Feb 14, 2011

ஏழுவின் காத‌ல் சோக‌ம் (காத‌ல‌ர் தின‌ சிற‌ப்புப்ப‌திவு)


  காத‌ல் மீது விர‌க்தியில் இருக்கும் ந‌ம்ம‌ ஏழு நேத்து வ‌ழ‌க்க‌ம் போல‌ அரைபிய‌ரும், வாட்ட‌ர் பாக்கெட்டையும் துவ‌ம்ச‌ம் செய்த‌ பின் சொன்ன‌ க‌தையை எழுதியிருக்கிறேன்.சோ, க‌தை -  ஏழு. எழுத்தாக்க‌ம் - ‍கார்க்கி.ஓகே?
____________-

இன்னைக்கு காத‌ல‌ர் தின‌மாம். த‌மிழ‌ர்க‌ள் நியூ இய‌ர் கொண்டாடும்போது என்னை மாதிரி சிங்கிள் சிங்க‌ங்க‌ள் வேல‌ன்ட்டைன்ஸ் டே கொண்டாட கூடாதா? லீவு கேட்டால் உன‌க்கு எதுக்கு லீவு என்கிறார் டேமேஜ‌ர். கொடுமை. 45 வ‌ய‌தில் அவ‌ர் லீவு போட்டிருக்கிறார். ல‌வ்வுக்கு எதுக்குடா வ‌ய‌சுன்னு ம‌ட்டும் சொல்லிடாதீங்க‌. ஏன்னா, டொய்ங்ங்ங்ங்ங்ங்.. ஃப்ளாஷ்பேக்.

அப்போ நான் யூ.கே. ஜி ப‌டிச்சிட்டுருந்தேன். ப‌க்க‌த்து சீட்டு ஷைலுவிட‌ம் "இந்தா இன்னொரு ப‌ல்ப‌ம்" என்று கொடுத்த‌ போது உஷா டீச்ச‌ர் பார்த்துவிட்டு உடைத்துவிட்டார், ப‌ல்ப‌த்தையும் என் காத‌லையும். போதாதென்று அம்மாவிட‌ம் குற்ற‌ச்சாட்டு " உங்க‌ பைய‌ன் பொண்ணுங்க‌ ப‌க்க‌த்திலே உட்காரான்". நீ வ‌ள‌ர‌ணுன்டா ஏழு என‌ என‌க்கு நானே சிலேட்டில் எழுதுக் காட்டிக்கொண்டேன்.

ஒரு வ‌ழியாக‌ ப‌த்தாவ‌து வ‌ந்து சேர்ந்துவிட்டேன். 15 வ‌ய‌சு. ப‌ருவ‌ம் ப‌வ‌ர்ஃபுல்லாக‌ ப‌வ‌ர்ப்ளே ஆடும் வ‌யசு. தோசை செய்ய‌ ஸ்ட‌வ்வு.. மீசை வ‌ந்தா ல‌வ்வுன்னு ம‌ன‌ம் ம‌ந்த‌காச‌ நிலையில் மித‌க்க‌, ம‌துமிதாவே ந‌ம‌ஹா என‌ எல்லா புக்ல‌யும் எழுதிவைத்தேன். க‌ண‌க்கு டியூஷ‌ன் சென்று க‌ண‌க்கு செய்த‌து இது ம‌ட்டுமே. விஷ‌ய‌ம் கேள்விப்ப‌ட்ட‌ டியூஷ‌ன் சார் முத‌ல்முறையாக‌ மார‌ல் ச‌யின்ஸ் பாட‌ம் எடுத்தார். "ப‌த்தாவதுதான் ஒருத்த‌ன் லைஃபுக்கு ரொம்ப‌ முக்கிய‌ம்.ல‌வ்வுக்கு இல்லை.  ப‌டிக்கிற‌‌ வ‌ய‌சுல‌ எதுக்குடா இதெல்லாம்? நீ ந‌ல்லா ப‌டிக்கிற‌‌ பைய‌ன்" என்று சொல்லிவிட்டு போன‌வ‌ர் த‌மிழ் சினிமா ஹீரோ போல‌ கொஞ்ச‌ தூர‌ம் போன‌தும் திரும்பினார். "நான் பாட‌ம் ப‌டிக்கிற‌த‌ சொன்னேன்" என்று ப‌ன்ச் வைத்தார்.

  அடுத்த‌ காத‌ல் ப‌டிச்சி முடிச்சிட்டுதான் என்ப‌தில் நான் உறுதியாக‌ இருந்தேன். அதே போல‌ 20 வ‌ய‌தில் ஸ்டார்ட் ஆன‌து அடுத்த‌ இன்னிங்ஸ். ஒரு ப‌க்க‌ம் வேலை வேலையென‌ இன்ட்டெர்வியூவுக்கு ஓடினேன். இன்னொரு ப‌க்க‌ம் திவ்யா திவ்யான்னு காத‌லிக்க‌ ஓடினேன். பீச்சில் வைத்து க‌ட‌லை ம‌ட்டுமே போட‌ முடிந்த‌து. க‌ட‌லை வாங்க‌ காசில்லை. இந்த‌ க‌ஷ்ட‌த்த‌ சொல்லி அழ‌ ந‌ண‌ப‌னை வ‌ர‌ சொன்னேன். பிய‌ர் வாங்கித் த‌ந்த‌வ‌ன் சைட் டிஷாக‌ அட்வைசையும் த‌ந்தான். "வேலைக்கு போ மாமு. அப்புற‌ம் பாரு. எல்லா ஃபிக‌ரும் உன் பின்னாடி வ‌ருவாங்க‌" இதென்ன‌டா வ‌ம்பா போச்சு என‌ திவ்யாவையும் ம‌ற‌ந்து போனேன். திவ்யா இல்லைன்னா ஒரு த்ரிஷா என‌ என்னை நானே தேற்றிக் கொண்டேன்.

அப்புற‌ம் வேலையில் சேர்ந்து. ந‌ல்லா ச‌ம்பாதிச்சு, லைஃபுல‌ செட்டில் ஆன‌பின் ஒரு ந‌ல்ல‌ நாளில் ல்த‌கா சைஆ மீண்டும் துளிர் விட்ட‌து. இந்த‌ முறை ந‌ம்மை த‌டுக்க‌ எந்த‌ கார‌ண‌மும் இல்லை. ம‌வ‌னே சொல்லி அடிக்க‌ணும்டா ஏழு என‌ க‌ள‌த்தில் இற‌ங்கினேன். நினைத்த‌ப‌டியே ஒரு டைவாவும் சிக்கிய‌து. லொள்ளையும், ஜொள்ளையும் ஒன்றாக‌ சேர்த்து ஊற்றி காத‌ல் செடியை வ‌ள‌ர்த்துக் கொண்டிருந்தேன். விஷ‌ய‌ம் கேள்விப்ப‌ட்ட‌ ஒரு வெல் விஷ‌ர் சொன்னார். "எல்லாம் புரியுது ஏழு. ஆனா இதை நீ க‌ல்யாண‌துக்கு முன்னாடி செஞ்சிருக்க‌ணும்".

சார். என‌க்கு இன்னும் க‌ல்யாண‌ம் ஆக‌ல‌!

டேய். நான் உன்னை சொல்ல‌ல‌. அவ‌ங்க‌ள‌ சொன்னேன்.

ப்ச். 35 வ‌ய‌சுல‌ ல‌வ் ப‌ண்ணா க‌ல்யாண‌ம் ஆன‌ ஆன்ட்டி கிடைக்காம‌ டாப்சியா கிடைக்கும்?
_______________________

அனைவ‌ருக்கும் காத‌ல‌ர் தின‌ வாழ்த்துக‌ள்

.

18 கருத்துக்குத்து:

ஷர்புதீன் on February 14, 2011 at 9:56 AM said...

HAI VADAI!!

Venky on February 14, 2011 at 9:57 AM said...

Puriyuthu, All the best

குழந்தபையன் on February 14, 2011 at 10:03 AM said...

@iamkarki தோசை செய்ய‌ ஸ்ட‌வ்வு.. மீசை வ‌ந்தா ல‌வ்வு...arumai arumai...T.R pathipoo..

Deepan Chakkaravarthy on February 14, 2011 at 10:05 AM said...

Kalakittadaa kapi...

புன்னகை on February 14, 2011 at 10:28 AM said...

suya saridhai??? :P

Anonymous said...

சகா!!!
உண்மையிலேயே கதை ஏழூவோடதுதானா???
;)

வள்ளி on February 14, 2011 at 11:03 AM said...

ஏழுவை தனியே புலம்பவிட்ட கார்க்கிக்கு என் கண்டனங்கள் :)

கார்க்கி on February 14, 2011 at 3:50 PM said...

thanks sharfudeen, venky, kuzanthapaiyan, deepan, punnagai, thamiziniyan, valli

:)

Suresh Kumar M on February 14, 2011 at 4:14 PM said...

ஏழு'க்கு ஏழாம் இடத்தில் ஏழு சனி தலைகிழ நின்னு ஆடிருக்குமோ!...

தராசு on February 14, 2011 at 4:18 PM said...

என்னது, ஏழுவுக்கு சோகமா, ஆஹா, தாங்க முடியலப்பா.....

பொன்கார்த்திக் on February 14, 2011 at 6:50 PM said...

:)

அன்புடன் அருணா on February 14, 2011 at 8:06 PM said...

/ஏழு'க்கு ஏழாம் இடத்தில் ஏழு சனி தலைகிழ நின்னு ஆடிருக்குமோ!.../
ஹாஹாஹாஹாஹா சிரிச்சு முடியலை!

மாணவன் on February 15, 2011 at 6:21 AM said...

//ப்ச். 35 வ‌ய‌சுல‌ ல‌வ் ப‌ண்ணா க‌ல்யாண‌ம் ஆன‌ ஆன்ட்டி கிடைக்காம‌ டாப்சியா கிடைக்கும்//

செம்ம கலக்கல்.. :)

உமா கிருஷ்ணமூர்த்தி on February 26, 2011 at 10:18 PM said...

ஹா..ஹா..நன்றாக இருக்கின்றது
// 35 வ‌ய‌சுல‌ ல‌வ் ப‌ண்ணா க‌ல்யாண‌ம் ஆன‌ ஆன்ட்டி கிடைக்காம‌ டாப்சியா கிடைக்கும்//

ஆண்கள் அந்த வயதில் தான் பக்குவம் அடைகிறார்கள்.அதனால் முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.

gautham on April 13, 2011 at 8:45 PM said...

Intha katha AUTOGRAPH padam mathiriye irukke.....engeyo idikkuthe???

harini on May 3, 2011 at 1:24 PM said...

Wow..superb story...i like it... :-)

harini on May 3, 2011 at 1:25 PM said...

Nice... keep trying... :-)

anand on June 30, 2011 at 1:37 PM said...

SUPER

 

all rights reserved to www.karkibava.com