Mar 2, 2011

தோழியார்


 

image

இன்னைக்கு குட்நைட் சொல்ல மாட்டேன்.ஏன்னா சிவராத்திரி என்று சிரித்தாள் தோழி. நீ குட்நைட் சொல்லலைன்னா எல்லா நாளுமே சிவராத்திரிதான் செல்லம் என்று சொல்ல வேண்டும் அவளிடம்.

_____________________________________

என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று கேட்டதற்கு பிளாங்க் எஸ்.எம்.எஸ் அனுப்பினாள் தோழி. பயந்து போய் ஃபோன் செய்தால் “அவ்வளவையும் அனுப்ப எஸ்.எம்.எஸ் போதுமாடா? அது எல்லையில்லாதது” என்று இளிக்கிறாள்.

________________________________________

உனக்கு எத்தனை பசங்க வேணும் என்றாள் தோழி. அஞ்சு. அஞ்சும் உன்னை மாதிரி அழகான பொண்ணுங்க என்றேன். அஞ்சு பெத்தா அரசனும் ஆண்டி ஆவான். தெரியாதா என்றாள் தோழி. அரசன் அஞ்சு புள்ள பெத்து வயசானா அங்கிள்தானே ஆவான்? அரசிதானே ஆண்டி ஆவாள் என்றதற்கு அடிக்கிறாள் இன்றைய அரசி, எதிர்கால ஆண்ட்டி.

_______________________

பணத்தால் வாங்க முடியாத மூணு விஷயம் சொல்லு என்றேன் தோழியிடம். உன் அன்பு, ஆரோக்கியம் என இழுத்தவள் நீயே சொல்லு என்றாள். வெற்றிப்பெற்ற சந்தோஷத்துடன் செளரவ் கங்குலி என்றேன். இரண்டு மண்டலத்துக்கு முத்தம் கிடையாது என்று சொல்லிவிட்டாள். கங்குலியின் பெயரை ஏன் எந்த ஐ.பி.எல் சொல்லவில்லை என்று அப்போதுதான் புரிந்தது

____________________

உனக்கு ஏண்டா லவ் மேரேஜ் பிடிக்கும் –தோழியின் இன்னொரு சந்தேகம். பொற‌ந்ததால வாழுற‌து அரேஞ்சுடு மேரேஜ். வாழுற‌துக்காக‌ பொற‌ப்ப‌துதான் ல‌வ் மேரேஜ் என்றேன். இரண்டு முத்தம் கிடைத்தது.

இன்னொரு நாள் அதே கேள்வியைக் கேட்டாள். இன்னொரு நாள் என்பதால் இன்னொரு பதிலை சொன்னேன். ”க‌ல்யாண‌ம்ற‌து ரஜினி ப‌ட‌ம் மாதிரி. ந‌ல்லா இல்லைனாலும் ஓடும். ல‌வ்வுன்ற‌து க‌ம‌ல் ப‌ட‌ம் மாதிரி. ஓட‌லைனாலும் ந‌ல்லா இருக்கும்”. ”நம்ம காதல் ஓடாதுன்னு நினைக்காத. உன்னை இழுத்துட்டு ஓடிடுவேன்” என்கிறாள் என் ஆசை பி.டி.உஷா

_________________

சாமி மீது அதீத‌ ப‌ற்று உள்ள‌வ‌ர்க‌ள் சாமியார் ஆகும் போது நான் ஏன் தோழியார் ஆக‌ கூடாது?

________________________

நல்ல இசை எங்கேயும் கிடைக்கவில்லை. தோழிக்கு ஃபோனை போட்டு பேசிவிட  வேண்டியதுதான்

24 கருத்துக்குத்து:

ILA(@)இளா on March 2, 2011 at 11:31 PM said...

//க‌ல்யாண‌ம்ற‌து ரஜினி ப‌ட‌ம் மாதிரி. ந‌ல்லா இல்லைனாலும் ஓடும். ல‌வ்வுன்ற‌து க‌ம‌ல் ப‌ட‌ம் மாதிரி. ஓட‌லைனாலும் ந‌ல்லா இருக்கும்//

எப்ப இருந்து இப்படி?

Kaarthik on March 2, 2011 at 11:31 PM said...

மறுபடியும் தோழி அப்டேட்ஸ் ஆரம்பிச்சாச்சா :-)? Good :-)

Kafil on March 2, 2011 at 11:34 PM said...

வாழ்க தோழி வளர்க தோழி

உண்மை on March 2, 2011 at 11:51 PM said...

//”க‌ல்யாண‌ம்ற‌து ரஜினி ப‌ட‌ம் மாதிரி. ந‌ல்லா இல்லைனாலும் ஓடும். ல‌வ்வுன்ற‌து க‌ம‌ல் ப‌ட‌ம் மாதிரி. ஓட‌லைனாலும் ந‌ல்லா இருக்கும்”//

Fantastic !

S.Sudharshan on March 2, 2011 at 11:53 PM said...

//அரசிதானே ஆண்டி ஆவாள் //
LOL :D

Vijay Armstrong on March 3, 2011 at 12:37 AM said...

கலக்குங்க தோழா...

மதுரை சரவணன் on March 3, 2011 at 1:14 AM said...

kalakkal tholaa... vaalththukkal

ப்ரியமுடன் வசந்த் on March 3, 2011 at 2:37 AM said...

//உனக்கு எத்தனை பசங்க வேணும் என்றாள் தோழி. அஞ்சு. அஞ்சும் உன்னை மாதிரி அழகான பொண்ணுங்க என்றேன். அஞ்சு பெத்தா அரசனும் ஆண்டி ஆவான். தெரியாதா என்றாள் தோழி. அரசன் அஞ்சு புள்ள பெத்து வயசானா அங்கிள்தானே ஆவான்? அரசிதானே ஆண்டி ஆவாள் என்றதற்கு அடிக்கிறாள் இன்றைய அரசி, எதிர்கால ஆண்ட்டி.

//

கலக்கல் பாஸ்..!

_

மாணவன் on March 3, 2011 at 5:52 AM said...

ஆஹா....மீண்டும் தோழி அப்டேட்ஸ்... எல்லாமே நல்லாருக்குண்ணே :)

மாணவன் on March 3, 2011 at 5:53 AM said...

//அதீத‌ ப‌ற்று உள்ள‌வ‌ர்க‌ள் சாமியார் ஆகும் போது நான் ஏன் தோழியார் ஆக‌ கூடாது? //

இது டாப்பு.... :)

கத்தார் சீனு on March 3, 2011 at 6:31 AM said...

தோழி அப்டேட்ஸ் அமர்க்களம்...
அத்தனையும் அழகு...தொடர்க உம் பணி !!!

vinu on March 3, 2011 at 6:37 AM said...

ok magilchi sago; konjam bayanthuttu irrunthen; kaaranam, unga post i meant the one which you published on your 2nd last to this......

nallaa irruku...........

neengalum magilchiyaaay irruppathaaga namburen....

kalaiarasi on March 3, 2011 at 10:50 AM said...

Feeling very young after started reading your blog. Superb.

Ŝ₤Ω..™ on March 3, 2011 at 11:46 AM said...

மச்சி.. லாஸ்ட் பிட் சூப்பரோ சூப்பர்...

அமுதா கிருஷ்ணா on March 3, 2011 at 11:55 AM said...

தோழியார் சூப்பர்.

பிரதீபா on March 3, 2011 at 6:57 PM said...

//க‌ல்யாண‌ம்ற‌து ரஜினி ப‌ட‌ம் மாதிரி. ந‌ல்லா இல்லைனாலும் ஓடும். ல‌வ்வுன்ற‌து க‌ம‌ல் ப‌ட‌ம் மாதிரி. ஓட‌லைனாலும் ந‌ல்லா இருக்கும்//

Bestttttttt

DINESH on March 3, 2011 at 7:39 PM said...

marupadiyum thozhi updates ah karki......vaazhthukkal

தர்ஷன் on March 3, 2011 at 7:53 PM said...

கலக்கல் சகா
ரொம்ப நாட்களுக்கப்புறம்

டக்கால்டி on March 3, 2011 at 10:24 PM said...

Super

Asakan's Archive on March 4, 2011 at 4:14 AM said...

தோழின்னா கிஸ்ஸல்லாம் கொடுத்துவாங்களா...

வணங்காமுடி...! on March 4, 2011 at 12:54 PM said...

தோழியாரே,

அத்தனையும் அருமை...

Sen22 on March 4, 2011 at 1:20 PM said...

"தோழியார்"

Superb.....
Kalakkal.....

உமா கிருஷ்ணமூர்த்தி on March 4, 2011 at 10:18 PM said...

கிண்டல் பண்ண தோன்றிற்று இருப்பினும் போட மனசில்லை. இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்.உங்கள் எழுத்துகள் ஊற்றாக உருவெடுக்க வேண்டும் என்றால் சட்டென்று நாங்கள் நிறைவு பெற இயலாது

Athammohamed on March 5, 2011 at 7:27 PM said...

super...i love it

 

all rights reserved to www.karkibava.com