனை சூப் வைத்து குடித்துவிடுகிறது. வீட்டோடு மாப்பிள்ளை வைத்துக் கொள்ளலாம். ஆனால் தியேட்டரோடு மாப்பிள்ளை மட்டும் கூடவே கூடாது என சூப்பர்ஸ்டாரின் காதுகளில் யாரேனும் கூவிவிடுங்கள். வழக்கமாக ஒரு மொக்கைப்படம் வந்தால் ரசிகர்கள் கேட்கும் பொதுவான கேள்வி “கதையை கேட்டானா இல்லையா?”. இரண்டு மாப்பிள்ளையின் கதையும் ஒன்றுதான். உடனே ”அப்புறம் ஏன் கதை என சுராஜ் தன் பெயரைப் போட்டுக் கொண்டாரென” என்னிடம் கேட்காதீர்கள். நான் அவ்விஷயத்தில் வைகோவைப் போல கையாலாகதவனாக இருக்கிறேன். விஷயம் என்னவென்றால் தமிழ் மசாலா படத்திற்கு தேவை கதை இல்லை. திரைக்கதையும், அதை தாங்கும் நடிகர்களும். இதில் தனுஷ் என்ற 4 எலும்பும் 2 மீட்டர் தோலும், மனிஷா கொல்றாடா என்பவரும், ஹன்சிகா முட்டிக்கோநீ என்பவரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஆசிஷ் வித்யார்த்தியும் அவர்தம் அழகிய ஒட்டுமீசையும் கூட உண்டு.

கதைதான் ஒரு படத்திற்கு முக்கியம் என்னும் அறிவுசீவிகள் “கைப்புள்ள. ஏமாறாத” என ஆட்காட்டி விரலை தன்னை நோக்கி காட்டி உஷாராகும் வடிவேலுவை நினைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் இண்டெக்ஸ் ஃபிங்ரின் நெய்பரை காட்டிக் கொள்ளலாம். இப்போது பார்த்தாலும் சுவாரஸ்யப்படுத்தும் கதையை கந்தலாக்கி, அதை வெள்ளாவியில் போட்டு இன்னும் கசக்கி, அதை நாய்க்குட்டிக்கு போட்டு அழகுப்பார்த்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, செகண்ட் யூனிட் டைரக்‌ஷன், சிறப்பு சப்தம் பற்றியெல்லாம் நான் எழுதினால் பெரு நாட்டில் மட்டுமல்ல, சிறு நாட்டிலும் ஏளனம் செய்வார்கள். படத்தில் ஒரு ஆறுதலான விஷயம், தனுஷிற்கு வரும் கோவமெல்லாம் லாஜிக்கிலாக இருக்கிறது. தல அஜித் படம் பார்க்க சென்று, டிக்கெட் கிடைக்காமல் மேனஜருடன் சண்டைப் போட்டு பொட்டியை தூக்கி வந்துவிடுகிறார். அங்கே இயக்குனர் அற்புதமான ஒரு குறியீட்டை வைத்திருக்கிறார். ”தல படத்துக்கே டிக்கெட் கிடைக்கலைன்னா, எப்படி மத்த படத்துக்கு கிடைக்கும்?.”

இந்தப் பத்திக்கான பின்குறிப்பு: அஜித் ரசிகர்கள் சினம் கொள்ள வேண்டாம். நான் படம் பார்த்து நொந்து போயிருக்கிறேன். எங்கேயாவது எனக்கு கிளுகிளுப்பாக இருக்கும் விஷயங்களை நுழைக்காவிட்டால் தூக்கம் வந்துவிடும். எங்க கடைசி படம் சுறாவும் காலி. உங்க அசலும் காலி. அதனால் இத லூசுல விட்டுடுங்க.

மாப்பிள்ளை. பேரையாவது மாத்தியிருக்க வேண்டாமா? இப்போதோ எப்போதோ, இன்றோ நாளையோ மாப்பிள்ளையாக காத்திருக்கும் என்னைப் போன்றவர்கள் இந்தப் படம் பார்த்து தவறான முடிவுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது? போகட்டும். கெளசல்யா போன்ற மொக்கை ஃபிகரிடமும் கூட ஏதாவது ஒண்ணு நல்லா இருக்குமே! இந்தப் படத்தில் அப்படி ஏதுமில்லையா என நீங்கள் நினைக்கலாம். என்னோட ராசி நல்ல ராசி என்றொரு பாடல். அப்படியே ரீமிக்ஸ் தான். ஆனால் மெட்டை மாற்றாமல் பீட்டை மட்டும் மாற்றி கலக்கியிருக்கிறார். இதே ஃபார்முலாவை சுராஜும் பின்பற்றியிருந்தால் நான் நிம்மதியாக தூங்கியிருப்பேன். எல்லாம் விதியென போக முடியவில்லை.

பிகு: எல்லா பத்திக்கும் தனியே பின்குறிப்பு போடுகிறானே!! என்ன விஷயம் என யூகித்தீர்களா? ஆம். படத்தில் பெரும்பாலான “ட்விஸ்டுகள்” முதலில் காட்டப்படுகின்றன. அதன் பின் சம்பந்தப்பட்டவர்களின் பாயிண்ட் ஆஃப் வியூவில் அது விளக்கபப்டுகிறது. இந்த த்ராபையான டெக்னிக்கை ஏதோ க்ரையோஜீனிக் இஞ்சினை கண்டுபிடித்தது போல் பெருமையாக காட்ட முயல்கிறார் இயக்குனர். அதே போலதான் நானும் அந்தந்த பத்திக்கு தொடர்புடைய விளக்கங்களை அங்கங்கே சொல்லிவிட்டேன்.

கடைசியாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன். மாப்பிள்ளை பார்க்க வேண்டுமென்றால் மோசர்பியரில் 30 ரூபாய் சிடியை என் சொந்த செலவில் வாங்கித் தருகிறேன். தயவு செய்து இதை பார்க்க வேண்டாம். பக்கத்தில் பைபிளோ, கீதையோ இல்லை. அதில் கைவைத்து சொல்வதாக நினைத்துக் கொள்ளுங்கள் “சத்தியமாக இனிமேல் நான் தனுஷ் ரசிகன் என சொல்லிக்கொள்ள மாட்டேன். ஆடுகளம் போல ஆறு படம் நடித்தாலும் இச்சத்தியம் ஆக்டிவாக இருக்கும்”. ஆமென்.

19 கருத்துக்குத்து:

Kafil on April 12, 2011 at 2:39 AM said...

I condemn it Very strongly. :(

Maheswari on April 12, 2011 at 2:41 AM said...

இந்த அக்கா சொல்லி கேக்காம உங்கக்கா கூப்பிட்டான்னு சொல்லி போனா, இப்பிடி தான் நடுராத்திரியிலே ப்ளாகில் புலம்பவேண்டியது இருக்கும்.

மதன்ராஜ் மெய்ஞானம் on April 12, 2011 at 5:56 AM said...

விவேக் அண்ட் கோ போட்ட வறட்டு மொக்கையில் படம் ஆரம்பித்த 30-40 நிமிடங்களில் தியேட்டருக்கு வெளியே இருந்தேன்..

gayathri on April 12, 2011 at 6:54 AM said...

கலக்கல் கார்க்கி. ஏன் இப்பலாம் அதிகம்
எழுதறதில்ல?

vinu on April 12, 2011 at 7:12 AM said...

எங்க கடைசி படம் சுறாவும் காலி. உங்க அசலும் காலி. அதனால் இத லூசுல விட்டுடுங்க.


annaa unga detaillu thappu.........

unga aaloda "kadasipp" padam "kavalan" - he he he he he he

amas on April 12, 2011 at 7:28 AM said...

ROFL. Your writing style is excellent! Did not ever plan to see the movie but thanks for the heads up.
Amas32

Thirunaresh on April 12, 2011 at 8:09 AM said...

Irandam Bathi super, i like it, i like it....

வீராங்கன் on April 12, 2011 at 8:14 AM said...

தனுஷ், விஜய் ஓர் ஒப்பீடு

கார்க்கி on April 12, 2011 at 9:42 AM said...

க‌ஃபில், அதுல‌ கூட‌ ஸ்ட்ராங்க் லைட் இருக்கா? :))

ம‌ஹேஷ்வ‌ரி அக்கா, என்ன‌ செய்ய‌? தாய்க்குல‌ங்க‌ள் பேச்சை த‌ட்டாத‌வ‌ன் ஆச்சே நான்

ம‌த‌ன்ராஜ், நான் தான் டிரைவ‌ர். க‌டைசி வ‌ரைக்கும்..ம்ம் :(

காய‌த்ரி, ச்சும்மாதான்.. லைஃபுல‌ ஒரு சேஞ்ச் வேணுமில்லை? :))

வினு, நான் இதுல‌ த‌வ‌று செய்வேனா? ம‌சாலா ப‌ட‌ங்க‌ளில் சொன்னேன். தெளிவா குறிப்பிடாத‌து தவறுதான் :)

ந‌ன்றி அம‌ஸ்

திரு.திருந‌ரேஷ், ப‌ட‌த்தின் இர‌ண்டாம் பாதியா? ப‌திவிலா?

Manoj on April 12, 2011 at 10:29 AM said...

nama alu adutha padam masala than..velayutham.......

Manoj on April 12, 2011 at 10:30 AM said...

nama alu adutha padam masala than...velayutham.

Anonymous said...

கடைசியாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன். மாப்பிள்ளை பார்க்க வேண்டுமென்றால் மோசர்பியரில் 30 ரூபாய் சிடியை என் சொந்த செலவில் வாங்கித் தருகிறேன். தயவு செய்து இதை பார்க்க வேண்டாம். பக்கத்தில் பைபிளோ, கீதையோ இல்லை. அதில் கைவைத்து சொல்வதாக நினைத்துக் கொள்ளுங்கள் “சத்தியமாக இனிமேல் நான் தனுஷ் ரசிகன் என சொல்லிக்கொள்ள மாட்டேன். ஆடுகளம் போல ஆறு படம் நடித்தாலும் இச்சத்தியம் ஆக்டிவாக இருக்கும்”. ஆமென்.

:) :) :) :) :) :) :) ........

Thirunaresh on April 12, 2011 at 12:15 PM said...

Obviously Pathivin irandam pagamee, am reading your blog for last 5 months its interesting and especially i like your comments about that "writer"....:-)

சுசி on April 12, 2011 at 2:40 PM said...

நல்ல வேளை தப்பிச்சேன்.

நீங்க தொடந்து எழுதணும் கார்க்கி.

Sen22 on April 12, 2011 at 3:59 PM said...

//மாப்பிள்ளை. பேரையாவது மாத்தியிருக்க வேண்டாமா? இப்போதோ எப்போதோ, இன்றோ நாளையோ மாப்பிள்ளையாக காத்திருக்கும் என்னைப் போன்றவர்கள் இந்தப் படம் பார்த்து தவறான முடிவுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது? //


:))))))

Vijay on April 12, 2011 at 4:07 PM said...

எங்க கடைசி படம் சுறாவும் காலி. உங்க அசலும் காலி. அதனால் இத லூசுல விட்டுடுங்க.


annaa unga detaillu thappu.........

unga aaloda "kadasipp" padam "kavalan" - he he he he he he

yeooo kavalan hit ya.....

அருண் பிரசாத் on April 12, 2011 at 5:16 PM said...

படம் நல்லா இல்லைனு சொல்லி இருக்கற உங்க விமர்சனம் நல்லா இருக்கு பாஸ் :)

Anonymous said...

தனுஷின் மாப்பிள்ளை பிடிக்காதவனுக்கு சுறா - பிடிச்சு இருக்கு....

சுறா பிடிக்காதவனுக்கு அசல் - பிடிச்சு இருக்கு....

மேல சொன்ன எதுவுமே பிடிக்காதவங்களுக்கும் பிடிச்சவங்களுக்கும் ரொம்ப பிடிச்ச படம் எது? என்று தேசிய அளவில் ஆராய்ச்சி பண்ணி இருக்காங்க...

அது நம்ம வீராசாமி தான் என்று நேற்று அதிகாரபூர்வமாக அறிவிச்சு இருக்காங்க... # TR rockz... :)

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

பரிசல்காரன் on April 13, 2011 at 1:44 AM said...

அடுத்தவன்கிட்டேர்ந்து பாடம் கத்துக்கலைன்னா இப்படித்தான். நான் நேத்தே ஒப்பாரி வெச்சுட்டேன் பார்க்கலியா?

பைதவே - 30ரூவா டிவிடிக்குகூட லாயக்க்கில்லாத படம் சகா இது. இன்னும் எனக்கு வெறி அடங்கல.. ங்கொய்யால..

 

all rights reserved to www.karkibava.com