Mar 21, 2011

டெக்னாலஜி கதைகள்


 

பதிவர்களில் என் மனங்கவர்ந்த(?) சிலரில் ஜ்யோவ்ராம் சுந்தரும் ஒருவர். அவர் கவிதைகளைப் படித்துவிட்டு பிரம்மராட்சனாய் ஒரு உருவத்தை மனதில் வைத்திருந்தேன். ஆனால் முதல்முறை அவரை சந்தித்த போது அம்மாவின் முடிவைக் கேட்ட புரட்சிபுயல் கணக்காய் தடுமாறித்தான் போனேன். 35 சீட் எங்கே? 8 சீட் எங்கே? அப்படி இருந்தார் குருஜி. நீண்ட நாட்களுக்கு பின் சமீபத்தில் அவருடன் உரையாட நேரம் கிடைத்தது. ட்விட்டுலக கலகக்காரன் என்றழைப்படும் கவியும் உடனிருந்தார்.

குருஜிக்கு பதிவுலகம் மீது அலாதி பிரியம். இலக்கியத்தை சுவாசிக்கும் அவரைப் போன்ற பலருக்கும் பதிவுலகம் ஒரு பெரிய ஆறுதல். வாசிப்பை தவமாக செய்கிறார். அவரோடு பேசிய சில மணி நேரங்களும் பதிவுலகம் குறித்தே அமைந்தது. வலைப்பூக்கள் அச்சு ஊடகத்தின் ஒரு நீட்சியாக மட்டும் இருக்கின்றன. தொழில்நுட்பத்தின் சாத்தியங்களை தமிழ்ப்பதிவுலகம் இன்னும் முறையாக பயன்படுத்தவில்லை என்ற என் கருத்தை அழுத்தமாக ஆமோதித்தார். சரி, என்ன செய்யலாம் என்று குறித்து நாங்கள் மூவரும் பேசியதன் சாரம்சமே இப்பதிவு.

ஒரு நல்ல கதாசிரியனால் ஒரு நல்ல திரைப்படம் எடுத்து விட முடியாது. சினிமா என்னும் தொழில்நுட்பத்தை விரல்நுனியில் வைத்திருக்கும் மணிரத்னம் போன்றவர்களால் ஒரு நல்ல கதையை எழுதிவிட முடியாது. இரண்டையும் இணைக்கும் ஆற்றல் பெற்றவர்களே நல்ல திரைப்படம் கொடுக்க முடியும். இணையமும் அப்படித்தான். இணையத்தின் சாத்தியங்களை அறிந்த பலரால் நல்ல படைப்புகள் எழுத முடிவதில்லை. படைப்புகளின் ஆசான்களுக்கு இணையத்தின் அசாத்தியமான சாத்தியங்கள் குறித்து தெரிவதில்லை.சில உதாரணங்கள் பார்ப்போம்.

உங்கள் வலைப்பூவின் பேக்கிரவுண்ட் வெள்ளை நிறம் என்று வைத்துக் கொள்வோம். எழுத்துகளின் நிறமும் வெள்ளையாய் இருந்தால் படிப்பவர்களுக்கு தெரியப்போவதில்லை. ஆனால் அதையே “செலக்ட்” செய்தால் தெரியும். இந்த யுத்தியை பயன்படுத்தி ஒரு மொக்கை பதிவொன்றை எழுதியிருந்தேன். அதை பயன்படுத்தி ஒரு கதை எழுதினால் எப்படி இருக்கும் என்ற யோசனையை சொன்னார் சுந்தர். உண்மைதானே?

இன்னொரு ஐடியா. GIFF படங்கள் குறித்து அறிவோம். சலனப்படம் போன்றிருக்கும் இதை கதையின் நடுவே இணைத்து, கதைக்கு ஒரு முக்கிய திருப்பத்தை அதில் சேர்த்தால் சுவாரஸ்யமாக இருக்குமல்லவா?

ஒரு க்ரைம் கதை எழுதுவோம். 24 மணி நேரத்தில் நடக்கும் ஒரு கொலையை நேரவாரியாக பத்தி பிரித்து எழுதிக் கொள்வோம். ஒரு கடிகாரத்தை நம் பதிவில் சேர்த்துவிடுவோம். நேரம் மாற மாற கதையின் தொடக்கம் அதற்கேற்றது போல மாறிவிடும். இது சற்று சிரமம்தான். ஆனால் கணிணி ஜாம்பவான்களுக்கு இது ஒரு பெரிய விஷயமே இல்லை. நீங்கள் எந்த நேரத்தில் உண்மையில் அக்கதையை படிக்க தொடங்குகறீர்களோ அந்த சமயத்தில் கதை தொடங்கும். பிறிதொரு நாள் வேறு நேரத்தில் படிக்க நேர்ந்தால் கதை வேறு இடத்தில் தொடங்கும். இது இணையத்தில் மட்டும்தானே சாத்தியம்?

உங்கள் கதையின் முக்கிய கருவாக ஒரு ஒலிக்குறிப்பை பயன்படுத்த நினைக்கிறீர்கள். இது அச்சு பிரதியில் சாத்தியமா? அப்படி ஏதும் இதுவரை கதைகள் வந்திருக்கின்றனவா? இல்லையென்னும் போது அக்கதை நிச்சயம் சுவாரஸ்யமாகத்தானே இருக்கும்?

சுழல் கதைகள் என்று சொல்வார்கள். குட்டிக் குட்டிக் கதைகள்தான். ஒன்று முடியும் இடத்தில் அடுத்தக் கதை ஆரம்பிக்கும்.இதை நாம் அலுவலகத்தில் நடக்கும் Treasure Huntடோடு இணைத்துப் பார்ப்போம். நான் ஒரு கதை எழுதுகிறேன். அதில் இருக்கும் குறிப்பை கண்டறிந்தால் அடுத்த கதை யார் தளத்தில் இருக்கிறது என்று விளங்கிவிடும். இப்படியே வரிசையாக கதைகளை கண்டறிந்துவிட்டால் மொத்தமாய் ஐந்து குறிப்புகள் கிடைக்கும். இதை வைத்து இறுதி முடிவை கண்டுபிடிக்க வேண்டும். அங்கு இந்த ஐந்து குட்டிக்கதைளையும் உள்ளடக்கிய ஒரு பெரிய கதை இருக்கும். எல்லாக் கதையையும் கண்டறிந்து படித்தவருக்கே இக்கதை விளங்கும். இவ்விளையாட்டு சுவாரஸ்யமாய் இருக்க வேண்டுமெனில் கதைகளும் நன்றாக இருக்க வேண்டும். இதற்குத்தான் நல்ல படைப்பாளிகளுக்கு இணைய சாத்தியங்கள் தெரிய வேண்டுமென்கிறேன்,

பெனாத்தல் சுரேஷ் என்பவர் இப்போதைக்கு இந்த வகை பதிவுகளில் உச்சமாக ஒன்றை செய்திருக்கிறார். எந்திரன் படத்திற்கு ஒரு விமர்சனப்பதிவு எழுதியிருந்தார். முதலில் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். அதாவது ரஜினி பிடிக்குமா பிடிக்காதா, ஏ.ஆர்.ரகுமான இசை ஓக்கேவா இல்லையா என்பது போன்ற கேள்விகள். நீங்கள் தரும் விடையை வைத்து அது ஒரு விமர்சனம் தரும். அது நிச்சயம் உங்களுக்கு பிடித்த வகையில் இருக்கும். Flashஐ பயன்படுத்தி அவர் செய்த அந்த விமர்சனம் இணையத்தில் மட்டுமே சாத்தியம்.

படைப்புத் திறனும் தொழில்நுட்பமும் சேர்ந்து இவ்வகையான கதைகளை படைக்கும் போது கற்பனையின் எல்லை விரிவைடையும். ஆக, பதிவுலக கதாசிரியர்களே.. இது போன்ற மிரட்டலான கதைகளை எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். “மழை வெள்ளிக்கம்பியாய் பொழிந்துக் கொண்டிருந்தது. சாரதா ஜன்னலின் கம்பிகளில் வழியும் துளிகளை கைகளால்” என ஆரம்பிக்கும் பழங்கஞ்சிகளையே கொடுக்க வேண்டாம்.

கவியுடன் நடந்த சுவாரஸ்ய விவாதங்கள் குறித்து பிறிதொரு நாளில் பகிர்ந்துக் கொள்கிறேன்.

14 கருத்துக்குத்து:

நந்தா ஆண்டாள்மகன் on March 22, 2011 at 12:10 AM said...

சமீபகாலமாய் வந்த உங்களின் பதிவுக்களுக்கிடையில் ஒரு நல்ல பதிவு.

பரிசல்காரன் on March 22, 2011 at 12:11 AM said...

//பெனாத்தல் சுரேஷ் என்பவர் இப்போதைக்கு இந்த வகை பதிவுகளில் உச்சமாக ஒன்றை செய்திருக்கிறார். எந்திரன் படத்திற்கு ஒரு விமர்சனப்பதிவு எழுதியிருந்தார். முதலில் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். அதாவது ரஜினி பிடிக்குமா பிடிக்காதா, ஏ.ஆர்.ரகுமான இசை ஓக்கேவா இல்லையா என்பது போன்ற கேள்விகள். நீங்கள் தரும் விடையை வைத்து அது ஒரு விமர்சனம் தரும். அது நிச்சயம் உங்களுக்கு பிடித்த வகையில் இருக்கும். Flashஐ பயன்படுத்தி அவர் செய்த அந்த விமர்சனம் இணையத்தில் மட்டுமே சாத்தியம்.//


இவ்ளோ சுவாரஸ்யமான மேட்டரை லிங்க் இல்லாம போட்ட உன்னை என்ன செய்யலாம்?

vinu on March 22, 2011 at 12:18 AM said...

puthan kilamai vendaam wednesday ok - ungalukku ok vaaa

vinu on March 22, 2011 at 12:20 AM said...

பரிசல்காரன் said...
//பெனாத்தல் சுரேஷ் என்பவர் இப்போதைக்கு இந்த வகை பதிவுகளில் உச்சமாக ஒன்றை செய்திருக்கிறார். எந்திரன் படத்திற்கு ஒரு விமர்சனப்பதிவு எழுதியிருந்தார். முதலில் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். அதாவது ரஜினி பிடிக்குமா பிடிக்காதா, ஏ.ஆர்.ரகுமான இசை ஓக்கேவா இல்லையா என்பது போன்ற கேள்விகள். நீங்கள் தரும் விடையை வைத்து அது ஒரு விமர்சனம் தரும். அது நிச்சயம் உங்களுக்கு பிடித்த வகையில் இருக்கும். Flashஐ பயன்படுத்தி அவர் செய்த அந்த விமர்சனம் இணையத்தில் மட்டுமே சாத்தியம்.//


இவ்ளோ சுவாரஸ்யமான மேட்டரை லிங்க் இல்லாம போட்ட உன்னை என்ன செய்யலாம்?


ripeeetu;

[annan parisal avargalukku oru thanks paarcelllll]

பா.ராஜாராம் on March 22, 2011 at 12:49 AM said...

அருமையான விஷயம். செய்ங்க கார்க்கி.

புகைப் படத்தில் இருக்கும் வை.கோ- விற்கு எட்டு சீட்டு சம்மதம் என்றே தோணுகிறது. சந்தோசமாகத்தானே இருக்கிறார்!

பிரதீபா on March 22, 2011 at 1:00 AM said...

இங்கே இருக்கே எந்திரன் விமர்சனம்
http://penathal.blogspot.com/2010/08/blog-post.html

பிரதீபா on March 22, 2011 at 1:00 AM said...

..

உமா கிருஷ்ணமூர்த்தி on March 22, 2011 at 8:48 AM said...

நல்ல பதிவு.வாழ்த்துகள் கார்க்கி

மோகன் குமார் on March 22, 2011 at 10:03 AM said...

Good thoughts. Good post

குசும்பன் on March 22, 2011 at 10:49 AM said...

இன்னும் மிகவும் பிரியமாக இருக்கும் நபர்களில் எனக்கு முக்கியமானவர் குருஜி. சிலவிசயங்களில் அவருடைய ஆலோசனையை கேட்டே செயல்படுவேன்.

(அப்பாடா போட்டுக்கொடுத்தாச்சி...எதுனா பிரச்சினை என்றால் ஆலோசனை சொன்னது குருஜிதான் என்று சொல்லி தப்பிச்சிக்கலாம்)

குசும்பன் on March 22, 2011 at 10:49 AM said...

மத்தப்படி டெக்னாலஜி எல்லாம் சூப்பரு!

பொன்கார்த்திக் on March 22, 2011 at 12:31 PM said...

நீங்க நல்லவரா கெட்டவரா?

நர்மதன் on March 22, 2011 at 3:09 PM said...

இதையும் பாருங்க

கவுண்டமணியின் சில மணியோசைகள்

விக்னேஷ்வரி on March 23, 2011 at 4:09 PM said...

ம், நல்ல ஐடியா.

 

all rights reserved to www.karkibava.com