Feb 7, 2011

ஜிந்த்தக்தா ஜிந்த்தக்தா ஜிந்த்தக்தா த்தாimage 
ஹலோ பாஸ். நான் ராஜா பேசுறேன். எப்படி இருக்கீங்க? நான் உங்க பிளாக் ரெகுலரா படிப்பேன்.

சொல்லுங்க ராஜா. நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?

மனசு சரியில்ல பாஸ். உங்கக்கிட்ட பேசினா சரியா போகுன்னு நினைக்கிறேன். உங்க மொக்கையெல்லாம் எங்களுக்கு மருந்து பாஸ் மருந்து,,

அப்படி என்ன ஆச்சு தல? சொல்லுங்க

நான் ஒரு பொண்ண காதலிச்சேன் பாஸ்.

நாங்க மட்டும் என்ன பசங்களையா லவ் பண்றோம்?

கலாய்க்கதீங்க பாஸ். ஒன்சைட் லவ்.

ஃப்ரண்ட் சைடா, பேக்சைடா தல?

என்ன பாஸ்? புரியல.

ஒன்சைடுன்னு சொன்னீங்களே. அதான் எந்த சைடுன்னு..

இதெல்லாம் ஓவருங்க. நான் லவ் பண்ண பொண்ணு அவ.

சாரி தல. அப்புறம் சொல்லுங்க.

அப்போ நான் ஆறாவது படிச்சிட்டிருந்தேன்.

இப்ப வரைக்கும்… சரி. ரிப்பீட் ஜோக் வேணாம். நீங்க சொல்லுங்க.

அப்பவே அவ மேல அப்படி ஒரு லவ் சார்

முதல்ல சைடு லவ்வுன்னு சொன்னீங்க. இப்ப என்ன மேல, டாப்புல?

கோவப்படுத்தாதீங்க பாஸ்.

அதுக்கில்ல தல. பொண்ணுங்கள மட்டும் நம்பவே கூடாது. முன்ன பின்ன தெரியாத பொண்ணுன்னா கூட உங்கக்கிட்ட கேட்டா ஹெல்ப் பண்ணுவீங்களா இல்லையா?

ஆமாம். பண்ணுவேன்.

ஆனா முன்னபின்ன தெரியாத பையனுக்கு எந்த பொண்ணாவது ஹெல்ப் பண்றாங்களா? அட தெரிஞ்ச பசங்க கஷ்டப்படறாங்களேன்னு ஒரு முத்தமாவது தந்து இருக்காங்களா? பசங்கதான் தல வெயிட்டு.

நாமதான் வெயிட்டுன்னு நீங்க சொல்றது ரைட்டு மாதிரி தெரிஞ்சாலும் பொண்ணுங்கதான் பாஸ் ஸ்வீட். ஒரு தடவ ஹனி இல்லை ஹனி.. அதான் பாஸ் தேன். அது கடவுள்கிட்ட கேட்டுச்சாம் நான் தானே உலகத்துல ஸீவ்ட்டுன்னு. அதுக்கு கடவுள் சொன்னாராம். இல்லையில்லை. இந்த ராஜான்னு ஒருத்தன் லவ் பண்றானே.. அந்த பொண்ணுதான் ஸ்வீட்ன்னு. அந்த ராஜா நான் தான் பாஸ். இதுல இருந்து என்ன தெரியுது?

ம்ம்.. கடவுள் கூட ஜோக்கெல்லாம் அடிப்பாருன்னு புரியுது தல. பொண்ணுங்க மெண்ட்டாலிட்டி நான் சொல்றேன் கேளுங்க. எல்லா அம்மாவும் தன் பொண்ணுக்கு தனக்கு கிடைச்சத விட நல்ல மாப்பிள்ளை கிடைப்பாருன்னு நினைப்பாங்க. ஆனா தன் மகனுக்கு மட்டும் எப்படியும் தன்னை விட சுமாரான பொண்ட்டாட்டி தான் கிடைப்பான்னு சொல்வாங்க.

உங்க சைக்காலிஜி பேச்சுல என் லவ்வ விட்டனே பாஸ். கதையை கேளுங்க. எனக்கு தாடி வச்சா அழகா இருக்கும்ன்னு 10வது படிக்கிறப்ப சொன்னா.

11வதுல பேசுறதையே ஸ்டாப் பண்ணியிருப்பாங்களே அண்ணி. கரெக்டாண்ணே?

ம்ம்.ஆமா.எப்படி?

கழட்டி விடப் போறேன்னு சொல்லாம சொல்லி இருக்காங்க. நீங்களும் ஆடு மாதிரி வளர்த்துக்கிட்டு திரிஞ்சிருக்கீங்க.

அப்படியா பாஸ்? பொண்ணுங்கள ரொம்ப நம்பிட்டேனே. ச்சே

விடுங்க தல. இனிமேலாவது புரிஞ்சு நடந்துக்கோங்க. பொண்ணுங்க சக்தி மாதிரி. அத ஆக்கவோ அழிக்கவோ முடியாது. law of conversion of energy படிச்சி இருக்கீங்களா? அந்த மாதிரி

இனிமேல எந்த பொண்ணு கூடவும் பேசக்கூடாது பாஸ். இருக்கிற எல்லா நம்பரையும் உடனே அழிச்சுடறேன்.

அட இப்பதானே தல சொன்னேன். அவங்கள அழிக்க முடியாதுன்னு. வேணும்ன்னா ஒரு சக்திய இன்னொரு சக்தியா மாத்தலாம்.

புரியலையே குரு.

ரொம்ப சிம்பிள்.  இப்ப நம்பர் உங்க ஃபோன்ல இருக்கா. அது அழிக்கிற சக்தியா இருக்கு. அதெல்லாம் என் ஃபோனுக்கு வந்துட்டா நல்ல சக்தியா மாறிடும். லைனா எல்லா நம்பரையும் பேரையும் சொல்லுங்க பார்ப்போம்

_____

ஹலோ.. ஹலோ

உன்னையெல்லாம் மதிச்சு ஃபோன் பண்னேன் பாரு. என்னை அடிச்சுக்கணும்.

ஜிந்தாக் தக் தக் ஜிந்தாதக் தக் ஜிந்தாக் தக் தக் தா…

14 கருத்துக்குத்து:

vinu on February 8, 2011 at 12:51 AM said...

ஹலோ.. ஹலோ உன்னையெல்லாம் மதிச்சு ஃபோன் பண்னேன் பாரு. என்னை அடிச்சுக்கணும்.


உன்னையெல்லாம் மதிச்சு கமெண்ட் பண்னேன் பாரு. என்னை அடிச்சுக்கணும்.

மதுரை சரவணன் on February 8, 2011 at 1:17 AM said...

nallaathaane irukku...

பா.ராஜாராம் on February 8, 2011 at 1:30 AM said...

:-)

ஹலோ பாஸ். நான் பா. ராஜா பேசுறேன். எப்படி இருக்கீங்க? நான் உங்க பிளாக் ரெகுலரா படிப்பேன்.

ஹலோ,ஹல்லோ, ஹல்...

(ஆ. ராஜாவோன்னு நெனைச்சிருப்பாரோ..)

shylendar on February 8, 2011 at 4:54 AM said...

Ada super appu!!!

தராசு on February 8, 2011 at 8:41 AM said...

ஹலோ, எல்லாரும் ஓடுங்க, அது நம்மள நோக்கி வந்துகிட்டிருக்கு.....

எல் கே on February 8, 2011 at 8:59 AM said...

கார்க்கி ஏன் இந்தக் கொலை வெறி ??

கார்க்கி on February 8, 2011 at 9:39 AM said...

வினு, உன்னையெல்லாம் ப‌திச்சு ப‌தில் போடுறேன் பாரு. என்னையும் அடிச்ச‌க்க‌ணும் :)

ந‌ன்றி ச‌ர‌வ‌ண‌ன்

பாரா, ஹிஹிஹிஹி

ந‌ன்றி ஷைலேந்த‌ர்

த‌ராசு, சென்னைக்கு வ‌றீங‌க்ளா? :))

எல்.கே, அதான் சார். எதுக்கு அவ‌னுக்கு அவ்ளோ கொலைவெறி???

Sen22 on February 8, 2011 at 9:57 AM said...

//கடவுள் கூட ஜோக்கெல்லாம் அடிப்பாருன்னு புரியுது தல//


கலக்கல் கார்க்கி..

மாணவன் on February 8, 2011 at 1:22 PM said...

செம்ம கலக்கல்..

அதுவும் உங்கள் கலாய்ப்பு ஸ்டைல்...சூப்பர்

பிரதீபா on February 8, 2011 at 6:24 PM said...

Monopoly in the Mokkai industry. உங்களை யாரும் அசைக்க முடியாது.

Anonymous said...

மொக்கயிலேயும் கருத்த கச்சிதமா கக்குறீங்க

டக்கால்டி on February 10, 2011 at 2:19 AM said...

பிரன்ட் சைடு ஆஹ் , பேக் சைடு ஆஹ் ...

சூப்பர் மொக்கை பாஸ்...

indar on February 10, 2011 at 8:20 AM said...

ஜிந்த்தக்தா ஜிந்த்தக்தா ஜிந்த்தக்தா த்தா

நல்லா இருக்கு ....என்ன பாஸ் அர்த்தம்?????

உமா கிருஷ்ணமூர்த்தி on February 26, 2011 at 3:16 PM said...

//எல்லா அம்மாவும் தன் பொண்ணுக்கு தனக்கு கிடைச்சத விட நல்ல மாப்பிள்ளை கிடைப்பாருன்னு நினைப்பாங்க. ஆனா தன் மகனுக்கு மட்டும் எப்படியும் தன்னை விட சுமாரான பொண்ட்டாட்டி தான் கிடைப்பான்னு சொல்வாங்க.
//


யோசிச்சா உண்மை தானோ ன்னு தோணுது

 

all rights reserved to www.karkibava.com