Mar 15, 2011

போடாங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்


 

xxx: சகா எப்படி இருக்கிங்க?

me : மிக்க நலம். தாங்கள்?

xxx : என்னப்பா? சங்ககவிதை எழுதிட்டு இருக்கியா? தூய தமிழ்ல விளாசுற.. ஆனா சகா. இந்த மாதிரி எழுதறத நிறுத்துங்க. அதெல்லாம் கலோக்கியலா ஏழு சொன்னாதான் நல்லா இருக்கு

me : ரைட்டு சகா.ஒண்ணே ஒன்ணுதான்.அதை நான் எப்பவோ ஸ்டாப் பண்ணிட்டேன். நன்றி

xxx : அட.இதுக்கெல்லாம் எதுக்கு சகா தேங்க்ஸ். அனுஜன்யா அளவுக்கு உன்னால கவிதையெல்லாம் எழுத முடியலனாலும் எப்பவாது பின்நவீனக்கவிதைன்னு எழுதி உயிர வாங்குவியே. அது கூட ஸ்டாப் பண்ணிடலாம். என்னைக் கேட்டா சிறுகதை கூட வேணாம்

me : சிறுகதையுமா பாஸ்? அது மாசத்துக்கு ஒண்ணுதான் எழுதறேன். வேணாமா?

xxx : என்னவோ உங்கிட்ட சொல்லனுன்னு தோணுச்சுப்பா. நீயெல்லாம் நல்லா எழுதறவன் அதனால் சொன்னேன்

me : ம்ம்ம்

xxx :   தப்பா நினைக்கலைன்னா ஒன்னு சொல்றேன். எதுக்கு சினிமா விமர்சனம்? அதுவும் பிரச்சினை வர்ற மாதிரி. There are many things under they sky. y cinema? விட்றுப்பா. இசை விமர்சனம் ஓக்கே. ஆனா அதையும் ஸ்டாப் பண்றது நல்லது

me : ம்ம்

xxx : ஏன் சொல்றேன்னா, சாளரத்த படிச்சா ஜாலியா இருக்கும்ன்னு நம்பறாங்க. எதுக்கு வீண் சண்டை? அதான். அப்புறம் விஜய் பத்தி எழுதறதையும் நிறுத்திடு.

me : அது வந்து சகா.

xxx : உன் இஷ்டம்ப்பா. நீ எல்லோருக்கும் பொதுவானவன். அதனால் சொன்னேன்..

me : ம்ம்

xxx : முன்னாடி ஃபோட்டோ எல்லாம் போட்டியே. அது கலக்கல்

me : நன்றி சகா

xxx : ஆனா அதுக்கு தனியா ஒரு பிளாக வச்சிக்கோ. அதே மாதிரி தோழி அப்டேட்ஸ் தான் ட்விட்டர்ல போடறியே. மறுபடியும் எதுக்கு பிளாகுல? ஏன் சொல்றேன்னா அப்பதான் உனக்கு ட்விட்டர்லயும் ஃபாலோயர்ஸ் கூடுவாங்க. அததுக்கு ஒரு ஸ்பெஷல் வச்சிக்கோ.. ஆல் ஏரியாலும் நீ கில்லிப்பா

me : ஆமா சகா. நல்ல ஐடியா

xxx : நீ தப்பா நினைக்கலைன்னா ஒண்ணு சொல்றேன். கார்க்கி எதுக்கு மெசெஜ் சொல்லனும்? குசும்பனே கிண்டலடிச்சார். அதனால மெசெஜ் சொல்ற பதிவ தவிர்த்தா நல்லது. அப்புறம் நீ ஏன் வீட்டுல இருக்கிறவங்கள பத்தி எழுதற? பப்லுவுக்கு கண்ணு பட்டுடும். இன்னொரு தடவ அந்த பேர பிளாகுல பார்த்தேன். அவ்ளோதான்

me : ரைட்டு சகா. உங்க அக்கறைக்கு நன். சரி விடுங்க

xxx : உன் பிசினஸ் எல்லாம் எழுதனியே.

me : அத பத்தி எழுதவா?

xxx : எல்லா விஷயத்தையும் எழுதிட்டா உனக்குன்னு என்ன இருக்கு சகா? அதை எழுதாம இருக்கிறதெ நல்லதுன்னு தோணுது.

me : புட்டிக்கதைகள், காக்டெயில் மட்டும் தான் இருக்கு

xxx : இப்பலாம் நீ காக்டெயில்னு தலைப்பு வைக்காம எழுதற போலிருக்கு. ஆனா ஒண்ணு சொல்றேன் சகா. இந்த மாதிரி தொகுப்பு பதிவு மலிவாயிடுச்சு. மொக்கையை குறை. அந்த மாதிரி வேணாம். வலையுலக மேட்டரும் பொதுவான ஆட்களுக்கு புரியாது. சோ ஸ்டாப் தட் நான்சென்ஸ் டூ

me : சரி சகா.  வாரம் 4 புட்டிக்கதை போட்டு ஜமாய்ச்சிடுவோம்

xxx : அய்யோ. அப்படி டைல்யூட் பண்ணிடாத சகா. மாசம் ஒண்ணோ ரெண்டோ போடு

me : ம்ம். அப்படி சொல்றீங்களா?

xxx : ஏதோ நீ நல்லா வருவன்னு நம்பிக்கை இருக்கிறதால் நேரம் ஒதுக்கி சொல்றேன். அப்புறம் உன் இஷ்டம். மொக்கைதான் உன் பலம். ஆனா கொஞ்ச நாளைக்கு மொக்கையே எழுதாம இரு. அப்புறம் பாரு உன் எழுத்த. நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேன்னா?

me : ச்சே. அப்படியில்ல சகா.

xxx : சரி அதெல்லாம் விடு. நாளைக்கு என்னப்பா போஸ்ட்?

me :  போடாங்ங்ங்ங்ங்ங்ங்க

7 கருத்துக்குத்து:

தர்ஷன் on March 15, 2011 at 11:26 PM said...

சகா அப்புறம் அந்த ட்ரிப்ள் எக்ஸ் நண்பர் சொல்லாதது, எதுக்கு சகா மீள்பதிவு விட்டுடலாமே

ILA(@)இளா on March 16, 2011 at 12:02 AM said...

வருசத்துக்கு ஒரு தபா மீள் பதிவு போட்டா சரி, மாசம் மாசம்னா கொஞ்சவே டூ மச்

பிரதீபா on March 16, 2011 at 2:13 AM said...

தேர்தல் நேரம்.. எதாச்சும் கலாய்ச்சு பதிவு போடுவீங்கன்னு பாத்தா.. ரிப்பீட்டு மீல்ஸா இருக்கே..

உமா கிருஷ்ணமூர்த்தி on March 16, 2011 at 7:31 AM said...

பொறா..மை ..நீங்க எழுதுங்க டோன்ட் வொர்ரி பி ஹேப்பி

மோகன் குமார் on March 16, 2011 at 10:01 AM said...

அலோ கொஞ்ச நாளைக்கு முன்னாலே தான் இதே பதிவை மீள் பதிவுன்னு சொல்லி போட்டீங்க மறுபடியா?

யாசவி on March 16, 2011 at 11:50 AM said...

Blogging is Just a reflection of You.

அது இதுன்னு கலந்து கட்டி அடிங்க ;)

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்

விக்னேஷ்வரி on March 16, 2011 at 1:44 PM said...

அய்யோ, மீள்பதிவா போட்டுப் படுத்தாதீங்க சகா. இனியொரு முறை மீள்ஸ் வந்தா சென்னைக்கு ஆளனுப்பப்படும். ஜாக்கிரதை!
:)

 

all rights reserved to www.karkibava.com