Mar 1, 2011

ஜஸ்ட் மிஸ்


 

தெரியாம‌ ஒரு நாள் லீவ் போட்டேங்க‌. சும்மாதானே இருக்க‌.போய் ப‌ப்லுவ‌ கூட்டிட்டு வான்னு அம்மா சொன்னாங்க‌. நானும் போனேன். என் கெட்ட‌ நேர‌ம், ப‌ப்லுவோட த‌மிழ் டீச்ச‌ர் என்கிட்ட‌ ஏதோ பேசுணும்னு சொன்னாங்க‌.

டீச்ச‌ர் : நீங்க‌ அவ‌ங்க‌ அங்கிளா? இவ‌னுக்கு வாய் ரொம்ப‌ அதிக‌மா இருக்குங்க‌.

நான் : என்ன‌ செஞ்சான் மிஸ்?

டீச்ச‌ர் : ஹோம் ஒர்க் செய்யாத‌ ப‌ச‌ங்க‌ள‌ வெளிய‌ நிக்க‌ வ‌ச்சிருக்காங்க‌ ச‌யின்ஸ் டீச்சர். இவ‌ன் கூட‌ வெளிய‌ வ‌ந்த‌ ப‌ச‌ங்க‌க்கிட்ட‌ "நாம ஹாஸ்ட‌லுக்கு போயிட‌லாம்டா"ன்னு சொன்னானாம். கேட்டா ஹாஸ்ட‌ல் ஒர்க் யாரு த‌றாங்க‌ன்னு சொல்றான்.

நான் :ஓ. விளையாட்டா சொல்லிட்டான் மிஸ். சாரி

டீச்ச‌ர் : அது ப‌ர‌வாயில்லைங்க‌. இவ‌ன் கூட‌ ரேஹான்னு ஒரு பைய‌ன் ப‌டிக்கிறான். கொஸ்டீன் பேப்ப‌ர் ரொம்ப‌ ட‌ஃப். ஆன்ச‌ர் ப‌ண்ற‌து ரொம்ப‌ க‌ஷ்ட‌ம்னு சொல்லியிருக்கான் அவ‌ன். அதுக்கு இவ‌ன் விடுறா. பேப்ப‌ர் திருத்த‌ மிஸ் அதை விட‌ ரொம்ப‌ க‌ஷ்ட‌ப்ப‌டுவாங்க‌னு சொல்லியிருக்கான். ஃபோர்த் ஸ்டேன்ட‌ட்ர்டு பைய‌ன் பேசுற‌ பேச்சா சார் இது?

நான் :அவ‌ங்க‌ பேர‌ன்ட்ஸ் கிட்ட‌ சொல்றேன்.

டீச்ச‌ர் : இது ம‌ட்டுமில்லாம‌ ரைமிங் வேர்ட்ஸா பேசுறான். காரு பேர்தான் இன்டிகா. காருல‌ போற‌வ‌ங்க‌ மோனிகான்னு எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்துட்டான். எல்லா ப‌ச‌ங்க‌ளும் அதையே சொல்லி அந்த‌ பொண்ணு தின‌மும் அழ‌றா.இந்த‌ மாதிரி எல்லோருக்கும் ஒரு ரைமிங் ட‌ய‌லாக் சொல்றான். ப‌டிக்கிற‌ பைய‌ன் செய்ற‌ வேலையா இது?

நான் :புரியுது மிஸ். நீங்க‌ கொஞ்ச‌ம் மிர‌ட்டி, அடிச்சு பார்க்க‌லாமே?

டீச்ச‌ர் : அடிக்கிற‌தா?அத‌ நீங்க‌தான் செய்ய‌ணும். மார்க் எல்லாம் ந‌ல்லா எடுக்கிறான். கிளாஸ்ல‌ அமைதியா இருக்கான். ல‌ன்ச் டைம்ல‌, ஸ்கூல் முடிஞ்ச‌வுட‌னேதான் இதெல்லாம் செய்றான். இவ‌ன‌ ப‌த்தி க‌ம்ப்ளைய‌ன்ட் வ‌ராத நாளே கிடையாது.

நான் : அவ‌ன் அப்பாகிட்ட‌ சொல்றேன் மிஸ். அவருக்குத்தான் பயப்படுவான்.

டீச்ச‌ர் : ஒவ்வொரு கிளாஸிலும் வால்ப‌ச‌ங்க‌ 10, 15 பேர் இருப்பாங்க‌. அந்த‌ கிளாஸ் டீச்ச‌ர் எல்லாம் நிம்ம‌தியா இருக்காங்க‌. ஒரே ஒரு ஸ்ரீகேஷ‌ வ‌ச்சிக்கிட்டு நான் ப‌டுற‌ அவ‌ஸ்தை இருக்கே

நான் :(மன‌சுக்குள் அய்ய்ய்ய‌ய்ய்ய்ய்யோ என்று சொல்லிக் கொண்டேன்)

டீச்ச‌ர் : ஸ்கூலில் எல்லாம் பிர‌ச்சினை இல்லைங்க‌. இவ‌ன‌ திருத்த‌ ஒரு வ‌ழிதான் இருக்கு. நீங்க‌தான் செய்ய‌ணும்

நான் :சொல்லுங்க‌ மிஸ். நான் செய்றேன்.

டீச்ச‌ர் : உங்க‌ வீட்டு ப‌க்க‌த்துல‌ யாரோ ஒருத்த‌வ‌ங்க‌ தான் இவ‌ன‌ கெடுக்கிறாங்க‌. இந்த‌ மாதிரி மொக்கையா பேசுற‌ ஆளு யாராவ‌து இருந்தா அவ‌ங்க‌ கூட‌ இவ‌ன‌ சேர‌ விடாதீங்க‌. பேச‌வே விடாதீங்க‌. அவ‌ன‌ அடிச்சா இவ‌ன் திருந்திடுவான்

நான் : அப்ப‌டியா? தேங்க்ஸ் மிஸ். நான் யாருன்னு பார்க்கிறேன்.

__________________

(நானும் பப்லுவும் கிளம்ப, பப்லு மட்டும் கிளாஸ்ரூமுக்குள் போன மிஸ்ஸை முறைத்துக் கொண்டிருந்தான்)

நான் : எதுக்குடா அந்த மிஸ்ஸ முறைக்கிற?

பப்லு: என்கிட்ட பேச வேணாம்ன்னு உன்கிட்டயே சொல்றாங்க. அந்த மொக்கையே நீதான்னு தெரில. இவங்க சொல்லிக் கொடுத்து நாங்க என்ன படிச்சு…. இவங்க மிஸ் இல்லைடா. ஜஸ்ட் மிஸ்…

15 கருத்துக்குத்து:

pappu on March 2, 2011 at 12:48 AM said...

after long time... me the firstu!

king on March 2, 2011 at 12:50 AM said...

antha teacher correct panna thaana school pakkam poneenga unmaya sollunga

பிரதீபா on March 2, 2011 at 1:05 AM said...

அந்த பிஞ்சு மனசுல இப்படி நஞ்சை விதச்சுட்டீங்களே !!

மாணவன் on March 2, 2011 at 6:03 AM said...

சூப்பர் :)

Ŝ₤Ω..™ on March 2, 2011 at 8:02 AM said...

சகா.. இப்பத்தான் படிச்சேன்.. காலாயிலேயே நல்லா சிரிச்சேன்.. முடியல..

நீ எப்போதுமே இப்படித் தானா?? இல்லை எப்போதுமே நீ இப்படித் தானா???

புன்னகை on March 2, 2011 at 8:21 AM said...

:-)

R. பெஞ்சமின் பொன்னையா on March 2, 2011 at 8:31 AM said...

இப்ப டீச்சர் கிட்டயுமா!!!!!!

அன்புடன் அருணா on March 2, 2011 at 9:12 AM said...

இன்னிக்கு மாட்டுனது தமிழ் டீச்சரா???

சி.பி.செந்தில்குமார் on March 2, 2011 at 9:59 AM said...

>>>பப்லு: என்கிட்ட பேச வேணாம்ன்னு உன்கிட்டயே சொல்றாங்க. அந்த மொக்கையே நீதான்னு தெரில. இவங்க சொல்லிக் கொடுத்து நாங்க என்ன படிச்சு…. இவங்க மிஸ் இல்லைடா. ஜஸ்ட் மிஸ்…

ஃபைனல் பன்ச் செம காமெடி

தர்ஷன் on March 2, 2011 at 10:04 AM said...

சகா டீச்சர் வயசானவங்கதானே இல்ல ஒரு வர்ணனை வழிசல் ஏதும் இல்லையேன்னு கேட்டேன்

Athammohamed on March 2, 2011 at 11:18 AM said...

child abuse illama vera ennavam?

Nagasubramanian on March 2, 2011 at 11:59 AM said...

செம காமெடிங்க.

Sen22 on March 2, 2011 at 12:06 PM said...

நல்லா இருக்கு கார்கி..

சிட்டி பாபு on March 2, 2011 at 10:15 PM said...

அருமை கார்கி அசத்துங்க

யுவா on March 4, 2011 at 11:20 AM said...

என்னது இவிங்கதான் தமிழ்டீச்சரா? ஏன் கார்க்கி அப்பப்ப பதில் கொடுக்காமல் தெமென்னு கேட்டுக்கொண்டிருந்தார்னு புரியுது. அப்ப நெஜமாகவே செம்மொழிதான்.

 

all rights reserved to www.karkibava.com