Apr 17, 2011

சைட்டடிக்கலாம் வாங்க – 1


 

   என் நண்பன் ஒருவன் வீராணம் பைப் ஸைஸில் லென்ஸும் ஒரு கேமராவும் வைத்திருக்கிறான். கிடார் வைத்திருக்கும் எல்லோருக்கும் அது வாசிக்கவும் தெரியும் என்று நம்பும் தமிழன், கேமரா வைத்திருக்கும் எல்லோரும் ஃபோட்டோகிராஃபர் எனவும் நம்பிவிடுவான். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மாலை ஆனால் அந்த கேமராவும் பைப் சைஸ் லென்சும், கூடவே இவனும் படம் பிடிக்க கிளம்பிவிடுவான்.  இந்த மாதிரி ஃபோட்டோ செஷனுக்கு போகும் நபர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என ஒரு 4 பக்க பிரிண்ட் அவுட் ஒன்றை அறையில் ஒட்டியிருக்கிறான். அந்த லிஸ்ட் என்னவென்று தெரிந்துக் கொள்ள வேண்டிய இடம் இதுவல்ல. நாம மேட்டருக்கு வருவோம். செயற்கை லென்சினால் படம்பிடிக்க போகும் இவர்களுக்கே இவ்ளோ அதுப்புன்னா, இயற்கை லென்சால் படம் பிடிக்க போகும் நமக்கு எவ்ளோ அதுப்பு இருக்கும்? இல்லை கேட்கிறேன். எவ்ளோ அதுப்பு இருக்கும்?

   என்ன புரியலையா? நமது கண்களால் நாம் பிடிக்கும் படம் தானே சைட் அடிப்பது? அவர்கள் மெமரி கார்டில் சேமிப்பதை நாம் மன அறையில் சேமிக்கிறோம். லென்சை திருகி அவர்கள் ஸூம் செய்வதை நாம் கால்களை முன்பின், சைடு பக்கம் நகற்றி பிடிக்கிறோம். நல்ல ஃபோட்டோ எடுப்பவன் கையில் மட்டுமில்லை, எதை எடுக்கிறோம் என்பதிலும் இருக்கு என்பார்கள். இங்கேயும் அதுதானே? ஆக சைட் அடிக்கும் எல்லோரும் ஒரு விதத்தில் புகைப்பட கலைஞர்களே. “அதுக்கி இன்னா இப்ப?” என்ற லூஸ் மோகன் ஸ்டைலில் கேட்பீர்களேயானால் நானும் அப்படியே பதில் சொல்கிறேன். “சைட் அடிக்க போச்சொல்ல உஜாரா போனும்ப்பா. மெர்சில் ஆகாம நான் சொல்றத கேட்டீன்னா அப்பாலிக்கா சோக்கா சைட் அடிக்கலாம்”

   சைட் அடிக்கும் ஆசை இல்லாதவர்களை எதிர்கால இந்தியாவின் தூண்கள் என அழைப்பதில் எந்த நியாயமும் இருக்க முடியாது. அதாவது அவர்கள் இளைஞர்களே இல்லையென்கிறேன். இதை பற்றி நாம் மேலும் பேசி பிரச்சினையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். சைட் அடிப்பதென முடிவு செய்துவிட்ட சில நபர்கள் கடைப்பிடிக்க வேண்டிய புள்ளிகளை, அதாங்க பாயிண்ட்டுகளை மட்டும் பார்ப்போம். ஏற்கனவே தமிழ் சினிமா போல முதல் 4 ரீல் வரை கதையே சொல்லாமல் இழுத்தாகிவிட்டது.

   நாம் ஒன்றும் ABC பிரைவேட் லிமிட்டில் அஸிஸ்டெண்ட் மேனேஜர் வேலைக்கு  இண்டெர்வியு செல்லவில்லை. இந்த காலர் மட்டும் வெள்ளையா இருக்கிற சட்டையை போடுவது, நாய்க்கழுத்துல சங்கிலி மாதிரி டையை கட்டிக்கிறது, சாயம் போன வெள்ளை நிற அல்லது ஸ்கை ப்ளூ நிற சட்டை போடுறது, அப்புறம் தப்பு செஞ்சவன உள்ள தூக்கி போடுற மாதிரி இன்சர்ட் செய்றது. இதெல்லாம் ஸ்ரீசாந்த் வஸ்துக்கள் . நம்ம டீமில் இருந்தா நிச்சயம் டர்ருதான். உங்கக்கிட்ட டீஷர்ட் இருக்கா? ரொம்ப ஃபங்க்கியா எல்லாம் வேணாம். அதுக்குன்னு ரெண்டு பட்டன் வச்ச தாத்தா காலத்து டீஷர்ட்டும் வேணாம். V நெக் என்றால் உசிதம். ரவுண்ட் நெக்கில் நல்ல கலர் + வாசகம் என்றால் இன்னும் உசிதம்.

“Answer is beer. Whats the question”

“Some people read tshirt slogans. Are you?”

   இது போன்ற பாழாப்போன வாசகம் இருந்தால் அதை பைக் துடைக்கவோ, அல்லது கால்மிதியடியாகவோ பயன்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் customized வாசகங்கள் பிரிண்ட் செய்து கொள்ளலாம்..

I am on diet. Plz dont smile at me.

I am cool. I am not the reason for global warming.

“இங்கே தொலையும் இதயங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது

போன்ற வாசகங்கள் நல்ல ரீச்சை தரும். மேலும் நல்ல வாசகங்களுக்கு தனிமடலில் தொடர்பு கொள்ளலாம். எல்லா பாலினருக்கும் டயலாக்குகள் கைவசம் உண்டு.

  தர்மத்தின் தலைவன் படம் பார்த்திருக்கீங்களா? அதில் ஒரு சீனில் சூப்பர்ஸ்டார் வெறும் சட்டையோடு வேட்டி இல்லாமல் காலேஜுக்கு கிளம்புவாரு. செம சிரிப்பு இல்லை?அப்புறம் சிரிக்கலாம். நீங்களும் இப்ப டீஷர்ட் மட்டும்தான் போட்டிருக்கிங்க. நல்லதா ஒரு பேண்ட் எடுங்க. ஓவர் ஜிங்ஜாக் வேலை இல்லாத ஒரு டெனிம் ஜீன்ஸ் போதும். டீஷர்ட் நிறத்திற்கு மேட்ச்சா இருந்தா போதும். உடனே ரெண்டும் ஒரு நிறத்துல போட்டுக்கிட்டு 80களின் கமலஹாசன் ரேஞ்சுக்கு வராதீங்க. அடுத்த்து ஷூ.. என்னது செப்பலா? நோ பாஸ். கோவிலுக்கே போனாலும் ஷூதான். சாக்ஸ் போட்டு, ஷூ போடுற சாக்குல குனிஞ்சு நாலு பேர பார்க்கலாம். ஷூ கண்டிப்பா வேணும். ஆஃபீஸ்க்கு போடுற கருமத்தை எல்லாம் விடுங்க. நல்லதா ஒரு ஷூ இதுக்குன்னு வாங்கி வச்சிக்கோங்க. After all sighting is better than fighting.

கொஞ்சம் நிமிருங்க. டிரெஸ், ஷூ எல்லாம் ஓக்கே. பைக்லதானே போறோம்? ஒரு கூலர்ஸ் எடுத்துக்கோங்க. ஐபிஎல் பார்க்க வந்த தீபிகாவோட கண்ணாடி மாதிரி பெருசா வேணாம். ரொம்ப சிம்பிளா இருந்தா போதும். ஆங்.. இப்ப ஓக்கே.. என்ன பாஸ்? CT 100, ஸ்ப்லெண்டர் இதெல்லாம் மாப்பிள்ளை வண்டி. அதாவது சீதனமா கொடுக்கிற வண்டி.போய் யமஹா FZ இல்லைன்னா பல்சர் யார்கிட்டவாது கடன் வாங்கிட்டு வாங்க. நாம் எவ்ளோ பெரிய வேலைக்கு போறோம்? இதுக்கெல்லாம் வண்டி தந்து ஹெல்ப் பண்ணதானே ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க?

ரெடி ஜூட். அடுத்த அத்தியாயத்தில் எங்க சைட் அடிக்க போறோம்னு பார்க்கலாம்.

____________________________________________

பிகு: பதிவை விட்டு ஃபோட்டோவை கலாய்ப்பவர்களுக்கு காதல் சந்தியா ரேஞ்சுக்கு மட்டுமே ஃபிகர்கள் கண்ணில் படுவார்கள்.

35 கருத்துக்குத்து:

bullet on April 17, 2011 at 10:41 PM said...

தெய்வமே!!!!!!!!!!!!!

இத்தனை நாள் ஏன் இதை எழுதலை?

பரிசல்காரன் on April 17, 2011 at 10:44 PM said...

காதல் சந்தியான்னா அவ்ளோ கேவலமாப் போச்சா உனக்கு? என்ன ஒரு பப்ளி ஃபிகர் அது!!

ரெண்டு நாளைக்கு டூ உன்கூட..

சுசி on April 17, 2011 at 10:48 PM said...

கலக்கல் கார்க்கி.. நான் முன்னாடி ஒரு கமண்ட்ல சொன்னாப்ல பசங்க உங்களுக்கு கோயில் மட்டுமில்லை சிலையும் வைக்கப் போறாங்க.. :))))

மாம்ஸுக்கு வி நெக் டீ ஷர்ட் பிடிக்கிறதே இல்லை.. முதல்ல இந்த போஸ்ட் படிக்க சொல்ணும் :)

// “இங்கே தொலையும் இதயங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது//

இது கட்சீல இருக்கிற ஃபோட்டோவுக்கா?? # சாபம் எனக்கு செல்லாது

ப்ரியமுடன் வசந்த் on April 17, 2011 at 10:54 PM said...

ரொம்ப நாளைக்கு பிறகு உங்ககிட்ட இருந்து கலக்கல் போஸ்ட்!!

enjoyingப்பா

டீ சர்ட் வாசகங்கள் மொத்தமா சேர்த்து வச்சு ஒரு போஸ்ட் போடுங்க..!

ShaNmUgavEl on April 17, 2011 at 10:56 PM said...
This comment has been removed by the author.
தமிழ்வாசி - Prakash on April 17, 2011 at 11:28 PM said...

வாங்க..சைட் அடிக்கலாம்...

SenthilMohan on April 17, 2011 at 11:50 PM said...

<-என்ன ஒரு பப்ளி ஃபிகர் அது!!-> மொதவாட்டி படிக்கும் போது பப்ளிக்-னு படிச்சுட்டேன். :)

SenthilMohan on April 17, 2011 at 11:52 PM said...

ஏன் ஸகா.. அந்த photo எடுத்து ஒரு 5/6 வருஷம் இருக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி on April 18, 2011 at 12:29 AM said...

ஃபோட்டோவுல இருக்க இஸ்கோலு பையன் யாருங்க....?

shortfilmindia.com on April 18, 2011 at 12:48 AM said...

காதல் சந்தியாவை நேரில் பார்த்து கதை சொல்லியிருக்கிறேன். என்ன கொஞ்சம் குள்ளம். அவ்வளவுதான்.. ஹி..ஹி
கேபிள்சங்கர்

கயல் on April 18, 2011 at 12:56 AM said...

//
பரிசல்காரன் said...

காதல் சந்தியான்னா அவ்ளோ கேவலமாப் போச்சா உனக்கு? என்ன ஒரு பப்ளி ஃபிகர் அது!!

ரெண்டு நாளைக்கு டூ உன்கூட..
//

;-)

நிரூபன் on April 18, 2011 at 4:48 AM said...

என் நண்பன் ஒருவன் வீராணம் பைப் ஸைஸில் லென்ஸும் ஒரு கேமராவும் வைத்திருக்கிறான். கிடார் வைத்திருக்கும் எல்லோருக்கும் அது வாசிக்கவும் தெரியும் என்று நம்பும் தமிழன், கேமரா வைத்திருக்கும் எல்லோரும் ஃபோட்டோகிராஃபர் எனவும் நம்பிவிடுவான்...

ஹா...ஹா... ஆரம்பமே செம காமெடியாக இருக்கிறதே...

நிரூபன் on April 18, 2011 at 4:50 AM said...

இயற்கை லென்சால் படம் பிடிக்க போகும் நமக்கு எவ்ளோ அதுப்பு இருக்கும்? இல்லை கேட்கிறேன். எவ்ளோ அதுப்பு இருக்கும்?//

நீங்கள் கண்களினால் சாமி தரிசன் செய்யப் புறப்பட்டு விட்டீர்கள் போல இருக்கிறதே..ஹா...ஹா..

நிரூபன் on April 18, 2011 at 4:52 AM said...

சைட் அடிக்க போச்சொல்ல உஜாரா போனும்ப்பா. மெர்சில் ஆகாம நான் சொல்றத கேட்டீன்னா அப்பாலிக்கா சோக்கா சைட் அடிக்கலாம்”//

நம்மளை மாதிரி ஆட்களுக்கு சகோ, தத்துவம் வேறை அவிழ்த்து விடுறாரு..

அஃதே...........அஃதே......அஃதே...

நிரூபன் on April 18, 2011 at 4:52 AM said...

சைட் அடிக்கும் ஆசை இல்லாதவர்களை எதிர்கால இந்தியாவின் தூண்கள் என அழைப்பதில் எந்த நியாயமும் இருக்க முடியாது.//

ஓவரா சைட் அடிக்கப் போனா, ஈவிடிங் கேசிலை நம்மளை தூக்கி உள்ள போட மாட்டாங்களா?

நிரூபன் on April 18, 2011 at 4:54 AM said...

Answer is beer. Whats the question”

“Some people read tshirt slogans. Are you?”//

அப்ப இதெல்லாம் வேலைக்கு ஆவாதா?

Make me hot, make me smile, இது எப்பூடி...

என்னிடம் இரண்டு டீசேர்ட் இப்படி இருக்கிறது. இன்றே நீங்கள் சொல்வது போல செய்யப் போகிறேன்.

நிரூபன் on April 18, 2011 at 4:56 AM said...

நல்லதா ஒரு பேண்ட் எடுங்க. //

தொடைப் பக்கத்திலையும் , காற் பக்கத்திலையும் கிழியல் உள்ள பேண்ட் ஓக்கேவா?

நிரூபன் on April 18, 2011 at 4:57 AM said...

நாம் எவ்ளோ பெரிய வேலைக்கு போறோம்? இதுக்கெல்லாம் வண்டி தந்து ஹெல்ப் பண்ணதானே ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க?//

ஆனால் சில பசங்க அவங்க ப்ரெண்ட்ஸ் வண்டியிலை போயி, ப்ரென்ஸோடை ஆளுங்களையே சைட் அடிச்சிருக்காங்க என்றால் பார்த்துங்க...;-)))

நிரூபன் on April 18, 2011 at 4:58 AM said...

ரெடி ஜூட். அடுத்த அத்தியாயத்தில் எங்க சைட் அடிக்க போறோம்னு பார்க்கலாம்//

காலேஜ்ஜு, பஸ் ஸ்டாப்பு, கோயில், அப்புறம் பார்க், லைபிரறி, இந்த இடங்களுக்கா....

சகோ, உங்களின் ஆவலைத் தூண்டும் அடுத்த பாகத்தைப் படிப்பதற்காய் வெயிட்டிங்.

நிரூபன் on April 18, 2011 at 4:59 AM said...

பதிவை விட்டு ஃபோட்டோவை கலாய்ப்பவர்களுக்கு காதல் சந்தியா ரேஞ்சுக்கு மட்டுமே ஃபிகர்கள் கண்ணில் படுவார்கள்.//

சகோ, கோவிச்சுக்க மாட்டீங்களே?

நிரூபன் on April 18, 2011 at 4:59 AM said...

பதிவை விட்டு ஃபோட்டோவை கலாய்ப்பவர்களுக்கு காதல் சந்தியா ரேஞ்சுக்கு மட்டுமே ஃபிகர்கள் கண்ணில் படுவார்கள்.//

சகோ, கோவிச்சுக்க மாட்டீங்களே?

நிரூபன் on April 18, 2011 at 4:59 AM said...

பதிவை விட்டு ஃபோட்டோவை கலாய்ப்பவர்களுக்கு காதல் சந்தியா ரேஞ்சுக்கு மட்டுமே ஃபிகர்கள் கண்ணில் படுவார்கள்.//

ஆய்..கோயில் திருவிழாவிலை காணாமற் போன கூலிங் கிளாசு...

நிரூபன் on April 18, 2011 at 5:00 AM said...

பதிவை விட்டு ஃபோட்டோவை கலாய்ப்பவர்களுக்கு காதல் சந்தியா ரேஞ்சுக்கு மட்டுமே ஃபிகர்கள் கண்ணில் படுவார்கள்.//

மண்மகன் தேவை விளம்பரத்திற்கு போஸ்ட் கொடுக்கிறாரு நம்ம சகோ...

நிரூபன் on April 18, 2011 at 5:01 AM said...

பதிவை விட்டு ஃபோட்டோவை கலாய்ப்பவர்களுக்கு காதல் சந்தியா ரேஞ்சுக்கு மட்டுமே ஃபிகர்கள் கண்ணில் படுவார்கள்.//

என்ன ஒரு பார்வை...பிகருங்களை கூர்ந்து கவனிக்கிறீங்களோ.

நிரூபன் on April 18, 2011 at 5:02 AM said...

உங்களின் இப் பதிவு சைட் அடிப்பது பற்றி சுவாரசியமாகச் சொல்லி நிற்கிறது.

Shanmuganathan on April 18, 2011 at 7:08 AM said...

"ஒட்டு போடலாம் வாங்க"னு கூப்புடற மாதிரி இருந்தது... நல்ல பதிவு... இதை போல் "ஒட்டு போடா வாங்கனு" ஒரு பதிவு போட்டு கலாய்ங்க சகா////

நாய்க்குட்டி மனசு on April 18, 2011 at 8:37 AM said...

“சைட் அடிக்க போச்சொல்ல உஜாரா போனும்ப்பா. மெர்சில் ஆகாம நான் சொல்றத கேட்டீன்னா அப்பாலிக்கா சோக்கா சைட் அடிக்கலாம்”//
அடி வாங்க நீங்க வருவீங்களா? இல்ல.... யாருக்கு கொடுக்கணும்னு தெரியனும்ல ?

கார்க்கி on April 18, 2011 at 9:35 AM said...

எல்லோருக்கும் ந‌ன்றி. இப்ப‌டை தோற்கின் எப்ப‌டை வெல்லும்? நாமெல்லாம் இப்ப‌ சைட் ஃபேமிலியாடா க‌ண்ணா!!!!

நிரூப‌ன்,முடிய‌ல‌ பாஸ்.. இப்ப‌டி ஒரே ப‌திவில‌ ஒருவ‌ரே 10 க‌மென்ட் போட்டு பார்த்து ரொம்ப‌ நாளாச்சு

Om on April 18, 2011 at 10:20 AM said...

//காதல் சந்தியான்னா அவ்ளோ கேவலமாப் போச்சா உனக்கு? என்ன ஒரு பப்ளி ஃபிகர் அது!!

ரெண்டு நாளைக்கு டூ உன்கூட..//

Photo la யாரு உங்க தம்பி யா

Om on April 18, 2011 at 10:22 AM said...

//காதல் சந்தியான்னா அவ்ளோ கேவலமாப் போச்சா உனக்கு? என்ன ஒரு பப்ளி ஃபிகர் அது!!

ரெண்டு நாளைக்கு டூ உன்கூட..//

Photo la யார் உங்க தம்பி யா

வேதாளம் on April 18, 2011 at 12:28 PM said...

குரு இருட்டா இருந்த என் வாழ்க்கைல டார்ச் அடிச்சுடிங்க குரு. #SMS சத்யன் சொல்வாரே அதே மாதிரி...

வித்தியாசமான கடவுள் on April 18, 2011 at 2:16 PM said...

இந்த மேட்டர் எல்லாம் தோழிக்கு தெரியுமா?

//பதிவை விட்டு ஃபோட்டோவை கலாய்ப்பவர்களுக்கு காதல் சந்தியா ரேஞ்சுக்கு மட்டுமே ஃபிகர்கள் கண்ணில் படுவார்கள்.//

நல்ல வேளை!!! மானாட மயிலாடாவில் வரும் யாரையாவது சொல்லாமல் விட்டீர்களே...

Sen22 on April 18, 2011 at 4:00 PM said...

கலக்கல் கார்க்கி..

side-adikkaradhu naan ready..

waiting for next part..

"ஸஸரிரி" கிரி on April 19, 2011 at 7:09 AM said...

//நல்லதா ஒரு பேண்ட் எடுங்க. ஓவர் ஜிங்ஜாக் வேலை இல்லாத ஒரு டெனிம் ஜீன்ஸ் போதும். டீஷர்ட் நிறத்திற்கு மேட்ச்சா இருந்தா போதும்//

தேடிப்பிடிச்சி அப்படியேத்தான் எடுத்தேன். ஆனா பாருங்க பக்கத்து வூட்டு ஆயா கெட்டகெட்ட வார்த்தைல கய்விகய்வி ஊத்துது. ஏன்னா, கொடில காஞ்சிட்டு இருந்தது அது பேரன் பேன்ட்டாம்.

BALA on April 19, 2011 at 10:42 PM said...

ஆகா ஆகா ஆழ்ந்த சிந்தனை ;)
தாறுமாறு தக்காளி சோறு சகா

 

all rights reserved to www.karkibava.com