Mar 7, 2011

இன்னொசெண்ட் இளங்கோ


 

நடப்பது திமுக ஆட்சி என்பதால் 24 மணி நேரமும் சூரியன் இருக்க முடியுமா? மெல்ல மறைந்துக் கொண்டிருந்தது. செவ்வானம் இன்னும் அழகாய் மாறிக் கொண்டிருந்தது. கடலுக்கு முகத்தையும், சூரியனுக்கு முதுகைதையும் காட்டியபடி அமர்ந்திருந்தார்கள் இளங்கோவும், ஷாலினியும். நகம் கடித்துக் கொண்டிருந்தவனின் கைகளை இழுத்து தன் கைகளுக்குள் ஒளித்துக் கொண்டாள். இளங்கோ எப்போதுமே இப்படித்தான். அவனை இன்னொசெண்ட் இளங்கோ என்பார்கள் அனைவரும். கைகளைத் தேடி வரும் பந்தை கோட்டை விடும் முனாஃப் பட்டேலை போன்றவன் இளங்கோ. ஷாலினி அவனை எப்படியாவது ரொமாண்ட்டிக்கான ஆளாக மாற்ற போராடிக் கொண்டிருந்தாள்.

இளங்கோ.. இந்த கடல் எவ்ளோ ஆழம் இருக்கும்?

ம்ம்..ரொம்ப..

10000 அடியாம். அந்த வானம் எவ்ளோ தூரத்துல இருக்கும்?

எதுக்கு?

நீயும் நானும் மட்டும் தனியா.. அங்க போயிடலாம்.

ம்ம்.

உயரம், ஆழம், வேகம்.. இப்படி எல்லாத்தையும் அளக்க ஒரு மெஷர்மெண்ட் இருக்கு.

அதுக்கு என்ன?

ஆனா அன்பு, காதல் இதையெல்லாம் எப்படி அளக்க ? உன்னை எனக்கு எவ்ளோ புடிக்கும் தெரியுமா?

ஷாலு..

இளங்கோ ஷாலினியின் பக்கம் திரும்பினான். அவள் கண்களையே உற்று பார்த்தது ஷாலினிக்கு வெட்கமாய் இருந்தது. கைகளை கெட்டியாய் பிடித்தவன், கன்னங்களை அழுத்தி பிடித்து சொன்னான்

“ஷாலு. நான் ஃபிசிகிஸ்ல ரொம்ப வீக். ட்வெல்த்ல 72ல ஜஸ்ட் பாஸ். ப்ளீஸ் சாவடிக்காத.”

இப்படித்தான் எல்லாவற்றிலும் சொதப்புவான் இளங்கோ. இன்னொரு நாள் ஷாலினி இவனை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என நினைத்தாள். . தாவணியில் இருந்தவள் தூங்குவது போல் நடித்தாள். தாறுமாறான பொசிஷனில் இருந்தவளை பார்த்த இளங்கோ அவளை நெருங்கினான்.

ஷாலு.

…..

ஏய்.. நிஜமா தூங்கிறியா????

……..

அவள் முகத்தின் அருகே சென்று உற்றுப்பார்த்தான் இளங்கோ. அவள் எழுந்திருப்பதாய் இல்லை. சிரித்துக் கொண்டே அவள் இடுப்பில் கை வைத்தான்.  சிணுங்கவும் இல்லை, சிரிக்கவும் இல்லை ஷாலு. தைரியம் வந்ததை போல் சிரித்தான் இளங்கோ. கதவை மூடிவிட்டு வந்தவன் இடுப்பின் ஓரமாய் ஒட்டியிருந்த தாவணியையும் விலக்கினான். விழுந்துவிட்டதாக நினைத்தாள் ஷாலு. அதன்பின் அன்று இளங்கோ செய்ததை இன்று நினைத்தாலும் எரிந்து விழுவாள் ஷாலு. என்ன செய்தான் தெரியுமா?????????????

 

 

 

 

 

 

 

ஜிந்தாக்த்தா ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக்த்தத்தா…..

இதுதான் இளங்கோ. இவனின் பாடாவதி செயல்களை இனி வரும் நாட்களில் பார்ப்போம்.

11 கருத்துக்குத்து:

vinu on March 7, 2011 at 7:33 AM said...

me firsttttttttttu

Mohamed Faaique on March 7, 2011 at 10:59 AM said...

ஐ... ரெண்டு......

தமிழ் ஈட்டி! on March 7, 2011 at 2:16 PM said...

பிழை:

//சூரியனுக்கு முதுகைதையும்//
முதுகையும்

பிழை இன்றி எழுதுங்கள் சகோ.

Athammohamed on March 7, 2011 at 2:48 PM said...

இளங்கோ கிடக்கட்டும், ஷாலுவை காட்டுங்க தல.

பிரதீபா on March 7, 2011 at 4:28 PM said...

Interesting

பிரதீபா on March 7, 2011 at 4:28 PM said...

Interesting

Sen22 on March 7, 2011 at 5:06 PM said...

//இளங்கோ கிடக்கட்டும், ஷாலுவை காட்டுங்க தல.//


i'm also waiting for Shalu...

:)))))

சதீஸ் கண்ணன் on March 7, 2011 at 9:55 PM said...

ரசித்து படித்தேன்

dinesh on March 8, 2011 at 9:06 PM said...

//கைகளைத் தேடி வரும் பந்தை கோட்டை விடும் முனாஃப் பட்டேலை போன்றவன் இளங்கோ//....
superb......

gowrish on March 11, 2011 at 7:59 PM said...

ungal ezhutthu bore adikkavillai... nalla ezhutthu nadai... its very basic need for writers... keep writing...

karty on March 14, 2011 at 3:13 PM said...

nice writting....

 

all rights reserved to www.karkibava.com