Mar 31, 2011

வ‌றோம்டா மும்பைக்கு

15 கருத்துக்குத்து

 

Shahid Afridi congratulates Sachin Tendulkar and Virender Sehwag after the hard-fought game

ஒண்ணும் பிர‌ச்சினையில்லை த‌ம்பி. அடுத்த‌ வேர்ல்ட் க‌ப்பிலும் நான் இருப்பேன். பார்க்க‌லாம்.

______________________________________________

Virender Sehwag's son joins in the post-match celebrations

இல‌ங்கைக்கு எதுக்கு நானெல்லாம்? அதான் என் பைய‌ன‌ ஆட‌விட‌லாம்னு இருக்கேன்

______________________________________________

Misbah-ul-Haq scored a typically doughty half-century but it wasn't enough for Pakistan

இன்னும் மேட்ச் முடிய‌ல‌.அதுக்குள்ள‌ பூண‌ம் ஸ்டார்ட் ப‌ண்ணியாச்சா?

___________________________________________________________________

The pressure of the big game got to even the more eminent members of the audience, including Sonia and Rahul Gandhi

ராகுல் :ம‌ம்மி. இப்ப‌ எதுக்கு மிஸ்.வேர்ல்ட் ஜெயிச்ச‌ மாதிரி எக்ஸ்பிர‌ஷ‌ன் த‌றீங்க‌? அதெல்லாம் த‌ங்க‌பாலு ஒரு வேளை ஜெயிச்சா கொடுத்துக்க‌லாம்.

________________________________________________________________________

Sachin Tendulkar walks back after a chancy 85

எப்ப‌டியாவ‌து என்னை 100 அடிக்க‌ வ‌ச்சு ஜெயிக்க‌லாம்னு பார்த்தாங்க‌. ங்கொய்யால‌ யார்கிட்ட‌!!!!

___________________________________________________________________

India PM Manmohan Singh and Pakistan PM Yousuf Raza Gilani stand for the national anthems prior to the match

ம‌.சிங் : இன்னைக்கு தேசிய‌ கீத‌ம் இத்தாலி மொழில‌ பாட‌ணுமான்னு சொல்லாம‌ போயிட்டாங்க‌ளே.. என்ன‌ செய்ற‌து?

_______________________________________________________________________

MS Dhoni spins the coin as the semi-final gets underway

தோனி : நாங்க‌தான் டாஸ் ஜெயிப்போம். ஃப‌ர்ஸ்ட் பேட்டிங். அஃபிரிடி உன‌க்கு ஃப்லைட் வெயிட்டிங்

______________________________________________________________________________

Few tweets:

நெஹ்ரா ஃபாஸ்ட் பவுலரா ஸ்பின்னரான்னு கேட்கிறாங்க. நீல நிற ஜெர்சியில் இருப்பதால் நிச்சயம் வின்னர்தான்

இந்தியா ஜெயிச்சா பூனமின் நீலப்படம். பாக். ஜெயிச்சா பச்சை பச்சயா திட்டு. எது வேணும்ன்னு முடிவு செஞ்சிக்கோங்க இந்திர வீரர்களே

நீராலானது உலகு.. ஃபோராலானது சேவாக்

அவ‌னுங்க‌ ப‌வுலிங்க்ல‌ அப்பாட‌க்க‌ரு.. நாம‌ பேட்டிங்க‌ல‌ அப்பாட‌க்க‌ரு. ஆனா ஃபீல்டிங்க்ல‌ ரெண்டு பேருமா ட‌ண்ட‌ண‌க்க‌ரு

ர‌த்த‌ம் ஒரே நிற‌ம்.. அது நீல‌ நிற‌ம்

May be Sachin is shorter..But nothing is bigger than his shot

India will Win. #inshasachin

மன்மோகன் சிங் உஷாரா இருக்கணும். கூப்ட்டு கலாக்கறியான்னு கிலானி அடிச்சிட போறாரு

நேத்து ஓரம் ஓரமா போட்டப்பவே இன்னைக்கு நேஹ்ரா நேரா போடுவான்னு தெரியும் - மேட்ச் முடிஞ்சபிறகு தோனி

we made ponting DISAPPOINTING. we are making afridi AFRAIDI. Here we come sangakara.. to blow SANGU to you too..

கார்கில் மட்டுமில்லைடா.. கார்கி பார்க்கிற மேட்ச் கூட ஜெயிக்க முடியாது உங்களால

Mar 28, 2011

மதன்..சங்கீதா..எஸ்.எம்.எஸ்

14 கருத்துக்குத்து

 

Excuse me Boss. You got a text message

அதிர்ந்த மொபைலை எடுத்து பார்த்தான் மதன்.

“good night baby, Sweet dreams”

சங்கீதாவிடம் இருந்த வந்த மெசெஜை படித்தவன் அவளை அழைத்தான். ”சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்”. இவனுக்காக ஸ்பெஷலாக வைத்திருந்த ஹலோ ட்யூன் இரவு நேரத்தில் இனிமையாய் ஒலித்தது. பேச்சினூடே சிச்சுவேஷன் அப்படியே “சங்கீத ஸ்வரங்கள்” பாடலுக்கு ஏற்ப மாறியது. அவர்கள் பேசிவிட்டு வைத்தபோது மணி அதிகாலை 4.30 தாண்டியிருந்தது.

மதனும் சங்கீதாவும் 4 வருட காதலர்கள். எல்லோருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால் இவர்களுக்கு மட்டும் 12 மணி நேரம்தான். மிச்ச நேரம் கிரகாம்பெல் கண்டுபிடிப்பின் நவீன வஸ்துவிலே சென்றுவிடும்.

Good morning ammu.

மதியம் 12.30க்கு குட் மர்னிங் சொல்லிக் கொள்ளும் இருவர் இவர்களாக மட்டுமே இருக்கக்கூடும். மீண்டும் சாணக்யா. மீண்டும் சங்கீத ஸ்வரங்கள். மீண்டும் குட் மார்னிங் . மீண்டும் குட் நைட் என நீண்டது அவர்கள் காதல்.

ஒருநாள் மழையிரவில் சற்றே மயக்க நிலையில் இருந்தான் மதன். வழக்கமாக மெசெஜ் வரும் நேரம் கடந்துவிட கண்ணயர்ந்தான். தூக்கம் எப்போது வந்தது என்றறியா வண்ணம் உறங்கியும் போனான். அதிகாலை 8 மணிக்கு.. அவனுக்கு அதிகாலைதானே?. அதிகாலை 8 மணிக்கு மதனின் அலைபேசி அலறியது. சங்கீதாவின் வீட்டில் இருந்து வந்தது அந்த அழைப்பு. மதனின் முகம் சங்கீதாவின் உள்ளங்கை கணக்காக சிவந்து போனது. கையில் கிடைத்தை சட்டை, பேண்ட்டை எடுத்தணிந்தவன் பல்சரை முறுக்கியதில் 6 வினாடிகளிலே 80ஐ கடந்தது.

மதன் அந்த மருத்துவமனையை அடைந்த போது எதிரே ஸ்ட்ரெச்சரில் ஒருவரை முழுவதும் போர்த்தியபடி எடுத்துச் சென்றார்கள். கலங்கிய கண்களுடன் சங்கீதாவின் அம்மாவை அழைக்க மொபைலை எடுத்தான். படிக்கப்படாமலே இருந்த ஒரு மெசெஜ் அவன் கண்களில் பட்டது. திறந்தான்.

”Darling. I am just outside ur home. Met with an aacident. Want to see u once. I am dying. Plz come fast”

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

மதன் கத்திய சத்தத்தில் மருத்துவமனையே ஒரு நொடி ஸ்தம்பித்து போனது. சங்கீதாவின் அம்மா மதனைத் தாண்டி சென்ற ஸ்ட்ரெச்சரை நோக்கி ஓடினார். புரிந்துக் கொண்ட மதன் சத்தம் போட்டு திட்டினான்

 

 

 

 

 

 

 

 

ங்கொய்யால. சாவும் போது கூட எஸ்.எம்.எஸ் தான் அனுப்பிவியா?????

நேரா போட்டா ஓரமா போதே

13 கருத்துக்குத்து

 

Sachin1 sachin2 nehra ravibopara

nehra2

swann

munaf

Mar 25, 2011

கலைஞரே..ஒரு கவி கிடைக்குமா?

6 கருத்துக்குத்து

 

நேற்று மேட்ச் ப‌த்தி சொல்ல‌ணுமா? உற்சாக‌ மிகுதியில் ட்விட்ட‌ரில் எழுதிய‌தில் என‌க்கு பிடித்த‌வ‌ற்றை ம‌ட்டும் ப‌திவு செய்துகொள்ள‌ விரும்புகிறேன்.

Yuvraj Singh clinched a tight quarter-final against Australia in Ahmedabad, with a half-century that helped India recover from a nervy situation

ரத்தம் பொங்கல? நரம்பு புடைக்கல? போங்கடா போங்கு பசஙக்ளான்னு கத்தனும் போல இல்ல? இப்படித்தான் டா ஜெயிக்கணும்.. இந்தியாடா.

சொல்லி அடிச்சான் பாரு ரெய்னா.. ரிக்கி, உன் ஹார்டுல்ல என்ன பெயினா?

மண்டைல அடிப்பட்ட லீக்கு இறக்கம் காட்டினான் ரெய்னா.. பாவிபையன் இதயம் வரைக்கும் இரக்கம் காட்டி கொடுத்தான் பாரு அட்டாக்

இப்ப சொல்லுங்க. இவங்க சுமார்.. பெளலிங் டமார்... தோனி ஒரு டோமரு.. சாஹிர்தான் கொக்கி குமாரு.. சொல்லுங்க்டாஆஆஆஆ

என் இதயம் இப்பலாம் லப்டப்னு துடிக்கிறது இல்லை. கப் கப்ன்னுதான். அதெல்லாம் மாறாது

கலைஞரே.. கண்ட கண்ட ஆட்களுக்கு கவிதை எழுதறீங்க. எங்க யுவிக்கு ஒரு கவி கிடைக்குமா?

மேன் ஆஃப் தி மேட்ச் மோடி கையாலன்னு தெரிஞ்சும் அடிச்சான் பாரு, அதாண்டா டீம் ஸ்ப்ரிட்

ஆசிக்கு பதில் சிம்பாப்வே வந்திருந்தால் 50 ஓவர் வரை மேட்ச் போயிருக்கும். சொத்த பசங்களா.. கப்பு எங்க சொத்துடா டுபாக்குருங்களா

பல்லால டைப் அடிக்காதடா பாண்டிங்.. போய் பிரெட் லீக்கு என்ன ஆச்சுன்னு பாரு.. எச்சை கைய மேல வச்சா இன்ஃபெக்‌ஷன் ஆகும்,. பத்திரம்

எல்லாத்தையும் செஞ்சிட்டு குழந்தை மாதிரி சிரிக்கிறான் பாரு ரெய்னா.அதாண்டா நாங்க.பாதி மேட்ச்சிலே பிட்ச் கேட்ச் பிச்சை கேட்டது நீங்க

உன் விக்கெட எதுக்குடா எங்களுக்கு பாண்டிங்.. உனக்கு டிக்கெட் ரெடியா இருக்கு வாங்கிக்க.. போகும்போது சச்சின்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு போ

அஃப்ரிடி.. ஒவ்வொருத்தனாதான் முடிக்கிறோம். நீயா ஓடிப் போனா நல்ல டீம். டெரரரிஸ்ட் பயத்தால் ஓடிட்டாங்கன்னு பேரு கிடைக்கும். என்ன சொல்ற?

நேற்றிர‌வு ந‌ட‌ந்த‌ ஆஸி - வெ.இ மேட்ச்சில் ஆஸீ ஜெயிச்ச‌தால் முத‌ல் ஃப்ளைட் பிடிக்கும் வாய்ப்பு அவ‌ர்க‌ளுக்குதானாம்

எந்த மேட்ச் ஜெயிச்சாலும் வின்னர்னே சொல்றாஙக்ளே.. ஜாம்பவான், பொன்னார் சங்கர் எல்லாம் கிடையாதா?

ஃபிகருங்க நடந்தா கேட்வாக்.. கிரவுண்டே அதிர்ந்தா அது சேவாக்

கிரிக்கெட் எங்கள் மதம்.. கடவுள் சச்சின் அடிக்கணும் சதம்..

தேசிய‌ கீத‌ம் பாடுறாங்க‌. நானும் பாடுறேன் "ச‌ச்சின் ச‌ச்சின் ச‌ச்சின்.. ச‌ச் ச‌ச் ச‌ச் ச‌ச் ச‌ச்சின்.."

Mar 23, 2011

ஃபுட்போர்டு அடித்தால் நோ ஃபிகர்

3 கருத்துக்குத்து

 

இன்னொசெண்ட் இளங்கோவைப் பற்றிய முன்னுரை ஏதுமின்றியே முதல் அத்தியாயம் எழுதிவிட்டேன். இருந்தும் அவ்விரண்டு சம்பவங்கள் கொண்டு அவனைப் பற்றி நீங்கள் யூகித்திருக்கக்கூடும். யாரும் யூகிக்க முடியாதவண்ணம் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத செய்கைகள் செய்வான் இளங்கோ என்பது உங்கள் யூகமாக இருந்திருக்குமேயானால் உங்கள் யூகம் ஓரளவு சரியானதே.ஒரு உதாரணம் சொல்கிறேன்.

ஒரு நாள் எங்கள் நண்பனொருவன் கழுத்தில் டாட்டூ குத்தியிருந்தான். அவன் கேர்ள் ஃப்ரெண்ட் பெயர் அதிகம் வெளியே தெரியாமல் பின்னங்கழுத்தில் அழகாய் இருந்தது. அவள் காதலி இவன் பெயரை எங்கே பச்சை குத்தியிருப்பாள் எனக் கேட்டான் நண்பன். நல்ல ஃப்ரெண்டுடா நீ என சிலர் ஒதுங்கிக் கொள்ள, ஒரு சிலர் ஏடாகூடமாய் யூகித்துக் கொண்டிருந்தார்கள். இடையில் வந்த இளங்கோ, “சிம்பிள். அவளும் கழுத்துலதான் பச்சை குத்தியிருப்பா.” என்றான். யாரும் எதிர்பாக்காத விடை என்றாலும் இளங்கோ சொன்னதுதான் சார். எதிலும் நேர்மையானவன்.

இளங்கோ பார்ப்பதற்கு ஒரு மாதிரிதான் இருப்பான். எப்போதும் டீ ஷர்ட் தான். Pepe, Giordono என்று தமிழ் எழுத்தாளன் ரேஞ்சுக்கு விதவிதமான உயர்ரக ஆடைகளே வாங்குவான். ஆனால் பேண்ட் மட்டும் எப்போதும் சங்கர் கட்பீசில் பிட்டில் வாங்கி, குமார் டெய்லரிடம் தைத்துதான் அணிவான். ”நாம எப்பவுமே மத்தவங்கள பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோல இருக்கிற மாதிரி தானே பார்க்கிறோம்? அப்போ டீஷர்ட் மட்டும் நல்லா இருந்தா போதும்” என்பது இளங்கோவின் சித்தாந்தந்தங்களில் ஒன்று. அவனிடம் நாங்கள் தொலைபேசியில் பேசுவதை குறைத்ததற்கு அச்சிந்தாந்தமும் ஒரு முக்கிய காரணம். வெட்ட ஒட்டிய சிகையலங்காரம் தான் அவனது ட்ரேட்மார்க். மூன்று நாளாய் குளிக்காததன் பரிகாரமாய் பாடி ஸ்பேரேவும், மூன்று நாளாய் சவரம் பண்ணாதததன் அடையாளமாய் Stubbled லுக்கும் இருக்கும். மொத்தத்தில் ஒரு மார்க்கமான கலவையாய் அவனது குணத்தைப் போலவே இருப்பான் இளங்கோ.

இளங்கோ என்றால் இளவரசன் என்று சொன்னான் நண்பன். கோ என்றால் அரசன். இளமையான கோ என்றால் இளவரசன் தானே என்றான். அவன் சொன்னது சிலப் பெண்கள் முன்னிலையில் என்பதுதான் இங்கே குறிப்பிட்டுக் கொள்ளப்பட வேண்டிய விஷயம். ஆனா இளங்கோவோ அது தவறு. நான் ஒரு கண்ணுக்குட்டி என்றான். பெண்கள் சில்மிஷ சிரிப்பு சிரிப்பதையும் கவனிக்காமல் தொடர்ந்தவன் “கோன்னா மாடுன்னு கூட ஒரு அர்த்தம் இருக்கு. அப்படிப்பார்த்தா நான் கண்ணுக்குட்டி” என்றான். அப்பெண்கள் சிரிப்போடு நகர்ந்து போனபின்  “ராஜாவ யாருடா கொஞ்சுவாங்க? கண்ணுக்குட்டியதான் தூக்கி முத்தம் கொடுத்து கொஞ்சுவாங்க .அதான் இப்படி சொல்றான்” என்றான் இன்னொருவன். அவனுக்கு சம்பந்தமில்லாத ஒன்றை பேசுவது போல சென்றுவிட்டான்.  இன்றுவரை அவன் பெண்களுக்காக விழுவானா மாட்டானா என்பது புரியாத புதிர். ஆனால் இவனுக்கு பெண்கள் மத்தியில் நல்ல பெயர் உண்டு என்பது எங்களுக்கு மட்டும் தெரிந்த உண்மை. இன்னொரு சம்பவம் சொன்னால் புரிந்துக் கொள்வீர்கள்.

ஒரு முறை பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தோம். இளங்கோவிற்கு படியில் பயணம் செய்வது அறவே பிடிக்காது. எந்த பொண்ணுடா ஃபுட்போர்டு அடிப்பா? அதனால தான் நடுவுல போய் நிக்கிறான்” என்பான் ஒருவன். அன்றும் அப்படியே. மாநகரப் பேருந்தின் பிரேக் நல்ல நிலையில்தான் இருக்கும் என்பதை நிரூபிக்கும் வண்ணம் சட்டென்று சட்டென்று சடென் பிரேக் அடித்துக் கொண்டிருந்தார் ஓட்டுனர். எல்லோரையும் போலவே இளங்கோவும் முன்னிருந்த ஒரு யுவதியின் மேல் விழுந்துக் கொண்டிருந்தான். “Hey. What u doing” என்று எரிந்து விழுந்தவரிடம் சன்னமாய் சொன்னான் “B.Com final year”. எங்கள் பக்கம் திரும்பியவனிடம் என்னடா என்றால் “நமக்கு எப்பவும் படிப்புதானே மச்சி முக்கியம்” என்றான். எரிச்சலாய் கேட்ட அப்பெண்ணின் முகத்தில் மெல்லிய புன்னகை பூத்ததை நாங்கள் கவனித்துவிட்டோம். அம்மாவை கணிக்கத் தவறிய வைகோ போல இளங்கோ மட்டும் அடுத்த ஸ்டாப்பில் பேருந்தில் இருந்து வெளிநடப்பு செய்தான். விஜய்காந்த், கம்யூனிஸ்ட் போல வேலைக்காவது என்று தெரிந்தும் நாங்கள் மட்டும் பேருந்து கூட்டணியை தொடர்ந்தோம்.

Mar 21, 2011

டெக்னாலஜி கதைகள்

14 கருத்துக்குத்து

 

பதிவர்களில் என் மனங்கவர்ந்த(?) சிலரில் ஜ்யோவ்ராம் சுந்தரும் ஒருவர். அவர் கவிதைகளைப் படித்துவிட்டு பிரம்மராட்சனாய் ஒரு உருவத்தை மனதில் வைத்திருந்தேன். ஆனால் முதல்முறை அவரை சந்தித்த போது அம்மாவின் முடிவைக் கேட்ட புரட்சிபுயல் கணக்காய் தடுமாறித்தான் போனேன். 35 சீட் எங்கே? 8 சீட் எங்கே? அப்படி இருந்தார் குருஜி. நீண்ட நாட்களுக்கு பின் சமீபத்தில் அவருடன் உரையாட நேரம் கிடைத்தது. ட்விட்டுலக கலகக்காரன் என்றழைப்படும் கவியும் உடனிருந்தார்.

குருஜிக்கு பதிவுலகம் மீது அலாதி பிரியம். இலக்கியத்தை சுவாசிக்கும் அவரைப் போன்ற பலருக்கும் பதிவுலகம் ஒரு பெரிய ஆறுதல். வாசிப்பை தவமாக செய்கிறார். அவரோடு பேசிய சில மணி நேரங்களும் பதிவுலகம் குறித்தே அமைந்தது. வலைப்பூக்கள் அச்சு ஊடகத்தின் ஒரு நீட்சியாக மட்டும் இருக்கின்றன. தொழில்நுட்பத்தின் சாத்தியங்களை தமிழ்ப்பதிவுலகம் இன்னும் முறையாக பயன்படுத்தவில்லை என்ற என் கருத்தை அழுத்தமாக ஆமோதித்தார். சரி, என்ன செய்யலாம் என்று குறித்து நாங்கள் மூவரும் பேசியதன் சாரம்சமே இப்பதிவு.

ஒரு நல்ல கதாசிரியனால் ஒரு நல்ல திரைப்படம் எடுத்து விட முடியாது. சினிமா என்னும் தொழில்நுட்பத்தை விரல்நுனியில் வைத்திருக்கும் மணிரத்னம் போன்றவர்களால் ஒரு நல்ல கதையை எழுதிவிட முடியாது. இரண்டையும் இணைக்கும் ஆற்றல் பெற்றவர்களே நல்ல திரைப்படம் கொடுக்க முடியும். இணையமும் அப்படித்தான். இணையத்தின் சாத்தியங்களை அறிந்த பலரால் நல்ல படைப்புகள் எழுத முடிவதில்லை. படைப்புகளின் ஆசான்களுக்கு இணையத்தின் அசாத்தியமான சாத்தியங்கள் குறித்து தெரிவதில்லை.சில உதாரணங்கள் பார்ப்போம்.

உங்கள் வலைப்பூவின் பேக்கிரவுண்ட் வெள்ளை நிறம் என்று வைத்துக் கொள்வோம். எழுத்துகளின் நிறமும் வெள்ளையாய் இருந்தால் படிப்பவர்களுக்கு தெரியப்போவதில்லை. ஆனால் அதையே “செலக்ட்” செய்தால் தெரியும். இந்த யுத்தியை பயன்படுத்தி ஒரு மொக்கை பதிவொன்றை எழுதியிருந்தேன். அதை பயன்படுத்தி ஒரு கதை எழுதினால் எப்படி இருக்கும் என்ற யோசனையை சொன்னார் சுந்தர். உண்மைதானே?

இன்னொரு ஐடியா. GIFF படங்கள் குறித்து அறிவோம். சலனப்படம் போன்றிருக்கும் இதை கதையின் நடுவே இணைத்து, கதைக்கு ஒரு முக்கிய திருப்பத்தை அதில் சேர்த்தால் சுவாரஸ்யமாக இருக்குமல்லவா?

ஒரு க்ரைம் கதை எழுதுவோம். 24 மணி நேரத்தில் நடக்கும் ஒரு கொலையை நேரவாரியாக பத்தி பிரித்து எழுதிக் கொள்வோம். ஒரு கடிகாரத்தை நம் பதிவில் சேர்த்துவிடுவோம். நேரம் மாற மாற கதையின் தொடக்கம் அதற்கேற்றது போல மாறிவிடும். இது சற்று சிரமம்தான். ஆனால் கணிணி ஜாம்பவான்களுக்கு இது ஒரு பெரிய விஷயமே இல்லை. நீங்கள் எந்த நேரத்தில் உண்மையில் அக்கதையை படிக்க தொடங்குகறீர்களோ அந்த சமயத்தில் கதை தொடங்கும். பிறிதொரு நாள் வேறு நேரத்தில் படிக்க நேர்ந்தால் கதை வேறு இடத்தில் தொடங்கும். இது இணையத்தில் மட்டும்தானே சாத்தியம்?

உங்கள் கதையின் முக்கிய கருவாக ஒரு ஒலிக்குறிப்பை பயன்படுத்த நினைக்கிறீர்கள். இது அச்சு பிரதியில் சாத்தியமா? அப்படி ஏதும் இதுவரை கதைகள் வந்திருக்கின்றனவா? இல்லையென்னும் போது அக்கதை நிச்சயம் சுவாரஸ்யமாகத்தானே இருக்கும்?

சுழல் கதைகள் என்று சொல்வார்கள். குட்டிக் குட்டிக் கதைகள்தான். ஒன்று முடியும் இடத்தில் அடுத்தக் கதை ஆரம்பிக்கும்.இதை நாம் அலுவலகத்தில் நடக்கும் Treasure Huntடோடு இணைத்துப் பார்ப்போம். நான் ஒரு கதை எழுதுகிறேன். அதில் இருக்கும் குறிப்பை கண்டறிந்தால் அடுத்த கதை யார் தளத்தில் இருக்கிறது என்று விளங்கிவிடும். இப்படியே வரிசையாக கதைகளை கண்டறிந்துவிட்டால் மொத்தமாய் ஐந்து குறிப்புகள் கிடைக்கும். இதை வைத்து இறுதி முடிவை கண்டுபிடிக்க வேண்டும். அங்கு இந்த ஐந்து குட்டிக்கதைளையும் உள்ளடக்கிய ஒரு பெரிய கதை இருக்கும். எல்லாக் கதையையும் கண்டறிந்து படித்தவருக்கே இக்கதை விளங்கும். இவ்விளையாட்டு சுவாரஸ்யமாய் இருக்க வேண்டுமெனில் கதைகளும் நன்றாக இருக்க வேண்டும். இதற்குத்தான் நல்ல படைப்பாளிகளுக்கு இணைய சாத்தியங்கள் தெரிய வேண்டுமென்கிறேன்,

பெனாத்தல் சுரேஷ் என்பவர் இப்போதைக்கு இந்த வகை பதிவுகளில் உச்சமாக ஒன்றை செய்திருக்கிறார். எந்திரன் படத்திற்கு ஒரு விமர்சனப்பதிவு எழுதியிருந்தார். முதலில் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். அதாவது ரஜினி பிடிக்குமா பிடிக்காதா, ஏ.ஆர்.ரகுமான இசை ஓக்கேவா இல்லையா என்பது போன்ற கேள்விகள். நீங்கள் தரும் விடையை வைத்து அது ஒரு விமர்சனம் தரும். அது நிச்சயம் உங்களுக்கு பிடித்த வகையில் இருக்கும். Flashஐ பயன்படுத்தி அவர் செய்த அந்த விமர்சனம் இணையத்தில் மட்டுமே சாத்தியம்.

படைப்புத் திறனும் தொழில்நுட்பமும் சேர்ந்து இவ்வகையான கதைகளை படைக்கும் போது கற்பனையின் எல்லை விரிவைடையும். ஆக, பதிவுலக கதாசிரியர்களே.. இது போன்ற மிரட்டலான கதைகளை எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். “மழை வெள்ளிக்கம்பியாய் பொழிந்துக் கொண்டிருந்தது. சாரதா ஜன்னலின் கம்பிகளில் வழியும் துளிகளை கைகளால்” என ஆரம்பிக்கும் பழங்கஞ்சிகளையே கொடுக்க வேண்டாம்.

கவியுடன் நடந்த சுவாரஸ்ய விவாதங்கள் குறித்து பிறிதொரு நாளில் பகிர்ந்துக் கொள்கிறேன்.

விஜ‌ய் என்னும் இடிய‌ட்

9 கருத்துக்குத்து

 

  சென்ற‌ வார‌ம் என்ன‌ நினைத்து "ம‌திமுக‌விற்கு இறுதி அஞ்ச‌லி" என்று எழுதினேன் தெரிய‌வில்லை. ட்விட்ட‌ரிலும், பின்னூட்ட‌ங்க‌ளிலும் புர‌ட்சி வீர‌ரின் போராளிக‌ள் சில‌ர் பொங்கிவிட்டார்க‌ள். சில‌ர் மின்ன‌ஞ்ச‌ல் கூட‌ அனுப்பி மிர‌ட்டினார்க‌ள். வைகோவிற்கு இவ்வ‌ள‌வு செல்வாக்கு இருக்குமென‌ நான் நினைக்க‌வில்லை. அத‌னால் என்ன‌?சொன்ன‌து போல் ம‌திமுக‌விற்கு இறுதி அஞ்ச‌லி செய்ய‌ப்ப‌ட்டிருக்கிற‌து. அதுவும் அத‌ன் பொது செய‌லாள‌ராலே. கேட்ட‌ எண்ணிக்கையில் தொகுதிக‌ள் த‌ர‌ப்ப‌டாத‌தால் இத்தேர்த‌லை புற‌க்க‌ணிக்கிறாராம் இந்த‌ வைக்கோல் புலி. ஒண்ணு சொல்லிக்கிறேன் த‌லைவா

Defeat the defeat before defeat defeats you.

____________________________________________________

தேர்த‌ல் என்ற‌வுட‌ன் நினைவுக்கு வ‌ருகிற‌து. அதீத‌ம் என்றொரு இணைய‌ இத‌ழ் வெளிவ‌ருகிற‌து. நான் கூட‌ சைட்பாரில் விள‌ம்ப‌ர‌ம் எல்லாம் போட்டிருக்கிறேனே. அதேதான்.இம்மாத‌ இத‌ழில் தேர்த‌ல் போட்டியொன்று வைத்திருக்கிறார்க‌ள். முத‌ல் ப‌ரிசு 1500 ரூபாயாம். ச‌ரி, நாம‌ளும் காழியூர் நாராய‌ண‌ன் ஆகி க‌ணிப்போமே என்று க‌ணித்திருக்கிறேன்.மேல‌திக‌ விவ‌ர‌ங்க‌ளுக்கும், போட்டியின் விதிமுறைக‌ளுக்கும் இங்கே க்ளிக்குங்க‌ள்.

என் க‌ணிப்பு:

1. திமுக‌                         - 80              
2. அதிமுக‌                    - 75
3. காங்கிர‌ஸ்                - 25
4. பாம‌க‌                         - 15
5. தேமுதிக‌                  - 20
6. ம‌திமுக‌                    - ஹிஹிஹி. பிம்பிளாக்கி பிளாப்பி 
7. வி.சிறுத்தைக‌ள்    - 7
8. க‌ம்யூனிஸ்டுக‌ள் - 8
9. ம‌ற்ற‌வை                 - 4

____________________________________________________

 1

ந‌ண்ப‌ன் (3 இடிய‌ட்ஸ்) ப‌ட‌த்தில் விஜ‌யின் ஹேர் ஸ்டைல் இதுவென‌ ஒரு ஏடாகூடமான‌ புகைப்ப‌ட‌ம் ஒன்றை வ‌ழ‌க்க‌ம் போல் ந‌ம் வெட்டியாப்பீச‌ர்ஸ் உருவாக்கி ஃபார்வ‌ர்ட் செய்து கொண்டிருக்கிறார்க‌ள். ஆனா அது உண்மையில்லை. இய‌க்குன‌ர் ஷ‌ங்க‌ர் த‌ன‌து வ‌லையில் முத‌ல்முறையாக‌ விஜ‌ய் ப‌ட‌ப்பிடிப்பில் இருக்கும் புகைப்ப‌ட‌ங்க‌ளை வெளியிட்டிருக்கிறார்.பெரிய‌ மாற்ற‌ம் ஏதுமில்லை. ஆனால் விஜ‌ய் செம‌ ஃப்ரெஷாக‌ இருக்கிறார். விஜ‌யால் இந்த‌ ப‌ட‌ம் சொத‌ப்ப‌ போகிற‌து, இவ‌ருக்கு ஸ்டூட‌ன்ட் கெட்ட‌ப் செட் ஆக‌வில்லை என்று சொல்ல‌ப் போகும் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு, ப‌ட‌ம் வெளிவ‌ரும்வ‌ரை உங்க‌ளுக்கு ப‌தில் கிடைக்காது. ப‌ட‌ம் வெளிவ‌ந்த‌வுட‌ன் கேட்ப‌த‌ற்கு உங்க‌ளுக்கு கேள்விக‌ள்  கிடைக்காது.

  ந‌ண்ப‌ன் ப‌ட‌த்தின் வ‌ச‌ன‌க‌ர்த்தா ம‌த‌ன் கார்க்கி. அதீத‌ம் இத‌ழில் அவ‌ரின் பேட்டியும் வெளிவ‌ந்திருக்கிற‌து. ந‌ண்ப‌ன் ப‌ட‌ம் ப‌ற்றியும் பேசியிருக்கிறார். ப‌டிக்க‌ இங்கே க்ளிக்குங்க‌ள்

5

Photos courtesy :www.directorshankaronline.com

______________________________________________________________________

ச‌மீப‌கால‌மாக‌ பிளாகை விட‌ ட்விட்ட‌ரின் பால் அதிக‌ அன்பு கொண்டிருக்கிறேன்.உல‌க‌ கோப்பை வேறு ந‌ட‌க்கிற‌து. அத‌னால் ப‌திவு எழுதும் பெரும்பாலான‌ நாட்க‌ள் அங்கே செல‌வாகிவிடுவ‌தால் முன்பு போல் எழுத‌ முடிவ‌தில்லை. ச‌ந்தோஷ‌மான‌ விஷ‌ய‌ம் தானே என்று பின்னூட்ட‌ங்க‌ள் வர‌த்தான் செய்யும். அத‌னால் நானே சொல்லி விடுகிறேன், கொஞ்ச‌ நாள் அங்க‌யும் உசுர‌ வாங்க‌ணும் இல்லை. அதான். :))

இந்தியா விளையாடும் நாட்க‌ளில் ட்விட்ட‌ரில் லைவ் க‌மென்ட்ரி செய்து கொண்டிருக்கிறேன்.  மிக‌வும் சுவார‌ஸ்ய‌மாக‌ பொழுது போகிற‌து. சில‌ சேம்பிள்ஸ் இதோ.

 

இன்னொரு ஃபோர்.. நாலும் நாலும் எட்டு.. அவன் அடிச்ச ஷாட்ட் கட்டு

டவுட்டுன்னு அம்பயர் நினைச்சப்ப அவுட்டுக்கு வெளிய போனாராமே சச்சின்... கள்ளன நம்பலனாலும் குள்ளன நம்பலாம்ப்பா

சாராயக்கடைல இப்ப யாரும் 100ன்னு கேட்கிரது இல்லையாம். சச்சின்னுதான் கேட்கிறாங்களாம்னு சொல்ல நினைச்சேன். இப்படி செஞ்சிட்டாரே லிட்டில்மாஸ்டர்

அடுத்தவன் அடிச்சா சதம். சச்சின் அடிச்சா வதம்னு யோசிச்சு வச்சது எல்லாம் வேஸ்ட்டா போயிடுச்சே :(

Today, Is it Happy holi or Happy Kholi?

காஃபி ஆவின் பால்ல போடவா, ஸ்கிம்டு பால்ல போடவான்னு கேட்கிறாங்க.. சச்சின அவுட் அடிச்ச ராம்பால்ல போட சொல்லணும். பொறுக்கி பைய

டீ.ஆர் ட்விட்டர்ல இருந்தா “என் பாட்டிக்கு வயசு எண்பது. யுவ்ராஜ் அடிச்சான் அம்பது” ன்னு சொல்வாரோ??

இப்போ பத்தான் வருவாரு., எவண்டா உன்னை பெத்தான் பெத்தான்.. கையில கிடைச்சா செத்தான் செத்தான்

வெஸ்ட் இண்டீஸலிருந்து சரவணன் ...பேக் டூ பெவிலியன்

பந்து போட்டா கீப்பர் பவுலிங் பவுன்லிங்னு சில சமயம் சொல்றாரே.. அப்போ மத்தது எல்லாம் துரோவா???

ராம்பால் வந்துட்டான்.. சரோஜாதேவி கோபால் கோபால்னு சொன்னது மாதிரி அம்பயர் நோ பால் நோ பால்னு சொல்ல அய்யணார வேண்டிக்கிரேன்

டேர‌ன் சாமி.. கொஞ்சம் ஆஃப் சைடுல காமி

8 ரன் அடிச்சாலும் அந்த ஓவர் வசந்த் படம் மாதிரி ட்ரையாவே போச்சு

ரஜினிகாந்த் வாழும் ஊரில் இவ்வளவு ஸ்லோவான மேட்ச்!!! அய்யகோ

 

என‌து ட்விட்ட‌ர் ஐடி : www.twitter.com/iamkarki

Mar 16, 2011

மதிமுகவிற்கு இறுதி அஞ்சலி

9 கருத்துக்குத்து

 

கார்த்திக்: மிஷ்டர் வைகோ.. நான் தனியாதான் இருக்கேன்.. நீங்க என்னோட வந்துடுங்க..

வைகோ : நான் என்ன மெளனராகம் ரேவதியா? உன் கூட வாவான்னு. மறுமலர்ச்சி திமுகவோட பொது செயலாளர்ப்பா.

கார்த்திக்:  ஹேஹேய்ய்.,., நான் கூடத்தான் நாடாளும் மக்கள் கட்சி ஓனரு

__________________________________________________________________________________

www.karkibava.com

இப்படி காட்டி ஒரு சீட்டாச்சும் கொடுங்கன்னுதான் கேட்டேன்.. தொலைச்சிடுவேன்னு சொன்னதா நினைச்சு இப்படி பண்ணிட்டாங்க அம்மா.

________________________________________________________________________

வைகோ: கலைஞராச்சும் இதயத்துல தான் இடம் கொடுப்பாரு. இந்தம்மா ஜெயில்ல தான் கொடுத்துச்சு. அதையும் மீறிப் போன நான் தான்யா அழணும்..நீ ஏன்?

அழுபவர் :அவங்கள நம்பி நீங்க போனீங்க. உங்கள போய் நான் நம்பினேனே. அழாம என்னய்யா பண்ணுவேன்????

______________________________________________________________________________

Vaiko : Mr.Obama this is atlanta. I have asked vilathi kulam .Total 35 for MDMK

Obama : Mr. Vaiko. You are here to talk about thirvasgam. Whats that vlathikulam, MDMK?

_________________________________________________________________________________

வைகோ : தம்பி சொல்லு. நீ எனக்கு எத்தனை சீட் தருவ?

பிரபாகரன் : அய்யோ பாவம். நாயகன் இன்ஸ்பெக்டர் மாதிரி ஆயிட்டாரே

___________________________________________________________________________

வைகோ: இங்க நிக்க விடாம உட்கார வச்சப்பவே உஷாராயிருக்கணும்,. இப்போ எங்கேயும் நிக்க உடாம பண்ணிட்டாங்களே!!!  

சிரிப்பவர் : உங்களுக்காச்சும் பரவலாண்ணே.. எங்கள கூப்ட்டு சீட் கொடுத்துட்டு அதுக்கு அவங்க ஆளு பேரயும் அறிவிக்கிறாங்க.

நடுவில் இருப்பவர் : அரசியல்ல இதெல்லாம் சாதரணம்ப்பா

__________________________________________________________________________________

அருமை தம்பி வைகோ.. நீயே வெளிய போய்க்கோ..

அம்மா ஒரு சைக்கோ..நீயொரு அரசியல் ஃபூக்கோ..

ஹேய் டண்டணக்கா.. ஹேய் டணக்குடக்கா

____________________________________________________________________________________

சில ட்வீட்டுகள்

செய்தி : மார்ச் 15. அதிமுக எங்களை புறக்கணிப்பது பற்றி விவாதிக்க 19ஆம் தேதி மதிமுக உயர்நிலைக்குழு கூடுகிறது #15 எங்க? 19 எங்க? இதானா சார் உங்க டக்கு???

இனிமேல் தோழிக்கு “மதிமுக நாயகியே”ன்னு எழுத முடியாது. யார கேவலப்படுத்துறன்னு செருப்பாலே அடிப்பா

5 வருஷமா அடக்கி வச்ச ஈழப்பாசம் கண்ணு, மூக்குன்னு தெறிக்கும் பாருங்க இனிமேல .. #பொதுவாழ்வில்தனிமை..சாரி தூய்மை

அம்மாலு என்னலு அவமானம்லு படுத்திட்டாங்கலு.. அதனாலலு நாஙக்லு தனியாலு நிக்கலு போறோம்லு.. #நாயுடு கட்சி தலை வைகோலு

வைகோ - அம்மா தாயே ஏதாச்சும் மிச்சம் மீதி இருந்தா போடுங்கம்மா// அம்மா : ரொம்ப லேட்டு... பக்கத்தூடு பாருப்பா! – இது மட்டும் அதிஷா ட்வீட்

Mar 15, 2011

போடாங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்

7 கருத்துக்குத்து

 

xxx: சகா எப்படி இருக்கிங்க?

me : மிக்க நலம். தாங்கள்?

xxx : என்னப்பா? சங்ககவிதை எழுதிட்டு இருக்கியா? தூய தமிழ்ல விளாசுற.. ஆனா சகா. இந்த மாதிரி எழுதறத நிறுத்துங்க. அதெல்லாம் கலோக்கியலா ஏழு சொன்னாதான் நல்லா இருக்கு

me : ரைட்டு சகா.ஒண்ணே ஒன்ணுதான்.அதை நான் எப்பவோ ஸ்டாப் பண்ணிட்டேன். நன்றி

xxx : அட.இதுக்கெல்லாம் எதுக்கு சகா தேங்க்ஸ். அனுஜன்யா அளவுக்கு உன்னால கவிதையெல்லாம் எழுத முடியலனாலும் எப்பவாது பின்நவீனக்கவிதைன்னு எழுதி உயிர வாங்குவியே. அது கூட ஸ்டாப் பண்ணிடலாம். என்னைக் கேட்டா சிறுகதை கூட வேணாம்

me : சிறுகதையுமா பாஸ்? அது மாசத்துக்கு ஒண்ணுதான் எழுதறேன். வேணாமா?

xxx : என்னவோ உங்கிட்ட சொல்லனுன்னு தோணுச்சுப்பா. நீயெல்லாம் நல்லா எழுதறவன் அதனால் சொன்னேன்

me : ம்ம்ம்

xxx :   தப்பா நினைக்கலைன்னா ஒன்னு சொல்றேன். எதுக்கு சினிமா விமர்சனம்? அதுவும் பிரச்சினை வர்ற மாதிரி. There are many things under they sky. y cinema? விட்றுப்பா. இசை விமர்சனம் ஓக்கே. ஆனா அதையும் ஸ்டாப் பண்றது நல்லது

me : ம்ம்

xxx : ஏன் சொல்றேன்னா, சாளரத்த படிச்சா ஜாலியா இருக்கும்ன்னு நம்பறாங்க. எதுக்கு வீண் சண்டை? அதான். அப்புறம் விஜய் பத்தி எழுதறதையும் நிறுத்திடு.

me : அது வந்து சகா.

xxx : உன் இஷ்டம்ப்பா. நீ எல்லோருக்கும் பொதுவானவன். அதனால் சொன்னேன்..

me : ம்ம்

xxx : முன்னாடி ஃபோட்டோ எல்லாம் போட்டியே. அது கலக்கல்

me : நன்றி சகா

xxx : ஆனா அதுக்கு தனியா ஒரு பிளாக வச்சிக்கோ. அதே மாதிரி தோழி அப்டேட்ஸ் தான் ட்விட்டர்ல போடறியே. மறுபடியும் எதுக்கு பிளாகுல? ஏன் சொல்றேன்னா அப்பதான் உனக்கு ட்விட்டர்லயும் ஃபாலோயர்ஸ் கூடுவாங்க. அததுக்கு ஒரு ஸ்பெஷல் வச்சிக்கோ.. ஆல் ஏரியாலும் நீ கில்லிப்பா

me : ஆமா சகா. நல்ல ஐடியா

xxx : நீ தப்பா நினைக்கலைன்னா ஒண்ணு சொல்றேன். கார்க்கி எதுக்கு மெசெஜ் சொல்லனும்? குசும்பனே கிண்டலடிச்சார். அதனால மெசெஜ் சொல்ற பதிவ தவிர்த்தா நல்லது. அப்புறம் நீ ஏன் வீட்டுல இருக்கிறவங்கள பத்தி எழுதற? பப்லுவுக்கு கண்ணு பட்டுடும். இன்னொரு தடவ அந்த பேர பிளாகுல பார்த்தேன். அவ்ளோதான்

me : ரைட்டு சகா. உங்க அக்கறைக்கு நன். சரி விடுங்க

xxx : உன் பிசினஸ் எல்லாம் எழுதனியே.

me : அத பத்தி எழுதவா?

xxx : எல்லா விஷயத்தையும் எழுதிட்டா உனக்குன்னு என்ன இருக்கு சகா? அதை எழுதாம இருக்கிறதெ நல்லதுன்னு தோணுது.

me : புட்டிக்கதைகள், காக்டெயில் மட்டும் தான் இருக்கு

xxx : இப்பலாம் நீ காக்டெயில்னு தலைப்பு வைக்காம எழுதற போலிருக்கு. ஆனா ஒண்ணு சொல்றேன் சகா. இந்த மாதிரி தொகுப்பு பதிவு மலிவாயிடுச்சு. மொக்கையை குறை. அந்த மாதிரி வேணாம். வலையுலக மேட்டரும் பொதுவான ஆட்களுக்கு புரியாது. சோ ஸ்டாப் தட் நான்சென்ஸ் டூ

me : சரி சகா.  வாரம் 4 புட்டிக்கதை போட்டு ஜமாய்ச்சிடுவோம்

xxx : அய்யோ. அப்படி டைல்யூட் பண்ணிடாத சகா. மாசம் ஒண்ணோ ரெண்டோ போடு

me : ம்ம். அப்படி சொல்றீங்களா?

xxx : ஏதோ நீ நல்லா வருவன்னு நம்பிக்கை இருக்கிறதால் நேரம் ஒதுக்கி சொல்றேன். அப்புறம் உன் இஷ்டம். மொக்கைதான் உன் பலம். ஆனா கொஞ்ச நாளைக்கு மொக்கையே எழுதாம இரு. அப்புறம் பாரு உன் எழுத்த. நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேன்னா?

me : ச்சே. அப்படியில்ல சகா.

xxx : சரி அதெல்லாம் விடு. நாளைக்கு என்னப்பா போஸ்ட்?

me :  போடாங்ங்ங்ங்ங்ங்ங்க

Mar 9, 2011

பாலிடிக்ஸ் பாடல்கள்

10 கருத்துக்குத்து

மூளை திருகும்.. மூச்சுக்குள் அடம்பிடிக்கும்..

இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும்

___________________________________________________________

தருவியா.. தரமாட்டியா.. தரலைன்னா உன் பேச்சு க்கா

___________________________________________________________

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்.

புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்.

___________________________________________________________

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்.அவன் யாருக்காக கொடுத்தான்?

ஒருத்தருக்கா கொடுத்தான். இல்லை ஊருக்காக கொடுத்தான்.

___________________________________________________________

விண்ணைக்காப்பான் ஒருவன்.. மண்ணைக்காப்பான் ஒருவன்

உன்னை என்னை காக்கும் அவனே அவனே இறைவன்

___________________________________________________________

 

ஆண்டவன பார்க்கணும்.. அவனுக்கும் ஊத்தணும்..

அப்ப நான் கேள்விக்கேட்கணும்.

___________________________________________________________

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை..இது ஊரறிந்த உண்மை..

நான் செல்லுக்கின்ற பாதை..பேரறிஞர் காட்டும் பாதை

___________________________________________________________

நிறம் மாறும் உலகில்.. நிலைக்கும் என்ற கனவில்

வாழும் மனித ஜாதி. அதில் வாழ்வதில்லை நீதி..

___________________________________________________________

எங்கே செல்லும் இந்த பாதை?? யாரோ யாரோ அறிவார்!

Mar 8, 2011

வாக்கிங்கை குறைத்தால் ஒல்லியாகலாம்

8 கருத்துக்குத்து

 

   வழக்கம் போல் அன்றிரவு லேப்டாப்புடன் அமர்ந்திருந்தேன். வழக்கம் போல கெலாக்சையோ எதையோ ஸ்வாஹா செய்து கொண்டிருந்தான் பப்லு. வழக்கம் போல் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அம்மா.

சேட்டில் ஒரு நண்பர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அலுவலகத்தில் ஒரு பெண் பால்கனியில் நின்று எதையோ ரசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தவுடன் சொன்னாராம்

“ஒரு நிலா
சூரியனை
ரசிக்கிறது”.

வேற வேலையே இல்லையாடா என்று அம்மா ஆரம்பித்தவுடன் பப்லுவைப் பார்த்தேன். மின்சார கண்ணாவில் மனோபாலா அண்ட் கோ தருவது போல வித்தியாசமான ரியாக்‌ஷன் ஒன்றை தந்துவிட்டு மீண்டும் கெலாக்சில் மூழ்கினான். அப்போதுதான் அது என்னை நோக்கி வீசப்பட்ட அம்பு என்பதே புரிந்தது. சீரியல் முடிந்துவிட்டது போல என்றெண்ணிக் கொண்டே லேப்டாப்பை மூடினேன்.  சிறுது நேரத்தில் மொபைல் லேசாக அலறியது. எஸ்.எம்.எஸ்

“Hey. Its raining here”. அதே பெங்களூரில் இருந்து இன்னொரு நண்பன். சென்னையில் லோ வோல்டேஜ் பவரில் மின்விசிறி கூட லஷ்மன் ரன் ஓடுவது போல ஓடிக் கொண்டிருந்தது. பெருமூச்சினூடே “Lucky banglore. Enjoy “ என்று ரிப்ளை அனுப்பினேன். அடுத்த மெசெஜில் ஆலங்கட்டி மழை என்று சொல்லியிருந்தார் அந்த நண்பர். என்ன செய்யலாம் என்று யோசித்து “If it rains here, will go to beach.. mmm” என்றி பதிலனுப்பினேன். அதான் மழை வரல இல்ல என்று அவர் அனுப்பினார். இன்னும் சில நாளில் சென்னையில் மழை வரலாம். ஆனால் எத்தனை நாள் ஆனாலும் பெங்களூரில் பீச் வருமா என்று கேட்டுவிட்டுதான் யோசித்தேன், கொஞ்சம் ஓவராத்தான் போறோமா என்று. பரிகாரமாக ஒன்று அனுப்பினேன். “Nallavanga irunthathaan mazahai varumaam.when will you come to chennai?”.

கெலாக்ஸ் தீர்ந்துவிட்டது போல.அதுவரை அமைதி காத்த பப்லு சொன்னான் “பாட்டி. இப்போ மொபைல் எடுத்துக்கிட்டான். நகரவே மாட்றான் பாட்டி” அப்போது அவன் எழுந்து நடந்துக் கொண்டிருந்தான் கிச்சனை நோக்கி. அம்மா உடனே ஆரம்பித்தார்கள். தொப்பை பெருசாகிட்டே போதுடா. கவனி. கொஞ்ச நாள் ஜாகிங், ஜிம் ஏதாவது போயேன். இல்லைனன விட்டுப் போனா டேன்ஸ் கிளாசாவது போலாமில்ல” அவர்கள் கண்ணுக்கு பப்லு தெரியவே இல்லையா என்றவுடன் அவனையும் கூட்டிட்டி போக சொன்னார்கள்.

ஜாகிங் எல்லாம் நமக்கு ஒத்துக்காதுடா வாகிங் போலாம் என்றான் பப்லு. மறுநாள் காலை போவது என்று முடிவானது. இந்தப்பக்கம் போய் அந்தப்பக்கம் வரலாமென மேப் தயாரித்தான் பப்லு. அவன் சொன்னபடியே சென்றோம். முடிவில் ஒரு ஹோட்டலின் அருகே போனவுடன் சொன்னான் பப்லு “டேய் கார்க்கி. இங்க இடியாப்பம் பாயா சுப்பரா இருக்கும்டா. சாப்ட்டு போலாமே”. வாகிங் சென்று கரைத்த மொத்த கலோரியையும் போல இரண்டு மடங்கு ஏறுவதற்கு வழி சொன்னான். அவன் பிடித்த அடத்தில் வேறு வழியில்லாமல் அவனுக்கு மட்டும் வாங்கித் தந்தேன். வீட்டில சொல்லாதடா என்று மிரட்டினானா வேண்டினானா என்று தெரியவில்லை. ஆனால் சொன்னான். இப்படியாக எங்கள் வாக்கிங் பாயாவிலும், வடைகறியிலும் நல்லபடியாக நடந்துக் கொண்டிருந்தது. அவ்வபோது நானும் பப்லுவுடன் ஜமாய்க்க ஆரம்பித்தேன்.

ஒருநாள் வாகிங் முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு அலுவலகம் கிளம்பி வந்து பார்த்தால் தோசையுடன் மல்லுக் கட்டிக்கொண்டிருந்தான். வாக்கிங் போனதிலிருந்து ஒரு தோசை கம்மியா சாப்பிடுகிறான் என்று வேறு சொன்னார்கள் அம்மா. ”நாளைக்கு சீக்கிரம் வாங்கடா. ஸ்கூலுக்கு லேட் ஆயிடுது” என்ற அக்காவைப் பார்த்தேன். ம்க்கும். அடுத்த நாள் அதே மாதிரி பாயாவுக்கு தயாராகிவிட்டான் பப்லு. நான் கிளம்ப லேட் ஆனதும் அக்கா மீண்டும் “சீக்கிரம் வாங்கடா” என்றார்கள். வெளியே வந்து பப்லு “மாமா.ஹெல்மேட் எடுத்துக்கோ என்றான். என்னடா என்றால் லேட் ஆகுது இல்ல. இன்னைக்கு பைக்ல வாகிக்ங் போலாம் என்றான்.

முடிவு செய்துவிட்டேன், இவனுடன் சேர்ந்தால் நான் உருப்படாம போயிடுவேன். இருக்கிற தொப்பையே போதுமென வாக்கிங்கை ரத்து செய்து விட்டேன்.

Mar 7, 2011

இன்னொசெண்ட் இளங்கோ

11 கருத்துக்குத்து

 

நடப்பது திமுக ஆட்சி என்பதால் 24 மணி நேரமும் சூரியன் இருக்க முடியுமா? மெல்ல மறைந்துக் கொண்டிருந்தது. செவ்வானம் இன்னும் அழகாய் மாறிக் கொண்டிருந்தது. கடலுக்கு முகத்தையும், சூரியனுக்கு முதுகைதையும் காட்டியபடி அமர்ந்திருந்தார்கள் இளங்கோவும், ஷாலினியும். நகம் கடித்துக் கொண்டிருந்தவனின் கைகளை இழுத்து தன் கைகளுக்குள் ஒளித்துக் கொண்டாள். இளங்கோ எப்போதுமே இப்படித்தான். அவனை இன்னொசெண்ட் இளங்கோ என்பார்கள் அனைவரும். கைகளைத் தேடி வரும் பந்தை கோட்டை விடும் முனாஃப் பட்டேலை போன்றவன் இளங்கோ. ஷாலினி அவனை எப்படியாவது ரொமாண்ட்டிக்கான ஆளாக மாற்ற போராடிக் கொண்டிருந்தாள்.

இளங்கோ.. இந்த கடல் எவ்ளோ ஆழம் இருக்கும்?

ம்ம்..ரொம்ப..

10000 அடியாம். அந்த வானம் எவ்ளோ தூரத்துல இருக்கும்?

எதுக்கு?

நீயும் நானும் மட்டும் தனியா.. அங்க போயிடலாம்.

ம்ம்.

உயரம், ஆழம், வேகம்.. இப்படி எல்லாத்தையும் அளக்க ஒரு மெஷர்மெண்ட் இருக்கு.

அதுக்கு என்ன?

ஆனா அன்பு, காதல் இதையெல்லாம் எப்படி அளக்க ? உன்னை எனக்கு எவ்ளோ புடிக்கும் தெரியுமா?

ஷாலு..

இளங்கோ ஷாலினியின் பக்கம் திரும்பினான். அவள் கண்களையே உற்று பார்த்தது ஷாலினிக்கு வெட்கமாய் இருந்தது. கைகளை கெட்டியாய் பிடித்தவன், கன்னங்களை அழுத்தி பிடித்து சொன்னான்

“ஷாலு. நான் ஃபிசிகிஸ்ல ரொம்ப வீக். ட்வெல்த்ல 72ல ஜஸ்ட் பாஸ். ப்ளீஸ் சாவடிக்காத.”

இப்படித்தான் எல்லாவற்றிலும் சொதப்புவான் இளங்கோ. இன்னொரு நாள் ஷாலினி இவனை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என நினைத்தாள். . தாவணியில் இருந்தவள் தூங்குவது போல் நடித்தாள். தாறுமாறான பொசிஷனில் இருந்தவளை பார்த்த இளங்கோ அவளை நெருங்கினான்.

ஷாலு.

…..

ஏய்.. நிஜமா தூங்கிறியா????

……..

அவள் முகத்தின் அருகே சென்று உற்றுப்பார்த்தான் இளங்கோ. அவள் எழுந்திருப்பதாய் இல்லை. சிரித்துக் கொண்டே அவள் இடுப்பில் கை வைத்தான்.  சிணுங்கவும் இல்லை, சிரிக்கவும் இல்லை ஷாலு. தைரியம் வந்ததை போல் சிரித்தான் இளங்கோ. கதவை மூடிவிட்டு வந்தவன் இடுப்பின் ஓரமாய் ஒட்டியிருந்த தாவணியையும் விலக்கினான். விழுந்துவிட்டதாக நினைத்தாள் ஷாலு. அதன்பின் அன்று இளங்கோ செய்ததை இன்று நினைத்தாலும் எரிந்து விழுவாள் ஷாலு. என்ன செய்தான் தெரியுமா?????????????

 

 

 

 

 

 

 

ஜிந்தாக்த்தா ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக்த்தத்தா…..

இதுதான் இளங்கோ. இவனின் பாடாவதி செயல்களை இனி வரும் நாட்களில் பார்ப்போம்.

Mar 3, 2011

இப்ப வாங்கடா பதில் சொல்ல

20 கருத்துக்குத்து

 

மண்டையை குழப்பும் 10 கேள்விகள்:

1) பாஸ்போர்ட் சைசு ஃபோட்டோ ஏன் பாஸ்போர்ட்ட விட சின்ன சைசுல இருக்கு?

2) SAVE TIGERS என்னும் இந்திய அரசு ஏன் இலங்கையில் வாழ்ந்த புலிகளை அழித்தது?

3) வெளியே செல்லும்போது இந்திரா நூயி, ரிலையன்ஸ் என்றெல்லாம் சொல்லாமல் டாடா என்று சொல்வது ஏன்?

4) செவ்வணக்கம், செம்மண் என்பதெல்லாம் சிவப்பு நிறத்தை குறிக்குமென்றால் செம்மொழி என்பதன் மூலம் நாமும் சிவப்பாகிறோமா?

5)  பெண் சிங்கம் பார்க்காமல், சிங்கம், முரட்டு சிங்கம் பார்த்தால் ஆணாதிக்கமா?

6) செம்மொழி மாநாட்டை நடத்தியதன் மூலம் கோவையை மதிமுக ஆக்கியதா தமிழக அரசு?அதவாது கோவையை “தலைகீழாக” மாற்றியதா?

7) அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சி முடிந்துவிட்டதால் அடுத்து  அ.த.ம சீசன் 2 வருமா அல்லது “குருவி” வருமா?

8) இந்த தடவ யாருக்கும்மா ஓட்டு என்றால் அம்மிணிகள் திமுக என்பார்களா?இல்லை சந்தோஷ் அல்லது சக்திக்கு என்பார்களா? (கே.கு - அவங்க சூப்பர் சிங்கர்ஸ்)

9) சந்திரபாவும் , கவுண்டமணியும் லெஜெண்ட்ஸ் என்றால், கோவை சரளாவும் மனோரமாவும் லெ”லேடிஸ்” என்று சொல்லலாமா?

10) எதிர்பதிவே போட முடியாதபடி 9 கேள்வி அமைக்க நான் மண்டைய உடைச்சுக்கிட்ட மாதிரி, எதிர்பதிவு போடுபவரும் மண்டைய உடைச்சுப்பாரா?

Mar 2, 2011

தோழியார்

24 கருத்துக்குத்து

 

image

இன்னைக்கு குட்நைட் சொல்ல மாட்டேன்.ஏன்னா சிவராத்திரி என்று சிரித்தாள் தோழி. நீ குட்நைட் சொல்லலைன்னா எல்லா நாளுமே சிவராத்திரிதான் செல்லம் என்று சொல்ல வேண்டும் அவளிடம்.

_____________________________________

என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று கேட்டதற்கு பிளாங்க் எஸ்.எம்.எஸ் அனுப்பினாள் தோழி. பயந்து போய் ஃபோன் செய்தால் “அவ்வளவையும் அனுப்ப எஸ்.எம்.எஸ் போதுமாடா? அது எல்லையில்லாதது” என்று இளிக்கிறாள்.

________________________________________

உனக்கு எத்தனை பசங்க வேணும் என்றாள் தோழி. அஞ்சு. அஞ்சும் உன்னை மாதிரி அழகான பொண்ணுங்க என்றேன். அஞ்சு பெத்தா அரசனும் ஆண்டி ஆவான். தெரியாதா என்றாள் தோழி. அரசன் அஞ்சு புள்ள பெத்து வயசானா அங்கிள்தானே ஆவான்? அரசிதானே ஆண்டி ஆவாள் என்றதற்கு அடிக்கிறாள் இன்றைய அரசி, எதிர்கால ஆண்ட்டி.

_______________________

பணத்தால் வாங்க முடியாத மூணு விஷயம் சொல்லு என்றேன் தோழியிடம். உன் அன்பு, ஆரோக்கியம் என இழுத்தவள் நீயே சொல்லு என்றாள். வெற்றிப்பெற்ற சந்தோஷத்துடன் செளரவ் கங்குலி என்றேன். இரண்டு மண்டலத்துக்கு முத்தம் கிடையாது என்று சொல்லிவிட்டாள். கங்குலியின் பெயரை ஏன் எந்த ஐ.பி.எல் சொல்லவில்லை என்று அப்போதுதான் புரிந்தது

____________________

உனக்கு ஏண்டா லவ் மேரேஜ் பிடிக்கும் –தோழியின் இன்னொரு சந்தேகம். பொற‌ந்ததால வாழுற‌து அரேஞ்சுடு மேரேஜ். வாழுற‌துக்காக‌ பொற‌ப்ப‌துதான் ல‌வ் மேரேஜ் என்றேன். இரண்டு முத்தம் கிடைத்தது.

இன்னொரு நாள் அதே கேள்வியைக் கேட்டாள். இன்னொரு நாள் என்பதால் இன்னொரு பதிலை சொன்னேன். ”க‌ல்யாண‌ம்ற‌து ரஜினி ப‌ட‌ம் மாதிரி. ந‌ல்லா இல்லைனாலும் ஓடும். ல‌வ்வுன்ற‌து க‌ம‌ல் ப‌ட‌ம் மாதிரி. ஓட‌லைனாலும் ந‌ல்லா இருக்கும்”. ”நம்ம காதல் ஓடாதுன்னு நினைக்காத. உன்னை இழுத்துட்டு ஓடிடுவேன்” என்கிறாள் என் ஆசை பி.டி.உஷா

_________________

சாமி மீது அதீத‌ ப‌ற்று உள்ள‌வ‌ர்க‌ள் சாமியார் ஆகும் போது நான் ஏன் தோழியார் ஆக‌ கூடாது?

________________________

நல்ல இசை எங்கேயும் கிடைக்கவில்லை. தோழிக்கு ஃபோனை போட்டு பேசிவிட  வேண்டியதுதான்

Mar 1, 2011

ஜஸ்ட் மிஸ்

15 கருத்துக்குத்து

 

தெரியாம‌ ஒரு நாள் லீவ் போட்டேங்க‌. சும்மாதானே இருக்க‌.போய் ப‌ப்லுவ‌ கூட்டிட்டு வான்னு அம்மா சொன்னாங்க‌. நானும் போனேன். என் கெட்ட‌ நேர‌ம், ப‌ப்லுவோட த‌மிழ் டீச்ச‌ர் என்கிட்ட‌ ஏதோ பேசுணும்னு சொன்னாங்க‌.

டீச்ச‌ர் : நீங்க‌ அவ‌ங்க‌ அங்கிளா? இவ‌னுக்கு வாய் ரொம்ப‌ அதிக‌மா இருக்குங்க‌.

நான் : என்ன‌ செஞ்சான் மிஸ்?

டீச்ச‌ர் : ஹோம் ஒர்க் செய்யாத‌ ப‌ச‌ங்க‌ள‌ வெளிய‌ நிக்க‌ வ‌ச்சிருக்காங்க‌ ச‌யின்ஸ் டீச்சர். இவ‌ன் கூட‌ வெளிய‌ வ‌ந்த‌ ப‌ச‌ங்க‌க்கிட்ட‌ "நாம ஹாஸ்ட‌லுக்கு போயிட‌லாம்டா"ன்னு சொன்னானாம். கேட்டா ஹாஸ்ட‌ல் ஒர்க் யாரு த‌றாங்க‌ன்னு சொல்றான்.

நான் :ஓ. விளையாட்டா சொல்லிட்டான் மிஸ். சாரி

டீச்ச‌ர் : அது ப‌ர‌வாயில்லைங்க‌. இவ‌ன் கூட‌ ரேஹான்னு ஒரு பைய‌ன் ப‌டிக்கிறான். கொஸ்டீன் பேப்ப‌ர் ரொம்ப‌ ட‌ஃப். ஆன்ச‌ர் ப‌ண்ற‌து ரொம்ப‌ க‌ஷ்ட‌ம்னு சொல்லியிருக்கான் அவ‌ன். அதுக்கு இவ‌ன் விடுறா. பேப்ப‌ர் திருத்த‌ மிஸ் அதை விட‌ ரொம்ப‌ க‌ஷ்ட‌ப்ப‌டுவாங்க‌னு சொல்லியிருக்கான். ஃபோர்த் ஸ்டேன்ட‌ட்ர்டு பைய‌ன் பேசுற‌ பேச்சா சார் இது?

நான் :அவ‌ங்க‌ பேர‌ன்ட்ஸ் கிட்ட‌ சொல்றேன்.

டீச்ச‌ர் : இது ம‌ட்டுமில்லாம‌ ரைமிங் வேர்ட்ஸா பேசுறான். காரு பேர்தான் இன்டிகா. காருல‌ போற‌வ‌ங்க‌ மோனிகான்னு எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்துட்டான். எல்லா ப‌ச‌ங்க‌ளும் அதையே சொல்லி அந்த‌ பொண்ணு தின‌மும் அழ‌றா.இந்த‌ மாதிரி எல்லோருக்கும் ஒரு ரைமிங் ட‌ய‌லாக் சொல்றான். ப‌டிக்கிற‌ பைய‌ன் செய்ற‌ வேலையா இது?

நான் :புரியுது மிஸ். நீங்க‌ கொஞ்ச‌ம் மிர‌ட்டி, அடிச்சு பார்க்க‌லாமே?

டீச்ச‌ர் : அடிக்கிற‌தா?அத‌ நீங்க‌தான் செய்ய‌ணும். மார்க் எல்லாம் ந‌ல்லா எடுக்கிறான். கிளாஸ்ல‌ அமைதியா இருக்கான். ல‌ன்ச் டைம்ல‌, ஸ்கூல் முடிஞ்ச‌வுட‌னேதான் இதெல்லாம் செய்றான். இவ‌ன‌ ப‌த்தி க‌ம்ப்ளைய‌ன்ட் வ‌ராத நாளே கிடையாது.

நான் : அவ‌ன் அப்பாகிட்ட‌ சொல்றேன் மிஸ். அவருக்குத்தான் பயப்படுவான்.

டீச்ச‌ர் : ஒவ்வொரு கிளாஸிலும் வால்ப‌ச‌ங்க‌ 10, 15 பேர் இருப்பாங்க‌. அந்த‌ கிளாஸ் டீச்ச‌ர் எல்லாம் நிம்ம‌தியா இருக்காங்க‌. ஒரே ஒரு ஸ்ரீகேஷ‌ வ‌ச்சிக்கிட்டு நான் ப‌டுற‌ அவ‌ஸ்தை இருக்கே

நான் :(மன‌சுக்குள் அய்ய்ய்ய‌ய்ய்ய்ய்யோ என்று சொல்லிக் கொண்டேன்)

டீச்ச‌ர் : ஸ்கூலில் எல்லாம் பிர‌ச்சினை இல்லைங்க‌. இவ‌ன‌ திருத்த‌ ஒரு வ‌ழிதான் இருக்கு. நீங்க‌தான் செய்ய‌ணும்

நான் :சொல்லுங்க‌ மிஸ். நான் செய்றேன்.

டீச்ச‌ர் : உங்க‌ வீட்டு ப‌க்க‌த்துல‌ யாரோ ஒருத்த‌வ‌ங்க‌ தான் இவ‌ன‌ கெடுக்கிறாங்க‌. இந்த‌ மாதிரி மொக்கையா பேசுற‌ ஆளு யாராவ‌து இருந்தா அவ‌ங்க‌ கூட‌ இவ‌ன‌ சேர‌ விடாதீங்க‌. பேச‌வே விடாதீங்க‌. அவ‌ன‌ அடிச்சா இவ‌ன் திருந்திடுவான்

நான் : அப்ப‌டியா? தேங்க்ஸ் மிஸ். நான் யாருன்னு பார்க்கிறேன்.

__________________

(நானும் பப்லுவும் கிளம்ப, பப்லு மட்டும் கிளாஸ்ரூமுக்குள் போன மிஸ்ஸை முறைத்துக் கொண்டிருந்தான்)

நான் : எதுக்குடா அந்த மிஸ்ஸ முறைக்கிற?

பப்லு: என்கிட்ட பேச வேணாம்ன்னு உன்கிட்டயே சொல்றாங்க. அந்த மொக்கையே நீதான்னு தெரில. இவங்க சொல்லிக் கொடுத்து நாங்க என்ன படிச்சு…. இவங்க மிஸ் இல்லைடா. ஜஸ்ட் மிஸ்…

 

all rights reserved to www.karkibava.com