Mar 3, 2011

இப்ப வாங்கடா பதில் சொல்ல


 

மண்டையை குழப்பும் 10 கேள்விகள்:

1) பாஸ்போர்ட் சைசு ஃபோட்டோ ஏன் பாஸ்போர்ட்ட விட சின்ன சைசுல இருக்கு?

2) SAVE TIGERS என்னும் இந்திய அரசு ஏன் இலங்கையில் வாழ்ந்த புலிகளை அழித்தது?

3) வெளியே செல்லும்போது இந்திரா நூயி, ரிலையன்ஸ் என்றெல்லாம் சொல்லாமல் டாடா என்று சொல்வது ஏன்?

4) செவ்வணக்கம், செம்மண் என்பதெல்லாம் சிவப்பு நிறத்தை குறிக்குமென்றால் செம்மொழி என்பதன் மூலம் நாமும் சிவப்பாகிறோமா?

5)  பெண் சிங்கம் பார்க்காமல், சிங்கம், முரட்டு சிங்கம் பார்த்தால் ஆணாதிக்கமா?

6) செம்மொழி மாநாட்டை நடத்தியதன் மூலம் கோவையை மதிமுக ஆக்கியதா தமிழக அரசு?அதவாது கோவையை “தலைகீழாக” மாற்றியதா?

7) அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சி முடிந்துவிட்டதால் அடுத்து  அ.த.ம சீசன் 2 வருமா அல்லது “குருவி” வருமா?

8) இந்த தடவ யாருக்கும்மா ஓட்டு என்றால் அம்மிணிகள் திமுக என்பார்களா?இல்லை சந்தோஷ் அல்லது சக்திக்கு என்பார்களா? (கே.கு - அவங்க சூப்பர் சிங்கர்ஸ்)

9) சந்திரபாவும் , கவுண்டமணியும் லெஜெண்ட்ஸ் என்றால், கோவை சரளாவும் மனோரமாவும் லெ”லேடிஸ்” என்று சொல்லலாமா?

10) எதிர்பதிவே போட முடியாதபடி 9 கேள்வி அமைக்க நான் மண்டைய உடைச்சுக்கிட்ட மாதிரி, எதிர்பதிவு போடுபவரும் மண்டைய உடைச்சுப்பாரா?

20 கருத்துக்குத்து:

sriraj_sabre on March 3, 2011 at 11:06 PM said...

முடியலீங்க.. ரொம்ப யோசிக்காதீங்க.. கமெண்ட் கூட போடா முடியல..

Vijay Armstrong on March 3, 2011 at 11:13 PM said...

இப்படி எல்லாம் பதிவு போடுவதின் மூலம்..உங்க வலைபூக்கு நாங்கள் வருவதை தடுத்துவிட முடியும் என்று நீங்கள் நினைக்கிறீகளா?

லதாமகன் on March 3, 2011 at 11:14 PM said...

நீங்கதான் அந்த மொக்கையானவைங்கல்லையே முக்கியமானவரா? :(

உமா கிருஷ்ணமூர்த்தி on March 3, 2011 at 11:26 PM said...

1.பெருசா போட்டா அது passport இல்ல failport ஆகிடும் அதனால
2.save tigers என்பதை shave tigers என்று தவறாக புரிந்து கொண்டார்களோ என்னவோ ?
3.ஊர் சுற்றுவது பெரும்பாலும் ஆண் பாலாக இருப்பதால் ட்டா டா வாக இருக்கலாம்.ரிலையன்ஸ் அவ்வளவு கன்வீனியன்ஸ் இல்ல
4. செம்மொழி என்றால் மொழி தானே சிவப்பாகும் நீங்கள் எப்படி ?அது என்ன facial cream aa?
5.பெண் சிங்கம் பார்க்கவே முடியாது.எனவே அது off ஆதிக்கம் ஆண் சிங்கம் தொலைக்காட்சியில் தானே பார்ப்பீர்கள் on ஆதிக்கம் செய்தால் தவறில்லை
6.நிச்சயம் இல்லை ஏற்கனவே அம்மாவிடம் தலைகீழாக கிடைக்கும் வைகோ வை மன்னிக்க கோவையை திரும்ப எப்படி அப்படி ஆக்க முடியும்?
7.அ.த.ம. சீசன் இரண்டு வராது.குருவி வந்தால் அதனை வேட்டையாட வேட்டைக்காரன் வருவார்
8.சந்தோசமா சக்தியோட ஓட்டு போடுவோம் திருட்டு முழி கண்ணா ன்னு பதில் சொல்லுவாங்க
9.ஏன் மனோரமாவையும் சரளாவையும் லே லேடிஸ் சொல்லணும் கில்லேடிஸ் நு சொல்லலாமே
10.இப்படி எல்லாம் கேள்வி கேட்ட உங்க மண்டைய உடைக்காம விட்டாலே புண்ணியம் நு நினைச்சுகோங்க

R. பெஞ்சமின் பொன்னையா on March 4, 2011 at 8:28 AM said...

யப்பா, எங்க மொக்கைச்சாமி கார்க்கியே பரவால்லப்பா? யாருங்க அந்த உமா, தாங்க முடியல.....

மாணவன் on March 4, 2011 at 8:32 AM said...

he he he

தெய்வசுகந்தி on March 4, 2011 at 8:43 AM said...

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:-))

Ashwin-WIN on March 4, 2011 at 9:49 AM said...

//அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சி முடிந்துவிட்டதால் அடுத்து அ.த.ம சீசன் 2 வருமா அல்லது “குருவி” வருமா//
//கோவை<>வைகோ//
நல்லா யோசிக்குரீங்க.. கிர்ர்..
Ashwin Arangam

"ராஜா" on March 4, 2011 at 9:58 AM said...

// அ.த.ம சீசன் 2 வருமா அல்லது “குருவி” வருமா?

குருவிக்கும் விஜய்க்கும் ஆகாது சகா .... அதனால வராது ....

Jayadev Das on March 4, 2011 at 10:05 AM said...

கில்லாடிக்கு கில்லாடி உலகத்துல கண்டிப்பா இருப்பாங்க. உமா கிருஷ்ணமூர்த்தி உங்களுக்கு சரியான பதிலைக் குடுத்திருக்காரு, சபாஷ்...!!!

Thirumalai Kandasami on March 4, 2011 at 12:13 PM said...

Unimaginable explanations given by UmaKrishnamoorthy.

Interesting..

IlayaDhasan on March 4, 2011 at 12:26 PM said...

title -la ulkuthu edhum illeye, 18+ vazha!

பொன்கார்த்திக் on March 4, 2011 at 12:33 PM said...

poya yov poya..

விக்கி உலகம் on March 4, 2011 at 12:54 PM said...

ஏம்பா நான் சரியாதானே படிச்சிட்டு இருக்கேன் ஹி ஹி!

பிரதீபா on March 4, 2011 at 2:53 PM said...

ஐயோ ஐயோ ஐயோ அய்யய்யோ ...

Natarajan on March 4, 2011 at 7:28 PM said...

S appa!! Hats off both to kargi and Uma! Keep it up

ஆர்.கே.சதீஷ்குமார் on March 4, 2011 at 7:52 PM said...

மெனக்கெட்டு பதில் எழுதி கமெண்ட் போட்ட உமா வியக்க வைக்கிறார் சபாஷ்

Athammohamed on March 5, 2011 at 11:23 AM said...

யப்பா...என்னை நாய் கடிசிடுச்சுப்பா :)

DINESH on March 6, 2011 at 12:09 PM said...

ஷப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா......இப்பவெ கண்ண கட்டுதே.....

உமா கிருஷ்ணமூர்த்தி on March 9, 2011 at 12:55 PM said...

வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி!கார்கியின் கேள்விகளும் சுவராசியமே..அதனால் தான் உடனே பதில் அளிக்க தோன்றிற்று.

 

all rights reserved to www.karkibava.com