Feb 8, 2011

ஆடுறா ராமா


 

சினிமா மீது மோகம் வரும் முன்பே நடனத்தில் மீது காதல் உண்டெனக்கு. நான் பார்க்கும் எல்லாப் படங்களிலும் சற்று உற்று கவனிக்கும் ஒரு விஷயம் நடனம். என்னைக் கவர்ந்த சில நடன இயக்குனர்களைப் பற்றிய பதிவு தான் இது.

இந்தப் பட்டியலில் பிரபுதேவா, ராகவா லாரன்ஸ், ராஜூ சுந்தரம் ஆகியோரை சேர்க்கவில்லை. ஒரு டான்சராக எனக்கு பிரபுதேவாவைத்தான் பிடிக்கும். ஆனால் Choreographer என்ற வகையில் ராஜு சுந்தரத்தின் பரம ரசிகன். லாரன்ஸும் நல்ல நடன இயக்குனரே.

1) ஷோபி:

shobi

ஆத்திச்சூடி பாடலில் ஆடினாரே அவரேதான். ராஜு சுந்தரத்தின் பள்ளியில் இருந்து வந்தவர். பல படங்களில் பார்த்திருப்பீர்கள். எனக்கு தெரிந்து ராஜூவின் குழுவில் இருந்து வந்தவர்களில் வித்தியாசமான முறையில் நடனம் அமைப்பவர் இவர்தான். வாள மீனுக்கு பாடலுக்கு இவரது நடனம் அத்தனை கச்சிதம். என்னைப் பொறுத்தவரை அந்தப் பாடலின் மாபெரும் வெற்றிக்கு காரணம் மாளவிகாவும் நடனமும்தான்.இப்போதைக்கு எனது ஃபேவரிட் டான்ஸ் மாஸ்டர்.

ஹிட்ஸ்:

ஆத்திசூடி, கண்ணும் தான் கலந்தாச்சு, வாள மீனுக்கு விலாங்கு மீனுக்கு, வாடி வாடி கை படாத சிடி, டாக்சி டாக்சி

2) தினேஷ்

தினா என்றும் ஒருவர் இருக்கிறார். கத்தாழ கண்ணால் பாடலுக்கு நடனம் அமைத்தவர். அவரல்ல இந்த தினேஷ் . ஒரு முறை விஜயின் படத்தில் ராஜு சுந்தரம் ஒரு பாடலுக்கு நடனம் அமைக்க இருந்தார். விஜயுடன் ஆட இருந்தவர் சிம்ரன். ராஜுவுக்கும் சிம்ரனுக்கும் இடையே அப்போது பிரச்சினை இருந்தது. சிம்ரன் வருகிறார் என்ற விஷயம் தெரிந்து செட்டை விட்டு சென்றுவிட்டார் ராஜு. படப்பிடிப்பை நிறுத்தாமல் நடத்த ராஜுவின் சம்மதத்தோடு விஜய் கைகாட்டிய ஆள்தான் தினேஷ். அந்தப் பாடல் ஆல் தோட்ட பூபதி. தமிழகத்தையே ஆட வைத்த அந்தப் பாடலில் ஒரு ஓரமாக ஆடவும் செய்தார். பிரபுதேவாவின் எல்லாப் படங்களிலும் ஒரு பாடலாவது இவருக்கு இருக்கும்.

ஹிட்ஸ்:

ஆல் தோட்ட பூபதி, மாம்பழமாம் மாம்பழமாம், தீம்தனக்க தில்லானா,வா வா என் தலைவா

3) ஸ்ரீதர்

untitled

மச்சான் பேரு மதுரவில் ஆரம்பித்தது இவர் பயணம். ராஜுவின் ஆஸ்தான டான்சர்களில் ஒருவர். சில விளம்பரப்  படங்களிலும் ஆடி இருக்கிறார். இவருடன் வந்த இன்னொருவர் ஜானி. இருவருக்குமே நல்ல உடல்வாகு. ஜானி இவரை விட நன்றாக ஆடக்கூடியவர். என்றாலும் நடன இயக்குனராக அவர் கலக்கவில்லை. இவரது நடனத்தில் ராஜுவைப் போல் சற்று காமெடியும் கலந்திருக்கும்.  தமிழகத்தையே ஆட வைத்த நாக்க முக்கவின் நடனம் இவரதுதான்.

ஹிட்ஸ்:

மச்சான் பேரு மதுர,  படிச்சு பார்த்தேன் ஏறவில்லை, நாக்க முக்க

4) அசோக்ராஜா

2008101050321601

ராஜுவோட வேலை செய்திருந்தாலும் அவரது குழுவில் அதிகம் ஆடாதவர், அல்லது முன் வரிசையில் இல்லாதவர். ஆரம்பமே அதகளம் இல்லை. ஓ போடு இவரது முதல் ஹிட். பின் ஒரு சின்ன இடைவெளி. திருமலையில் வாடியம்மா ஜக்காம்மாவில் திரையில் சில வினாடிகள் தோன்றினார். தொடர்ந்து விஜய் படங்களில் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு தெரிந்து ராஜுவுக்கு அடுத்தபடி நிறைய ஒப்பனிங் சாங்கிற்கு நடனம் அமைத்தவர் என்ற பெருமை கொண்டவர். சற்று உணர்ச்சி வசப்படக்கூடியவர் என்பதை விஜய் டிவியில் வந்த ”உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அறிவார்கள்

ஹிட்ஸ்:

ஆடுங்கடா என்னை சுத்தி, வாடா வாடா தோழா, ஓ போடு, வாடியம்மா ஜக்கம்மா

5) பிரேம் ரக்‌ஷித்:

DSC_00321233077629

தெலுங்கு திரையுலகில் இருந்து வந்தவர். ஆந்திராவில் கிட்டத்தட்ட அனைத்து முண்ணனி நடிகர்களுக்கும் ஆஸ்தான நடன இயக்குனர். well defined steps  ஆக இல்லாமல் வித்தியாசமான முறையில், குறிப்பாக கால்களை மடக்கி ஆடும் ஸ்டைல் இவருடையது. ஒரு பாடல் சொன்னாலே புரிந்துக் கொள்வீர்கள். எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்ற பாடலில் விஜயின் கால்களை மடக்கி ஒடித்தவர் இவர் தான். இந்தப் பட்டியலில் ராஜுவின் பள்ளியில் இருந்து வராத ஒரே ஒருவர். இவரது தெலுங்கு பாடல்கள் இன்னும் தூளாக இருக்கும். சாம்பிளுக்கு ஒன்று இங்கே

ஹிட்ஸ்:

எல்லாப் புகழும், டன் டன் டன்னா டர்னா.

*************************************************

பின்.கு 1: இவர்களைத் தவிர சரோஜா சாமான் நிக்கோலா புகழ் கல்யான், சிம்புவின் ஃபேவரிட் ராப்ர்ட், கூல் ஜெயந்த் என பலர் இருந்தாலும் என்னைக் கவரவில்லை என்பதால் குறிப்பிடவில்லை.

பின். கு 2: விஜயின் பாடல்களே அதிகம் இருப்பதாக தெரிகிறதா? எனக்கு விஜயின் நடனம் பிடிக்குமென்பதால் அவரது பாடல்களுக்கு நடனம் அமைத்தவர்கள் பெயரை தெரிந்துக் கொள்வதில் ஆர்வம் அதிகம். மற்றவர்கள் படங்களில் அந்த ஆர்வம் இருக்காது.

இலவச இணைப்பு : என்னைப் பொறுத்தவரை பீட்ஸ், பாடலின் வேகம், ஒளிப்பதிவு, ஆடுபவர்கள் என எல்லாமும் பாடலுக்கு ஏற்றவாறு பக்காவாக (நடனத்தை பொறுத்தவரை)  அமைந்த பாடல்

 

17 கருத்துக்குத்து:

ILA(@)இளா on February 9, 2011 at 12:09 AM said...

நோபல், ஜானி என்று ரெண்டு ஜாம்பவான்கள் இப்ப எங்கேன்னே தெரியல. ஒரு காலத்துல இவுங்க ரெண்டு பேரும்தான் நாயகனுக்கு வலதும் இடதுமா இருப்பாங்க. இதுல ராபர்டும் மிஸ்ஸிங்

சி.வேல் on February 9, 2011 at 3:53 AM said...
This comment has been removed by the author.
சி.வேல் on February 9, 2011 at 4:06 AM said...

உங்களையெல்லாம் என்ன சொல்ல , ஆடியோவிலும் vijay song than supernnu sonna , enna pannamudiyum,

காவலன் பட்டாம்புச்சி பாட்டு டான்ஸ் என்ன ஆச்சு , டான்ஸ் என்ன விலைன்னு கேட்கும் திலிப் இந்த same சாங் டான்ஸ் என்ன perform பாருங்க சார்,
http://www.youtube.com/watch?v=Gou08sgRi-c

உடனே அதே டான்ஸ் movement இல்லைன்னு சப்பகட்டுங்க

என் பார்வையில் விஜய் நல்ல டான்சர் , ஆனால் , he is not the best of all

my fav vijay dance STEP STEP from kavalan , nice dance

கார்க்கி on February 9, 2011 at 9:08 AM said...

இளா, உண்மை. ஜானியின் உட‌ம்பு பெருத்துடுச்சு. அவ‌ரால் ஆட‌ முடிவ‌தில்லை. ராப‌ர்ட் என‌க்கு அவ்வ‌ள‌வா பிடிக்காது.

ந‌ல்ல‌ பின்னூட்ட‌ம். ந‌ன்றி வேல்

Nataraj on February 9, 2011 at 9:09 AM said...

சூப்பர் தல..செம டாபிக். நல்ல தொகுப்பு. இதில் பலரும் நான் கவனிக்கிறவர்கள், ரசிக்கிறவர்கள். ஸ்ரீதர் மட்டும் ரொம்ப காம்ப்ளிகேட் செய்கிறாரோ என்று தோணும். உ.தா. நாக்கமுக்க எனக்கு அவ்வளவு இஷ்டம் இல்லை. நீங்கள் சொல்லாமல் விட்ட இன்னொரு இப்போதைய லீடிங் choreographer பிருந்தா. சூர்யா/ஹாரிஸ் பாடல்களின் ஆஸ்தான நடன இயக்குனர். சுட்டும் விழி சுடரே, ஒரு மாலை இளவெயில் நேரம் இவரின் சில ஹிட்டுகள்.
கல்யாணின் தீப்பிடிக்கவும் எனக்கு இஷ்டம்.

பரிசல்காரன் on February 9, 2011 at 9:18 AM said...

ஸ்ரீதரா, கூல் ஜெயந்த்தா என்று உறுதியாகத் தெரியவில்லை. கூல் ஜெயந்த் என்றுதான் நினைக்கிறேன்.. விஜய் டிவி ஷோ மூலம் நடன இயக்குனராக வந்தவர்.. இல்லையா சகா?

முக்கியமான நடன இயக்குனர் ஒருத்தரை விட்டுட்ட சகா.. லிஸ்ட்ல வர்லன்னாலும் பிரபுதேவா பேரைச் சொன்னமாதிரி அவரு பேரைச் சொல்லிருக்கலாம்.. தங்கப்பன் மாஸ்டர்கிட்ட சிஷ்யனா இருந்தவரு...

maheswari on February 9, 2011 at 11:35 AM said...

meal pathivu

Anonymous said...

எனக்கும் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் பிடிக்கும். ஈசன் படத்தின் 'ஜில்லா விட்டு' லேட்டஸ்ட் ஹிட். முடிந்தால் அவரின் ஒரு 'stage performance' பாருங்கள். http://www.youtube.com/watch?v=z2kj7VSTKAE

sweet on February 9, 2011 at 2:10 PM said...

//என் பார்வையில் விஜய் நல்ல டான்சர் , ஆனால் , he is not the best of all //

இதை வழிமொழிகிறேன்

உதாரணம் திருமலை படம், தாம் தக்க தைய தக்க கூத்து பாடல்

லாரன்ஸ் & விஜய் ஆட்டத்தில் லாரன்ஸ்-கிட்ட இருக்கிற துடிப்பில் பாதி கூட இருக்காது விஜயிடம்

லாரன்ஸ் தான் அதற்க்கு நடன மாஸ்டர் என்றாலும் ஒரு அளவுக்கு அவருக்கு ஈடு கொடுத்து ஆடிய இருக்க வேண்டும் பெஸ்ட் டான்சர் என்றால், இல்லையே

கார்க்கி on February 9, 2011 at 3:14 PM said...

ந‌ட்ராஜ், பிருந்தா ந‌ன்றாக‌ செய்கிறார். என‌க்கு டாப் ஐந்தில் வ‌ருவ‌தாக‌ தோன்ற‌வில்லை

ப‌ரிச‌ல், யாரு? க‌ம‌ல‌ஹாச‌னா?

ம‌ஹேஷ்வ‌ரி, ஷார்ப்புங்க‌ நீங்க‌ :)

ந‌ன்றி ப்ரீத‌ம். நைட்டு வீட்டுல‌தான் பார்க்க‌ முடியும்

ஸ்வீட், ஓக்கே. விஜ‌ய் இல்லைன்னு ம‌ட்டும் சொல்றீங்க‌. அப்ப‌ யாருதான் பெஸ்த்டுன்னு சொல்ல‌ வேன்டிய‌துதானே?

மாணவன் on February 9, 2011 at 3:59 PM said...

சூப்பர்... பகிர்வுக்கு நன்றி சகா,

Kaarthik on February 9, 2011 at 5:25 PM said...

'மீள்பதிவு' அப்படின்னு பாத்ததுமே போட நெனச்சேன். அதுக்குள்ள மகேஸ்வரி முந்திகிட்டீங்க. இல்லைன்னா நான் Sharp ஆயிருப்பேன் :-)

Karki, எனக்கு விஜயோட டான்ஸ் ரொம்ப பிடிக்கும். நடிப்பு வரலைன்னாலும் நடனம் வருதே ;-)

'அல்லா உன் ஆணைப் படி எல்லாம் நடக்கும்' என்ற சந்திரலேகா பாட்டுல இருந்தே நான் அவர் நடனத்துக்கு ரசிகன். 'ஒரு கடிதம் எழுதினேன்' பாட்டுல அவர் கைய விரிச்சு தலை அசைக்கறது விவேக் 'என்னைத் தாலாட்ட வருவாளோ' என்று கிண்டல் பண்ணாலும் அது அவரோட ஸ்டைல். விஜய் டான்சுக்கு என்னை பிரமிக்க வெச்சது மேக்கரீன பாடலின் சில துடிப்பான இயல்பான அசைவுகள்.

விஜய் சிம்ரன்னா கேக்கவே வேண்டாம். ஆல்தோட்ட பூபதி எத்தன தடவ வேணாலும் பாப்பேன் (Esp for சிம்ரன்)

'எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே'ல ரொம்ப கஷ்டமான ஸ்டெப்ஸ் போட்டிருப்பார். 'தாம் தக்க தீம் தக்க' பாட்டுல எனக்கு லாரான்சவிட விஜய்தான் பிடிக்கும்.


அப்படி போடு இந்திய முழுக்க ஃபேமஸ். அதுக்கு காரணம் அபிஷேக் பச்சன். ஆனா எந்த டான்ஸ் மாஸ்டர் எந்தப் பாட்டுக்கு என்று தெரியாது!

பிரதீபா on February 9, 2011 at 6:22 PM said...

நானும் அதுதான் பாக்கறேன்..ஜானி என்ன ஆனாரு? அவள் வருவாளா , ஏப்ரல் மாதத்தில் இதெல்லாம் அவரோட அருமையான எக்ஸ்ப்ரஷன் நிரம்பின டான்சுக்காகவே பாப்பேன். ஷோபி -டான்ஸ் மட்டும் இல்லை, ஆளும் நல்லா இருப்பாரே, நிறைய நடிக்கலாம். பிரபுதேவா-எப்படி வேணாலும் movements வெக்கலாம்ன்னு சில சமயம் வெப்பாரு-அது பிடிக்காது.

கரன் on February 9, 2011 at 8:26 PM said...

சி.வேல் said...
//என் பார்வையில் விஜய் நல்ல டான்சர் , ஆனால் , he is not the best of all //


sweet said...
//இதை வழிமொழிகிறேன்

உதாரணம் திருமலை படம், தாம் தக்க தைய தக்க கூத்து பாடல்

லாரன்ஸ் & விஜய் ஆட்டத்தில் லாரன்ஸ்-கிட்ட இருக்கிற துடிப்பில் பாதி கூட இருக்காது விஜயிடம் //


லாரன்ஸ் விஜயை விட சிறந்த dancer தான். விஜயை விட வேகமான steps போடுவார் தான். ஆனால் விஜயிடமுள்ள நளினம்,craze அவரிடம் இல்லையென்பது எனது கருத்து. தமிழ்சினிமா dancer களில் விஜயின் நடனம் இன்னமும் பெயர் பெற்றிருக்க மிக முக்கியமானகாரணமும் அதுதான்.

king on February 9, 2011 at 9:23 PM said...

உங்களுக்கு விஜய் பிடிக்கும் என்பதற்காக, அவரை பெஸ்ட் டான்சர் என்று சொல்ல கூடாது, திரு விஜய காந்த் அவர்களின் நடனம் அண்டசராசரமும் நடுங்கும்படி இருக்கும், அமரர் MGR அவர்களின் ஆட்ட திறமை முன் பத்மினியே தோற்று ஓடியது வரலாறு

Vijay on February 9, 2011 at 11:00 PM said...

தலைவரே, எந்திரனை விட்டுடிங்களே Remo D'Souza

இரும்பிலே ஒரு இதயம்

பணிவன்புடன்
சந்துரு

Kaarthik on February 10, 2011 at 10:35 AM said...

//லாரன்ஸ் விஜயை விட சிறந்த dancer தான். விஜயை விட வேகமான steps போடுவார் தான். ஆனால் விஜயிடமுள்ள நளினம்,craze அவரிடம் இல்லையென்பது எனது கருத்து.//

100% True :-) Vijay has that Grace :-)

 

all rights reserved to www.karkibava.com