Sep 13, 2011

இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து


 

வீடு இது போல் அமைதியாக என்றுமே இருந்ததில்லை. சன் மியூசிக்கில் சூப்பர்ஸ்டார் சத்தமின்றி துபாய் பாடல் பாடிக்கொண்டிருந்தார். பப்லு கருப்பு நிற சோஃபா மீது வெள்ளை முண்டா பணியனோடு அமர்ந்திருந்தான். அம்மா அவனுக்கு 167 டிகிரி எதிர்புறத்தில், தரையில் சிதறியிருந்த புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அவ்வபோது பப்லுவை முறைப்பது போலிருந்தது. மேலே படிக்கட்டில் இருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தார் அக்கா. அவர்தான் பப்லுவின் அம்மா. என்னைக் கண்ட பப்லு ”மாமா” என அழுதுக் கொண்டே ஓடிவந்தான்.

”ஏய். எங்க ஓடுற? ஒழுங்கா அங்கேயே உட்காரு”. அம்மாவின் அதட்டல் குரலுக்கு பயந்து அப்படியே உட்கார்ந்துவிட்டான்.  மெதுவாக அவனருகில் போய் அமர்ந்தேன். அம்மாவின் குரல் சன்னமாய் திட்டிக் கொண்டேயிருந்தது.

”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”

“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”

”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”

உற்று கேட்டபோது ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டான் என்பது மட்டும் புரிந்தது. கண்களில் கண்ணீரே இல்லாமல் அழுதுக் கொண்டிருந்தான் பப்லு. மாடிப்படியில் நின்றுக் கொண்டிருந்த அக்கா முறைத்துக் கொண்டேயிருந்தார். பப்லுவிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தேன்.

ஸ்விம்மிங் கிளாஸ் போனியாடா?

ம்ம்ம்

டியூஷன்?

ம்ம்

ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சிட்டியா?

ம்ம்

ஸ்கூல்ல யார் கூடவாது சண்டையா?

ம்ஹூம்.

எல்லாக் கேள்விகளுக்கும் வாயை திறக்காமலே பதில் சொன்ன விதம் லேசாக எரிச்சலை தந்தது என்பது உண்மைதான்.

என்னடா செஞ்ச?

ஒண்ணும் செய்யலடா.

அப்புறம் ஏன் அம்மா,பாட்டியெல்லாம் திட்டுறாங்க.?

அவங்க திட்டினா..

அவங்க திட்டினா நீ தப்பு செஞ்சிருக்கன்னு அர்த்தம். எதிர்த்து பேசாத.

நிஜமாவா?

ஆமாம்.

அவங்க திட்டினது என்னை இல்லை. உன்னை.

என்னையா? என்னடா.

பாட்டியும் நானும் மாடிக்கு துணிக் காய போட போனோம்.

இப்போது நான் ம்ம் கொட்டத் துவங்கினேன்.

ஈரமா இருந்த துணிய காய வச்சாங்க. சீக்கிரம் போலாம் பாட்டின்னா அவங்க செடிக்கு தண்ணி ஊத்த போனாங்க.

ம்ம்

இருட்டா இருந்துச்சா. எனக்கு பயமா இருந்துச்சு.

ம்ம்

கார்க்கி மாமா பயப்படவே மாட்டான் தெரியுமான்னு சொன்னாங்க. நானும் உடனே நீ சொல்ற மாதிரி  ஒண்ணு சொன்னேன். அதுக்குத்தான் திட்டுறாங்க.

என்னடா சொன்ன?

“பாட்டி. துணி ஈரமா இருக்குன்னு காய வைக்கிற. செடி காய்ஞ்சு போயிருக்குன்னு ஈரமாக்க தண்ணி ஊத்துற. இதான் பாட்டி வாழ்க்கைன்னு சொன்னேன்.

அந்த நேரம் பார்த்து ஆபத்பாந்தவன், அனாதரட்சகன் மாதிரி பரிசல் அழைத்தார், ஃபோனை காதில் வைத்துக் கொண்டே அம்மா, அக்காவைப் பார்க்காமல் வெளியே நைசாக சென்றுவிட்டேன். பரிசல் பேசிய எதுவும் கேட்காமல் அம்மா சொன்னது எதிரொலித்துக் கொண்டேயிருந்தது

”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”

“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”

”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”

என்னைத்தான் திட்டியிருக்கிறார்கள் :(((

40 கருத்துக்குத்து:

மங்களூர் சிவா on February 3, 2011 at 10:26 PM said...

:)))))))

thamizhparavai on February 3, 2011 at 10:27 PM said...

:)) எப்புடி சகா இப்புடி... :)

Sridhar Narayanan on February 3, 2011 at 10:35 PM said...

//என்னைத்தான் திட்டியிருக்கிறார்கள் :(((//

திட்டினா மாதிரி தெரியலயே... ஆத்தாமையை புலம்பி தீத்திருக்காங்க அவங்களும் எவ்ளோதான் பொறுத்துப்பாங்க பாவம் :(

Joseph on February 3, 2011 at 10:38 PM said...

சீக்கிரம் பப்லுவ உங்கிட்ட இருந்து காப்பாத்தனும் சகா.

பரிசல்காரன் on February 3, 2011 at 10:39 PM said...

அடப்பாவி!

எவ்ளோ நாளா உன்கிட்ட சொல்லணும்ன்னு நெனைச்சுட்டிருந்த வாழ்க்கை ரகசியத்தையெல்லாம் கொட்டிட்டிருந்தேன் நான்!

நெசமாவே ஒண்ணியும் கேட்கலியாடா நீ?

Ganesan on February 3, 2011 at 10:39 PM said...

விடுப்பா, ஞானிகளை லேட்டா தான் உலகம் புரிஞ்சுக்கும்.

ILA (a) இளா on February 3, 2011 at 10:49 PM said...

//நெசமாவே ஒண்ணியும் கேட்கலியாடா நீ?//
:)

சுசி on February 3, 2011 at 11:18 PM said...

//கண்களில் கண்ணீரே இல்லாமல் அழுதுக் கொண்டிருந்தான் பப்லு. //

உங்க மருமகன் இல்லையா.

நேசமித்ரன் on February 4, 2011 at 12:01 AM said...

இந்த இடுகையில இருக்குற crafting ரொம்பக் கச்சிதமா இருக்குங்க.reversible text அப்படீங்குற ஃபீல் வராம எழுதி இருக்கீங்க.ஸ்லீக் & சிம்பிள் -ஒரு சொல் மிகாமலும் குறையாமலும் .

தெய்வசுகந்தி on February 4, 2011 at 12:57 AM said...

:-)))!!!!

Kafil on February 4, 2011 at 1:50 AM said...

hahaha kallakkal saga

பாரதசாரி on February 4, 2011 at 2:09 AM said...

:-) இந்த அம்மாக்களே இப்படித்தான் பாஸ்... மாமியார திட்டனும்னா கூட நம்மல யூஸ் பன்னிக்குவாங்க

பிரதீபா on February 4, 2011 at 5:57 AM said...

//என்னைத்தான் திட்டியிருக்கிறார்கள் :(((// - இது பாவம்ன்னா ,

//பரிசல்காரன் said...அடப்பாவி!
..............நெசமாவே ஒண்ணியும் கேட்கலியாடா நீ? //-இது நெம்ப பாவம்.

Nat Sriram on February 4, 2011 at 7:32 AM said...

Nesamithranukku repeattu..Kachitham..

கார்த்திக் பாலசுப்ரமணியன் on February 4, 2011 at 8:31 AM said...

Nice nice :)

புன்னகை on February 4, 2011 at 9:00 AM said...

I pity Parisal! :-(

தர்ஷன் on February 4, 2011 at 9:39 AM said...

:)

CS. Mohan Kumar on February 4, 2011 at 10:13 AM said...

செம..

Anonymous said...

////நகர வாழ்வின் நெருக்கடிகளினூடே இலக்கியத்தின் மீதான காதலை வளர்த்திருக்கிறார் ஆசிரியர். அன்றாட வாழ்க்கையின் அபத்தங்களை பற்றிய நுண்ணிய பார்வை இவரின் எழுத்துக்கு தார்மீக பொறுப்பேற்கிறது. நாம் தினமும் காணும் அனைவரும் இவரின் கதைகளில் நாயகர்களாக வலம் வருகிறார்கள். இலக்கிய மேதைகள் வரிசையில் இவர் பெயரும் வரும் நாள் தொலைவில் இல்லை இத்தொகுப்பு அதற்கு பிள்ளையார் சுழி”. //// கூடிய விரைவில் கண்ணாடியை கையால் அளப்பது போல போஸ் தர வாழ்த்துக்கள் சகா !!!

செல்வா on February 4, 2011 at 3:39 PM said...

27 வயசு தடியன்.. மனசளவுல பொடியன்.. பேசினா கடியன்.. கோவம் வந்தா வெடியன்.

Thamira on February 4, 2011 at 4:14 PM said...

Wonderful.!

Thamira on February 4, 2011 at 4:15 PM said...

நீ வழக்கமாக ஜாலியா எழுதியிருக்கிற ஒரு பதிவு மிக அழகான ஒரு கவிதையாக, ரசனையாக மாறியிருக்கிறது.!

creativemani on February 4, 2011 at 4:46 PM said...

சூப்பர் கார்க்கி..

அன்புடன் அருணா on February 4, 2011 at 6:29 PM said...

/“பாட்டி. துணி ஈரமா இருக்குன்னு காய வைக்கிற. செடி காய்ஞ்சு போயிருக்குன்னு ஈரமாக்க தண்ணி ஊத்துற. இதான் பாட்டி வாழ்க்கைன்னு சொன்னேன்./
அடப்பாவமே!இது தெரியாமல் இவ்வ்ளோ கஷ்டப்படுகிறோமே!!

மாணவன் on February 4, 2011 at 7:23 PM said...

செம்ம கலக்கல்...:))

கார்க்கிபவா on February 4, 2011 at 10:31 PM said...

அனைவருக்கும் நன்றி. மூட் அவுட்டுல இருந்தப்ப ஒரு சேஞ்சுக்காக எழுதிய பதிவு. இந்த ஒரு விஷயத்துக்காகத்தான் இன்னமும் பிளாக் எழுதறேன். நன்றி நண்பர்களே

நேசமித்ரன்,
ஸ்பெஷல் நன்றி.

டக்கால்டி on February 5, 2011 at 12:58 AM said...

Comedy...

rajini dubai paaddal...

intha vari arumai...

Unknown on February 7, 2011 at 3:51 PM said...

ஹா ஹா ...

நல்லா இருக்கு

Athammohamed on February 25, 2011 at 3:12 PM said...

“பாட்டி. துணி ஈரமா இருக்குன்னு காய வைக்கிற. செடி காய்ஞ்சு போயிருக்குன்னு ஈரமாக்க தண்ணி ஊத்துற. இதான் பாட்டி வாழ்க்கைன்னு சொன்னேன். :)

உமா கிருஷ்ணமூர்த்தி on February 28, 2011 at 4:20 PM said...

மிகவும் சாதாரண விஷயம் தான் வீட்டிலே திட்டுவது.இருப்பினும் அதை சொல்லியிருக்கின்ற விதம் ரசிக்கும்படியாக இருக்கின்றது.உங்களுக்கு எழுத்தாளுமை இருக்கின்றது.அதனை சரியாக இதில் பயன்படுத்தியதை போல் பயன்படுத்துங்கள் கார்க்கி

உமா கிருஷ்ணமூர்த்தி on February 28, 2011 at 4:22 PM said...

நேசமித்திரன் அழகாக விமர்சனம் செய்திருக்கின்றார்.

x on September 13, 2011 at 9:46 AM said...

//"இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”///

+1 அது நானு

maithriim on September 13, 2011 at 9:52 AM said...

உங்கள் அம்மாவைப் பார்க்க வேண்டும் :))
amsa32

Kannabiran, Ravi Shankar (KRS) on September 13, 2011 at 9:52 AM said...

துணியைப் பிழிவதற்குப் பதிலாக் கார்க்கியைப் பிழியலாம்!
செடிக்குத் தண்ணி ஊத்தறதுக்குப் பதிலாக் கார்க்கி தலையில் ஊத்தலாம்:)))

நானா இருந்தா அம்மாவுக்கு எடுத்துக் குடுத்துருப்பேன்! பரிசல் என்ன தான் பண்ணுறாரு????

துளசி கோபால் on September 13, 2011 at 9:59 AM said...

ஹாஹாஹாஹா

இரசிகை on September 13, 2011 at 10:21 AM said...

:)))....ithu karkikku!

iyo paavam....ithu parisal-ku!

wow..ithu mithran sir-kku!

இரசிகை on September 13, 2011 at 10:23 AM said...

marupadiyum vaasichen......

RaguC on September 13, 2011 at 11:38 AM said...

யதார்த்தத்தை யதார்த்தமாக சொல்லும் போது அது அழகாகிறது. பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிறுக்கு

IlayaDhasan on September 26, 2011 at 2:39 PM said...

பய்யன் பெரிய குறும்பு தான்

கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்

Bala on September 30, 2011 at 8:33 AM said...

படித்து முடியத்தபோது வாய்விட்டு சிரித்தேன். நல்லா எழுதிருக்கிங்க. வாழ்த்துக்கள்.

 

all rights reserved to www.karkibava.com