Mar 8, 2011

வாக்கிங்கை குறைத்தால் ஒல்லியாகலாம்


 

   வழக்கம் போல் அன்றிரவு லேப்டாப்புடன் அமர்ந்திருந்தேன். வழக்கம் போல கெலாக்சையோ எதையோ ஸ்வாஹா செய்து கொண்டிருந்தான் பப்லு. வழக்கம் போல் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அம்மா.

சேட்டில் ஒரு நண்பர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அலுவலகத்தில் ஒரு பெண் பால்கனியில் நின்று எதையோ ரசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தவுடன் சொன்னாராம்

“ஒரு நிலா
சூரியனை
ரசிக்கிறது”.

வேற வேலையே இல்லையாடா என்று அம்மா ஆரம்பித்தவுடன் பப்லுவைப் பார்த்தேன். மின்சார கண்ணாவில் மனோபாலா அண்ட் கோ தருவது போல வித்தியாசமான ரியாக்‌ஷன் ஒன்றை தந்துவிட்டு மீண்டும் கெலாக்சில் மூழ்கினான். அப்போதுதான் அது என்னை நோக்கி வீசப்பட்ட அம்பு என்பதே புரிந்தது. சீரியல் முடிந்துவிட்டது போல என்றெண்ணிக் கொண்டே லேப்டாப்பை மூடினேன்.  சிறுது நேரத்தில் மொபைல் லேசாக அலறியது. எஸ்.எம்.எஸ்

“Hey. Its raining here”. அதே பெங்களூரில் இருந்து இன்னொரு நண்பன். சென்னையில் லோ வோல்டேஜ் பவரில் மின்விசிறி கூட லஷ்மன் ரன் ஓடுவது போல ஓடிக் கொண்டிருந்தது. பெருமூச்சினூடே “Lucky banglore. Enjoy “ என்று ரிப்ளை அனுப்பினேன். அடுத்த மெசெஜில் ஆலங்கட்டி மழை என்று சொல்லியிருந்தார் அந்த நண்பர். என்ன செய்யலாம் என்று யோசித்து “If it rains here, will go to beach.. mmm” என்றி பதிலனுப்பினேன். அதான் மழை வரல இல்ல என்று அவர் அனுப்பினார். இன்னும் சில நாளில் சென்னையில் மழை வரலாம். ஆனால் எத்தனை நாள் ஆனாலும் பெங்களூரில் பீச் வருமா என்று கேட்டுவிட்டுதான் யோசித்தேன், கொஞ்சம் ஓவராத்தான் போறோமா என்று. பரிகாரமாக ஒன்று அனுப்பினேன். “Nallavanga irunthathaan mazahai varumaam.when will you come to chennai?”.

கெலாக்ஸ் தீர்ந்துவிட்டது போல.அதுவரை அமைதி காத்த பப்லு சொன்னான் “பாட்டி. இப்போ மொபைல் எடுத்துக்கிட்டான். நகரவே மாட்றான் பாட்டி” அப்போது அவன் எழுந்து நடந்துக் கொண்டிருந்தான் கிச்சனை நோக்கி. அம்மா உடனே ஆரம்பித்தார்கள். தொப்பை பெருசாகிட்டே போதுடா. கவனி. கொஞ்ச நாள் ஜாகிங், ஜிம் ஏதாவது போயேன். இல்லைனன விட்டுப் போனா டேன்ஸ் கிளாசாவது போலாமில்ல” அவர்கள் கண்ணுக்கு பப்லு தெரியவே இல்லையா என்றவுடன் அவனையும் கூட்டிட்டி போக சொன்னார்கள்.

ஜாகிங் எல்லாம் நமக்கு ஒத்துக்காதுடா வாகிங் போலாம் என்றான் பப்லு. மறுநாள் காலை போவது என்று முடிவானது. இந்தப்பக்கம் போய் அந்தப்பக்கம் வரலாமென மேப் தயாரித்தான் பப்லு. அவன் சொன்னபடியே சென்றோம். முடிவில் ஒரு ஹோட்டலின் அருகே போனவுடன் சொன்னான் பப்லு “டேய் கார்க்கி. இங்க இடியாப்பம் பாயா சுப்பரா இருக்கும்டா. சாப்ட்டு போலாமே”. வாகிங் சென்று கரைத்த மொத்த கலோரியையும் போல இரண்டு மடங்கு ஏறுவதற்கு வழி சொன்னான். அவன் பிடித்த அடத்தில் வேறு வழியில்லாமல் அவனுக்கு மட்டும் வாங்கித் தந்தேன். வீட்டில சொல்லாதடா என்று மிரட்டினானா வேண்டினானா என்று தெரியவில்லை. ஆனால் சொன்னான். இப்படியாக எங்கள் வாக்கிங் பாயாவிலும், வடைகறியிலும் நல்லபடியாக நடந்துக் கொண்டிருந்தது. அவ்வபோது நானும் பப்லுவுடன் ஜமாய்க்க ஆரம்பித்தேன்.

ஒருநாள் வாகிங் முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு அலுவலகம் கிளம்பி வந்து பார்த்தால் தோசையுடன் மல்லுக் கட்டிக்கொண்டிருந்தான். வாக்கிங் போனதிலிருந்து ஒரு தோசை கம்மியா சாப்பிடுகிறான் என்று வேறு சொன்னார்கள் அம்மா. ”நாளைக்கு சீக்கிரம் வாங்கடா. ஸ்கூலுக்கு லேட் ஆயிடுது” என்ற அக்காவைப் பார்த்தேன். ம்க்கும். அடுத்த நாள் அதே மாதிரி பாயாவுக்கு தயாராகிவிட்டான் பப்லு. நான் கிளம்ப லேட் ஆனதும் அக்கா மீண்டும் “சீக்கிரம் வாங்கடா” என்றார்கள். வெளியே வந்து பப்லு “மாமா.ஹெல்மேட் எடுத்துக்கோ என்றான். என்னடா என்றால் லேட் ஆகுது இல்ல. இன்னைக்கு பைக்ல வாகிக்ங் போலாம் என்றான்.

முடிவு செய்துவிட்டேன், இவனுடன் சேர்ந்தால் நான் உருப்படாம போயிடுவேன். இருக்கிற தொப்பையே போதுமென வாக்கிங்கை ரத்து செய்து விட்டேன்.

8 கருத்துக்குத்து:

Vijay Armstrong on March 8, 2011 at 11:02 PM said...

நானும் வாக்கிங் வரேன்..வாங்க சேர்ந்து போகலாம் கார்க்கி..

டக்கால்டி on March 8, 2011 at 11:48 PM said...

பப்லூவின் சேட்டைகள் ரசிக்க வைக்கின்றன சகா..

vinu on March 8, 2011 at 11:54 PM said...

yyyyyyyy meals


i meant meal pathivuuuuuuuuuu

மோகன் குமார் on March 9, 2011 at 9:54 AM said...

//இன்னைக்கு பைக்ல வாகிக்ங் போலாம்//

:))

தலைப்பிலேயே மிரட்டுறீங்க :))

மின்சார கண்ணா என ஒரு படம் வந்ததையும் அதில் உள்ள சீனையும் நியாபகம் வச்சிருக்கீங்களே? நீங்க உண்மையிலேயே அதி தீவிர விஜய் ரசிகர் தான்

Sarav on March 9, 2011 at 12:28 PM said...

Nalla eluthureenga Karki

உமா கிருஷ்ணமூர்த்தி on March 9, 2011 at 12:54 PM said...

இது மீள்பதிவு தானே?சுவராசியமான ஒன்று

Anonymous said...

I just followed in twitter. I started reading your blog. I became a fan of yours. Good Writing.

Natarajan on July 10, 2011 at 3:53 PM said...

babloo rocks! y cant he start a blog

 

all rights reserved to www.karkibava.com