Mar 21, 2011

விஜ‌ய் என்னும் இடிய‌ட்


 

  சென்ற‌ வார‌ம் என்ன‌ நினைத்து "ம‌திமுக‌விற்கு இறுதி அஞ்ச‌லி" என்று எழுதினேன் தெரிய‌வில்லை. ட்விட்ட‌ரிலும், பின்னூட்ட‌ங்க‌ளிலும் புர‌ட்சி வீர‌ரின் போராளிக‌ள் சில‌ர் பொங்கிவிட்டார்க‌ள். சில‌ர் மின்ன‌ஞ்ச‌ல் கூட‌ அனுப்பி மிர‌ட்டினார்க‌ள். வைகோவிற்கு இவ்வ‌ள‌வு செல்வாக்கு இருக்குமென‌ நான் நினைக்க‌வில்லை. அத‌னால் என்ன‌?சொன்ன‌து போல் ம‌திமுக‌விற்கு இறுதி அஞ்ச‌லி செய்ய‌ப்ப‌ட்டிருக்கிற‌து. அதுவும் அத‌ன் பொது செய‌லாள‌ராலே. கேட்ட‌ எண்ணிக்கையில் தொகுதிக‌ள் த‌ர‌ப்ப‌டாத‌தால் இத்தேர்த‌லை புற‌க்க‌ணிக்கிறாராம் இந்த‌ வைக்கோல் புலி. ஒண்ணு சொல்லிக்கிறேன் த‌லைவா

Defeat the defeat before defeat defeats you.

____________________________________________________

தேர்த‌ல் என்ற‌வுட‌ன் நினைவுக்கு வ‌ருகிற‌து. அதீத‌ம் என்றொரு இணைய‌ இத‌ழ் வெளிவ‌ருகிற‌து. நான் கூட‌ சைட்பாரில் விள‌ம்ப‌ர‌ம் எல்லாம் போட்டிருக்கிறேனே. அதேதான்.இம்மாத‌ இத‌ழில் தேர்த‌ல் போட்டியொன்று வைத்திருக்கிறார்க‌ள். முத‌ல் ப‌ரிசு 1500 ரூபாயாம். ச‌ரி, நாம‌ளும் காழியூர் நாராய‌ண‌ன் ஆகி க‌ணிப்போமே என்று க‌ணித்திருக்கிறேன்.மேல‌திக‌ விவ‌ர‌ங்க‌ளுக்கும், போட்டியின் விதிமுறைக‌ளுக்கும் இங்கே க்ளிக்குங்க‌ள்.

என் க‌ணிப்பு:

1. திமுக‌                         - 80              
2. அதிமுக‌                    - 75
3. காங்கிர‌ஸ்                - 25
4. பாம‌க‌                         - 15
5. தேமுதிக‌                  - 20
6. ம‌திமுக‌                    - ஹிஹிஹி. பிம்பிளாக்கி பிளாப்பி 
7. வி.சிறுத்தைக‌ள்    - 7
8. க‌ம்யூனிஸ்டுக‌ள் - 8
9. ம‌ற்ற‌வை                 - 4

____________________________________________________

 1

ந‌ண்ப‌ன் (3 இடிய‌ட்ஸ்) ப‌ட‌த்தில் விஜ‌யின் ஹேர் ஸ்டைல் இதுவென‌ ஒரு ஏடாகூடமான‌ புகைப்ப‌ட‌ம் ஒன்றை வ‌ழ‌க்க‌ம் போல் ந‌ம் வெட்டியாப்பீச‌ர்ஸ் உருவாக்கி ஃபார்வ‌ர்ட் செய்து கொண்டிருக்கிறார்க‌ள். ஆனா அது உண்மையில்லை. இய‌க்குன‌ர் ஷ‌ங்க‌ர் த‌ன‌து வ‌லையில் முத‌ல்முறையாக‌ விஜ‌ய் ப‌ட‌ப்பிடிப்பில் இருக்கும் புகைப்ப‌ட‌ங்க‌ளை வெளியிட்டிருக்கிறார்.பெரிய‌ மாற்ற‌ம் ஏதுமில்லை. ஆனால் விஜ‌ய் செம‌ ஃப்ரெஷாக‌ இருக்கிறார். விஜ‌யால் இந்த‌ ப‌ட‌ம் சொத‌ப்ப‌ போகிற‌து, இவ‌ருக்கு ஸ்டூட‌ன்ட் கெட்ட‌ப் செட் ஆக‌வில்லை என்று சொல்ல‌ப் போகும் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு, ப‌ட‌ம் வெளிவ‌ரும்வ‌ரை உங்க‌ளுக்கு ப‌தில் கிடைக்காது. ப‌ட‌ம் வெளிவ‌ந்த‌வுட‌ன் கேட்ப‌த‌ற்கு உங்க‌ளுக்கு கேள்விக‌ள்  கிடைக்காது.

  ந‌ண்ப‌ன் ப‌ட‌த்தின் வ‌ச‌ன‌க‌ர்த்தா ம‌த‌ன் கார்க்கி. அதீத‌ம் இத‌ழில் அவ‌ரின் பேட்டியும் வெளிவ‌ந்திருக்கிற‌து. ந‌ண்ப‌ன் ப‌ட‌ம் ப‌ற்றியும் பேசியிருக்கிறார். ப‌டிக்க‌ இங்கே க்ளிக்குங்க‌ள்

5

Photos courtesy :www.directorshankaronline.com

______________________________________________________________________

ச‌மீப‌கால‌மாக‌ பிளாகை விட‌ ட்விட்ட‌ரின் பால் அதிக‌ அன்பு கொண்டிருக்கிறேன்.உல‌க‌ கோப்பை வேறு ந‌ட‌க்கிற‌து. அத‌னால் ப‌திவு எழுதும் பெரும்பாலான‌ நாட்க‌ள் அங்கே செல‌வாகிவிடுவ‌தால் முன்பு போல் எழுத‌ முடிவ‌தில்லை. ச‌ந்தோஷ‌மான‌ விஷ‌ய‌ம் தானே என்று பின்னூட்ட‌ங்க‌ள் வர‌த்தான் செய்யும். அத‌னால் நானே சொல்லி விடுகிறேன், கொஞ்ச‌ நாள் அங்க‌யும் உசுர‌ வாங்க‌ணும் இல்லை. அதான். :))

இந்தியா விளையாடும் நாட்க‌ளில் ட்விட்ட‌ரில் லைவ் க‌மென்ட்ரி செய்து கொண்டிருக்கிறேன்.  மிக‌வும் சுவார‌ஸ்ய‌மாக‌ பொழுது போகிற‌து. சில‌ சேம்பிள்ஸ் இதோ.

 

இன்னொரு ஃபோர்.. நாலும் நாலும் எட்டு.. அவன் அடிச்ச ஷாட்ட் கட்டு

டவுட்டுன்னு அம்பயர் நினைச்சப்ப அவுட்டுக்கு வெளிய போனாராமே சச்சின்... கள்ளன நம்பலனாலும் குள்ளன நம்பலாம்ப்பா

சாராயக்கடைல இப்ப யாரும் 100ன்னு கேட்கிரது இல்லையாம். சச்சின்னுதான் கேட்கிறாங்களாம்னு சொல்ல நினைச்சேன். இப்படி செஞ்சிட்டாரே லிட்டில்மாஸ்டர்

அடுத்தவன் அடிச்சா சதம். சச்சின் அடிச்சா வதம்னு யோசிச்சு வச்சது எல்லாம் வேஸ்ட்டா போயிடுச்சே :(

Today, Is it Happy holi or Happy Kholi?

காஃபி ஆவின் பால்ல போடவா, ஸ்கிம்டு பால்ல போடவான்னு கேட்கிறாங்க.. சச்சின அவுட் அடிச்ச ராம்பால்ல போட சொல்லணும். பொறுக்கி பைய

டீ.ஆர் ட்விட்டர்ல இருந்தா “என் பாட்டிக்கு வயசு எண்பது. யுவ்ராஜ் அடிச்சான் அம்பது” ன்னு சொல்வாரோ??

இப்போ பத்தான் வருவாரு., எவண்டா உன்னை பெத்தான் பெத்தான்.. கையில கிடைச்சா செத்தான் செத்தான்

வெஸ்ட் இண்டீஸலிருந்து சரவணன் ...பேக் டூ பெவிலியன்

பந்து போட்டா கீப்பர் பவுலிங் பவுன்லிங்னு சில சமயம் சொல்றாரே.. அப்போ மத்தது எல்லாம் துரோவா???

ராம்பால் வந்துட்டான்.. சரோஜாதேவி கோபால் கோபால்னு சொன்னது மாதிரி அம்பயர் நோ பால் நோ பால்னு சொல்ல அய்யணார வேண்டிக்கிரேன்

டேர‌ன் சாமி.. கொஞ்சம் ஆஃப் சைடுல காமி

8 ரன் அடிச்சாலும் அந்த ஓவர் வசந்த் படம் மாதிரி ட்ரையாவே போச்சு

ரஜினிகாந்த் வாழும் ஊரில் இவ்வளவு ஸ்லோவான மேட்ச்!!! அய்யகோ

 

என‌து ட்விட்ட‌ர் ஐடி : www.twitter.com/iamkarki

9 கருத்துக்குத்து:

pappu on March 21, 2011 at 10:10 AM said...

me the first....
எனக்கு ஒரு பொழப்பாவே போச்சு!

பாஸ், ட்விட்டர் மொக்கய இங்கயும் கடத்திக் கொண்டு வர்றீங்களே பாஸ்!

vinu on March 21, 2011 at 10:13 AM said...

me back to chennai for 8 days sagaaa @ thiruvanmiyur now

Anonymous said...

we see your twitter too.why combine both here?Yes I too felt the same in vai.ko. matter

ஸ்ரீமதி on March 21, 2011 at 11:16 AM said...

தலைப்புக்கு என் கண்டனங்கள்.

Rithu`s Dad on March 21, 2011 at 11:44 AM said...

கார்கி.. அதீதம் தேர்தல் கனிப்பில் உங்கள் தன்நம்பிக்கையை நான் பாரட்டுகிறேன்..

மனசாரதான் சொல்றீங்களா தீ மூ க தான் வரனும்னு???

மத்தது எல்லாம் வழக்கம் போல சர வெடி..

தனுசுராசி on March 21, 2011 at 12:07 PM said...

அம்மா மேல நம்பிக்கை வச்சு இருந்தேன். ஆனா வைகோவை கழட்டி விட்டுட்டு அதுல மண்ணை அள்ளிப் போட்டுட்டாங்க...

வசூல்ராஜா கமல் வசனம் தான் ஞாபகத்துக்கு வருது "டேய் கலையலங்காரா, மறுபடியும் எல்லாத்தையும் மாத்தி திமுக ஆட்சிக்கு ரெடி பண்ணுங்கடா"

மோகன் குமார் on March 21, 2011 at 12:13 PM said...

கணிப்பு முழுக்க தப்பு கார்க்கி. நிச்சயம் இப்படி நடக்காது. கலைஞர் ஒழிக என நீங்கள் எழுதிய ஞாபகம். ஆனா மறுபடி அவர் கூட்டணி தான் அதிக இடம் வாங்கும்னு சொல்றீங்க. உங்களுக்குள்ளே இன்னும் தி.மு. க காரன் தான் இருக்கான்! ம்ம் பார்ப்போம்

கார்க்கி on March 21, 2011 at 1:40 PM said...

ப‌ப்பு, ரெண்டுல‌யும் இருக்கிற‌வ‌ங்க‌ ரொம்ப‌ க‌ம்மி.

வினு, சூப்ப‌ர்..புத‌ன் கிழ‌மை ஓக்கேவா?

மீனு, ட்விட்ட‌ர் பிளாக் ரெண்டுல‌யும் இருக்கிற‌வ‌ங்க‌ க‌ம்மி. அவ‌ங்க‌ ப‌டிக்க‌லாம்னுதான்

ஸ்ரீமதி , ஹிஹிஹிஹிஹி

ரித்தூஸ் டாட், நான் அவ‌ங்க‌ வ‌ர‌ணும் சொல்லியிருக்கேனா? ஆனா நில‌வ‌ர‌ம் அப்ப‌டித்தானே இருக்கு?

த‌னுசுராசி, செம‌ க‌மென்ட் ச‌கா :))

மோக‌ன், நாம‌ நினைக்கிற‌து வேற‌. நிஜ‌ நில‌வ‌ர‌ம் வேற‌. போன‌ வார‌ம் கேட்டிருந்தா ட‌வுட்டுன்னு சொல்லியிருப்பேன். இப்போ திமுக‌ தேர்த‌ல் அறிக்கை, அம்மாவின் லூசுத்த‌னமான‌ செய‌ல்க‌ள் எல்லாம் நிச்ச‌ய‌ம் திமுக‌விற்கு ஆத‌ர‌வாத்தான் இருக்கு.தேர்த‌ல் அறிக்கை வ‌ந்த‌ப்ப‌ ப‌ண்ருட்டில‌ இருந்தேன். உற்வின‌ர் வீட்டுல‌. அங்க‌ இருந்த‌ எல்லோரும் 2 ம‌ணி நேர‌ம் தொட‌ர்ந்து டிவில‌ அதையேதான் பார்த்தாங்க‌. எல்லோருமே க‌லைஞ‌ர் மேல‌ லைட்டா கோவ‌த்துல இருந்தாங்க‌. ஆனா இப்போ கேட்டா திமுக‌விற்கே ஓட்டுன்னாங்க‌. வெளிய‌ வ‌ந்தாலும் எங்கேயும் அதே பேச்சு. அறிக்கை மாந‌க‌ர‌ங்க‌ளில் எப்ப‌டியோ, ந‌க‌ர‌ம், கிராம‌ங்க‌ளில் செம‌ ஹிட். அதனால் இப்ப‌டி சொல்றேன். ஆனா என் ஓட்டு நிச்ச‌ய‌ம் திமுக‌+காங்கிர‌சிற்கு கிடையாது

டக்கால்டி on March 21, 2011 at 11:33 PM said...

Twitter comments ரசித்தேன்

 

all rights reserved to www.karkibava.com