Mar 28, 2011

மதன்..சங்கீதா..எஸ்.எம்.எஸ்


 

Excuse me Boss. You got a text message

அதிர்ந்த மொபைலை எடுத்து பார்த்தான் மதன்.

“good night baby, Sweet dreams”

சங்கீதாவிடம் இருந்த வந்த மெசெஜை படித்தவன் அவளை அழைத்தான். ”சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்”. இவனுக்காக ஸ்பெஷலாக வைத்திருந்த ஹலோ ட்யூன் இரவு நேரத்தில் இனிமையாய் ஒலித்தது. பேச்சினூடே சிச்சுவேஷன் அப்படியே “சங்கீத ஸ்வரங்கள்” பாடலுக்கு ஏற்ப மாறியது. அவர்கள் பேசிவிட்டு வைத்தபோது மணி அதிகாலை 4.30 தாண்டியிருந்தது.

மதனும் சங்கீதாவும் 4 வருட காதலர்கள். எல்லோருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால் இவர்களுக்கு மட்டும் 12 மணி நேரம்தான். மிச்ச நேரம் கிரகாம்பெல் கண்டுபிடிப்பின் நவீன வஸ்துவிலே சென்றுவிடும்.

Good morning ammu.

மதியம் 12.30க்கு குட் மர்னிங் சொல்லிக் கொள்ளும் இருவர் இவர்களாக மட்டுமே இருக்கக்கூடும். மீண்டும் சாணக்யா. மீண்டும் சங்கீத ஸ்வரங்கள். மீண்டும் குட் மார்னிங் . மீண்டும் குட் நைட் என நீண்டது அவர்கள் காதல்.

ஒருநாள் மழையிரவில் சற்றே மயக்க நிலையில் இருந்தான் மதன். வழக்கமாக மெசெஜ் வரும் நேரம் கடந்துவிட கண்ணயர்ந்தான். தூக்கம் எப்போது வந்தது என்றறியா வண்ணம் உறங்கியும் போனான். அதிகாலை 8 மணிக்கு.. அவனுக்கு அதிகாலைதானே?. அதிகாலை 8 மணிக்கு மதனின் அலைபேசி அலறியது. சங்கீதாவின் வீட்டில் இருந்து வந்தது அந்த அழைப்பு. மதனின் முகம் சங்கீதாவின் உள்ளங்கை கணக்காக சிவந்து போனது. கையில் கிடைத்தை சட்டை, பேண்ட்டை எடுத்தணிந்தவன் பல்சரை முறுக்கியதில் 6 வினாடிகளிலே 80ஐ கடந்தது.

மதன் அந்த மருத்துவமனையை அடைந்த போது எதிரே ஸ்ட்ரெச்சரில் ஒருவரை முழுவதும் போர்த்தியபடி எடுத்துச் சென்றார்கள். கலங்கிய கண்களுடன் சங்கீதாவின் அம்மாவை அழைக்க மொபைலை எடுத்தான். படிக்கப்படாமலே இருந்த ஒரு மெசெஜ் அவன் கண்களில் பட்டது. திறந்தான்.

”Darling. I am just outside ur home. Met with an aacident. Want to see u once. I am dying. Plz come fast”

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

மதன் கத்திய சத்தத்தில் மருத்துவமனையே ஒரு நொடி ஸ்தம்பித்து போனது. சங்கீதாவின் அம்மா மதனைத் தாண்டி சென்ற ஸ்ட்ரெச்சரை நோக்கி ஓடினார். புரிந்துக் கொண்ட மதன் சத்தம் போட்டு திட்டினான்

 

 

 

 

 

 

 

 

ங்கொய்யால. சாவும் போது கூட எஸ்.எம்.எஸ் தான் அனுப்பிவியா?????

14 கருத்துக்குத்து:

குழந்தபையன் on March 29, 2011 at 12:10 AM said...

anathikapathivulaga thalaivarana analin iniya padaipu..pen visirigal adutha pathivu varai 3 ezthu kaeta varthaigalai payanpadutha athigarapurva anumathi...

bullet on March 29, 2011 at 12:19 AM said...

ஹாஹா. மொக்கையோ மொக்கை.

குழந்தபையன் அவர்களே.. சீரியஸா சொல்றீங்களா?ஜோக்கா?

குழந்தபையன் on March 29, 2011 at 12:27 AM said...

nan kuripita 3 ezthu varthagal
Anbe
Kanne
Puji
Ponravai.. Mr.bullet irakathergal bullet

உமா கிருஷ்ணமூர்த்தி on March 29, 2011 at 12:31 AM said...

சீரியஸ் கதை சிரிப்பா முடிச்சிடீங்களே !சே அந்த பொண்ணு கடைசி நேரத்தில கூட பார்க்கணும் நு ஆசைப்பட்டு இருக்கு அதை புரிஞ்சுக்காம

சுசி on March 29, 2011 at 1:36 AM said...

இவ்ளோ சீரியசா கொண்டு வந்திட்டு இப்டியா முடிப்பிங்க..

மொக்க்க்க்கைசாமி..

:)

நாய்க்குட்டி மனசு on March 29, 2011 at 8:22 AM said...

அதிகாலை 8 மணிக்கு.. அவனுக்கு அதிகாலைதானே?. //
இன்று அநேகம் இளைஞர்களின் அதிகாலை இதுவாகத் தானே இருக்கிறது

வழிப்போக்கன் - யோகேஷ் on March 29, 2011 at 8:29 AM said...

:)

தனுசுராசி on March 29, 2011 at 8:53 AM said...

ரெண்டு மாதத்திற்க்கு முன்னாடி இது ஒரு எஸ்‌எம்‌எஸ் ஜோக்காக வந்தது.

அதுக்கு மானே தேனே பொன்மானே போட்டு ஒரு சிறுகதை ஆக்கிட்டீங்களே சகா... உங்களோட் திறமையோ திறமை.

பாதி கதை வந்த உடனே எனக்கு அந்த ஜோக்காக தான் இருக்கும்னு தோனிச்சு. என் கணிப்பு தவறவில்லை.

வாழ்த்துக்கள்.

தனுசுராசி on March 29, 2011 at 8:54 AM said...

பின் தொடர...

வள்ளி on March 29, 2011 at 10:34 AM said...

ஹா ஹா ..

Athammohamed on March 29, 2011 at 12:37 PM said...

டி.ஆர். பொண்ணை பார்த்ததிலிருந்தே ஒரு மாதிரியா தான் திறியீர். ஃப்ரொஃபைல் மெஸேஜ் கூட மாமா எஃபெக்ட்லே மாறி இருக்கு.

பொன்கார்த்திக் on March 29, 2011 at 2:05 PM said...

போய யோவ் போய பெரிய மனுசனா நீயு பீத்தரப்பயலே!!

Nagasubramanian on March 29, 2011 at 3:47 PM said...

செய்ங்கடா செய்ங்க ......

Sen22 on March 29, 2011 at 7:01 PM said...

Naan kooda etho serious kathai nenaichen.....

:))))

 

all rights reserved to www.karkibava.com